Skip to main content

1146 results found

கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருமூலஸ்தானம்
கடலூர் துண்டுக் கல்வெட்டு. திருமூலஸ்தானத்து இறைவனுக்கு பல்லவபேராயன் என்பவன் 5 கழஞ்சு பொன்னும், வரி இறையிலியாக நிலம்தானம் அளித்தச் செய்தி.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருமூலஸ்தானம்
கடலூர் இக்கோயில் இறைவனுக்கு மூன்று சாண் அளவு கொண்ட விளக்கு வைத்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது. துண்டுக் கல்வெட்டு.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருமூலஸ்தானம்
கடலூர் இக்கோயில் இறைவனுக்கு திருநுந்தா விளக்கு ஒன்றை, இக்கோயில் ஸ்ரீகாரியஞ்செய்வார்களும், ஸ்ரீமாகேசுவர கண்காணி செய்வார்களும் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருமூலஸ்தானம்
கடலூர் திருமூலஸ்தானத்து கோயில் இறைவனுக்கு இவ்வூர் நாபிதன் (நாவிதன்) நுந்தா விளக்கு எரிக்க வழிவகை செய்த செய்தி.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருமூலஸ்தானம்
கடலூர் இக்கோயில் இறைவனுக்கு நுந்தா விளக்கு வைத்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது. துண்டுக் கல்வெட்டு.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருமூலஸ்தானம்
கடலூர் கோயில் இறைவனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க ஐந்து காசு அளித்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது. துண்டுக் கல்வெட்டு.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>கலியமலை
கடலூர் இக்கோயிலுக்கு இறையிலியாக நிலம் தானம் அளிக்கப்பட்டச் செய்தியாக இருக்கலாம். துண்டுக் கல்வெட்டு.
கடலூர்>ஸ்ரீ முஷ்ணம்>புடையூர்
கடலூர் துண்டுக் கல்வெட்டு. இறைவனுக்கு அழுது. வெற்றிலை. பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றினைக் கொண்டு படைப்பதற்கு வேண்டி அரிசி வழங்கியச் செய்தி.
கடலூர்>ஸ்ரீ முஷ்ணம்>புடையூர்
கடலூர் கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் திருவாலைக்குலமுடைய நாயானார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை குறிக்கப்படுகிறது. சுந்தரபாண்டியன் காலத்தில் வட்சகோத்திரம் ஆதிசைவ சைவசேனாபதிகள் என்பவனுக்கு விஜயகண்ட கோபாலனால் நிலம் வாங்கி கொடையாக அளிக்கப்பட்டது. இக்கொடையை மீண்டும் தொடர ஆணையிட்டச் செய்தியை தெரிவிக்கின்றது. கல்வெட்டுகள் ஆங்காங்கே அழிந்து காணப்படுகிறது.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>ஓமாம்புலியூர்
கடலூர் முந்தையக் கல்வெட்டின் பிரதியே இக்கல்வெட்டாகும். அவற்றில் உள்ளச் செய்தியே இதிலும் உள்ளது. சில இடங்களில் சேதமடைந்துள்ளது. விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம் ஸ்ரீ உலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து உடையார் உடையவன் வடதளியுடையார் கோயில் இறைவனுக்கு, இருமாவரை முந்திரிகை அளவு நிலத்தினை மூலதானமாகக் கொண்டு பூசை மற்றும் திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச் சார்ந்த வாதலன் அரசாழ்வான் ஆராவமுதாழ்வான் என்பவன் தானமாக அளித்துள்ளான்.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>ஓமாம்புலியூர்
கடலூர் விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம் ஸ்ரீஉலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து உடையார் உடையவன் வடதளியுடையார் கோயில் இறைவனுக்கு, இருமாவரை முந்திரிகை அளவு நிலத்தினை மூலதானமாகக் கொண்டு பூசை மற்றும் திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச் சார்ந்த வாதலன் அரசாழ்வான் ஆராவமுதாழ்வான் என்பவன் தானமாக அளித்துள்ளான்.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருச்சின்னபுரம்
கடலூர் விக்கிரமச்சோழன் காலத்து கல்வெட்டாகும். இறைவன் பெயர் திருச்சோற்றுடையார் என்று குறிக்கப்படுகிறது. துண்டுக் கல்வெட்டு.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருச்சின்னபுரம்
கடலூர் துண்டுக் கல்வெட்டு. இறைவனுக்கு மாடலன் ஆவுடையான் என்பவனின் தம்பி ஆட்கொண்டான் என்பவன் தானமளித்த செய்தியாக இருக்கலாம்.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருச்சின்னபுரம்
கடலூர் இவ்வூர் சபையில் ஆண்டுதோறும் கிராம காரியம் செய்யும் உறுப்பினர்கள். திருமெய்க்காப்பார் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒலை ஆவணமாக இருத்தல் வேண்டூம். இப்பகுதியில் தொடர்ந்து அதிகமாக மழை பெய்ததால் பராந்தகப் பேரேரியின் கரை உடைந்து போயுள்ளது. இம்மழையின் காரணமாக ஏற்பட்ட உடைப்பை சீர் செய்து ஒழுங்கு படுத்திட வேண்டியும். இவ்வூர் இறைவனிடம் வேண்டுதல் செய்வதற்கும் திருச்சோற்றுணைசுவரமுடையார் கோயிலுக்கு நிலம் வழங்கியச் செய்தி.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>திருச்சின்னபுரம்
கடலூர் துண்டுக் கல்வெட்டு. நுந்தா விளக்கு அளிக்கப்பட்ட செய்தியை தெரிகின்றது. இக்கோயில் இறைவன் திருச்சோற்றுணை ஈஸ்வரமுடையார் என்று அழைக்கப்பட்டதை தெரிவிக்கிறது.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>கானாட்டம்புலியூர்
கடலூர் விருதராஜ பயங்கர வளநாட்டு கீழ்க்காநாட்டு முள்ளுரான திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலத்து (கிழக்கந்திரத்து கோயிலிலுள்ள தெட்சிணா மூர்த்தி) இறைவன் வழிபாட்டிற்கு செந்தாமரைக்கண்ணபட்டன் என்கிற வளவன் பிராமாதிராயன் நிலக்கொடை அளித்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>இராஜேந்திரசோழகன்
கடலூர் துண்டுக் கல்வெட்டு. இறைவன் பெயர் சோளீசுரமுடையார் என்று குறிக்கப்படுகிறது.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>இராஜேந்திரசோழகன்
கடலூர் துண்டுக் கல்வெட்டு. இக்கோயிலுக்கு இறையிலியாக நிலம் வளிக்கப்பட்டச் செய்தியைத் தெரிவிக்கின்றது.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>இராஜேந்திரசோழகன்
கடலூர் துண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனுக்குத் தேவதானமாக உமியூர் என்ற ஊரைத் தானமாக அளித்தச் செய்தி. தனியூர்வீரநாராயண சதுர்வேதி மங்கலம் என்ற குறிப்பு காணப்படுகிறது.
கடலூர்>காட்டுமன்னார் கோவில்>மேலக்கடம்பூர்
கடலூர் இக்கோயில் இறைவனுக்கு திருநொந்தா விளக்கு எரிப்பதற்கு இக்கோயில் பிராமணர்கள் வசம் 6 காசுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணவில் கோட்டத்து கன்னரநாட்டு வீரபாண்டியநல்லார் கருமாணிக்கன் என்பவன் இக்கொடையை அளித்துள்ளான்.