-கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் திருவாலைக்குலமுடைய நாயானார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை குறிக்கப்படுகிறது. சுந்தரபாண்டியன் காலத்தில் வட்சகோத்திரம் ஆதிசைவ சைவசேனாபதிகள் என்பவனுக்கு விஜயகண்ட கோபாலனால் நிலம் வாங்கி கொடையாக அளிக்கப்பட்டது. இக்கொடையை மீண்டும் தொடர ஆணையிட்டச் செய்தியை தெரிவிக்கின்றது. கல்வெட்டுகள் ஆங்காங்கே அழிந்து காணப்படுகிறது.
-முந்தையக் கல்வெட்டின் பிரதியே இக்கல்வெட்டாகும். அவற்றில் உள்ளச் செய்தியே இதிலும் உள்ளது. சில இடங்களில் சேதமடைந்துள்ளது. விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம் ஸ்ரீ உலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து உடையார் உடையவன் வடதளியுடையார் கோயில் இறைவனுக்கு, இருமாவரை முந்திரிகை அளவு நிலத்தினை மூலதானமாகக் கொண்டு பூசை மற்றும் திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச் சார்ந்த வாதலன் அரசாழ்வான் ஆராவமுதாழ்வான் என்பவன் தானமாக அளித்துள்ளான்.
-விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம் ஸ்ரீஉலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து உடையார் உடையவன் வடதளியுடையார் கோயில் இறைவனுக்கு, இருமாவரை முந்திரிகை அளவு நிலத்தினை மூலதானமாகக் கொண்டு பூசை மற்றும் திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச் சார்ந்த வாதலன் அரசாழ்வான் ஆராவமுதாழ்வான் என்பவன் தானமாக அளித்துள்ளான்.
-இவ்வூர் சபையில் ஆண்டுதோறும் கிராம காரியம் செய்யும் உறுப்பினர்கள். திருமெய்க்காப்பார் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒலை ஆவணமாக இருத்தல் வேண்டூம். இப்பகுதியில் தொடர்ந்து அதிகமாக மழை பெய்ததால் பராந்தகப் பேரேரியின் கரை உடைந்து போயுள்ளது. இம்மழையின் காரணமாக ஏற்பட்ட உடைப்பை சீர் செய்து ஒழுங்கு படுத்திட வேண்டியும். இவ்வூர் இறைவனிடம் வேண்டுதல் செய்வதற்கும் திருச்சோற்றுணைசுவரமுடையார் கோயிலுக்கு நிலம் வழங்கியச் செய்தி.
-துண்டுக் கல்வெட்டு. நுந்தா விளக்கு அளிக்கப்பட்ட செய்தியை தெரிகின்றது. இக்கோயில் இறைவன் திருச்சோற்றுணை ஈஸ்வரமுடையார் என்று அழைக்கப்பட்டதை தெரிவிக்கிறது.
-துண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனுக்குத் தேவதானமாக உமியூர் என்ற ஊரைத் தானமாக அளித்தச் செய்தி. தனியூர்வீரநாராயண சதுர்வேதி மங்கலம் என்ற குறிப்பு காணப்படுகிறது.
-ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு சோமங்கலமான ராஜசிகாமணிச் சதுர்வேதி மங்கலத்தில் உள்ள திருச்சித்திரக் கூடத்தாழ்வார் இறைவனுக்கு திருஆராதனை, ஸ்ரீவிமானம் திருவாபரணம், அரிசி அமுது, ஆனி மூலம் திருவிழா, உத்தரமயனம், தெட்சணமயனம், விசுக்கள், கிரகணங்கள், திருவோணம் முதலான திருவிழா மற்றும் வழிபாடுகளுக்காக நிலங்கள் அளித்தச் செய்தி.