Skip to main content

1146 results found

காஞ்சிபுரம்>குன்றத்தூர்>சோமங்கலம்
காஞ்சிபுரம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு சோமங்கலமான ராஜசிகாமணிச் சதுர்வேதி மங்கலத்தில் உள்ள திருச்சித்திரக் கூடத்தாழ்வார் இறைவனுக்கு திருஆராதனை, ஸ்ரீவிமானம் திருவாபரணம், அரிசி அமுது, ஆனி மூலம் திருவிழா, உத்தரமயனம், தெட்சணமயனம், விசுக்கள், கிரகணங்கள், திருவோணம் முதலான திருவிழா மற்றும் வழிபாடுகளுக்காக நிலங்கள் அளித்தச் செய்தி.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>பிச்சிவாக்கம்
காஞ்சிபுரம் காமககோட்டப்புறத்துப் பிச்சிப்பாக்கத்துக் கண்ணம்பாக்கிழான் பூதிசர்மன், இவன் தம்பி நிருப்திய சர்மன் ஆகிய இருவரும் இவ்வூர் இறைவனுக்கு கொடையளித்துள்ளனர். கொடைவிவரம் அறிய இயலவில்லை. கல்வெட்டு முழுமையாக இல்லை. இவ்வூர் அன்று பிச்சிப்பாக்கம் என்றழைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>காவாந்தண்டலம்
காஞ்சிபுரம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து தமனூர் நாட்டு காய்வாந்தண்டலம் ஆன சதுர்வேதி மங்கலத்தில், இந்நாடு வகை செய்கிற அதிகாரி வைகூருடையான் வல்லாள கண்டன் பிச்சன் என்பவன் மன்னன் முதலாம் இராஜேந்திரனின் பெயரில் ராஜேந்திர சோழ ஈஸ்வரமுடைய மகாதேவர் கோயிலை எழுப்பியுள்ளான். இக்கோயில் தற்போது சோழீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிறது. சோழீஸ்வரர் கோயில் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும், அக்கோயிலில் இம்மன்னனது கல்வெட்டு ஏதுமில்லை. அக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது விக்கிரமசோழனின் 5-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இக்கோயில் இறைவன் வழிபாட்டுச் செலவினங்களுக்கு இறையிலியாக நிலம், சபையாரால் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>காவாந்தண்டலம்
காஞ்சிபுரம் வேங்கை நாட்டு குளனூர் என்னும் ஊரைச் சேர்ந்த மானசர்வ்வன் என்பவன் இவ்வூர் விஷ்ணு கோயிலை எடுப்பித்துள்ளான் என்பதை இவ்வூர் ஊ. க. எண். 6இல் கண்டோம். அவனது பெயராலேயே மானசர்வ்வ விஷ்ணுகிருகம் என்று இக்கோயில் அழைக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டால் அறிகிறோம். இவ்வூர் சபையார் இக்கோயிலிருந்து இவ்வூர் பொன் நிறுத்தப்படும் கல்லால் நிறுத்தப்பட்ட 30 கழஞ்சுப் பொன்னினைப் பெற்றுக் கொண்டனர். இக்கழஞ்சுப் பொன் ஒன்றிற்கு மாத வட்டியாக 4 மஞ்சாடி வீதம் வழங்க வேண்டும். இந்த முப்பது கழஞ்சுப் பொன்னில் 20 கழஞ்சுப் பொன் வழியாக ஆண்டொன்றுக்கு வந்த வட்டி 4 கழஞ்சு மூலம் சித்திரை திருவோணத் திருவிழா ஏழு நாளும் நூறு விளக்குகள் வைக்கவும், கீற்றுத் தட்டி கொட்டகை அமைத்து இறைவனுக்கு நீராடல் செய்து இறைவனுக்கு உணவு படைக்கவும் வேண்டும். கோயிலில் பெற்ற 30 பொன்னின் மீதமுள்ள 10 கழஞ்சுப் பொன்னிலிருந்து ஆண்டு வட்டியாக வரும் இரண்டு கழஞ்சினைக் கொண்டு, கோயில் உண்ணாழிகை (கருவறை)யில் இரண்டு விளக்கெரிக்க தினமும் உரி அளவு எண்ணெய்யை இவ்வூர் எண்ணெய் வியாபாரிகள் வைப்பதற்கும், இவ்வூர் சபையார் சம்மதித்துள்ளனர்.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>காவாந்தண்டலம்
காஞ்சிபுரம் வேங்கை நாட்டு குளனூர் ஊரைச் சார்ந்த மானசர்வ்வன் என்பவன் காவான்தண்டலம் விஷ்ணுக் கோயிலை எடுப்பித்துள்ளான். இக்கோயில் இறைவன் அர்ச்சனை செலவுகளுக்காகவும், திருநந்தவனத்திற்காகவும் இவ்வூர் ஒட்டங்காட்டில் நிலத்தினை கொடையாக அளித்துள்ளான். இந்நிலத்தின் மீதான வரிகள் அரசிற்கு செலுத்துவதற்கு மூலதனமாக பொன்னும் அளித்துள்ளான். இப்பொன்னினைப் பெற்றுக்கொண்டு இந்நிலத்தின் மீதான வரிகளை நீக்கியுள்ளனர்.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>காவாந்தண்டலம்
காஞ்சிபுரம் கோயில் நிர்வாகி மநவாசகங்கடந்தார் என்பவர் இவ்வூர் மகாசபையார் வசம் மூன்று காசுகள் கொடுத்து 502 குழி, அரை காணி நிலம் வாங்கி இக்கோயிலுக்குத் தானமளித்துள்ளார். மேலும் இந்நிலத்திற்கான இறைக்காக (வரி) மூன்று காசுகளை மூலதனமாக அளித்துள்ளார். இவ்விரண்டிற்காகவும் சதுர்வேதி மங்கலத்து மகாசபையாரிடம் ஆறு காசுகள் வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>காவாந்தண்டலம்
காஞ்சிபுரம் சோழ மண்டலத்துக் கிளியூர் நாட்டு குறிச்சி என்னும் ஊரினன் ஆன பூமிசுந்தரன் கண்ணாளதேவன் என்பவனின் மனைவி பூங்கமலச் செல்வி என்பவள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்துத் தமனூர் நாட்டு பிரம்மதேயம் காவந்தண்டலம் கோயில் இறைவனுக்கு அர்ச்சனை, அமுதுபடிக்காக, இவ்வூர் மகாசபையார் வசம் நிலம் ஒன்றினை வாங்கித் தானமளித்துள்ளாள். இந்நிலத்தின் வரியை நீக்கி, அரசிற்கு செலுத்த வேண்டிய வரிக்கு மூலதனமாக 20 காசுகள் பெற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>காவாந்தண்டலம்
காஞ்சிபுரம் சோழ மண்டலத்து திருப்புத்தூர் இருக்குநாதர் கோயிலைச் சார்ந்த கைக்கோளன் ஈசானதேவன் மற்றும் இவனது தம்பி பெரியபிள்ளை ஆகிய இவ்இருவரும் காவாந்தண்டலமாகிய ஸ்ரீகரணச் சதுர்வேதி மங்கலத்தில் கணக்கன் காய்வான்தண்டலமுடையான் திருவலஞ்சுழி உடையான் என்பவனிடம் இருந்து 380 குழி நிலத்தினை வாங்கி இவ்வூர் இறைவனுக்காக ஆளுங்கணத்து சபையார் வசம் அளித்துள்ளான். ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து தமனூர் நாட்டு காவாந்தண்டலமாகிய ஸ்ரீகரணச் சதுர்வேதி மங்கலத்து ஆளுங்கணம் சபை உறுப்பினர்கள் கந்தாடை ஸ்ரீவாசுதேவபட்டன், கோவிந்தபட்டன், ஸ்ரீகிருஷ்ணபட்டன், போனம்புறத்து வாமனபட்டன் ஆகியோர் வசம் இந்நிலம் கோயிலுக்காக வழங்கப்பட்டுள்ளச் செய்தி.
செங்கல்பட்டு>திருக்கழுக்குன்றம்>ஆனூர்
செங்கல்பட்டு முழுமையின்றி சிதைந்த இக்கல்வெட்டு மூலம் கரடிகை, இண்டை, திமிலை ஆகிய இசைக்கருவிகள் வாசிப்பவருக்கு இறையிலியாக நிலம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. நாழி எண்ணெய் தினமும் கோயிலுக்கு விளக்கெரிக்க வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
செங்கல்பட்டு>திருக்கழுக்குன்றம்>ஆனூர்
செங்கல்பட்டு கோயிலில் வழிபாடு நடத்தும் மூன்று சந்தியின் போதும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடும் போதும், இரவு நேரத்தில் இறைவனுக்கு உணவு படைக்கும் (ஸ்ரீபலி) போதும் வாத்தியங்கள், இசைக்கருவிகள் இசைப்பவர்களுக்கு நிர்வாகிகள் நிலம் தானமளித்துள்ளனர்.
செங்கல்பட்டு>திருக்கழுக்குன்றம்>ஆனூர்
செங்கல்பட்டு இறைவனுக்கு வழிபாட்டின்போது உணவு படைப்பதற்காக (ஸ்ரீபலி) நிலதானம் செய்தச் செய்தி.
செங்கல்பட்டு>திருக்கழுக்குன்றம்>ஆனூர்
செங்கல்பட்டு முதல் குலோத்துங்க சோழனுடைய ஆட்சியின்போது மாஹேஸ்வர்கள் இறையிழிச்சிக் கோயிலுக்கு நிலம் வழங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>திருப்பருத்திகுன்றம்
காஞ்சிபுரம் இக்கோயில் தெற்குத் திருச்சுற்று மண்டபம் சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் மகாசபையார் 25 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு நிலம் ஒன்றினை இறை நீக்கியச் செய்தி.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>திருப்பருத்திகுன்றம்
காஞ்சிபுரம் செயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டு நகரம் காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றத்து இறைவன் திரைலோக்கிய நாதர் கோயில் ஸ்ரீபண்டாரத்தில் இருந்த குருக்கள் அனந்த வீரிய வாமன முனிவர், இக்கோயில் தானத்தார் பொற்குன்றங் கிழார் தேவாதி தேவர் உள்ளிட்டவர்கள்; காஞ்சிபுரம் சேவகப்பெருமாள் மகன் அரியரபுத்திரரிடம் 120 பணம் பெற்றுக் கொண்டு மனை மற்றும் நிலத்தால் வந்த பங்கினை விற்றுக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>திருப்பருத்திகுன்றம்
காஞ்சிபுரம் தியாக சமுத்திரப் பட்டையார் என்கிற வீமரைசர் என்பவர், திருப்பருத்திக் குன்று இறைவன் செம்பொற் குன்றாழ்வார் வழிபாட்டிற்காக வேண்டி, காலியூர்க் கோட்டத்து விற்பேட்டு நாட்டு காண்ணிபாக்கம் என்னும் ஊரில் நெடுநாள் பயிர் விளையாமல் இருந்த நிலங்களை, இவ்வூர் இறைவனுக்குப் பள்ளிச்சந்தமாகக் கொடையளித்துள்ளார்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>திருப்பருத்திகுன்றம்
காஞ்சிபுரம் மண்டியங்கிழான் குலோத்துங்க சோழ காடுவெட்டி என்பார் தமது சமய குருவாகிய சந்திரகீர்த்தி தேவரின் நலத்திற்காகவும், 20 வேலி நிலம் வழங்கிட மன்னனிடம் முறையிட்டான். இவனின் வேண்டுகோளை ஏற்று எயிற்கோட்டத்து அம்பை என்னும் ஊரில் 20 வேலி நிலத்தினை இக்கோயிலுக்கு பள்ளிச்சந்த இறையிலியாக வழங்க இம்மன்னன் ஆணையிட்டுள்ளச் செய்தி. அம்பை எனும் ஊர் தற்போது அம்பி என்ற பெயரில் காஞ்சி நகரத்திற்கு மேற்கே அமைந்துள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>திருப்பருத்திகுன்றம்
காஞ்சிபுரம் தியாகசமுத்திரப் பட்டையார் என்பவருக்கு தாம்பூலம் மடித்து கொடுக்கிற (அடைக்காயமிது இடுகிற) வீம வடுகன் என்னும் பிராமணன், இவன் நென்மேலி என்னும் ஊரில் ஏத்தக் கடமை மூலம் பெறப்பட்ட நெல்லினை இந்நாயனாருக்கு காலை திருப்பள்ளி எழுச்சி செய்து படைக்கப்படும் திருவமுதுக்காக அளித்துள்ளான். மேலும் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட மண்டபத்தினையும் செய்வித்துள்ளான் என்ற செய்தியையும் தருகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தியாக சமுத்திரப்பட்டையார் கல்வெட்டில் (ஊ. க. எண். 5 ) தியாக சமுத்திர பட்டையார் ஆன வீமரைசர் என்றழைக்கப்பட்டுள்ளார். எனவே இவர் இப்பகுதி அதிகாரியாக திகழ்ந்துள்ளார் எனலாம். மேலும் இவன் காண்ணிப்பாக்கம் என்ற ஊரினை பள்ளிச்சந்தமாக இவ்வூர் இறைவனுக்கு அளித்ததையும் அக்கல்வெட்டு கூறுவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மூத்தவாள் பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் என்பவனுக்கு காஞ்சிபுரம் மாநகரத்தார் நிலம் ஒன்றினை விற்றுள்ளனர். இந்நிலம் இக்கோயிலில் உள்ள கரிகாலப் பிள்ளையார் வழிபாட்டிற்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. தெற்க்கிருந்த நக்கர் கோயிலிலுள்ள கரிகால சோழப்பிள்ளையார்க்கு சந்தி விளக்கொன்று வைக்க இவனிடமிருந்து சிவபிராமணர்கள் 3 பழங்காசுகள் பெற்றுக் கொண்டனர். இக்கோயில் இறைவன் தெற்க்கிருந்த நக்கர் என்றழைக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>கூரம்
காஞ்சிபுரம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர் வேளூர் நாட்டுக் கூரம் என்கிற இவ்வூரைச் சேர்ந்த ஆசாரியன் ஆதிய்யணன் என்பவன் இறைவனுக்கு திருவமுது வைக்க ஏற்பாடு செய்துள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>கூரம்
காஞ்சிபுரம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டுக் கூரமாகிய விஜ்யாவினித சதுர்வேதி மங்கலம் ஊரினை நிர்வகிக்கும் சபை, கச்சிப்பேட்டு அதிகாரி மீனவன் மூவேந்தவேளான் வீட்டின் மேல்புறத்தில் அமைந்திருந்த ஈஸ்வரர் ஆலயத்தின் முற்றத்தில் அனைத்து மக்களுடன் கூடி நிறைவேற்றிய மகாசபை தீர்மானம். இந்த ஆளுங்கணத்து உறுப்பினர்களில் ஒருவரான இருங்கண்டி காளிதாசசோமாசியர் என்பவர் மடம் ஒன்றினை எடுப்பித்துள்ளார். இம்மடத்திற்கு கார்த்திகை, மார்கழி, தை, மாசி, வைகாசி ஆகிய இம்மாதங்களில் தண்ணீர் வைக்கவும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை தரையினை மெழுகுவதற்கும் நிலம் ஒன்றினை இவ்வூர் மகா சபையினர் இறைநீக்கி மடப்புறமாக அறித்த ஆணை இக்கல்வெட்டாகும்.