Skip to main content

1146 results found

விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் தனது புகழ் (பிரம்மம்) வளர்வதற்காக தெய்வ உருவத்தை எழுந்தருளிவித்து தீர்த்தக்குளம் (ஜலபிரதிஷ்டை)அமைத்து தீங்குகள் அகலவும் (துஸ்ட நீக்கமும்) நன்மைகள் (சிஷ்டபரிபாலனமும்) பெருகவும், மன்னன் விக்கிரம சோழன் கூறியபடி இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பிரம்மதேயம் தனியூர் இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி பெருமக்கள் இவ்வூர் திருப்பாதாளீசுவரர் கோயிலில் விக்கிரம சோழன் 14-ஆம் ஆட்சியாண்டில் வைத்த கற்பூரத் திருநந்தா விளக்கு எரிப்பதற்காக மாகாணி நிலம் வழங்கி, அந்நிலத்தின் மீதான இறையை நீக்கியும் வழங்கியுள்ளனர்.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் ஓய்மா நாட்டு உலகமாதேவிபுரத்தைச் சார்ந்த வியாபாரி குனிக்கும் பிரான் திருநீற்றாண்டான் என்பவன் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பிரம்மதேயம் தனியூர் ஆன இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்தில் உள்ள திருப்பாதாளீசுவரமுடைய கோயில் இறைவனுக்கு 4% கழஞ்சு எடை அளவு பொன்னாலான நெற்றிப்பட்டம் ஒன்றினை இக்கோயில் சிவப் பிராமணர்களிடம் வழங்கியுள்ளான். பொன்னின் தரம் எட்டு மாறி அளவு கொண்டது என்று குறிக்கப்பெற்றுள்ளது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் துண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவன் பிரமீசுவரமுடைய மகாதேவர் என்ற குறிப்பு காணப்படுகிறது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் மன்னன் குலோத்துங்கனின் மூலதெய்வமான இராஜராஜ விண்ணகர் ஆழ்வார் திருமுற்றத்தில் இப்பகுதியைக் கூறு செய்கிற அதிகாரியான குலோத்துங்க சோழ மூவேந்த வேளார் உடனிருக்க சபையார் தந்த ஆவணம் (எழுத்து) இக்கல்வெட்டு. அவர் இக்கோயில் இறை உருவத்தையும், நீர் வளத்தை ஏற்படுத்தி, பகைகள் விலகவும், கண்ணியமான நிர்வாகம் நிகழவும் தன் நலன் வேண்டி செய்ய ஆணையிட்டதின் பேரில் இவ்வூர் தென்பிடாகை பனையூரில் இருந்த சில நிலங்களை பிரம்மபுரீசுவருடைய மகாதேவர் பெயரில் பெருங்குறி பெருமக்கள் மூலம் விலைக்குப் பெற்றுக் கோயில் திருப்பணிகளுக்கும் மடத்தில் சிவனடியார்கள் உண்ணுவதற்கும் வழிவகைச் செய்துள்ளார். நிலங்களின் விவரம் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் எரிஅப்பன் மருந்தன் இராசராச மூவேந்தரையர் என்னும் சிற்றரசனும் கிளியூர் மலையமான் இறையூரான் பெரிய உடையான் இராசராசசேதியராயன் என்ற சிற்றரசனும் செய்து கொண்ட ஓர் அரசியல் உடன்படிக்கை. இக்கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இரு குரிசில்கள் தங்களுக்கிடையே செய்து கொண்ட ஓர் அரசியல் உடன் படிக்கை இக்கல்வெட்டு. இதன்படி இருவரும் எக்காலமும் ஒருவருக்கொருவர் பிழைசெய்யாமல் நட்பாக இருத்தல் வேண்டும். ஒருவரின் பகைவர் மற்றொருவர்க்கும் பகையாவார். ஒருவர் எதிரியுடன் மற்றொருவர் நட்பு கொள்ளுதல், உறவுக்காக தூது அனுப்புதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதில்லை. ஒருவர் நாட்டின் மீது பகைவர் படையெடுத்து வந்தால் மற்றொருவர் படையும் குதிரையும் அனுப்பி உதவவேண்டும். ஒருவருக்கொருவர் கேடு விளைவிப்பதில்லை. இருவரும் வாணவத்தரையர் சொற்படி (அருளிச் செய்துபடி) நடப்பது என்றும் மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்டால் தங்கள் மனைவியை குதிரைகள் பராமரிக்கிர பன்மையானுக்கு கொடுத்தவர் ஆவோம் என்றும் சூளுரைத்துள்ளனர்.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் சோழ மன்னன் விக்கிரம சோழன் தனது மூல தெய்வமாயுள்ள இராஜராஜ விண்ணகர் ஆழ்வார் கோயில் திருமுற்றத்தில் இருந்தபோது இந்நாட்டினை நிர்வாகம் செய்யும் சோழ நாராயண மூவேந்த வேளான் என்னும் அதிகாரி இம்மன்னனின் ஆணையின்படி இக்கோயிலில் இறை உருவத்தை பிரதிட்டை செய்தும், நீர் அமைப்பையும் உருவாக்கியுள்ளான். மன்னனுக்கு எதிர்மறை ஆற்றல்கள் விலகவும், நேர்மையான நிர்வாகம் அளிக்க வேண்டியும் இவ்வூர் பிடாகை கிராமமான முட்டத்தில் உள்ள சில நிலங்களை பெருங்குறி பெருமக்கள் வாங்கி இறை நீக்கியுள்ளனர். இந்நிலங்கள் இக்கோயிலில் இருந்த மடத்தின் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் விழுப்பரைய நாட்டு வாக்கூர் ஏரி கிழான் தீரன் அழிசுகாடன் என்பான் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரமுடைய மகாதேவர் இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கு எரிக்க இக்கோயில் சிவபிராமணன் வசம் ஏழு காசுகள் வழங்கியுள்ளான்.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் இராஜராஜ வளநாட்டு பனையூர் நாட்டுப் பிரம்மதேயம் தனியூர் இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்து வடபிடாகை நெற்குப்பை ஊரில் உள்ள சில நிலங்களை அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டான் ஆன இராசராச சம்புவராயன் தான் பிறந்த அவிட்டம் நாளில் பிரமீசுவரர் கோயில் இறைவன் வீதி உலா வருவதற்கும் பூசைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும் இக்கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளான்.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் மன்னன் விக்கிரமசோழன் தன்னுடைய மூலதெய்வமான ராஜராஜவிண்ணகர் ஆழ்வார் கோயில் திருமுற்றத்தில் தங்கியிருந்தபோது, இவ்வூர் நிர்வாகி கரிகால சோழ நாகநாட்டு மூவேந்த வேளான் இக்கோயிலில் இறை உருவத்தை நிறுவியும், நீர் அமைப்பினை உருவாக்கியும், பகைகள் தீரவும், நேர்மையான நிர்வாகம் ஏற்படுத்திடவும் தன்னுடைய புகழை வளர்ப்பதற்கும் தானமளிக்க மன்னன் ஆணையிட்டுள்ளான். கல்வெட்டு முழுமை பெறவில்லை.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் இது பிரமீசுரமுடைய நாயனார் கோயில் தானத்தாற்கு பாண்டிய மன்னன் வழங்கிய ஆணையாகும். பிரமீசுவரமுடைய நாயனார் கோயிலில் விக்கிரம பாண்டியன் தனது பெயரில் குலசேகரன் சந்தி ஒன்றினை நிறுவியுள்ளான். இச்சந்தி வழிபாட்டின் போது அமுதுபடி, சாத்துப்படி போன்ற தேவைகளுக்காக கோலியபுர நல்லூர் பற்றில் ஓகூர் என்னும் ஊரில் 4 வேலி நிலமும் மற்றும் இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிக்கும் மக்களிடம் வசூலிக்கப்படும் செட்டிஇறை, தறியிறை, அழுகல் சரக்கு, அங்காடிப் பாட்டம், செக்குக்கடமை, வாணிகர் பேர்க்கடமை, குளவடை, மாவடை உள்ளிட்ட வரிகளின் மூலம் பெறப்படும் வருவாயினையும் மூலதனமாகக் கொடுத்து அவ்வழிபாட்டை நடத்திட கோயில் தானத்தாருக்கு ஆணையிட்டுள்ளான்.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் இராசராச வளநாட்டுப் பனையூர் நாட்டுத் தனியூர் ஆன இராசராச சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரம் உடைய நாயனார் கோயிலில் பணியாற்றும் தேவரடியாள் உடையாழ்வி என்பாளின் மகள் திருவெண்காட்டு நங்கை இக்கோயில் இறைவனுக்கு நந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு 32 பசுக்களும் ஓர் எருதும் வழங்கியுள்ளாள். இவற்றினைக் கோயில் பண்டாரத்தில் சேர்த்துக் கொண்டு நந்தா விளக்கு எரிக்கத் தேவையான நெய்யினை வழங்கிட கோயில் மாகேசுவரர்கள் உறுதியளித்துள்ளனர்.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரமுடைய மகாதேவருக்கு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் இருந்த 35 வேலி நிலமும் இக்கோயில் சார்ந்த ராஜநாராயணன் மடத்தில் வந்து உணவருந்தும் தபசியர்களுக்கு மடப்புற இறையிலியாக கொடுக்கப்பட்ட 5 வேலி நிலமும் ஆக மொத்தம் 40 வேலி நிலத்தினையும் ஒன்று சேர்த்து குலோத்துங்க சோழ நல்லார் என்னும் புதிய ஊர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த 40 வேலி நிலத்துக்கு இறைநீக்கி அளிக்கப்பட்டு உள்வரி ஆவணச் சான்றளிக்கத் தரப்பட்ட அரசாணையாக இக்கல்வெட்டுள்ளது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் முந்தையக் கல்வெட்டின்படி இவ்வூர் இறைவன் வழிபாட்டிற்கு 35 வேலி நிலமும் இக்கோயிலில் உள்ள நாராயணன் மடத்தில் உண்ணும் தபசியர்களுக்கு 5 வேலி நிலமும் ஆக 40 வேலி நிலம் பனையூரிலிருந்து பிரித்து குலோத்துங்கச் சோழ நல்லார் எனப் பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டதை அடுத்து மேற்படி பணிகளுக்கு மன்னனால் வழங்கப்பட்ட நேரடி ஆணையாக இந்நிலங்களுக்கு விரிவான உள்வரி நிர்ணயம் செய்யப்பட்டு ஆவணமாக தரப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரர் கோயில் இறைவனுக்கு வேண்டும் வழிபாட்டுத் தேவைகளுக்காக வரி நீக்கி அளிக்கப்பட்ட 35 வேலி நிலமும், இக்கோயிலில் உள்ள ராஜநாராயணன் மடத்தில் வந்து உண்ணும் சிவனடியார்களுக்கு உணவளிக்க வேண்டி மடப்புறமாகக் கொடுக்கப்பட்ட 5 வேலி நிலமும் சேர்த்து மொத்தம் 40 வேலி நிலத்தினையும் குலோத்துங்க சோழ நல்லார் என்னும் பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலங்களின் மீதான வரிகளை நீக்கித் தேவதானமாகவும், மடப்புற இறையிலியாகவும் தொடர வழிவகைச் செய்யப்பட்ட மன்னனின் நேரடி ஆணையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் கோப்பெருஞ்சிங்கனின் அரசாணையை கோயில் நிர்வாகிகளுக்கு கச்சிராயன் என்பவன் ஓலையாக அளித்தமை. ஓகூர் பனையூரில் மடப்புறமாக இருந்த 20 மா நிலத்தில் 4 மா நிலம் மடப்புறமாக இருக்கவும், மீதியுள்ள 16 மா நிலத்தின் வரிவருவாயைக் கொண்டு கோப்பெருஞ்சிங்கனின் பிறந்த தினமான ஆவணி மாதம் திருவோணம் திருநாளில் இறைவனுக்குத் தீர்த்தமாடவும், இவன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அழகிய பல்லவன் சந்தி வழிபாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளத் தொகையை அமுதுபடி படைக்கவும், கோயில் திருப்பணிகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டின் இறுதியில் இருவரிகளில் வடமொழிசுலோகம் உள்ளது. இதனில் திருவோண நாளன்று பார்வதிக்கு விழா எடுப்பதற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சந்தி வீரபிரதாப புவனேக வீரனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறது இக்கல்வெட்டு.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>பிரம்மதேசம்
விழுப்புரம் இராசராச வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பிரமதேசம் தனியூர் இராசராச சதுர்வேதி மங்கலத்தில் உள்ள பிரமீசுவரர் இறைவனுக்கு செங்கேணிக் குடியைச் சேர்ந்த அம்மை அப்பன் பாண்டி என்கிற இராசராசசம்புவராயனால் ஏற்கனவே வழங்கப்பட்ட முத்து, வயிரம், வெள்ளைக்கல் ஆகியவை பதித்த தங்கத்தினாலான இரண்டு தோடுகளையும், எருக்க மாலை ஒன்றினையும் அழித்துக் கிடைத்த 50 பொன்னினை இக்கோயிலுக்குத் தேவையான பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டச் செய்தி.
வேலூர்>காட்பாடி>மேல்பாடி
வேலூர் சோளேந்திர சிம்மேசுவர மகாதேவரின் பவித்ராரோகண விழாவிற்காக மேற்பாடியாகிய ராஜாசிரயபுரத்து நகரத்தாரால் இறையிலியாகத் தரப்பட்ட நிலக்கொடை. இந்நிலம் அரைசூர் உடையான் ஈராயிரவன் பல்லவயனான மும்முடிச் சோழபோசன் அளித்த 30 கழஞ்சு பொன்னுக்கு நகரத்தாரால் விற்கப் பட்டது.
வேலூர்>காட்பாடி>மேல்பாடி
வேலூர் முதலாம் இராசராசனின் திருமகள்போல என்று துவங்கும் மெய்க்கீர்த்தியின் துவக்கப்பகுதி இல்லை. மேற்பாடியாகிய ராஜாசிரயபுரத்து நகரத்தாரால் முடிகொண்ட ராஜாசிரயபுர விடங்கருக்கு இறையிலியாக எல்லா பரிகாரங் களுடன் அளித்த நிலக்கொடை. நில எல்லைகளில் மருதம்பாக்கம், நுகா ஆறு, நீரோடுகால்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. ஊர் வணிகர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.
வேலூர்>காட்பாடி>மேல்பாடி
வேலூர் முதலாம் இராசராசன் ஆற்றூர் துஞ்சின தேவர்க்கு இவ்வூரில் அறிஞ்சிகை ஈசுவர மகாதேவர் என்ற பெயரில் பள்ளிப்படை எடுப்பித்தான். இக்கோயிலுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இந்நகரத்தார் இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளனர்.
வேலூர்>காட்பாடி>மேல்பாடி
வேலூர் முதலாம் இராசராசன், ஆற்றூர் துஞ்சின தேவர்க்கு இவ்வூரில் அறிஞ்சிகை ஈசுவர மகாதேவர் என்ற பெயரில் பள்ளிப்படை எடுப்பித்தான். இக்கோயில், சுற்றாலை, நந்தவனம், மடவிளாகம் ஆகியவற்றுக்குத் தேவையான நிவந்தங்களுக்கு இந்நகரத்தார் 5136 /2 வேலி நிலத்தை இறையிலியாக வழங்கியுள்ளனர். நிலம் அளக்க 18 சாண்கோல் பயன்பட்டது. நில எல்லைகளில் அமைந்த பெருவழி, தெரு, வாய்க்கால் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது அவற்றின் அளவுகளையும் குறிப்பிட்டுள்ளனர்.