1128 results found
விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Gift of land as tax free for burn a kaṛpūra tirunantā viļakku to the god Tiruppātālīśvara temple by headmen of the assembly (Perunguri perumakkal) of Śri Rājārāja chaturvēdimangalam, a bramadēya and taṇiyūr in Panaiyūr-nādu, a sub-division of Rājārāja-Valanādu. தனது புகழ் (பிரம்மம்) வளர்வதற்காக தெய்வ உருவத்தை எழுந்தருளிவித்து தீர்த்தக்குளம் (ஜலபிரதிஷ்டை)அமைத்து தீங்குகள் அகலவும் (துஸ்ட நீக்கமும்) நன்மைகள் (சிஷ்டபரிபாலனமும்) பெருகவும், மன்னன் விக்கிரம சோழன் கூறியபடி இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பிரம்மதேயம் தனியூர் இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி பெருமக்கள் இவ்வூர் திருப்பாதாளீசுவரர் கோயிலில் விக்கிரம சோழன் 14-ஆம் ஆட்சியாண்டில் வைத்த கற்பூரத் திருநந்தா விளக்கு எரிப்பதற்காக மாகாணி நிலம் வழங்கி, அந்நிலத்தின் மீதான இறையை நீக்கியும் வழங்கியுள்ளனர்.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Registers gift of 4% kalañju gold weight gold diadem to Tiruppātālīśvara muḍaya Nāyaṇār at Śri Rājārāja chaturvēdimangalam, a bramadēya and taniyur in Paṇaiyūr-nāḍu, a sub-division of Rājārāja-Vaļanādu by Kuņikkumpirāṇ Tirunīṛṛāṇḍān, a merchant of Ulōgamādēvipuram, a nagaram in Oymā-nādu. ஓய்மா நாட்டு உலகமாதேவிபுரத்தைச் சார்ந்த வியாபாரி குனிக்கும் பிரான் திருநீற்றாண்டான் என்பவன் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பிரம்மதேயம் தனியூர் ஆன இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்தில் உள்ள திருப்பாதாளீசுவரமுடைய கோயில் இறைவனுக்கு 4% கழஞ்சு எடை அளவு பொன்னாலான நெற்றிப்பட்டம் ஒன்றினை இக்கோயில் சிவப்பிராமணர்களிடம் வழங்கியுள்ளான். பொன்னின் தரம் எட்டு மாறி அளவு கொண்டது என்று குறிக்கப்பெற்றுள்ளது.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Mentions temple diety Brahmapuriśvara Mahādēva. துண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவன் பிரமீசுவரமுடைய மகாதேவர் என்ற குறிப்பு காணப்படுகிறது.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Records the purchase of land in Panaiyūr, the southern hamlet of this village, in the name of Brahmiśvara-muḍaiya mahādēvar by the assembly (perunkuri-perumakkal) of Rājarāja - chaturvēdimangalam, a bramadēya and taṇiyūr in Paṇaiyūr-nāḍu a sub- division of Gangaikoṇḍacōla vaļanāḍu. It is stated that the king s officer while camping in the temple of Rājarāja - viņṇagar - Alvar which was tutelary deity (muladeivam) issued this order this officer Aḍavalan alias Kulōttunga chōla - mūvēndavēlān, who was governing the place, had consecreated the god (dēva - pratishṭai), opened the sources for water (jala-pratishtai), for the well lecing of the state. மன்னன் குலோத்துங்கனின் மூலதெய்வமான இராஜராஜ விண்ணகர் ஆழ்வார் திருமுற்றத்தில் இப்பகுதியைக் கூறு செய்கிற அதிகாரியான குலோத்துங்க சோழ மூவேந்த வேளார் உடனிருக்க சபையார் தந்த ஆவணம் (எழுத்து) இக்கல்வெட்டு. அவர் இக்கோயில் இறை உருவத்தையும், நீர் வளத்தை ஏற்படுத்தி, பகைகள் விலகவும், கண்ணியமான நிர்வாகம் நிகழவும் தன் நலன் வேண்டி செய்ய ஆணையிட்டதின் பேரில் இவ்வூர் தென்பிடாகை பனையூரில் இருந்த சில நிலங்களை பிரம்மபுரீசுவருடைய மகாதேவர் பெயரில் பெருங்குறி பெருமக்கள் மூலம் விலைக்குப் பெற்றுக் கோயில் திருப்பணிகளுக்கும் மடத்தில் சிவனடியார்கள் உண்ணுவதற்கும் வழிவகைச் செய்துள்ளார். நிலங்களின் விவரம் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Records a political compact between Eriappan marunthaṇ alias Rājarāja mūvēndaraiyar and Iraiyūrāṇ Periya-uḍaiyāṇ alias Rājarāja chēdirāyāṇ malaiyamāṇ of Kiliyūr to help each other against enemies. The compact contains to the following conditions:i) That (so long) as this chief remains without doing me any injury, I shall also obtain from doing any injury to him,
ii) That hostility shall also be considered as my hostility and vice versa,
iii) That his enemies shall also be considered as my enemies,
iv) That I will not send any emissaries or ally myself or otherwise collude with them,
v) That if he is attacked by any enemies, I will help him with requisite army, and calvary and entering (the enemy s ternitory) shall do all that may be necessary, overtly and covertly; and he shall also be pleased to do likewise.
vi) That if, during my lifetime, I prove faithless to him, I shall be deemed to have forfeited my wife to as. எரிஅப்பன் மருந்தன் இராசராச மூவேந்தரையர் என்னும் சிற்றரசனும் கிளியூர் மலையமான் இறையூரான் பெரிய உடையான் இராசராசசேதியராயன் என்ற சிற்றரசனும் செய்து கொண்ட ஓர் அரசியல் உடன்படிக்கை. இக்கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இரு குரிசில்கள் தங்களுக்கிடையே செய்து கொண்ட ஓர் அரசியல் உடன் படிக்கை இக்கல்வெட்டு. இதன்படி இருவரும் எக்காலமும் ஒருவருக்கொருவர் பிழைசெய்யாமல் நட்பாக இருத்தல் வேண்டும். ஒருவரின் பகைவர் மற்றொருவர்க்கும் பகையாவார். ஒருவர் எதிரியுடன் மற்றொருவர் நட்பு கொள்ளுதல், உறவுக்காக தூது அனுப்புதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதில்லை. ஒருவர் நாட்டின் மீது பகைவர் படையெடுத்து வந்தால் மற்றொருவர் படையும் குதிரையும் அனுப்பி உதவவேண்டும். ஒருவருக்கொருவர் கேடு விளைவிப்பதில்லை. இருவரும் வாணவத்தரையர் சொற்படி (அருளிச் செய்துபடி) நடப்பது என்றும் மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்டால் தங்கள் மனைவியை குதிரைகள் பராமரிக்கிர பன்மையானுக்கு கொடுத்தவர் ஆவோம் என்றும் சூளுரைத்துள்ளனர்.
விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Records the purchase of land in Muṭṭam, the hamlet of this village, in the name of chandeśvara dēvar by the perunkuri perumakkal of Rājārāja Chaturvēdimangalam, a bramadēya and taṇiyür in Paṇaiyūr nāḍu a sub division of Rājārāja valanādu. It is stated that the of Rājārāja viņṇagar - Ālvār was tutelary deity (muladeivam) lands where exempted from taxes an provided for the feeding in the maḍam. Chōla Nārāyaṇa to the king mūvēnda vēļār, who govering this nādu, consecreated the deity (dēva - pratishtai), opened the sources for water (jala - pratishțai), destroyed the nicked and supported the wise, issued the order of the King. சோழ மன்னன் விக்கிரம சோழன் தனது மூல தெய்வமாயுள்ள இராஜராஜ விண்ணகர் ஆழ்வார் கோயில் திருமுற்றத்தில் இருந்தபோது இந்நாட்டினை நிர்வாகம் செய்யும் சோழ நாராயண மூவேந்த வேளான் என்னும் அதிகாரி இம்மன்னனின் ஆணையின்படி இக்கோயிலில் இறை உருவத்தை பிரதிட்டை செய்தும், நீர் அமைப்பையும் உருவாக்கியுள்ளான். மன்னனுக்கு எதிர்மறை ஆற்றல்கள் விலகவும், நேர்மையான நிர்வாகம் அளிக்க வேண்டியும் இவ்வூர் பிடாகை கிராமமான முட்டத்தில் உள்ள சில நிலங்களை பெருங்குறி பெருமக்கள் வாங்கி இறை நீக்கியுள்ளனர். இந்நிலங்கள் இக்கோயிலில் இருந்த மடத்தின் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Records a gift of 7 kasu to siva brāhamanās of this temple perpetual lamp to the Brahmiśvara-muḍaiya mahādēvar Rājarāja - chaturvēdimangalam, in Paṇaiyūr-nāḍu a sub-division of Gangaikoṇḍacōla valanāḍu by Tiran Alisukaḍan of Vakkür in Vilupparaya-nāḍu. விழுப்பரைய நாட்டு வாக்கூர் ஏரி கிழான் தீரன் அழிசுகாடன் என்பான் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரமுடைய மகாதேவர் இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கு எரிக்க இக்கோயில் சிவபிராமணன் வசம் ஏழு காசுகள் வழங்கியுள்ளான்.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
It seems to record a gift of land in Nerkuppai, the nothern hamlet of the Rājarāja - chaturvēdimangalam, a bramadēya a taṇiyür of Paṇaiyūr-nāḍu in Rājarāja vaļanāḍu by Ammaiyappan Paṇḍinādu koṇdāṇ alias Rājarāja Śambuvarāyan for the worship and the procession of the god on the day of the asterism Aviṭṭam in which he was born. இராஜராஜ வளநாட்டு பனையூர் நாட்டுப் பிரம்மதேயம் தனியூர் இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்து வடபிடாகை நெற்குப்பை ஊரில் உள்ள சில நிலங்களை அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டான் ஆன இராசராச சம்புவராயன் தான் பிறந்த அவிட்டம் நாளில் பிரமீசுவரர் கோயில் இறைவன் வீதி உலா வருவதற்கும் பூசைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும் இக்கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளான்.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Incomplete inscription. It is stated that the king was residing in the temple of Rājarāja - viņṇagar Āļvār which was tutelary deity along with his subordinate Karikāla chōla Nāga nāṭṭu mūvēndavēļāṇ the god (dēva - pratishțai), opened the sources for water (jala - pratishțai), destroyed the nicked and supported the wise. மன்னன் விக்கிரமசோழன் தன்னுடைய மூலதெய்வமான ராஜராஜவிண்ணகர் ஆழ்வார் கோயில் திருமுற்றத்தில் தங்கியிருந்தபோது, இவ்வூர் நிர்வாகி கரிகால சோழ நாகநாட்டு மூவேந்த வேளான் இக்கோயிலில் இறை உருவத்தை நிறுவியும், நீர் அமைப்பினை உருவாக்கியும், பகைகள் தீரவும், நேர்மையான நிர்வாகம் ஏற்படுத்திடவும் தன்னுடைய புகழை வளர்ப்பதற்கும் தானமளிக்க மன்னன் ஆணையிட்டுள்ளான். கல்வெட்டு முழுமை பெறவில்லை.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Gift of 4 vēļi of land, in Ōgūr Paṇaiyūr in Kōliyanallur parru and collecting the taxes from residents of Tirumaḍai for worship and offerings at the service called Kulasekharan-sandi named after the king. இது பிரமீசுரமுடைய நாயனார் கோயில் தானத்தாற்கு பாண்டிய மன்னன் வழங்கிய ஆணையாகும். பிரமீசுவரமுடைய நாயனார் கோயிலில் விக்கிரம பாண்டியன் தனது பெயரில் குலசேகரன் சந்தி ஒன்றினை நிறுவியுள்ளான். இச்சந்தி வழிபாட்டின் போது அமுதுபடி, சாத்துப்படி போன்ற தேவைகளுக்காக கோலியபுர நல்லூர் பற்றில் ஓகூர் என்னும் ஊரில் 4 வேலி நிலமும் மற்றும் இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிக்கும் மக்களிடம் வசூலிக்கப்படும் செட்டிஇறை, தறியிறை, அழுகல் சரக்கு, அங்காடிப் பாட்டம், செக்குக்கடமை, வாணிகர் பேர்க்கடமை, குளவடை, மாவடை உள்ளிட்ட வரிகளின் மூலம் பெறப்படும் வருவாயினையும் மூலதனமாகக் கொடுத்து அவ்வழிபாட்டை நடத்திட கோயில் தானத்தாருக்கு ஆணையிட்டுள்ளான்.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Records gift of 32 cows and one bull for a perpetual lamp by Thiruvenkattu nangai, daughter of Udaiyalvi, devaradiyar of this temple இராசராச வளநாட்டுப் பனையூர் நாட்டுத் தனியூர் ஆன இராசராச சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரம் உடைய நாயனார் கோயிலில் பணியாற்றும் தேவரடியாள் உடையாழ்வி என்பாளின் மகள் திருவெண்காட்டு நங்கை இக்கோயில் இறைவனுக்கு நந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு 32 பசுக்களும் ஓர் எருதும் வழங்கியுள்ளாள். இவற்றினைக் கோயில் பண்டாரத்தில் சேர்த்துக் கொண்டு நந்தா விளக்கு எரிக்கத் தேவையான நெய்யினை வழங்கிட கோயில் மாகேசுவரர்கள் உறுதியளித்துள்ளனர்.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Registers that 35 véli of dévadana lands in Rajaraja chaturvédimangalam which was belonging to the temple of Brahmigvaramudaiya Mahadéva at Rajaraja chaturvédimangalam in Panaiyir-nadu, a subdivision of Rajaraja-Valanadu and the 5 vélr land given for feeding tapasvins in the Rajanarayana-madam within the temple were clubbed in totally 40 vélr lands together as a new village called Kulottunga chola nalltir, which was declared free of taxes இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரமுடைய மகாதேவருக்கு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் இருந்த 35 வேலி நிலமும் இக்கோயில் சார்ந்த ராஜநாராயணன் மடத்தில் வந்து உணவருந்தும் தபசியர்களுக்கு மடப்புற இறையிலியாக கொடுக்கப்பட்ட 5 வேலி நிலமும் ஆக மொத்தம் 40 வேலி நிலத்தினையும் ஒன்று சேர்த்து குலோத்துங்க சோழ நல்லார் என்னும் புதிய ஊர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த 40 வேலி நிலத்துக்கு இறைநீக்கி அளிக்கப்பட்டு உள்வரி ஆவணச் சான்றளிக்கத் தரப்பட்ட அரசாணையாக இக்கல்வெட்டுள்ளது.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Records the text of the u/vari of the grant recorded in earlies inscription giving a detailed description of the lands முந்தையக் கல்வெட்டின்படி இவ்வூர் இறைவன் வழிபாட்டிற்கு 35 வேலி நிலமும் இக்கோயிலில் உள்ள நாராயணன் மடத்தில் உண்ணும் தபசியர்களுக்கு 5 வேலி நிலமும் ஆக 40 வேலி நிலம் பனையூரிலிருந்து பிரித்து குலோத்துங்கச் சோழ நல்லார் எனப் பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டதை அடுத்து மேற்படி பணிகளுக்கு மன்னனால் வழங்கப்பட்ட நேரடி ஆணையாக இந்நிலங்களுக்கு விரிவான உள்வரி நிர்ணயம் செய்யப்பட்டு ஆவணமாக தரப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Registers that the 35 véli land as dévadana lands belonging to the temple of Brahmisvaramudaiya - Mahadéva and 5 véli land as madappura-iraiyili given for feeding tapasvins in the Rajanarayanan madam within the temple were clubbed together as a new village called Kuldttunga chola nallir which was declared free of taxes இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரர் கோயில் இறைவனுக்கு வேண்டும் வழிபாட்டுத் தேவைகளுக்காக வரி நீக்கி அளிக்கப்பட்ட 35 வேலி நிலமும், இக்கோயிலில் உள்ள ராஜநாராயணன் மடத்தில் வந்து உண்ணும் சிவனடியார்களுக்கு உணவளிக்க வேண்டி மடப்புறமாகக் கொடுக்கப்பட்ட 5 வேலி நிலமும் சேர்த்து மொத்தம் 40 வேலி நிலத்தினையும் குலோத்துங்க சோழ நல்லார் என்னும் பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலங்களின் மீதான வரிகளை நீக்கித் தேவதானமாகவும், மடப்புற இறையிலியாகவும் தொடர வழிவகைச் செய்யப்பட்ட மன்னனின் நேரடி ஆணையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.விழுப்புரம்>விழுப்புரம்>பிரம்மதேசம்
Records a writ Kachchirayan under orders (tirumugam) of the king (Kopperunyjingadéva) to the temple. Gift of land 16 mda land apart from 4 ma land for madappura iraiyili authorities free of taxes in Ogir Panaiyir to the temple Brahmisvara temple for conducting festivals on the day of the asterism Tiruvodnam in the month of Avani in which the king was born, for the service called Alagiya Pallavan Sandhi and for temple repairs. A sanskrit verse at the end of this inscription records that Virapratapa Bhuvanékavira instituted a festival on the day of Sravana at the service (Sandhi) called after him to the goddess Parvati. கோப்பெருஞ்சிங்கனின் அரசாணையை கோயில் நிர்வாகிகளுக்கு கச்சிராயன் என்பவன் ஓலையாக அளித்தமை. ஓகூர் பனையூரில் மடப்புறமாக இருந்த 20 மா நிலத்தில் 4 மா நிலம் மடப்புறமாக இருக்கவும், மீதியுள்ள 16 மா நிலத்தின் வரிவருவாயைக் கொண்டு கோப்பெருஞ்சிங்கனின் பிறந்த தினமான ஆவணி மாதம் திருவோணம் திருநாளில் இறைவனுக்குத் தீர்த்தமாடவும், இவன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அழகிய பல்லவன் சந்தி வழிபாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளத் தொகையை அமுதுபடி படைக்கவும், கோயில் திருப்பணிகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.கல்வெட்டின் இறுதியில் இருவரிகளில் வடமொழிசுலோகம் உள்ளது. இதனில் திருவோண நாளன்று பார்வதிக்கு விழா எடுப்பதற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சந்தி வீரபிரதாப புவனேக வீரனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறது இக்கல்வெட்டு.