54 results found
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்
Damaged in the middle. Seems to record the arrangements made to offer sacred food to the goddess (Pirattiyar) on sundays by 9 persons, through Kurukadikilar Araiyan Madhurantakan alias Chola Divakara Vilupperaraiyan who was looking after the shares of the above mentioned 9 persons. இடையில் பெரிதும் சிதைந்துள்ளது. ஒன்பதுபேர், தங்கள் பங்கு நிலங்களைக் கண்காணி மெய்யும் குருகாடிகிழார் அரையன் மதுராந்தகன் ஆன சோழதிவாகர விழுப்பேரரையனிடம் செய்த ஏற்பாட்டின்படி, ஞாயிற்றுக் கிழமைகள் தோறும், தேவிக்கு (பிராட்டியார்) திருவமிர்து படைக்கச் செய்ததைக் குறிக்கிறதுநாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்
Records the arrangements made to perform sacred bath and for the livelihood (jivanam) of the bhattas who recite (adyayana) vedas. Two Superintending officials namely Oliyan Andakutti and his younger brother Oliyan Tiruchirrambalamudalyan are mentioned. Damaged in the beginning portion. சோழகுலவல்லிப் பட்டினத்து ஊரவர்கள் இறைவனின் திருநீராட்டுக்கும் (திருமஞ்சனம்), வேதம் சொல்லும் (அத்யயனம்) பட்டர்கள் பத்துபேர் வாழ்வாதாரத்திற்கும் (ஜீவனம்) ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. ஒளியன் ஆண்டகுட்டி, அவன்தம்பி ஒளியன் திருச்சிற்றம்பலமுடையான் ஆகிய இருவரும் கண்காணி அதிகாரிகளாகக் குறிக்கப்படுகின்றனர். முன்பகுதி சிதைந்து விட்டது.நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records some deed made by Mahesvarakkankan seyvar, Koll kariyan cheyvar, accountant and Srimahesvaras jointly. இருவாய்மூருடையார் கோயில் ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களும், கோயிற் காரியம் செய்வார்களும், கோயிற் கணக்கரும், ஸ்ரீமாஹேஸ்வரரும் இசைந்து செய்த செயலைக் குறிக்க எழுதத் தொடங்கப்பட்ட இக்கல்வெட்டு செய்திகளைத் தெரிவிக்கும் பகுதி வெட்டப்படுவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>ஆவராணி
Seems to register an agreement made by the urar of Chitralekhai Perumpalli with Srimahesvarakkankani seyvar, Kankani seyvar and the temple accountant. ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும், கண்காணி செய்வார்களுக்கும், கோயிற் கணக்கனுக்கும், சித்திரலேகைப்பெரும் பள்ளி ஊரார் செய்து கொடுத்த ஒப்பந்தத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது.நாகப்பட்டினம்>கீழ்வேளூர்>ஆந்தக்குடி
Records the reassesment and settlement of lands as brahmana parru, vellalar parru in the tirunamathukkani lands situated at Andakkudi in Puliyur - nadu a division of Arumolideva valanadu. அருமொழி தேவ வளநாட்டுப் புலியூர் நாட்டு மாஹேஸ்வர கண்காணிகளுக்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் எழுதிக்கொடுத்த ஆவணம் இது. திருநாமத்துக் காணியாக விட்ட தரம் பெற்ற நிலத்தின் குறைவினைச் சரிசெய்து ஊர்வரியும் செலுத்தச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திரைலோக்கி
- கல்வெட்டின் தொடக்கம் மட்டுமே உள்ளது. விளத்தூர் நாட்டுச் சுங்கந்தவித்த சோழநல்லூர், கோயிற் காரியஞ் செய்வார். கோயிற் கண்காணி செய்வார், தேவ கன்மி ஆகியோருக்கு எழுதிக்கொடுத்த ஆவணம் இது. பிற செய்திகள் கிடைக்கவில்லை.கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>சின்னகொத்தூர்
- திரிபுவனமல்லபூர்வாதி ராயரான பூமிநாயக்கர் தனது பிறந்த நக்ஷத்திரமான மூலம் தோறும் திருவேகம்பமுடைய நாயனாருக்கு திருவமுது செய்யவும். நாள் தோறும் ஒரு திருமாலை சாத்திவரவும் அவரது நாட்டில் புதுப்பற்றில் உள்ள காக்கும்நாயகன்நல்லூரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார். இத்தேவதான ஊரிலிருந்து கிடைக்கும் நல்லெருது, நற்பசு, நற்கிடா, பஞ்சு நூல், தறித்தணியன் எள்ளு, இருப்பு கட்டி, அசுவம், வெட்டி. பயறுகாணம், விச்சுப்பாட்டம், அம்சைச்சாரிகை, குதிரைச் சாரிகை, கலியாணத்தாயம் போன்ற எல்லா விதமான ஆயங்களும் இவ்விறைவனுக்கே இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தேவதானத்தைக் கோயில் தேவகன்மிகள் காலார்கள் ஆகியோரில் நால்வர் பெற்றுக் கொண்டதும், இத்தருமம் இவர்களால் எந்நாளும் கண்காணிக்கப் படவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.கன்னியாகுமரி>கல்குளம்>திருவிதாங்கோடு
- ஈசான மஹாதேவர்க்குக் கார்த்திகை மாதத்தில் விளக்கு எரிப்பதற்கும், விளக்கு வைக்கின்ற நாளில் சுவாமிக்கு திருவமுது படைப்பதற்கும், விளக்கைக் கண்காணித்து வருவான் ஒருவனுக்கு நித்தியச் செலவுக்குமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது.கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>கன்னியாகுமரி
- இராஜராஜப்பாண்டி நாமடு உத்தமசோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டுக் கழிக்குடியைச் சேர்ந்த ஸ்ரீவல்லவப் பெருஞ்சாலையான இராஜராஜப் பெருஞ் சாலைக்கு. நாஞ்சி நாட்டு மணற்குடியைச் சேர்ந்த மஹிபாலகுலகாலப் பேரளத்திலிருந்து அனுப்பப்படும் உப்பு அனுப்பப்படாது முட்டுப்பட்டது. அரசியிடம் பணி புரியும் அரிகுலகேசரியான பவித்திர மாணிக்கத் தொங்கப் பேரரையன் என்பான் அரசனிடம் அதுபற்றி முறையிட்டான். அதனைக் கேள்வியுற்ற முதலாம் இராஜாதிராஜன் உப்பளங்களைக் கூறுசெய்யும் அதிகாரிகளுக்கும், கண்காணி செய்யும் அதிகாரிகளுக்கும், முன்பிருந்தவாறே இராஜராஜப் பெருஞ் சாலைக்கு, ஒரு கலம் உப்புக்கு ஒரு நாழி உப்பு என உறைபிடித்து அனுப்ப வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்ததைக் குறிக்கிறது.காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of the village of Ārpākkam in Māgaral-nādu for conducting the daily expenses in the same temple. Gurukularayan, Nigariliśōlappallavaraiyan and Nilagangaraiyan figure among the signatories. திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயில் தினசரி வழிபாட்டிற்காக மாகறல் நாட்டு ஆற்பாக்கம் என்னும் கிராமத்தினை தேவதான இறையிலியாக கொள்ள இக்கோயில் ஸ்ரீவயிஷ்ணவக் கண்காணி செய்பவர்களுக்கும் வரிக் கூறு செய்பவர்களுக்கும் மன்னன் நேரடி ஆணை வழங்கியுள்ளான்.காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the gift of houses and lands to 200 persons who serve the god and who are called Tribhuvanaviran-padiyilār . அருளாளப் பெருமாள் கோயிலில் இறை பணி செய்யும் திரிபுவனவீரந் பதியிலார் இரு நூறு நபர்களுக்கு வீட்டு மனையும், நிலமும் வழங்கிட வேண்டுமென்று இக்கோயில் வைணவக் கண்காணி செய்பவர்களுக்கு திரிபுவன வீரதேவர் என்றழைக்கப்படும் மூன்றாம் குலோத்துங்கள் நேரடி ஆணை வழங்கியுள்ளான்.காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவடிசூலம்
Built in at the biggining. Records the gift of tax free lands in various places to the temple of Thiruvidaisuramudaiyar. களத்தூர்க்கோட்டத்து வல்லநாட்டுப் பெருந்தோபாக்கமும் ஆமூர் கோட்டத்துப் பெருந்தோபாக்கமும் நீர் நிலமும் கொல்லை நிலமும் இறையிலியாக விடப்பட்டன. அதனைப் பதிவு செய்யுமாறு திருவிடைச்சுரமுடையார் கோயில் தேவகன்மி, கோயில் கணக்கு, சிரி மாஹேஸ்வர கண்காணி போன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>மாகறல்
Records the sale of a village called Sri Krishnacheri, which was a hamlet of Vikramabharana Chaturvedimangalam by the assembly to a merchant of Selai named Padampakka nayagan Alagiya Perumal for 80 standard coins. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து பாகூர் நாட்டு உக்கல் என்ற விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் ஓர் ஊரையும் அவ்வூரிலுள்ள குளங்களையும் எல்லை சுட்டி விற்பனை செய்தனர். அதே மண்டலத்தைச் சேர்ந்த ஈக்காட்டுக் கோட்டத்து காக்கலூர் நாட்டு செலை என்ற ஊரைச் சேர்ந்த வாணிகன் படம்பக்கநாயகன் அழகியபெருமாள் என்பவர் அவ்வூரை விலைக்கு வாங்கினார். அவ்வூர் விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் பிடாகை ஸ்ரீகிருஷ்ணச்சேரி என்பது. இவ்வூருக்கு எல்லைகள் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. இவ்வூருக்கு விலையாக அன்றாடு நற்பழங்காசு 80 வாங்கிக் கொண்டு விலைப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.இந்நிலத்திற்கு எந்தவொரு கலனுமில்லை (வில்லங்கம்) அவ்வாறு உள்ளதாகத் தோன்றினால் அதை நாங்களே தீர்த்துக்கொடுப்போம். இந்த ஊரை இவரே விற்று ஒற்றி வைத்துக் கொள்ளலாம்.
இவ்வூர்க் கண்காணி, ஆகவி, போன்ற பணிகளையும் விலைக்கு வாங்கி அவ்வூரைக்காணி உடையவராகிய படம்பக்கநாயகரே செய்துகொள்ளலாம் என்றும் சம்மதித்து மேற்கூறிய சதுர்வேதி மங்கலத்துச் சபையார் விலைப்பிரமாணம் செய்து கொடுத்தனர்.
இக்கல்வெட்டை சபையார் பணிக்க எழுதியது ஊர் மத்யஸ்தன் ஆவான். அவனது கையெழுத்தினைத் தொடர்ந்து 80 பேர் கையெழுத்திட்டுள்ளனர். முதலில் கையெ ழுத்திட்டுள்ள மத்யஸ்தனே இறுதியிலும் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.