Skip to main content

1146 results found

திருவாரூர்>கூத்தாநல்லூர்>வேளுகுடி
திருவாரூர் பேரம்பலம் ஷிபான் மேய்ந்த ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர் என்று அரசனின் சிறப்புப் பெயர் காணப்படுகிறது. கல்வெட்டின் உட்பகுதியில் பெரியதேவர் குலோத்துங்க சோழதேவர் என்ற குறிப்பும் உள்ளது. மங்கல நாட்டில் மங்கலம் என்ற ஸ்ரீஇராசேந்திர சதுர்வேதி மங்கலத்திலுள்ள கோயிலின் தேவதான இறையிலி நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஊர்க் கணக்குப்படி தேவதான இறையிலி நிலங்கள் தளியாகப் பிரித்து பழைய பெயர் நீக்கப்பட்டுக் குலோத்துங்க சோழமங்கலம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதை அறியமுடிகிறது.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
திருவாரூர் இக்கல்வெட்டின் முதல் 23 வரிகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. ஆதலால் மன்னன் பரை அறிந்து கொள்ள முடியவில்லை. ஊர்க் கல்வெட்டு எண் 11, 12 ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆதலால் இக்கல்வெட்டும் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்ததாகவே இருத்தல் வேண்டும். எழிலூர்க் கிழவன் நந்திதாயனான வீரகேசரி விழுப்பேரரையன் என்பவன் குறிப்பிட்ட நிலம் ஒன்றை விலைக்கு வாங்கி இறைவனுக்குத் திருவமுது, புளிங்கறி, நெய், தயிர், பொறிக்கரி, வெற்றிலை, அடைக்காய், திருமெய்ப் பூச்சு போன்றவற்றிற்காக இறையிலி தேவதானமாக நிலமளித்த செய்தியும் அதிகாரிகள் பலர் கையொப்பமிட்ட செய்தியும் காணப்படுகிறது.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
திருவாரூர் ஊர்க் கல்வெட்டு எண் : 11-உடன் தொடர்புடையது. தென்கரை பழைய செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் எழிலூர்க்கிழவன் நந்தி தாயஞான வீரகேசரி விழுப்பேரரையனுக்கு நிலம் விற்றுக் கொடுத்தனர். அந்தரந்திற்கு கட்ட வேண்டிய வரியை இறை) தாங்கள் கட்டுவதாகக் கூறி அதற்குரிய பிரமாணமும் செய்து கொடுத்தனர். அப்பிரமாணம் அப்பிரமாணம் இறைகாவல் பிரமாணம் என்றழைக்கப்பட்டது. இந்த ஆவணம் தொலைந்து போனதால் மீண்டும் ஆவணம் ஒன்று எழுதிப் பெறப்பட்டது. இவ்வாறு நிலம் விற்றுக் கொடுத்த ஆவணம் தொலைந்து விட்டதால் மீண்டும் எழுதிக் கொடுக்கப்படுகின்ற ஆவணம் புளப்பிரமாணம் என்று அழைக்கப்படும் என்பதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. கலம் என்பது ஆவணத்தின் மற்றொரு பெயராகவும் காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் ஆறு வரிகள் மிகவும் சிதைந்துள்ளன. ஊர்க் கல்வெட்டு எண் 11-உடன் தொடர்புடையதால் இக்கல்வெட்டும் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது எனக் கொள்ளலாம்.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
திருவாரூர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கப்பா அய்யனும் பள்ளிப்பட்டூர் வீற்றிருந்தார்பிள்ளையின் மகள் நயினார்பிள்ளை என்பவரும், மெய்க்குநாயனாராகிய இக்கோயில் இறைவனுக்கு நிலமும் மனையும் குளமும் தாளமாக வழங்கினர். இவற்ற வருவாயிலிருந்து திந்திரி ஓதாம் எனக் கூறப்படும் புளியோதரை படைப்பதற்கு நாள் ஒன்றுக்கு குறுணி (மரக்கால்) அளவு அமுதுபடி செய்து நெய்வேத்தியமும் செய்யவேண்டும். குறுணி அரிசி பிரசாதத்தில் இரு நாழி பிரசாதம் தன்மத்தரவுக்காகவும், மீதி அறுநாழி பிரசாதத்தில் கன்தவனத்தில் பணிபுரிவோருக்கு மூன்று நாழி பிரசாதமும் மீதியை வரைப்பு நாட்டு நம்பிக்கு உரி, சோமாசி நம்பிக்கு உரி, முதலியார்க்கு உரி, மாடாபத்தியத்துக்கு உரி, கண்காணிக்கு உரி, மெய் காவலுக்கு உரியுமாகப் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தன்மத்தரவுக்கும் நந்தவனத்துக்கும் முறையே 2+3 (5) நாழிடப் போக மீதி மூன்று நாழி அறுவர்க்கு உரி வீதம் பிரிந்துப் கொடுக்கப்பட்டிருப்பதால் உயி என்பது | நாழி என்ற அளவு என்பதும் 8 நாழி ஒரு குறுணி (மரக்கால்) என்பறும் இக்கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
திருவாரூர் திருவாரூர் வடக்கி மடத்தின் முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த ஒருவர், இக்கோயிலுக்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியதையும், இந்நிலம் தொடர்பாக கோயிலுக்குக் கொடுக்க வேண்டிய நெல்லின் அளவு போன்றவற்றை திரிபுவனக் காடுவெட்டி என்பவர் தனது ஆணை மூலம் நிர்ணயித்ததையும் கூறுகிறது இக்கல்வெட்டு, இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
திருவாரூர் விஜயநகர மன்னன் அச்சுததேவராயர் காலத்தில் அவர் தர்மமாக கோயம் பேட்டை சேர்ந்த நரசன் முதலியார் குமாரர் பள்ளி கொண்ட முதலியார் என்பவர் திருமேற்கோட்டை இறைவனுக்கு முள்ளி ஆற்றுப் பாசனத்தில் தேவதான நிலம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
திருவாரூர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் புவனேக வீரன் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. சொக்கனாயனான விஜயுண்டகோபாலன் என்பவன் ஆவிக்கோட்டை என்ற ஊரில் சொக்க வினாப் பிள்ளையாருக்கு இறையிலி தேவதானமாக நிலமளிந்த செய்தி கூறப்பட்டுள்ளது. இப்பிள்ளையார். இவர் தன் பெயரில் எழுந்தருளுவித்த பிள்ளையாராக இருத்தல் வேண்டும்.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
திருவாரூர் இக்கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. கடைசியில் சில வரிகள் காணப்படவில்லை. இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட இறையிலி தேவதான நிலங்களின் அளவுகளும் எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையின் மூலம் இவ்வூர். இராஜேந்திர சோழ வளநாட்டு, புறங்கரம்பை நாட்டு, குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்தின் மேற்கில் உள்ள பிடாகையாக அமைந்திருந்தமையும் இவ்வூர் மும்முடிசோழநல்லூர் என்று அழைக்கப்பட்டிருந் தமையும் தெரிய வருகிறது.
மயிலாடுதுறை>மயிலாடுதுறை>கொருக்கை
மயிலாடுதுறை கல்வெட்டு முடிவுறவில்லை. இது ஒரு மனை விலைப் பிரமாண இசைவுத் தீட்டு. கிணற்றிலிருந்து நீர் இறைக்கவும், அந்நீர் பாய வாய்க்கால் வெட்டவும், விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கையான விக்கிரமசோழ சதுர்வேதி மங்கலத்துத் திருக்கடவூர் பாரத்துவாஜி சூரியதேவன் நத்தன் என்பான் தன்னுடைய மனையைத் திருநாமத்துக் காணியாக இவ்வூர்க் கோயிலுக்கு விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை>மயிலாடுதுறை>கொருக்கை
மயிலாடுதுறை விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கையான விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து மஹா ஸபையார்- திருவீரட்டானமுடையார்க்கு திருஅர்த்த சாமத்துக்குச் செங்கழுநீர்ப்பூத் திருப்பள்ளித்தாமத்திற்காக நிலம் இறையிலி செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக உரிமையற்றுப் பாழாய்க் கிடந்த நிலத்தினைத் திருத்தி நெல் பயிர் உள்ளிட்ட பயிர்கள் செய்து இத்தேவர்க்குத் திருவர்த்தசாமத்துக்கு நாள் ஒன்றுக்கு 100 செங்கழுநீர்ப்பூத் திருப்பள்ளித்தாமம் இடுவதாக இக்கோயிற் காப்பிட்டிருக்கும் திருஞானசம்பந்தர் பலர்பக்கலும் ஒட்டிலிரந்து பெற்று ஸ்ரீபண்டாரத்திற் செலுத்திய காசு நூற்றறுபதுங் கொண்டு மகா சபையார் ஊர்க்கீழிறையிலி செய்து கொடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>மேலப்பாதி
நாகப்பட்டினம் கல்வெட்டின் முன்பகுதி கட்டடத்திற்குள் மறைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய நேர்முக ஆணை இது குலோத்துங்க சோழக் கெணியாதராயனின் வேண்டு கோளுக்கிணங்க, இராஜாதிராஜ வளநாட்டு, வீதிவிடங்கச் சதுர்வேதி மங்கலத்திலுள்ள உடையரர் வீமேஸ்வரதேவர் கோயிற் தேவகன்மிகளுக்கும் ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் அரசன் ஆணையாக அரங்கற்குடியில் உள்ள குளம் செங்கழுநீர்க்குளமாக வீமேசுரதேவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டதால் தேவதான நிலத்துக்கு நீர் இறைக்க இயலாமல் போனதால் நிலத்துக்குத் தேவையான நீரும் இறைத்துக் கொண்டு, செங்கழுநீர்ப்பூவும் இறைவனுக்குப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமென ஆணையிடப்படுகிறது. இவ்வாணையைத் திருமந்திர ஓலை நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவன் எழுதியுள்ளான்.
மயிலாடுதுறை>மயிலாடுதுறை>ஆத்தூர்
மயிலாடுதுறை அரசனுடைய நன்மைக்காகவும், [கிராம நன்மைக்காகவும்] திருவிடைத்திட்டையுடையார் கோயில் இறைவனை அமாவாசை நாளன்று உலாவாக எடுத்து வருவதற்கு ஜயசிம்மகுலகாலபுரத்திலுள்ள நிலத்தினை இறையிலிமாக இராஜநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் அளித்துள்ளனர். இந்தத்தானம் வாணாதிராஜருடைய சிறப்பு (கடையீடு) ஆணையினைப் பெற்று செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை>மயிலாடுதுறை>ஆத்தூர்
மயிலாடுதுறை அரசனது (திருமுகம்) நேர்முக ஆணை அரசனுடைய 17+1(18)-ஆம் ஆட்சியாண்டு முதல் இராஜநாராயணச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகையான கீரனூரிலுள்ள அவிமுக்தேஸ்வரர் கோயில் தேவதான இறையிலியை மாற்றித் திருவிடைத்திட்டையுடையார் கோயில் நிவந்தங்களுக்காக 2 வேலி நிலம் இறையிலி அளிக்கப்பட்டதை யும். இந்த ஆணையை எழுதியவன் திருமந்திர ஓலை நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பதையும், வரியிலாரும், வரிக்கூறு செய்வார்களும் உள்வரியிட்ட செய்தியையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
மயிலாடுதுறை>மயிலாடுதுறை>ஆத்தூர்
மயிலாடுதுறை கி. பி. 12ஆம் நூற்றாண்டில் கோயில் நிவந்தங்களுக்காகக் கொடுக்கப்பட்ட தேவதான இறையிலியிலிருந்து இவ்வூர்ப் பிறந்த இராஜராஜன் மத்தளங்குடியில் இத்தேவர் திருநாமத்துக் காணியான நிலம் இருக்கும் ஆத்தூர் இராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்திலிருந்து மாறி, முன் கட்டியபடி இறை தவிர்ந்து அதாவது மூன்றாம் குலோத்துங்கனின் பதினாறாவது ஆட்சியாண்டில் அளந்தபடி நீங்கல் நீக்கி அம்மன்னனின் இருபத்தொன்றாவது ஆட்சியாண்டு முதல் தேவதான இறையிலி இட்டமைக்கு நிமந்தத்துக்கு உடலாக நெல்லு அளிக்கப்பட்டதையும் அதற்குப் புரவு வரி அதிகாரிகள் கையெழுத்திட்டிருப்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
மயிலாடுதுறை>மயிலாடுதுறை>ஆத்தூர்
மயிலாடுதுறை அரசனுடைய நேர்முக ஆணையாக உள்ளது. அரசனுடைய 21-ஆவது ஆட்சியாண்டு முதல் திருவிடைத்திட்டையுடையார் கோயிலுக்கு தேவதான இறையிலியாக நிலம் வழங்கியதையும், சுங்கந் தவிர்த்த குலோத்துங்க சோழனின் 16-ஆவது ஆட்சியாண்டில் அளந்தபடி நீங்கல் நீக்கி அவ்விறையிலி நிலத்தை அளித்ததையும். இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
மயிலாடுதுறை>குத்தாலம்>திருவேள்விக்குடி
மயிலாடுதுறை கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் காணப்படவில்லை. இக்கோயில் இறைவனுக்குத் திருநந்தவனம் அமைக்கும் பொருட்டும் திருநாமத்துக் காணியாகவும் பலரிடம் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. விற்றுக் கொடுத்தோர் பலரும் [இராஜ ராஜ தேவரின் 21, 25-வது ஆட்சியாண்டுகளில் எவ்வளவு நிலம் எவ்வளவு விலைக்கு விற்றனர் என்ற தகவலுடன் கையெழுத்திட்டுள்ளனர். கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.
மயிலாடுதுறை>குத்தாலம்>திருவேள்விக்குடி
மயிலாடுதுறை திருவேள்விக்குடி உடையார் கோயிலில் விடேல் விடுகுதேவிச் சருப்பேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார் கூடியிருந்து, அக்கோயில் ஆதிசண்டேஸ்வரர் பெயரில் பத்து மாச் செய் நிலம் விலைக்கு வாங்கினர். இந்நிலத்துக்கு இறையிலி செய்து கொடுப்பதற்காகக் கரிகால சோழர் தெரிந்த கைக்கோளரில் ஒருவன் கொடுத்த ஐம்பது காசுகளைப் பெற்றுக் கொண்டு சபையார் வரி நீக்கிக் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகரண திருக்கற்றளிப்பிச்சன் என்பவர் ஒரு நிலத்தைத் திருத்தி அதற்கு ஸ்ரீகரணப் பெருவளாகம் என்று பெயரிட்டுத் திருவிழாப்புறமாக அளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை>குத்தாலம்>திருவேள்விக்குடி
மயிலாடுதுறை திருவேள்விக்குடியில் உள்ள வியாபாரிகள் இவ்வூர்க் கோயில் இறைவனுக்கு நிலம் திருத்திக் கொடுத்த செய்தியும், அத்திகோசத்தார் பேரால் திருக்கற்றளி முதலாக நெல் கொடையளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை. இருதுண்டுகளாகக் காணப்படுகின்றன.
மயிலாடுதுறை>குத்தாலம்>திருவேள்விக்குடி
மயிலாடுதுறை அம்பர் நாட்டு அம்பர் என்ற ஊரிலுள்ள திருவனிச்சகத்தாள் சேரியைச் சேர்ந்த வியாபாரி ஒருவன் திருவேள்விக்குடி இறைவனுக்கு ஒரு காசு கொடை அளித்தது பற்றி கூறப்பட்டுள்ளது, எதற்காக அக்காசு கொடையளிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் பகுதி சிதைந்துள்ளது. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் காளமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை>குத்தாலம்>திருவேள்விக்குடி
மயிலாடுதுறை திருவேள்விக்குடி இறைவனுக்கு இளைய வாள் பெற்ற கைக்கோளர்களில் பனையன் கோதண்டம் என்பவன் இரண்டு காளங்கள் கொடையளித்துள்ள செய்தியும் அதன் நிறையும் கூறப்பட்டுள்ளது.