1128 results found
நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கை நாட்டு கங்கைகொண்ட சோழச் சருப்பேதி மங்கலத்தைச் சேர்ந்த திருவேள்விக்குடி இறைவனாகிய மணவாள நம்பியின் தேவி யாகிய நம்பிராட்டியார் முன்னிலையில் இரவு நேரத்தில் சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு செம்பியன் கண்டியூரைச் சேர்ந்த வெள்ளாட்டி அரியாள் என்ற பெண் நிவந்தமளித்திருக்கிறாள். அதைப் பெற்றுக் கொண்டு சந்தி விளக்கு எரிப்பதாகக் கோயிலைச் சேர்ந்த சிவபிராமணர்கள் நால்வர் அப்பெண்ணிடம் பிரமாணம் செய்து கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாட்டுக் கூடலூர் ஊரார் விடேல் விடுகுதேவிச் சதுர்வேதி மங்கலத்து திருஎருதுபாடி மகாதேவர்க்கு வேண்டும் திருநந்தா வனத்துக்கும் இரண்டு நொந்தா விளக்குகள் எரிப்பதற்கு திருவிளக்குப்புறமாகவும் நிலம் இறையிலி செய்து கொடுத்துள்ளனர். ஊரார் விவஸ்தை செய்து [விவாதித்து) இம்முடிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை ஊர் மத்தியஸ்தன் எழுதியுள்ளான். கல்வெட்டின் இடையே இரு இடங்களில் புதிதாக எழுந்த கட்டடப்பகுதி மறைத்து விட்டது.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- இராஜேந்திரசிம்ம வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு ஆலங்குடியைச் சேர்ந்த சிலர் திரு எருதுபாடி உடையார்க்கு ஸ்ரீபலிப்புறமாக ஆறு மா நிலத்தை இறையிலியாக வழங்கினர். இந்நிலம் இந்த ஆலங்குடிக்கு அருகிலுள்ள கீழூரில் மூடப்பந்தூறு என்றழைக்கப்படும் நிலத்தில் அமைந்திருந்தது. இந்நிலத்திற்கு எல்லைகள் கூறும் போது முருகவேள் மங்கலத்திற்குத் தென்பக்கத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலத்தில் வசூலிக்கப்பட்டு வந்த சில வரிகளையும் தாங்கள் இறுத்து விடுவதாகவும் இறையிலியாக நிலம் வழங்கியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் இறுதியில் கையெழுத்தும் இட்டுள்ளனர்.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- விடேல் விடுகுதேவிச் சருப்பேதி மங்கலத்தின் அருகிலுள்ள திருஎருதுபாடி மகா தேவர் கோயிலுக்கு ஊரார் சிலர் ஏழுமா நிலத்தை இறையிலியாக வழங்கினர். அந்நிலத்திலிருந்து வசூலிக்கப்படும் வரிகளையும் தாங்களே செலுத்துவதாகவும் உறுதியளித்தனர்.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- விடேல் விடுகுதேவி சதுப்பேதி மங்கலத்துப் பால் எருது பாடி சண்டேஸ்வர தேவரிடம் ராஜேந்த்ர சிம்ம வளநாட்டு குறுக்கை நாட்டு இடையாற்று ஊரார் சிலர் நான்கு மா முக்காணி நிலத்தை ஸ்ரீபலி புறமாக இறையிலி செய்து கொடுத்தனர். இந்நிலத்தில் வசூலிக்கப்படும் வரிகள் சிலவற்றையும் தாங்களே இறுப்பதாக உறுதியளித்த செய்தி காணப்படுகிறது.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- கல்வெட்டு எண் 17 ஆகிய முதலாம் ராஜேந்திர சோழனின் 6-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறியபடி, திரு எருதுபாடி மகாதேவர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலங்களைப் பற்றியக் கல்வெட்டுகள் தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுகள் அனைத்தும் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவை. தந்தை காலத்துக் கல்வெட்டுகளை தனயன் தொகுத்து மீண்டும் கல்லிலே பொறித்து வைத்துள்ளான். அவற்றுள் முதல் கல்வெட்டு இக்கல்வெட் டாகும். இக்கல்வெட்டு முதலாம் இராஜராஜ சோழனின் [20]ம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டில் திருஎருதுபாடி மகாதேவர் கோயிலுக்கு திருநந்தாவனமாக ஏழு மா நிலம் இறையிலியாகக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலத்தை ஊரார்கள் கொடுத்து அந்நிலத்திற்கு வசூலிக்கப்படும் வரிகளைத் தாங்களே இறுத்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- பிரமதேயம் கடலங்குடியின் ஒரு பகுதியாகிய திருவெருது பாடி மகாதேவர் கோயிலுக்குச் சொந்தமான இறையிலி நிலங்களைப் பற்றிய தகவல்கள் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் இக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது என்றும் இக்கடலங்குடி என்ற ஊர், ராஜேந்திரசிம்ம வளநாட்டு குறுக்கை நாட்டைச் சேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளபடி இக்கல்வெட்டைத் தொடர்ந்து முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அவனது 10-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும், 24-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகளும் 27-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுகள் எண் : 18, 19, 20, 21, 22 ஆகிய ஊர்க் கல்வெட்டு எண்களில் தரப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- திருவேள்விக்குடியிலுள்ள நடுவில் ஸ்ரீகோயில் என்ற கோயிலிலுள்ள இறைவனுக்குத் திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்கு பிரமதேயம் முருகவேள் மங்கலத்து பாரதாயன் வேங்கடவன். சந்திராதித்தன் என்பவன் இறையிலியாக நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இம்மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனாக இருத்தல் வேண்டும்.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- கல்வெட்டு எண் 11-ல் கூறப்பட்ட அதே குணமலபாடியுடையான் அய்யன் மார சிங்கனான வீரசேகர மூவேந்த வேளான் என்பவன். இக்கோயில் இறைவனுக்குத் தண்ணீரமுது படைப்பதற்காக வெள்ளித் தட்டம் ஒன்று கொடையளித்த செய்தியும் அத்தட்டத்தின் நிறை 30 ஈழக்காசு என்றும் கூறப்பட்டுள்ளது.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- குணமலப்பாடியைச் சேர்ந்த அய்யன் மார சிங்கனான வீரசேகர மூவேந்த வேளான் என்பவன் இருவரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி இக்கோயிலுக்கு வேண்டிய பதினைந்து கல நீரைக் காவேரி ஆற்றிலிருந்து கொணர்ந்து திருமஞ்சன நீராகப் பயன்படுத்துவதற்காகக் கொடையளித்த செய்தியும் அந்நிலத்திற்கு வடகரை குறுக்கை நாட்டுப் பிரமதேயம் விடேல் விடுகுதேவிச் சதுர்வேதி மங்கலத்து சபையோர் [பெருங்குறி பெருமக்கள்) அவ்வூர் மண்டபத்தில் கூடியிருந்து வரி நீக்கம் [இறையிலி) செய்து கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துள்ளன. வடகரை இராஜேந்திரசிங்கவளநாட்டுக் குறுக்கை நாட்டுப் பிரமதேயம் கடலங்குடி மகாசபையார் திருவேள்விக் குடிக் கோயிலில் ஆதிசண்டேஸ்வரர்க்கு சாலா போகமாக இறையிலி நிலம் விற்றுக் கொடுக்கப்பட்டது. இந்நிலம் திருவேள்விக்குடி இறைவன் கோயிலில் உணவுச் சாலையை ஏற்படுத்தி உணவளிப்பதற்காகவும், ஓடையில் செங்கழுநீர் பயிர் செய்து இறைவனுக்குத் திருப்பள்ளித் தாமம் சார்த்தவும் வாங்கி வழங்கப்பட்டது.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- கல்வெட்டு எண் : 2, மற்றும் 3-ல் கூறப்பட்ட அதே ஞானசிவர் எடுப்பித்த திருக்கேதாரம் என்ற கோயிலில் பிரதிஷ்டை பண்ணின இறைவனுக்குத் திருவமுது உள்ளிட்ட நிமந்தங்கள் படைப்பதற்கும். அக்கோயிலில் கும்பிட வந்த மாஹேஸ்வரர்களுக்கு வேடிய செலவுகள் தொடர்பாகவும் அதே பூலோக மாணிக்கச் சபையார் நிலம் விற்றுக் கொடுத்தனர். இந்நிலமும் முன்னர் கூறியபடி இறையிலியாக வழங்கப்பட்டதால் விலைப் பொருளும் இறைப் பொருளும் சேர்த்து 61 காசுகள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.மேற்கூறிய 3 கல்வெட்டுகளும் ஞானசிவரால் எடுக்கப்பட்ட திருக்கேதாரம் என்னும் கோயில் தொடர்பாக உள்ளது. மேலும் இந்த ஞானசிவர் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடும்போது. திருவாவடுதுறையில் திருவாய்மொழிந்தருளி திருமேனிக்கும் திருக்குலத்துக்கும் நன்றாக பூஜித்திருக்கும் ஞானசிவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியமானது. திருவாய்மொழிந்தருளி - என்பது மன்னனின் ஆணையையே குறிப்பிடல் வேண்டுமாதலால், அரசனது நன்மைக்காகவும் அரசனது குலமாகிய சோழ குலத்தின் நன்மைக்காகவும் ஞானசிவர் திருவாவடுதுறையில் பூஜித்து வந்தார் என்பது தெளிவுள்ளது.
மேற்கூறிய நிலம் அக்கோயிலில் வேதங்களும் சாஸ்திரங்களும் ஓதுவது உள்ளிட்டவை தொடர்பாகவும் வாங்கப்பட்டது என்பதை. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 149/1926 கூறுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை படியெடுத்த போது இப்பகுதிகள் கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- இச்சிதைந்த துண்டு கல்வெட்டுகள் மூன்றும் ஒரே கல்வெட்டின் பகுதிகள் ஆகும் ஐஞ்நூறுவப் பிள்ளையார் மற்றும் ஆளுடைப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்தர் ஆகியோருக்குச் சிலைகள் எடுக்கப்பட்ட செய்தியும், அச்சிலைகளின் வழிபாட்டுச் செலவுகளுக்குத் திருநாமத்துக் காணியாக இறையிலி நிலங்கள் கொடையளிக்கப்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>திருவேள்விக்குடி
- பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருவேள்விக்குடி உடையார் கோயிலில் கூடியிருந்து திருவாவடுதுறைக் கோயில் ஆதிசண்டேஸ்வரர்க்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தனர். திருவாவடுதுறைக் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் தபஸ்வியாகிய இராஜராஜ வளநாட்டுப் பரவை நாட்டு அழகவிடங்கன் உய்ய வந்தானான ஞானசிவர் என்பவர். இவ்வூரில் திருக்கேதாரம் என்ற பெயரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து கோயில் எடுப்பதற்காக இந்நிலம் வாங்கப்பட்டது, இந்நிலத்திற்காக ஞானசிவரிடமிருந்து 20 காசுகள் பெற்றுக்கொண்டு இறையிலி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.இந்நிலத்தில் ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் திருநந்தவனமும் திருமடைவளாகமும்க திருக்குளமும் உள்ளிட்டு வேண்டுவன செய்து கொள்ளலாம் என்பதும் அந்நிலத்திற்கு எல்லைகளும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. இந்த நிலத்தை ஞானசிவரும், அவர் வர்க்கத்தாரும் முன்னின்ற மாஹேஸ்வரருமே இறையிலியாக அனுபவிக்கப் பெறுவார்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. மஹாசபை உறுப்பினர்கள் இறுதியில் கையெழுத்திட்டுள்ளனர்.