Skip to main content

1128 results found

வடஆற்காடு>செங்கம்>சாத்தனூர்
- ஊர்க் கல்வெட்டு எண் 6-ன் இறுதி வரியில் தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது இக்கல்வெட்டில் தாமரைப்பாக்கத்து இறைவனுக்கு மிலாடுநாட்டுப் பாலூர்ச் கூற்றத்துப் பெருவெங்காவுடையான் என்பவன் நக்கன் அக்கிரமகோபன் மகன் மல்லன் நக்கனது நினைவாக ஒரு நந்தா விளக்கெரிக்கத் தொண்ணூறு ஆடுகள் கொடையளித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு>திண்டிவனம்>பெருமுக்கல்
Maravarman Vira Pandya of accession either 1334 or 1341 year 6 States that upto the fifth year of the king twenty five coins of gold were collect:d from different sources like devadana lands and other income. Seventeen coins were spent for Purattathi festival and repairs to the temple of the God on the sacred hill. The expenses of these seventeen gold coins were treated tax free. Several officers figure as signatories. இக்கல்வெட்டு மாறவர்மன் லீரபாண்டியன் காலத்தது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதனைக் கி. பி. 14-9 நூற்றாண்டைச் சார்ந்தது எனலாம். இக்காலகட்டத்தில் மாறவர்மன் வீரபாண்டியன் என்ற பெயரில் இரண்டு அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். கல்வெட்டில் வானிலைக் குறிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை என்பதால் எந்தக் குறிப்பிட்ட மன்னனுடையது என்று கூற இயலவில்லை. திருமலைமேல் ஆளுடைய தாயனார்க்குத் திருநாள் சந்தி திருப்பணி. ஆகியவற்றுக்கு 35பொன் அளித்து அதனால் வந்த அனைத்து ஆயங்களும் உட்பட. . . இறையிலி செய்து கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. ட புரட்டாதித் திருநாளுக்கும் அறமிறங் கானாட்டுச் சந்திக்கும் திருப்பணிக்கும் உடலாக அளிக்கப்பட்டுள்ளது. இத். தானத்திற்குச் சாட்சியாக அதிகாரிகள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
தென்னார்க்காடு>திண்டிவனம்>பெருமுக்கல்
Vijayanagar emperor Sadasivaraya-Saka 1468 mistake of 1470 cyclic year Kilaka, month kanni Su. . . Wednesday dated Séptember 1548 A. D. States that a certain Vettai Vallama Vanadarayar gifted lands to the god Tirumalavudaiya Tambiranar for Kala sandhi service. விஜயநகர மன்னன் சதாடிவராயர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டு. . . வானிலைக் குறிப்பு கீலக வருடம், கன்னி (புரட்டாதி) மாதம் (, தன்சிழமை என்பது சகம் 1470-ஐக் குறிக்கிறது. ஆனால் இதில் சக ஆண்டு 1468 என்று தவறுதலாகக் குறிக்கப்பட்டுள்ளது. வேட்டைவல்லம மாணிக்க வாணாதரரயர் என்பார் திருமலைமேல் எழுந்தருளியுள்ள இறைவனுக்குக் : காலசந்திக்காக. நிவந்தம் அளித்த செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு>திண்டிவனம்>பெருமுக்கல்
This record is of Kulothunga chola deva. It states that when Kulothunga. chola deva was seated on a Pallipida (seat) under Muthuppandar (pearl. thatch) of Abhishekamandapam (Mandapa reserved for performing: anointment), situated in the temple of Vikramacholapuram had made the endowment ofa land which could yield thousand Kalam of paddy exmpting from paying taxes to the king. பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூர் திருமலை மேல் ஆளுடையார் : திருவான் மீஸ்வரர்க்கு முன்பு தேவதானம் இல்லை என்று இவ்விறைவனுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இறுப்பதற்காக ஆயிரக்கல நெல்லுக்கு இறையிலியாக எதிரிலி சோழ நல்லூர் என்று நிலத்தை வேறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று குலோத்துங்க ஸ்வண்ணாதிராஜர் சொல்ல அதன் படி நிலம் வேறு பிரிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. குலோத்துங்க சோழன் விக்கிரமசோழபுரத்துக் கோயிலில் அபிஷேக மண்டபத்து முத்துப் பந்தலின் கீழ் பள்ளிப்பீடத்தில் எழுந்தருளியிருந்து திருவாய்மொழிதந்தருள அதன்படி இவ்வாணை வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
தென்னார்க்காடு>திண்டிவனம்>பெருமுக்கல்
It begins with the historical introduction of Rajaraja II written in 11th regnal year and records the endowment of Tirumandiraponagam and Madappuram (gift made for the maintenance of a mutt) of this village by the citizens of Perumukkil alias Gangaikonda nallur and Edirilicholanallur which was separated from the former village. பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லார் ஊராரும் அதிலிருந்து வேறுபிரிந்த எதிரிலி சோழ நல்லூர் ஊராரும் திருமலை மேல்ஆளுடையார்க்குத் திருமந்திரப் போனகத்திற்கும், மடப் புறத்திற்குமாக இறைவிலைப் பிரமாணம் செய்து கொடுத்ததைக் கூறும் இக்கல்வெட்டில் நிலத்தின் எல்லைகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. மெய்க் சீர்த்தியோடு தொடங்குகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- காவேரி வல[லவ நா]டாழ்வான், இக்கோயிலில் அழகிய கூத்தர், அவரது நாச்சியா ஆகிய இரு திருமேனிகளை எழுந்தருள்வித்ததையம். இத்திருமேனிகளுக்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கித் தினசரி பதக்கு நெல் நிவேதனமாகப் படைக்க ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- வேற்கூர் (மேற்கா) நாட்டு ஆதிராஜமங்கலத்து (தென்னார்க்காடு மாவட்டத் திருவதிகை) இராமன் கோனடிகளான பஞ்சவன் பல்லவரையன், பரகேசரிச்சேரி யார்க்கு இடப்பட்டிருந்த நத்தக்கூறு இரண்டு மாகாணியில் முக்காணி நிலத்தை விலைக்கு வாங்கி, மகாசபையார்க்குப் பொன் கொடுத்து இறை டக்கிக் கோயிலுக்கு வழங்கியுள்ளார். இந்நிலவருவாயிலிருந்து உழக்கு நெய் பெற்று ஒரு நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- நரதொங்கச்சேரி கூற்றமங்கத்துப் பாரதாயன் சேந்தன்ஈக்கபிரான் பட்ட சர்வக்ருதுயாஜியார், திருச்சேலூர் இறைவர்வசம் &0 காசு வழங்கி. அதன் தம்மவிருத்தி (அற வட்டி)யாக வருடம் ஒன்றுக்கு வரும் 3 காசினை, வருடந்தோறும் மார்கழித் திருவாதிரை தீர்த்தவாரி நாளில் ஜைமினி சாமவேதம் ஓதிக் கலமறுத்து நல்லாரானார் ஒருவர்க்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதைத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- இராஜராஜ வளகாட்டுப் பரவைக்கூற்றத்துக் கீரங்குடி கீரங்குடையான பாலைக்கூத்தன் உய்யவந்தான் குலோத்துங்க சோழ மூவரையன என்பவர், கலாகலச்சேரி பெரும் பற்ற புலியூர் … என்பரிவடமிருந்தும், மனோரமச்சேரி பாலாசிரியன் அனந்தகூத்தன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவரிடமிருந்தும் மும்மூன்று மா நிலங்களை மும்மூன்று காசுகளுக்கு விலைக்கு வாங்கித் திருச்சேலூர் இறைவர்க்கு வழங்கி கழஞ்சே முக்காலே ஏழுமாப் பொன்னை முதலீடாக ஆக்கி இறைகக்கம் பெற்றதொடு, ஒவ்வொரு பூவுக்கும் (விளைச்சலுக்கும்) அரைக்காசு அந்தராயத் தினைச் சபைக்குச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- உத்தமசோழரின் தாயார் செம்பியன் மகாதேவியார், உத்தமசோழரைச் சாரத்தித் திருச்சேலூர் இறைவர்க்குப் பொற்கலசம் ஒன்று வழங்கியதைத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- உத்தமசோழரைப் பெற்ற தாயான செம்பியன் மாதேவியார், உத்தமசோழர் பெயரால் இக்கோயில், இறைவர்க்கு வெள்ளித் தளிகை ஒன்றும், தராவினால் செய்யப்பட்ட வட்டிகைக் கால்(பீடம்) ஒன்றும் செய்வித்தளித்ததைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- பாண்டிகுலாசனி வளநாட்டுக் கிளியூர் நாட்டுக் குன்றக்குடி குடிகையுளன் அரையன் கண்ணப்பனான இராஜகேசரிப் பேரரையன், இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்து கலாகரச்சேரி கவுசியன் நாராயணன நாராயணனார் என்பவரிடமிருந்து ஐந்தே முக்காலும் பின்னமும் மா அளவு கொண்ட. நிலத்தை ஆறு காசுக்கு விலைக்கு வாங்கி இறைவர்க்கு வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- வேசாலிப்பாடி இளையில் நாட்டுச் சிறுவேலூருடையான் செம்பியன், வேசாலிப்பாடி. நாட்டு மூவேந்த வேளானான திருவடிகள் ஐயனடி. என்ற இருவரும் இறைவர்க்கு அழுதுபடிக்குரிய வெள்ளித்தளிகை, வெள்ளித்தட்டம், பொன்னாலான நிறை பொறிக்கப்பட்ட ஈயோட்டும் கைப்பிடியுடன் விசிறி, கவசம் ஆகியவற்றை வழங்கியதைக் காட்டுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- பாண்டிநாட்டுக் கீழ்வேம்பை நாட்டு (கெல்லைப்பகுதி) ஏறங்குடியைச் சேர்ந்த காரி கரைகுறிச்சி, திருச்சேலூர் இறைவனைத் திருவாராதனை செய்யும் வேதம் வல்ல பிராமணார்கு நிலம் வழங்கியுள்ளதைத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- உத்தமசோழனின் தாயார் செம்பியன் மாதேவியார், தன் மகன் நன்மையை வேண்டி, மாதப்பிறப்பு நாள்களில், திருச்சேலூர் இறைவர்க்கு நூற்றெட்டு சிறப்புக் (உத்தம) கலசத்தால் திருமஞ்சனம் (£ராட்டு) செய்யவும், சிறப்புத் திருவமுது படைக்கவும், இரு புத்தாடைகள் வழங்கவும், அப்பூசை செய்யும் அர்ச்சகருக்குமாக, பலரிடம் இருந்து நிலத்தினை விலைக்கு வாங்கிக் கொடையாக அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. நூற்றெட்டுக் கலசங்களும் அளிக்கப்பட்டன. நிலங்கள் விற்றவர்கள் பெயர்கள், அதன் அளவுகள், எல்லைகள் ஆகியவைவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- வடசிறுவாயில் நாட்டு (புதுக்கோட்டைப்பகுதி) அத்திக்குடையான் பிடாரவை வடுகனான செம்பியன் சிறுவாயில் நாட்டுக்கோன், இறைவர்க்கு இரவும் பகலும் ag விளக்கு எரிப்பதற்குத் தினசரி உழஃகு எண்ணெய் கிடைக்கும் வகையில் 30 பழவரவுக் காசு வழங்கயுள்ளான. ஒரு பிராமணன் உண்ண மூன்றுமா நிலம் கொடுத்த ஏற்பாடும் தெரிகிறது. இறுதிப்பகுதி இல்லை.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடமிருந்து ஆழ்வார் ஸ்ரீபராந்தகன குந்தவையார் (செம்பியன் மகாதேலியார்) ஒன்பது மா நிலமும், ஒன்றைகால் வீட்டுமனையும் விலைக்கு வாங்கி, வைத்ய போகமாக (மருத்துவர்களுக்குரிய அனுபோக நிலமாக) வழங்கினார். மகா சபையார் எண்பது காசு பெற்றுக் கொண்டு, அதற்கு இறை நீக்கம் செய்துள்ளனர். ஷத்திரியசிகாமணி வளநாட்டு மருகல் நாட்டுச் சவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும். அவன் குலப்பிரிவினருக்கும் (அன்வயத்தார்) இவ்வைத்யபோகம் உரிமையாக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- கல்வெட்டு முற்றுப் பெறாமல் நின்றுவிடுகிறது. ஊர்ப்பெயரும் இறைவன் பெயரும் மட்டும் உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- கல்வெட்டு வரிகளின் தொடக்கம் கட்டடத்தினுள் சென்றுவிட்டது. இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்து | பூமிசுந்திரப் பெருமாள் என்ற இறைவர்க்குப் பாண்டி நாட்டைச் சேர்ந்த. ., . . . னமுதாள் என்ற பெண்மணி அரை விளக்கு வழங்கியதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>கோயில்தேவராயன்பேட்டை
- வாழைப்பந்தலைச் சேர்ந்த கண்ணந்தை அறிவாளன் பூமி சுந்தரனான சுந்தரசோழ மூவேந்த வேளான். முடிசோழநாட்டுப் பிரமதேயம் ஸ்ரீசிம்மவிஷ்ணுச் சதுர்வேதி மங்கலத்தில் ஸ்ரீபூமிசுந்தா விண்ணகர் எடுப்பித்து, குந்தமங்கலம் எனற ஊரினை வாங்கி குடிரீக்கா இறையிலியாக வழங்கியதைக் குறிக்கிறது. மேலும் இறைகாவலாக (முன்பணமாக) 200 கழஞ்சுப் பொன் சபைக்குக் கொடுத்து, மூவாயிரக்கலம் நெல் இப்பொன்னுக்குரிய ஆண்டு வட்டியாக வசூலித்துச் சபையே இறை செலுத்தி வர ஏற்பாடு செய்திருக்கிறார்.