தஞ்சாவூர்கல்வெட்டு வரிகளின் தொடக்கம் கட்டடத்தினுள் சென்றுவிட்டது. இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்து | பூமிசுந்திரப் பெருமாள் என்ற இறைவர்க்குப் பாண்டி நாட்டைச் சேர்ந்த. ., . . . னமுதாள் என்ற பெண்மணி அரை விளக்கு வழங்கியதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர்வாழைப்பந்தலைச் சேர்ந்த கண்ணந்தை அறிவாளன் பூமி சுந்தரனான சுந்தரசோழ மூவேந்த வேளான். முடிசோழநாட்டுப் பிரமதேயம் ஸ்ரீசிம்மவிஷ்ணுச் சதுர்வேதி மங்கலத்தில் ஸ்ரீபூமிசுந்தா விண்ணகர் எடுப்பித்து, குந்தமங்கலம் எனற ஊரினை வாங்கி குடிரீக்கா இறையிலியாக வழங்கியதைக் குறிக்கிறது. மேலும் இறைகாவலாக (முன்பணமாக) 200 கழஞ்சுப் பொன் சபைக்குக் கொடுத்து, மூவாயிரக்கலம் நெல் இப்பொன்னுக்குரிய ஆண்டு வட்டியாக வசூலித்துச் சபையே இறை செலுத்தி வர ஏற்பாடு செய்திருக்கிறார்.
தஞ்சாவூர்ராஜராஜ வளநகாட்டுப் பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையான் பாலைக்கூத்தன் உயயவந்தானான குலோத்துங்க சோழ மூவரையன், கலாகரச்சேரி குலைகுத்தி அனந்தநாராயண பட்டனாரிடமிருந்து ஏழு மா நிலத்தை விலைக்கு வாங்கி, சபையார்க்குப் பொன் வழங்கி, நிலத்தை இறையிலியாக்கிக் கோயிலுக்கு வழங்கியுள்ளான. மூன்றுமா நிலத்துக்குரியி அந்தராயமாக, ஒவ்வொரு விளைச்சலிலும் அரைக்காசு மட்டும் செலுத்திவர ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்பெரியாழ்வார் பண்டாரத்தார்க்குத் திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்குரிய 118 குழி இறையிலி நிலம், 4000 காசுகளுக்கு விற்கப்பட்டது. இந்நிலத்தினை மனு விளங்கப் பிள்ளை பெற்றாள் என்ற பெயரிலான மடம் கட்டவும், அம்மடத்துத் தலைவரான(மடபதி) திருஞானசம்பந்தபதி என்பவருக்கு அளிக்கவும், கோயிலின் தேவகன்மிகள் பெற்ற 4000 காசில் திருநாவுக்கரசு தேவர் திருமேனியை எழுந்தருள் விக்கவும் அரசன் இட்ட ஆணையினைப் பிள்ளை செழிய கோனார் என்பவர் கொணர்ந்து கோயில் தேவகன்மிகளிடம் கொடுத்தார், அதன்படி. செயல்கள் நிறை வேற்றப்பட்டன. பெரியாழ்வார் பண்டாரத்தார் என்பவர்கள் மூன்றாம் இராஜ இராஜனின் குடும்பக் கருவூலத்தினை நிர்வாகிப்பவர்கள்.
தஞ்சாவூர்முதல் இராஜராஜன் காலத்தில், நாராயணன் கரவீரன் என்பான் செய்த ஏதோவொரு செயல், உத்தமசோழன் காலத்தில் மானக்குறை வீரநாராயணன் காப்பியன் என்பவர் இக்கோயிலில் தணிக்கையதிகாரியாக இருந்த செய்தி, துவட்டனாறன் என்ற வணிகன் திருவிளங் கோயில் இறைவர்க்கு நந்தா விளக்கொன்று எரிப்பதற்கு, வேண்டிய நெய்க்காகக் பிராமணர் உண்ணவும், வழங்கிய கொடை, பிராமணர்களின் சாலை, சாலையில் விளக்கெரிக்கவும், சாலையில் சமைக்கும் பேருக்கும் (அடுமடையன்), நெல், காயம், சுண்ணாம்பு இலை, சந்தனம் ஆகியவற்றுக்கும் செய்த ஏற்பாடு, கோயிலுக்குரிய நந்தவனம், சிவயோகிகள் இருவர் உட்பட இருபது பேர் உணவுக்குரிய கொடை, இராஜகேசரிவர்மனின் தேவியார் ஒருவர், போன்ற தனித்தனிக் குறிப்புகள் இத்துண்டுக் கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகின்றன.
தஞ்சாவூர்[பெரு மா)ளான முனையதரரைச் . என்பவர் சேனைக்கு மீண்ட பெருமாள் சந்தி என்ற பெயரில் சிறப்பு வழிபாடு ஏற்படுத்தியதையும், அதற்கு நிலம் வழங்கியதையும் குறிக்கிறது. அந்நிலம் பஞ்சவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரால் இறையிலி செய்து தரப்பட்டதாகந் தோன்றுகிறது, கல்வெட்டு சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்பஞ்சவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தின் நிர்வாகத்திலிருந்து பிரிந்த சில ஊர்களில் நல்லூர் உடையார் கோயிலுக்குரிய சிவநாமத்துக்காணி, இறையிலி தரம் பெற்ற நிலத்து நீங்கல் ஆகியவற்றைச் சரிபார்த்துக் கணக்கர் கையெழுத் திட்ட ஆவணத்தின்படிப் பராமரிக்கக் காங்கேயராயன் என்பார் ஓலையெழுதி விடுத்துள்ளார். அதன்படி நிலங்கள் அளவு, எல்லைகள் குறிப்பிடப்பட்டுக் கல்லில் பொறிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. திரிபுவனவீரதேவரான மூன்றாம் குலோத்துங்கன் கால ஆணையும் குறிப்பிடப்படுகிறது. அரங்காடுவான திருநந்தவனம், புத்தன்கால் ஆகிய பெயர்கள் குறிப்பிடத்தக்கன.
தஞ்சாவூர்முன்னரே ஊரவர்கள் இறையிலியாகக் கொடுத்த நிலம் காணி நாலு மா அர்தராயம், பாட் ட ம் உட்பட இறையிலியாக்கப்பட்டு, நெற்றிக்கண்ணுடையார்கள் எனும் பெயரால் திருநல்லூர் நாயனார்க்கு மாசித்திருநாளில் மாகேஸ்வரார்களை அமுது செய்வதற்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்திருப்பெருமணமுடையார் என்ற இறைவன் சன்னதியில் நந்தா விளக்கு எரிப்பதற்கு ஐயங்கொண்ட சோழ மண்டலத்து மேல்மலைப் மழையனூர் நாட்டுப் பழையனூருடையான் வேதவனமுடையான் என்பவன் 200 காசுகள் வழங்கியதையும், திருநல்லூர் நாயனார் கோயிலின் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப் பிராமணர்கள் இக்காசினை ஏற்று விளக்கெரிக்கும் பொறுப்பினை ஏற்றதையும் குறிக்கிறது. இத்திருப்பெருமணமுடையார் சன்னதி, நல்லூருடையார் கோயிலுக்குள்ளேயே இருந்தது போலும்.
தஞ்சாவூர்இக்கல்வெட்டு ராஜகேசரிவர்மன் அல்லது பரகேசரிவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். நாரண்ணன் என்பவர் நன்னிலம் கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்த செய்தியும், அதனை மூன்றுபேர் பெற்றுக்கொண்டு [வட்டிக்கு] விளக்கு எரிக்க ஒப்புக்கொண்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்நல்லூர் ஈஸ்வரமுடையார்க்கு ஊர் ஒழுகின் படி ஒட்டில் கழித்த இறையிலி ஐந்து போகம் விளையும் நிலம் வழங்கப்படுகிறது, (ஒழுகு என்பது ஊர் நிலவரிக் கணக்கேடு ஆகும். ஒட்டில் கழித்த இறையிலி என்பது முன்னர் ஊரார் நிர்ணயித்த வரியைக் கழித்து இறையிலியாக் யது எனப் பொருள்படும். )
தஞ்சாவூர்திருநல்லூர் நாயனார் கோயிலின் பல பணி நிமந்தக்காரர்கள், தங்கள் பெயரால் திரு அகம்படிப்பிள்ளையார் கோயிலும், திருமுற்றமும், திருநந்தவனமும் செய்வித்து, அவரைப் பூசிக்கும் உத்தமதாநீசுரமுடையான் மன்றமுடையான் கெற்றிக்கண் பட்டனுக்குக் குடி இருப்பதற்கு நிலமும் வழங்கினர், இந்நிலம் நூறு குழிக்கு நான்காயிரம் காசும் தென்னைமரம் எட்டுக்கு ஆயிரம் காசும் விலையாகக் கொடுத்து வாங்கி வழங்கியுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படுகிறது. இந்நிலம் இறையிலியாகவும் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்கிழார்க் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்து இறைவன் திருவாலந்துறை மகாதேவர்க்குக் குடிரீங்கிய தேவதானமாக ஐந்தே காலே அரைமா அரைக்காணி நிலம் வழங்கி, அதன் மூலம் ஐந்நூற்றுக்கல நெல்லும் ஐங்கழஞ்சுப் பொனனும் (ஆண்டுக்கு ?) கோயிலுக்கு வருமானம் வர வகை செய்யப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. இரண்டாம், மூன்றாம் பகுதிகள், கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியாகும், இக்கல்வெட்டின் தொடர்ச்சி என்பது உறுதியாக அறியக் கூடவில்லை.
தஞ்சாவூர்கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம் புள்ளமங்கலத்துச் சபையார். இவ்வூரைச் சேர்ந்த ஆரிதன் மன்றன் சுவரன் என்பவனுக்கு அம்பலப்புறமாக 800 பார்த்தி நிலத்தைப் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை பரமேசுவரர் கோயிலின் முன்னே, சந்திரகிரஹணத் தன்று கூடியிருந்து விற்றுக் கொடுத்தனர். அந்நிலம், முன்னர் அவனால் எடுப்பிக்கப்பட்ட அம்பலத்துக்கும் அதன் சுற்றுக் கல்லூரிக்கும், தொட்டிக்கும், கிணற்றில Si இறைப்பவன், அம்பலம் மெழுகுபவன் ஆகியோருக்கும், அம்பலத்தில் அழிவு ஏற்படுகின்ற போது புதுப்பிக்கவும், போன்ற பராமரிப்புச் செலவுகளுக்காக ஆரிதன மன்றன் சுவரனால் கொடையளிக்கப்பட்டது. மேலும் கொடை வழங்கப்பட்ட அந்த 800 பார்த்தி நிலத்திற்கும் வரி நீக்கித்தர வேண்டுமென்று சபையோரிடம் பணம் [திரவ்வியம்] கொடுத்தமையால் அதைப் பெற்றுக்கொண்ட சபையோர் வரிநீக்கம் [இறையிழிச்சி] செய்து கொடுத்தனர். அவ்வூர் மண்டகத்தே தன்மி செய்து கூடியிருந்ததையும் இக்கல்வெட்டுத் தெரிவிப்பதால், இங்கு கூடியிருந்தது, இறைஇழிச்சித் தரும் முடிவெடுப்பதற்காக எனலாம்.
தஞ்சாவூர்முதலாம் இராஜராஜ சோழனின் 120 ஆட்சியாண்டில் சபையோரால நினறோதும் சட்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் பற்றி [பார்க்க ௧, எண். 10] இக்கல்வெட்டும் பேசுகிறது. முன்னர் நீலமங்கலத்து முட்டத்து அளையூர் நக்கன் காளி என்பவன காணியாய் அனுபவித்த நிலத்தைச் சபையோர் விலை கொண்டு, மன்னரின 12-வது ஆட்சியாண்டின் போது நின்றோதும் சட்டர்களுக்கு இறையிலியாக வழங்கிக் கல்லில் பொறித்தும் வைத்தனர். ஆனால் தற்போது நின்றோதும் சட்டர்கள் ஓதுவாரினறிப் போய்விட்டமையால் இறையிலியாக அறிவிக்கப்பட்டிருந்த அந்நிலங்களுக்கு இறை [வரி] ஏற்றிக் கொள்க என்று மன்னர் ஆணையிட்டபடியால், அந்த ஒன்றே நான்கு நிலத்திற்கும் இறை கொள்வதாக நித்தவினோத வளநாட்டு கிழார் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்துச் சபையோர் கூடி முடிவெடுத்தனர். அப்போது தண்டல் அதவத்தூர் உடையாரும் [அரசு அதிகாரி] அக்கூட்டத்தில் பங்கு பெற்றிருந்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்கிழாற்கூற்றத்து பிரம்மதேயம் புள்ளமங்கலத்து மகாசபையார் இக்போயிலின் முன்புள்ள வாசல் மாடத்தில் கூடினர். பறையறைந்து கூட்டம் பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டுக் கூட்டம் கூட்டப்பட்டது. இவ்வூரிலிருந்த காளி கோயிலுக்கு (ஈடுவிற் சேரி திருமணி மண்டகமுடைய காளா பிடாரிக்கு) நடுவிற்சேரி கணத்தாரிடமிருந்து 25 காசு பெற்றுக் கொண்டு சபையார் மூன்றுமா நிலத்தினை விற்று வழங்கினர். இவ்வூர் மத்யஸ்தனான திருவெண்காட்டடிகள் ஆன எழுநூற்று ஐம்பத்து நால்வனும் அவனது தம்பிமாரும் காவிதிக்காணியாகப் பெற்றிருந்த நிலம், அரசு அதிகாரி. சுந்தரசோழ முத்தரையர் ஆன பிராந்தக முத்தரையர் வந்து கணக்கு கேட்டபொழுது அவர்கள் காட்டாததால், இறையிலியிலிருந்து £க்கப்பட்டது. அந்நிலமும் இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.