Skip to main content

1146 results found

தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
தஞ்சாவூர் ஒரே கல்வெட்டு பல துண்டுகளாகக் காணப்படுகிறது. மேலும் சில பகுதிகள் கிடைக்காமல் போய் விட்டது. பஞ்சவன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்தினைச் சேர்ந்த நாலூர் வாதுலன் ஆராஅழுது மாதேவனான வித்ரமசோழ பிரம்ம மாராயன என்பவன் நல்லூரின் வடபுறத்தில் விஸ்வேஸ்வார தேவர் என்ற சிவனுக்குக் கோயில் கட்டியதையும் அங்கு ஸ்ரீகோயில், திருழுற்றம், திருமடை விளாகம் தீர்த்த குளம், நந்தவனம் உள்ளிட்டவைகளுக்கு நிலக்கொடை வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது, இரண்டாவது துண்டுக் கல்வெட்டில் இக்கோயில் ஆதி சண்டேஸ்வரர் பெயரில் சிவநாமத்துக் காணியாக பஞ்சவன் மாதேவி சபையார் இறையிலி நிலம் வழங்கிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. ௧. எண்கள் 6, 7, 8, 9 ஆகியவற்றைக் காண்க.
தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
தஞ்சாவூர் ஆரம்பமும் முடிவும் காணப்படவில்லை. ஐய்பசி சதைய தினத்தன்று இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும், அச்சதையத் திருவிழாவின்போது இறைத்திருமேனி எழுந்தருளுகின்ற சமயத்தில் திருக்காப்பு சாத்துதல், சிவகருந்தாடல் போன்ற வற்றிற்கும், அன்று பெருந்திருவழுது [படையல்] படைப்பதற்கும் தேவையான நெய், தயிர், வெற்றிலை போன்றவற்றிற்கும், திருமேனியுடன் கூடிய திருவாசி கையில் செங்கழுநீர்ப் பள்ளித்தாமம் சாத்துவதற்கும், அன்றைய தினத்தில் விளக்கெரிவதற்கு வேண்டிய எண்ணைக்கும் பிறவற்றிற்கும் வேண்டிய செலவுகளுக்கு நாற்பது காசுகள் கொடையளிக்கப்பட்டது. ஒரு காசிற்கு ஓராண்டிற்கு 14 காசு வட்டியாக வசூலிக்கப்பட வேண்டுமென்று கணக்கிட்டு, நாற்பது காசிற்கு வட்டியாக வரும் 10 காசு கொண்டு மேற்கூறிய செலவுகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. ஐய்பசி ரீசதையத்திருவிழா, முதலாம் இராஜராஜ சோழனின் பிறந்த நாள், ஆகையால், அத்திருவிழாவைக் கண்டு களிப்பதாகக் கூறப்பட்டிருக்கும் பெரிய தேவர், முதலாம் இராஜராஜ சோழனாகவே இருத்தல் வேண்டும். அவரைப் பெரிய தேவர் என இக்கல்வெட்டு குறிப்பிடுவதால் இக்கல்வெட்டு முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இராஜராஜனுக்கு எடுக்கப்பட்டிருந்த சிலை கண்டு களித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது என்று ஊகிக்கும் வகையில், அவருக்குப் பரியட்டத்(மேலாடை)திற்கும் வகை செய்திருந்த ஏற்பாடு அமைகிறது, [s. எண்கள் : 7, 8, 9, 10 ஆகியவற்றைக் காண்க]
தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
தஞ்சாவூர் ஆரம்பமும் முடிவும் காணப்படவில்லை, பெரிய நகரத்தார்கள் நங்கீஸ்வரம் உடையார் கோயிலில் கூடியிருந்து அக்கோயில் ஈம்பிராட்டியார்க்கு திருவமுது படைப்பதற்காக இறையிலியாக நிலம் விலைக்கு வாங்கி வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
தஞ்சாவூர் திருவரபுரத்துப் பெரியதர்மாஸனதேவர் எனப்பட்ட இறைவர்க்குத் தினசரி விளக்கெரிக்கத் தேவைப்படும் நெய்க்காகக் கழஞ்சுப் பொன் வழங்கப்பட்டுள்ளது. பெரிய தர்மாசன தேவர் என்பது, ஆடவல்லானைக் (நடராசர்) குறிக்கும்.
தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
தஞ்சாவூர் வாணவல்லவரையன் பரிய நகரத்தாரும் பதியும் கூடி எடுத்த முடிவு குறிப்பிடப்படுகிறது. அம்முடிவின்படி இக்கோயில் இறைவனுக்கு எட்டு பணமும் நெல் ஆயிரக் கலனும் கொடையளிக்கப்பட்ட செய்தியாக இருத்தல் வேண்டும். காமக்காணி கோவன் பாலை என்பவனும் குறிப்பிடப்பட்டுள்ளான். பிற்காலத்தில் கல்வெட்டு மீட்டு எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் சிதைவுற்ற கல்வெட்டு, சிதைவுற்ற கல்வெட்டு, கல்வெட்டின் இறுதிப்பகுதியே உள்ளது மகாசபையார் இறையினைக் கட்டுவதோடு லம் விற்றுக் கொடுத்த செய்தியும் குறிப்பிடப்படுகிறது. 12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் உழுந்தன்குடி உடையான் நிலையன் கண்[ணன்] என்பவர், இறைவர்க்கு நிவேதனம் செய்ய உழக்கரைப்படி நெய்யாக முப்படியும், குறிப்பிட்ட ஒரு சடங்கிற்காக (ஈப்திகாரியம்) நெய் உழக்கும் வழங்கத் தக்க வகையில் திருக்கருகாவூர் சபையிடம் அறுமா அளவுள்ள செய் (விளைநிலம்) ஒன்றினை விலைக்கு வாங்கி இறையிலி யாகக் கோயிலுக்கு வழங்கியதைக் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறவிலலை.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் [பத்தூர்க்] கிழான் மகன் அரங்காலையன் என்பவர். இறைவர்க்குத் திருவிழாப் புறமாக இரண்டுமா நிலம் வழங்குகிறார். மேலும் விழாவில் சங்கு இசைக்கவும் தனியாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் தனித்தனியாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களின் வரிபோக, மீதமுள்ள விளைச்சலைக் கொண்டு திருவிழா நடப்பிக்கத் தீர்மானிக்கப்படுகிறது, தென் மலலிகம் என்ற ஊரும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் வடகரை பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமுக்கிற்பால் கருகாவூர் இறைவர்க்கு நந்திபுரத்தைச் சேர்ந்த வணிகன் சாமுண்டன்மூர்த்தி என்பவர் ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்கு இருவேறு இடங்களில் உள்ள அரைக்கால் நிலத்தினை விலைக்கு வாங்கி வழங்குகிறார். இந்நிலத்தின் வரிபோக, மீதியுள்ள போகத்தை (விளைச்சல் அல்லது பயனை) விளக்கு எரிக்கும் செலவுக்குப் பயன்படுத்த வேண்டியது. ஆயிரந்திருவடி எனப்படும் குழுவினரின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் திருக்கருகாவூர் மூல பருடைப் பெருமக்கள், முப்பத்தொரு பழவரவுக் காசுகளுக்கு மூன்று மாக்காணி நிலத்தை இறைவர்க்கு விற்கின்றனர். இந்நிலம் ஊர் சபைக்குமுரிய கூட்டு நிலம் என்றும், முன்னரே இறையிலியாக இருந்த நிலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் சோழ அரசி வீநவன் மாதேவி(மீனவன் மாதேவியாக இருக்கலாம்)யின் பணிப் பெண் நக்கன் விக்கிரமாமரணி (விக்கிரமாபரணியாக இருக்கலாம்), கொற்றங்குடி குந்தம்பாண்டன் என்பவனிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி, பரடை (பரிஷத்) வசம் வழங்க, பரிஷத் அங்நிலத்துக்குரியி இறையைச் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்நிலத்தைக் கோயிலுக்கு வழங்கியது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் திருக்கருகாவூர் மகாதேவர் கோயிலில் திருவமுது படைக்கவும், திருநொந்தா விளக்கிடவுமாக, மருதன் தாழன், சேமங்குடான் ஆயிரவன், சாமுண்டன் மூர்த்தி, மொகுலியன் சாத்தன் வடுகன் ஆகியோர் கொடுத்த நிலங்களுக்கு இறை கட்டப்படாத நிலையில், திருக்கோயிலுடையார்களும், பன்மாஹேஸ்வரரும், சோழ வேளாரும், தென்னவன் சோழியவரையரும் கூடி, கணக்குகளைப் பார்த்து, மொத்தமாக 70 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு (அதிகாரிகள்?) இறை நீக்கிக் கொடுத்ததைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
தஞ்சாவூர் கொற்றங்குடையான் அரங்கன் குஞ்சிக மல்லன், பாரதாயன் சுவரன் திருமால், பாரதாயன் தாமோதிரன் நாராயணன, காவிதி நாராயணன் ஆயிரவன், பாரதாயன நக்கன் சேந்தன் ஆகியோர் கொடுத்த மொத்த நிலம் 3 வேலிக்கு இறைநீக்கம் செய்யப்பட்டது. அந்நிலத்திலிருந்து இண்டை மாலை இரண்டும், திருமாலை ஒன்றும், கைய்ம்மணி ஒன்றும் செய்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
தஞ்சாவூர் திருப்புள்ளம்பு தண்குடி இறைவர் வல்வில் இராமர்க்கு, மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று (அறந்தாங்கிப்பகுதி)ப் பாவிரிமங்கலத்து ஊரவர், தங்கள் காணியான நடுவிற்கூற்றுப் பெருங்தடியை ஸேநாபதுப்பெருமால் பெயரில் தருவிடையாட்டமாக விற்று வழங்குகின்றனர், கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
தஞ்சாவூர்>பாபநாசம்>மெல்ட்டூர்
தஞ்சாவூர் துண்டுக் கல்வெட்டு, இறைவியின் மீது பாடப்பட்ட பாடலாக இருக்கலாம். அச்சம். மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் நிறைந்த என்று பொருள் படும் குறுப்பு உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>மெல்ட்டூர்
தஞ்சாவூர் கல்வெட்டின் பிற்பகுதியாக இருக்சுலாம். இறைவரின் திருமந்திர போனகத் துக்கும் (நைவேத்யம்) திருப்பணிக்கும் (தெசபந்தகப்படி) கொடை வழம்சுப் பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
தஞ்சாவூர் திருச்சக்கரப்பள்ளி இறைவரின் உற்சவமூர்த்தங்களைக் கண்ணஜூார்க் கொப்பம் இரண்டு கரைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த வாணிக நகரத்தார்கள் எழுந்தருள்வித்தனர். சித்திரைத் திருவிழாவில் உற்சவமூர்த்தங்களின் திருவீதி உலாவுக்கான திருலெழுச்சித் தேவை எனப்பட்ட செலவினத்தை ஏற்றனர், சக்கரப்பள்ளிக் கோயில், வாணிகன் பெருவழிக்கு மேற்கில் உள்ளது என்ற குறுப்பு உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
தஞ்சாவூர் ஆகழிமங்கலத்து சபையார். அவ்வூருட்படும் திருச்சக்கரப்பள்ளி இறைவர்க்கு நிலம் இறையிலி செய்து வழங்கியுள்ளனர். நிலத்தினை ஸ்ரீகோயிலுடையார்கள் வேறொருவரிடம் ஒப்புவித்து, அமுதுபடி, மற்றும் சில வழிபாடு நடப்பதற்கான செலவினை ஏற்கச் செய்தனர். அவர்கள் செய்யத் தவறும் நிலையில், அகழிமங்கல சபையாரும், கோயில் மகேஸ்வரரும் தண்டித்து வசூலிக்கலாம் எனவும், அப்போது ஸ்ரீகோயிலுடையார்களே அவ்வழிபாடுகளைச் செய்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
தஞ்சாவூர் அகழிமங்கலம் ஆளும் கணத்தாருள் குரவசரி மாதவக்கிரமவித்தன் என்பவர் திருச்சக்கரப்பள்ளி இறைவர்க்கு 85 காசுகளுக்கு நிலம் விற்றமைக்கான ஆவணம் இது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
தஞ்சாவூர் நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து பிரம்மதேயம் அகழிமங்கலச்து மகாசபையார் கோயில் தேவதான நிலங்களுக்கு அவர்கள் இறுத்து வந்த இருபது காசு மற்றும் வட்டி (பொலசை) ஆகியவற்றை நீக்கி இறைவிலக்கு வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது.