Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
- திருவரபுரத்துப் பெரியதர்மாஸனதேவர் எனப்பட்ட இறைவர்க்குத் தினசரி விளக்கெரிக்கத் தேவைப்படும் நெய்க்காகக் கழஞ்சுப் பொன் வழங்கப்பட்டுள்ளது. பெரிய தர்மாசன தேவர் என்பது, ஆடவல்லானைக் (நடராசர்) குறிக்கும்.
தஞ்சாவூர்>பாபநாசம்>பாபநாசம்
- வாணவல்லவரையன் பரிய நகரத்தாரும் பதியும் கூடி எடுத்த முடிவு குறிப்பிடப்படுகிறது. அம்முடிவின்படி இக்கோயில் இறைவனுக்கு எட்டு பணமும் நெல் ஆயிரக் கலனும் கொடையளிக்கப்பட்ட செய்தியாக இருத்தல் வேண்டும். காமக்காணி கோவன் பாலை என்பவனும் குறிப்பிடப்பட்டுள்ளான். பிற்காலத்தில் கல்வெட்டு மீட்டு எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- சிதைவுற்ற கல்வெட்டு, சிதைவுற்ற கல்வெட்டு, கல்வெட்டின் இறுதிப்பகுதியே உள்ளது மகாசபையார் இறையினைக் கட்டுவதோடு லம் விற்றுக் கொடுத்த செய்தியும் குறிப்பிடப்படுகிறது. 12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- உழுந்தன்குடி உடையான் நிலையன் கண்[ணன்] என்பவர், இறைவர்க்கு நிவேதனம் செய்ய உழக்கரைப்படி நெய்யாக முப்படியும், குறிப்பிட்ட ஒரு சடங்கிற்காக (ஈப்திகாரியம்) நெய் உழக்கும் வழங்கத் தக்க வகையில் திருக்கருகாவூர் சபையிடம் அறுமா அளவுள்ள செய் (விளைநிலம்) ஒன்றினை விலைக்கு வாங்கி இறையிலி யாகக் கோயிலுக்கு வழங்கியதைக் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறவிலலை.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- [பத்தூர்க்] கிழான் மகன் அரங்காலையன் என்பவர். இறைவர்க்குத் திருவிழாப் புறமாக இரண்டுமா நிலம் வழங்குகிறார். மேலும் விழாவில் சங்கு இசைக்கவும் தனியாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் தனித்தனியாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களின் வரிபோக, மீதமுள்ள விளைச்சலைக் கொண்டு திருவிழா நடப்பிக்கத் தீர்மானிக்கப்படுகிறது, தென் மலலிகம் என்ற ஊரும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- வடகரை பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமுக்கிற்பால் கருகாவூர் இறைவர்க்கு நந்திபுரத்தைச் சேர்ந்த வணிகன் சாமுண்டன்மூர்த்தி என்பவர் ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்கு இருவேறு இடங்களில் உள்ள அரைக்கால் நிலத்தினை விலைக்கு வாங்கி வழங்குகிறார். இந்நிலத்தின் வரிபோக, மீதியுள்ள போகத்தை (விளைச்சல் அல்லது பயனை) விளக்கு எரிக்கும் செலவுக்குப் பயன்படுத்த வேண்டியது. ஆயிரந்திருவடி எனப்படும் குழுவினரின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- திருக்கருகாவூர் மூல பருடைப் பெருமக்கள், முப்பத்தொரு பழவரவுக் காசுகளுக்கு மூன்று மாக்காணி நிலத்தை இறைவர்க்கு விற்கின்றனர். இந்நிலம் ஊர் சபைக்குமுரிய கூட்டு நிலம் என்றும், முன்னரே இறையிலியாக இருந்த நிலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- சோழ அரசி வீநவன் மாதேவி(மீனவன் மாதேவியாக இருக்கலாம்)யின் பணிப் பெண் நக்கன் விக்கிரமாமரணி (விக்கிரமாபரணியாக இருக்கலாம்), கொற்றங்குடி குந்தம்பாண்டன் என்பவனிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி, பரடை (பரிஷத்) வசம் வழங்க, பரிஷத் அங்நிலத்துக்குரியி இறையைச் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்நிலத்தைக் கோயிலுக்கு வழங்கியது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- திருக்கருகாவூர் மகாதேவர் கோயிலில் திருவமுது படைக்கவும், திருநொந்தா விளக்கிடவுமாக, மருதன் தாழன், சேமங்குடான் ஆயிரவன், சாமுண்டன் மூர்த்தி, மொகுலியன் சாத்தன் வடுகன் ஆகியோர் கொடுத்த நிலங்களுக்கு இறை கட்டப்படாத நிலையில், திருக்கோயிலுடையார்களும், பன்மாஹேஸ்வரரும், சோழ வேளாரும், தென்னவன் சோழியவரையரும் கூடி, கணக்குகளைப் பார்த்து, மொத்தமாக 70 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு (அதிகாரிகள்?) இறை நீக்கிக் கொடுத்ததைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருக்கருகாவூர்
- கொற்றங்குடையான் அரங்கன் குஞ்சிக மல்லன், பாரதாயன் சுவரன் திருமால், பாரதாயன் தாமோதிரன் நாராயணன, காவிதி நாராயணன் ஆயிரவன், பாரதாயன நக்கன் சேந்தன் ஆகியோர் கொடுத்த மொத்த நிலம் 3 வேலிக்கு இறைநீக்கம் செய்யப்பட்டது. அந்நிலத்திலிருந்து இண்டை மாலை இரண்டும், திருமாலை ஒன்றும், கைய்ம்மணி ஒன்றும் செய்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்>பாபநாசம்>புள்ளபூதங்குடி
This inscription of Maravarman Kulasekaradevar II (1348 A. D. ), starts with the expression Srimatkittikkumel, as it was considered that it, was redundant to engrave the meykutti in its complete form, this term meaning 140 be engraved after the meykirtti was refixed to the body of the text, Deals with the gift deed by sale of a land as Tiruvidaiyattam by the uravar of Pavirimangalam in the middle portion (naduvoikuru) of Milalaikkurram to the temple of Valvilra- mapperumal at Tiruppullambutankudi in the name of Sri Senapati Alwar (Visvaksena), the deity who is supposed to keep the accounts of Vishnu temples, Not completed. திருப்புள்ளம்பு தண்குடி இறைவர் வல்வில் இராமர்க்கு, மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று (அறந்தாங்கிப்பகுதி)ப் பாவிரிமங்கலத்து ஊரவர், தங்கள் காணியான நடுவிற்கூற்றுப் பெருங்தடியை ஸேநாபதுப்பெருமால் பெயரில் தருவிடையாட்டமாக விற்று வழங்குகின்றனர், கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
தஞ்சாவூர்>பாபநாசம்>மெல்ட்டுர்
Fragmentary. Seems to be a verse composed in praise of the consort of Siva, with the meaning that she is the embodiment of dharma, four gunas and beauty. துண்டுக் கல்வெட்டு, இறைவியின் மீது பாடப்பட்ட பாடலாக இருக்கலாம். அச்சம். மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் நிறைந்த என்று பொருள் படும் குறுப்பு உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>மெல்ட்டுர்
Seems to be the concluding portion of the inscription, The nattars and maccannam (mahajanas) authorise the temple to receive some thing and utilise it the tirumantiraponakam (food offerings) and the repairs (tecapantakappadi). கல்வெட்டின் பிற்பகுதியாக இருக்சுலாம். இறைவரின் திருமந்திர போனகத் துக்கும் (நைவேத்யம்) திருப்பணிக்கும் (தெசபந்தகப்படி) கொடை வழம்சுப் பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
It records the instalation of Bronze images of God and Goddess and the endowment to conduct the sacred procession at the festival in the month chaittra by merchant guilds belong to Padinenbhumi of Kannanur Koppam and Irandukarainadu. It is mentioned that the temple of Chakkarappalli Udaiya Nayanar situated on the western side of traders Highway (Vanikanperuvali). திருச்சக்கரப்பள்ளி இறைவரின் உற்சவமூர்த்தங்களைக் கண்ணஜூார்க் கொப்பம் இரண்டு கரைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த வாணிக நகரத்தார்கள் எழுந் தருள்வித்தனர். சித்திரைத் திருவிழாவில் உற்சவமூர்த்தங்களின் திருவீதி உலாவுக்கான திருலெழுச்சித் தேவை எனப்பட்ட செலவினத்தை ஏற்றனர், சக்கரப்பள்ளிக் கோயில், வாணிகன் பெருவழிக்கு மேற்கில் உள்ளது என்ற குறுப்பு உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
Records the Tax free land donation to Tirvccakkarapalli Alwar by the Sabaiyur of Akalimangalam. The donated land was entrusted to some individual by Thirukkoiludaiyarkal and arrangements were made for worship and food offerings. Inthe event of their failure to do so, the Sabhaiyar and Maheswaras were empowered to collect it by hard measures and the worship could be made by Srikoiludaiyar themselves who had the right of management. ஆகழிமங்கலத்து சபையார். அவ்வூருட்படும் திருச்சக்கரப்பள்ளி இறைவர்க்கு நிலம் இறையிலி செய்து வழங்கியுள்ளனர். நிலத்தினை ஸ்ரீகோயிலுடை யார்கள் வேஹஜறொருவரிடம் ஒப்புவித்து, அமுதுபடி, மற்றும் லெ வழிபாடு நடப்பதற்கான செலவினை ஏற்கச் செய்தனர். அவர்கள் செய்யத் தவறும் நிலையில், அகழிமங்கல சபையாரும், கோயில் மகேள்வரரும் சண்டித்து வசூலிக்கலாம் எனவும், அப்?2பாது ஸ்ரீகோயிலுடையார்களே அங்வழிபாடுகளைச் செய்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
Records the sale deed of land for 35 kasu by Kuravasri Madhavak kramavittan, one among the Alunkanam of Akalimangalam, 10 the temple of Tiruccakkarappalli Mahadevar. அகழிமங்கலம் ஆளும் கணத்தாருள் குரவசரி மாதவக்கிரமவித்தன் என்பவர் திருச்சக்கரப்பள்ளி இறைவர்க்கு 85 காசுகளுக்கு நிலம் விற்றமைக்கான ஆவணம் இது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
Records the examption of taxes for the devatana lands of the temple by the Mahasabaiyar of Akalimangalam, in Kilar kurram of Nitta vinodha valanadu, The yearly tax amount which was previously paid was 20 kasus. நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து பிரம்மதேயம் அகழிமங்கலச்து மகாசபையார் கோயில் தேவதான நிலங்களுக்கு அவர்கள் இறுத்து வந்த இருபது காசு மற்றும் வட்டி (பொலசை) ஆகியவற்றை நீக்கி இறைவிலக்கு வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>பாபநாசம்>சக்கரப்பள்ளி
Records the gift of land to Surya deva, a diety set பற by Adittan Suryan alias Sembian Poykainadu kilavan for daily offerings. The reference for the Ur which was administered by Sabai is known by this record. Incidently it refers to the flood which occured during the 3rd regnal year of Sundara Chola (Pon maligai tunjina devar) and destroyed the cultivated lands with boundaries. கிழார்க் கூற்றத்து அகழிமங்கலத்துச் சபையார், அவ்வூரைச் சேர்ந்த இருச்சக் கரப்பள்ளியில் வெட்டக்குடையான் அ. தித்தன் சூர்பனான செம்பியன்பொய்கை நாடுகிழவன் எடுப்பித்த சூர்யதேவர்க்கு இறையிலி நிலம் வழங்கியதையும், அமுதுபடிக்கு எற்பாடு செய்ததையும் குறுக்கிறது, 0/1. நிர்வாகத்தின் கீழ் ஊர் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. பொன் மாளிகைத் துஞ்சென தேவரான சுந்தரசோழ தேவரின் 3 ஆவது ஆண்டில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுத் திருச்சக்கராப்பள் வளியில் கரையுடைந்து பயிர் நிலம் வீணான செய்தியும் உள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருவைகாவூர்
Nakkan Iraman of Palavalangudi in Vilainadu in Jayangondacola_ vala- nadu, deposits gold with the Sivabrahmanas of the temple stipulating that the interest which accrues out of the capital should be utilised for three Sandhivilakkus (twilight lamps) to be burnt before the deity Tirumalikaippillaiyar installed in the temple of Tiruvaikavudaiyar. திருவைகாவுடையார் கோயிலில் எழுந்தருள்விக்கப்பட்ட இருமாளிகைப் பிள்ளையார் என்ற இறைத் திருமேனிக்கு மூன்று சந்தி விளக்குகள் எரிப்பதற் கக பழவாலங்குடியுடையார் நக்கன் இராமன் என்பவர் சிவப்பிராமணர்கள் வசம் பொன் வழங்குகிறார். அப்பொன்னின் வட்டியால் விளக்கெரிக்கச் சிவப்பிராமணர்கள் ஒப்புகின்றனர்.
தஞ்சாவூர்>பாபநாசம்>திருவைகாவூர்
The Sabhaiyar of Sri Parantakanadu in the sub division of Innambarnadu of the larger politico geographical division Vikkiramacola valanadu. and the people belonging to the right hand and left hand caste assembled and took some decisions regarding the tax payable to the nadu and the palace (nattuvarl and iracakaravari), The disturbed conditions due to Kannadiyar (Hoysalas) reign are also mentioned. The arrangements were made for the Periyanattar Sandhi. The gifted land measuring one veli, measured by the Irayavibhatan Kol . விக்கரமசோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டு ஸ்ரீபராந்தக நாட்டுச் சபை யாரும் வலங்கை இடங்கைச் சாதியினரும் கூடி, வழுதலம்பேடு உசாவடியில் நாட்டுவரி, இராசகர (அரண்மனை) வரி அகியவை குறித்துத் தங்களுக்குள் சம்மதித்து எடுத்த முடிவு குறிப்பிடப்படுகிறது, கன்னடியர் (ஹொய்சளர்) ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக ஏற்பட்ட Fit கேட்டினைச் சரிசசய்யுமுகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாசக் குறிப்பிடப்படுகிறது. இராயவிபாடன் என்ற கோலால் அளக்கப்பட்ட ஒரு வேலி நிலத்தைத் தேவகான இறையிலியாக வழங்கிப் பெரியநாட்டார்சந்தியில் வழிபாடு செய்யப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.