தஞ்சாவூர்கிழார்க் கூற்றத்து அகழிமங்கலத்துச் சபையார், அவ்வூரைச் சேர்ந்த இருச்சக் கரப்பள்ளியில் வெட்டக்குடையான் அ. தித்தன் சூர்பனான செம்பியன்பொய்கை நாடுகிழவன் எடுப்பித்த சூர்யதேவர்க்கு இறையிலி நிலம் வழங்கியதையும், அமுதுபடிக்கு எற்பாடு செய்ததையும் குறுக்கிறது, 0/1. நிர்வாகத்தின் கீழ் ஊர் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. பொன் மாளிகைத் துஞ்சென தேவரான சுந்தரசோழ தேவரின் 3 ஆவது ஆண்டில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுத் திருச்சக்கராப்பள் வளியில் கரையுடைந்து பயிர் நிலம் வீணான செய்தியும் உள்ளது.
தஞ்சாவூர்திருவைகாவுடையார் கோயிலில் எழுந்தருள்விக்கப்பட்ட இருமாளிகைப் பிள்ளையார் என்ற இறைத் திருமேனிக்கு மூன்று சந்தி விளக்குகள் எரிப்பதற் கக பழவாலங்குடியுடையார் நக்கன் இராமன் என்பவர் சிவப் பிராமணர்கள் வசம் பொன் வழங்குகிறார். அப்பொன்னின் வட்டியால் விளக்கெரிக்கச் சிவப் பிராமணர்கள் ஒப்புகின்றனர்.
தஞ்சாவூர்விக்கரமசோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டு ஸ்ரீபராந்தக நாட்டுச் சபை யாரும் வலங்கை இடங்கைச் சாதியினரும் கூடி, வழுதலம்பேடு உசாவடியில் நாட்டுவரி, இராசகர (அரண்மனை) வரி அகியவை குறித்துத் தங்களுக்குள் சம்மதித்து எடுத்த முடிவு குறிப்பிடப்படுகிறது, கன்னடியர் (ஹொய்சளர்) ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக ஏற்பட்ட Fit கேட்டினைச் சரிசசய்யுமுகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாசக் குறிப்பிடப்படுகிறது. இராயவிபாடன் என்ற கோலால் அளக்கப்பட்ட ஒரு வேலி நிலத்தைத் தேவகான இறையிலியாக வழங்கிப் பெரியநாட்டார்சந்தியில் வழிபாடு செய்யப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்நித்தவிநோத வளநாட்டு வீரசோம வளநாட்டுப் பிரமதேயம் ஸ்ரீபூதிச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் இதிருக்கிளாவுடையார் கோயிலிலிருந்து செம்மைப் பொன் நாற்பத்து முக்கழஞ்சே எட்டு மஞ்சாக்குச் சமமான ஏழு மாற்றுப் பொன் அறுபத்திருகமஞ்சு, மற்றும் காசு முப்பதைக் கடனாகப் பெற்றிருந்தனர். அதற்குப் பதிலாக அவர்கள் கொடுத்த நிலங்கள் துண்டுகளாகவும், இறுதிநீர் பாயும் நிலங்களாகவும் இருந்ததனால் அவற்றுக்குச் சீராக நீர் பாய்தல் இன்றி விளைச்சலும் இல்லாமையால், அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வேறு நிலம் விட்டனர், அவ்வாறு கொடுத்த பத்கொளன்பது மாக்காணி அரைக்காணிக் கீழ் இரண்டு மாக்காணி அளவுடைய நல்ல நிலங்களை (மடக்கு, பரப்பு) இறையிலி செய்து கொடுத்ததையும், அதற்கான கூட்டம் அவ்வரில் உள்ள குலோத்துங்க சோழ விண்ணகராழ்வார் கோயிலில் நடைபயெற்றைதையும் கல்வெட்டு குறிக்கிறது
தஞ்சாவூர்தாமரைப்பாச்கத்து இறைவனுக்குக் காஞ்சிபுரத்து அரிசாணிச்சேரியைச் சேர்ந்த தெலுங்குச் செட்டியும் வணிகனுமான சிங்குட்டி மசன் அறையாக வீர நாராயணன் என்பவன் ஒரு தந்தாவிளக்கிற்காகத் தொண்ணூறு ஆடுகள் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்து எண்ணூர் வண்ணக் கன் சோழப்பல்லவரையர் என்பவர், இக்கோயிலில் நந்தாவிளக்கு எரிப்பதற்காக நிலக்கொடை வழங்கியுள்ளார். அவரிடம் 30 காசுகள் முன்பணமாகப் பெற்றுக் கொண்டு அதிலிருந்து வரும் காற்சின்னப் பலிசையிலிருந்து, வரி கட்ட மகாசபை பொறுப்பேற்றுக் கொண்டு அந்நிலத்திற்கு இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இச்சபைக் கூட்டம் இவ்வூர் இருப்பாற்கடலாழ்வார் கோயிலில் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர்திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து மகாசடபையார், திருக்கிளாவுடையார் கோயில் திருவிழாவுக்காக முன்பு வழங்கிய நிலத்திற்கு இறையிலி செய்து கொடுத்ததையும், இதற்கான சபைக் கூட்டம் திருக்கிளாவுடைய மகாதேவர் கோயில் இருமுற்றத்தில் நடைபெற்றதையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தஞ்சாவூர்நித்த வினோத வளநாட்டு பிரம்மதேயம் ஸ்ரீபூதியான. . . . மங்கலத்து பெருங்குறி மஹாசபை திருக்கிளாவுடையார் கோயில் ஆதிசண் டேஸ்வர தேவர்க்கு வரி நீக்கி ஆவணம் இறையிலி கைத்கட்டு) வழங்கிய செய்தி குறிப் பிடப்படுகிறது. உய்யவந்தான் திருச்சிற்றம்பலமுடையானான வீரசோழப் பல்லவரையன் என்பவரிடம் தேவரடியாள் பூமி திருவுடையாளான திருவகம்படி நங்கை என்பவள் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை விலைக்கு வாங்கி, இக்கோயிலில் இவள் எழுந்தருளுவித்த ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பி, அவர்தம் பிராட்டியார், பெரியதேவர், நாச்சியார், உமாமகேஸ்வர தேவர், அவர் நாச்சியார் ஆகிய இறைவர்களுக்குப் பயன்படும் வண்ணம் மகா சபையாரிடம் 250 காசு கொடுத்து அந்நிலத்தை இறையிலியாக்கி வழங்குகிறாள்.
தஞ்சாவூர்ஆவூர்க் கூற்றத்துப் பிரமதேயம் சோழராஜ்யதிலதச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி மகாசபையார், திருக்கிளாவுடையார் கோயிலுக்கு முன்பு கொடுத்த இறையிலிக்கான ஆவணம் தொலைந்து விட்டதால், மீண்டும் 3 காசுகளை ஆவணச் செலவுக்காகப் பெற்றுக் கொண்டு, புத்தாக்கம் செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இவ்வாவணம் கொடுக்கப்படும் போது, எதிர்கால வரிக்காக 43 காசுகள் செலுத்தப்பட்டதையும் அதன் வட்டியிலிருந்து வரியினை ஈடுகட்ட ஏற்பாடு செய்யப்பட்டதையும் குறிக்கிறது. இந்த சபைத் தர்மானம் சபா விவத்தை என்றும், அரசு ஆணை என்ற பொருளில் திருவாணை புவனமுமுதுடையார் ஆணை திருவிரையாக் கவி என்று ஓம்படைக்கிளவியும் குறிப்பிடப்படுகிறது. ஒன்பது சேரியில் இருந்தும் ஒவ்வொருவர் கையெழுத்திட்டுள்ளனர்.
தஞ்சாவூர்இக்கோயிலுக்குத் இருவிளக்குப் புறமாகவும், திருவிழா நாள்களில் யாகசாலை மற்றும் இறைவன் எழுந்தருளும் போது, செய்ய வேண்டிய சடங்களுக் காகவும் நிலம் வழங்கப்படுகிறது. பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க் காட்டுக் கூற்றத்து ஆழிக்குடையான் குனிக்கும்பிரான் என்பவர், பெருமருதூர் அழகியமணவாளன் விநாயக பட்டர் என்பவரிடமிருந்து இந்நிலத்தை விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு வழங்குகிறார். இவ்வூர்ப் பெருங்குறி மகா சபையார், இந்நிலத்துக்குரிய வரியினங்களைத் கள்ளுபடி செய்து இறையிலி நிலமாக அறிவிக்கின்றனர்.
தஞ்சாவூர்கல்வெட்டு அதிசண்டேஸ்வரர் குறித்த பாடலுடன் தொடங்குகிறது. இறைவனது பீடம் சுதையாக இருந்ததாகவும் ஆண்டாண்டு தோறும் அசனைப் புதுப்பிக்கன்ற சிரமம் இருந்ததாகவும், பூசை செய்யும் சைவரசாரியர்கள் வேண்டிக் கொள்ள, விக்கிரமசோழப் பிரமராயர் 1 000 காசு கொடுத்துக் கிள்ளியூர் மலையிலிருந்து கல் கொண்டு வந்து கற்பீடம் அமைக்கச் செய்ததையும், அப்பணி செய்த தச்சாசாரியருக்குச் சிறப்பும், நிலமும் அளித்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது
தஞ்சாவூர்நித்தவிநோதவளநாட்டுக் காந்தார நாட்டுத் தியாக சமுத்திரச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், வீரசோழ வளநாட்டு ஸ்ரீபூதியான ராஜநாராயணச் சதுர்வேதி மங்கலத்துத் திருக்களாவுடையார் கோயிலுக்கு இறையிலி நிலம் வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. திருக்களாவுடையார் என்ற தமிழ்ச் சொல்லின் சமஸ்கிருதப் பெயரே இன்று கரவந்ச ஈஸ்வரர் என்று இறைவனுக்குப் பெயராக உள்ளது. ந எழுத்துக்கள் ல இடங்களில் த எழுத்துப்போல உள்ளன. மூன்று பகுதிகளாக உள்ள இக்கல்வெட்டின் தொடக்கப்பகுதிகள் சுவரினுள் மறைந்துவிட்டன.
திருவாரூர்ராஜாதிராஜவளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப் புலியூர்க் கோயிலைச் சேர்ந்த பல்வகை அதிகாரிகளும், இராமநந்நீஸ்வரத்துக் கோயில் அதிகாரிகளும், தேவன் இருமண்டபம் என்ற மண்டபத்தில் கூடி எடுத்த முடிவினை இக்கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயில் இறைவனுக்கு இரு பெரிய திருநாள் [பிரம்ம உத்சவம்] எடுப்பதற்கும், மாத விழாக்கள் எடுப்பதற்கும், அமுதுபடி, சாத்துப்படி அகியவைகளுக்கும் 50 வேலி நிலம் அளிக்கப்பட்டது. மேலும் இக்கோயிலில், பல்வகைப் பணிபுரியும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் நிபந்தங்கள் குறைவு படுவதால், அதற்கெனத் தனியாக வருவாய் வருவதற்கும் வசதி செய்யப்பட்டது. அதன்படி. சோழ மண்டலம், இராஜராஜப் பாண்டி மண்டலம், நடுவில்நாடு, தொண்டை நாடு உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிவாலயங்களில் பணிபுரியும் பல அதிகாரிகள் அண்டுக்குக் குறிப்பிட்ட தொகை வீதம் [அவரவர் தததிக்த ஏற்ப] செலுத்த வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தப்படும் பொருள் மடப்புறமாக அளிக்கப் படவேண்டும் என்றும், மடங்கள் இல்லாதிருப்பின் ஊர்ச் சபையில் [திருப்பதிகளில்] அளிக்கப்படவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்இராஜராஜ சோழனின் இருபத்தியிரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. இவ்வூர் கோயிலுக் திருநாமத்துக் காணியாகவும் இறையிலியாகவும் நிலம் விற்றுக் கொடுத்த செய்தியும் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. ஓவ்வொரு வரியின்கடைசிப் பகுதியும் இறுதியில் சிலவரிகளும் காணப்படவில்லை.
தஞ்சாவூர்மருதிடங் கொண்டான் தில்லை நாயகன் என்பவன் தன்னுடைய நிலம் மாகாணியை மூவாயிரம் காசுக்கு இவ்வூர் கோயிலுக்கு திருநாமத்துக் காணியாகவும் இறையிலி யாகவும் விற்றுக் கொடுத்த செய்து கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கமும் இறுதியும் காணப்படவில்லை.
தஞ்சாவூர்ராஜராஜ சோழனின் இருபத்தியிரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. இவ்வூர் கோயிலுக்கு திருநாமத்துக் காணியாகவும், இறையிலியாகவும் நிலம் விற்றுக் கொடுத்த செய்தியும், அதன் விலையாகக் கோயில் பண்டாரத்திலிருந்து காசு மூவாயிரமும், பொன் நாற்கமஞ்சே முக்காலே நாலு மஞ்சாடியும், பெற்றுக் கொண்ட செய்தியும் குறிக்கபிபட்டுள்ளன.