Skip to main content

1146 results found

திருவாரூர்>நன்னிலம்>போழக்குடி
திருவாரூர் சாலிவாகன சகாப்தம் 158/1] பிரமாதி, ஆடி. . யைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு. ராஜமான்ய ராஜாஸ்ரி மல்லாரிராயர் பேழைகுடியில் குளம் வெட்டிய செய்தியும் அக்குளத்திலிருந்து கூடையால் தண்ணீர் இறைப்பதற்கும் குளத்தைச் சுற்றியுள்ள மரங்களை வெட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த செய்தியும் தெரிய வருகிறது.
திருவாரூர்>குடவாசல்>கூந்தலூர்
திருவாரூர் இவ்வூர் கோயில் இறைவனுக்கு வேண்டும் பூசைத் திருப்பணிக்கு திலம் வழன்வே செய்தியைக் கூறுகிறதுண்டுக் கல்வெட்டு.
திருவாரூர்>குடவாசல்>குடவாசல்
திருவாரூர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கு. வாயில் உடையார் கோயில் இறைவன் பெருந்திருக்கோயிலுடையாரின் தேவியாகிய பெரிய நாச்சியார்க்கு திருவாபரணம் பண்ணுவதற்கு குற்றாலமுடையான் திருச்சிற்றம்பலமுடையார் ஆன காரான் விழுப்பரையன் என்பவன் எட்டே முக்கால் மாறி பொன் பதின் கழஞ்சு தானமாக கொடுத்த செய்து கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>முத்துப்பேட்டை>இடும்பாவனம்
திருவாரூர் இக்கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்ல. இவ்வூர் கோயிலுக்கு நிலம் விலைக்கு வாங்கிய செய்தியும் நம்பிச்சடியார் என்பவர் திருப்பள்ளியஹறை அளுடையாள் என்ற இறைவியை எழுந்தருளவித்த செய்தியும், மற்றொருவன் / பெயர் கூறப்படும் பகுதி சரைந்தள்ளக. ] எழுந்தருஞவித்த நந்சீஸ் ர தேவர் வழிபாட்டிற்கு வேண்டும் செலைக்கு ஏழு மாநிலம் கொடுத்த செய்யும் பொத்தப்பிச் சோழர் என்பவர் திருவாபரணத்துற் த பொன் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இருக்குத்தி விளக்கு ஒன்றும் தகிருநொந்தா வீளக்கு ஒன்றிற்கு இருநந்தா விளக்குப்புறமாக கோயிலுக்கு கொடுத்த செய்தியும் தெரிய வருூறது. இக்கல்வெட்டின் ஆரம்பம் காணப்படவில்லை, Fa இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளது.
திருவாரூர்>முத்துப்பேட்டை>இடும்பாவனம்
திருவாரூர் இராஜாதிராஜனின் ஆட்சியாண்டில் திருக்கோட்டியுடையார் கோயிலுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி முழுவதும் காணப்படவில்லை. குலோத்துங்கன் காலத்தில் இறையிலியாக அணையிட்ட செய்தி கூறப்பட்டுள் ளது.
திருவாரூர்>கூத்தாநல்லூர்>திருவிடைவாசல்
திருவாரூர் ஆரம்பமும் முடிவும் காணப்படாது இடையிடையே சிதைந்துள்ளதுண்டுக் கல்வெட்டு, இறையிலியாக நாலு மா நிலம் கொடுத்த செய்தியும் பலரும் கையெழுத்திட்டுள்ள செய்தியும் காணப்படுகிறது.
திருவாரூர்>குடவாசல்>சேங்காலிபுரம்
திருவாரூர் நந்திவர்மன் காலத்தில் இவ்வூர் ரங்கநாதர் கோயில்க்கு மத்தியான சத்திக்கு அரைக்கால் நிலம் கொடுத்த செய்தியும் 250 குழி நிலத்தை ஊர் மேல் இறை ஏற்றி கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது சில இடங்களில் கல்வெட்டு தெளிவின்றி காண்ப்படுகிறது
திருவாரூர்>நன்னிலம்>திருக்கொட்டாரம்
திருவாரூர் இரண்டாம் குலோத்தங்க சோழனின் நான்காம் ஆட்சியாண்டச் சேர்ந்த இக்கல்வெட்டு பெய்க்கீர்த்தியுடன ஆரம்பிக்கிறது. இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இறுதியில் சில வரிகள் கிடைக்கவில்லை.
திருவாரூர்>நன்னிலம்>திருக்கொட்டாரம்
திருவாரூர் முதல் குலோத்துங்க சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில் பழையக் குடையான் வேளான் வெள்ளானை விடங்கனான உத்தமசோழ ஆர்வல நாட்டு மூவேந்த வேளானும், பழையக் குடையான் கோன் குலமாணிக்கமான செம்பியன் அர்வல தாட்டுக்கோனும், பழையக் குடையான் சைய்வ சிகாமணி வெள்ளானை விடங்கனான செம்பியன் ஆர்வலநாட்டு மூவேந்த வேளானும், வெள்ளானை விடங்க தேவர் கோயில் இறைவி முத்திறத்தார நங்கைக்கு நத்தம் குழி இருநூறும், நிலம் இரண்டு மாவும், விற்றக்கோடுத்து நான்கு காசுகள் பெற்றுக்கொண்ட செய்தியும், இறைவல் வெள்ளானை விடங்க தேவருக்கு பள்ளித்தாமம் சாத்துவதற்கு நத்தம் குழியுப, திருநந்தாவனப்புறமாக நீர் நிலமும் மொத்தம் குழி. நூறும் ஆறுகாசுகள் பெற்றுக் கொண்டு இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்ட மூவரும் பிறரும் கையெழுத்திட்டுள்ள செய்தி குறிக்கப்பட்டுள்ளது
திருவாரூர்>நன்னிலம்>திருக்கொட்டாரம்
திருவாரூர் இக்கல்வெட்டின் ஆரம்பம் கிடைக்கவில்லை. ஐராவீஸ்வரர் கோயிலுக்கு பலரும் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>நன்னிலம்>திருக்கொட்டாரம்
திருவாரூர் முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டில், மெய்க்கீர்த்தியின் முற்பகுதியும் கல்வெட்டின் பிற்பகுதியும் கிடைக்கவில்லை. திருவந்தீஸ்வரம் உடைய மகாதேவர்க்கு, கல்லியாண மாதேவியா காசுகள். பெற்றுக் கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுக் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>நீடாமங்கலம்>ஒட்டக்குடி
திருவாரூர் ராஜேந்திர சோழன் காலத்தில் ஓட்டைக் குடியான ராஜேந்திர சோழபுரத்து நகரத்தார்கள். சறைக்காவூர் தியாக பெருமாள் என்பவன் எழுந்தருளுவித்த திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்க்கு பூசைக்கும் திருப்பணிக்குமாக இரண்டு மாநிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும், அந்நிலத்திற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருச்சிறுகுடி
தஞ்சாவூர் மூன்றாம் குலோத்துங்கச் சோழனீன் பதினேழாவது ஆட்சியாண்டில் சிறுகுடியில் உள்ள திருவகத்தீஸ்வரமுடையாற்கு ஊரார்கள் இறையிலியாக மூன்று மா நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளன. கல்வெட்டு முழுதும் கிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருச்சிறுகுடி
தஞ்சாவூர் ஆரம்பமும் முடிவும் காணப்படாத இக்கல்வெட்டில் நிலத்தின் அளவுகளும் எல்லைகளும் கூறப்பட்டிருக்கின்றன. கொற்றூருடையார் நல்லூரிருந்தாரான வில்லவ ராயர் அன்னிய திருநதாமத்து தியாகப் பெருமானை எழுந்தருளுவித்து திருப்பணி செய்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் கூறப்படும் நிலத்தில் ஒரு பாதி, மங்கையை இடமுடையாராகிய இறைவனுக்கும், மற்றொரு பாது நாச்சியார் அழகிய மங்கையாற்கும் இருந்தது எனத் தெரியவருகிறது. இராமதேவி நிலம், மண்ணிச் செசயான் சூற்றிய் சடைமுடி மயக்கல், சிற்றிடைஅழகிய மயக்கல், புள்ளிடங் கொண்ட மயக்கல், ஆகிய நிலங்களின் பெயர்களும், சரணாக வாய்க்கால், இராஜகம்பீரான் வாய்க்கால், வடகோடி வாய்க்கால், திருச்சிற்றம் பல வாய்க்கால், ஆகிய வாய்க்கால்களின் பெயர்களும் நூல்வாய் ஆறு, சீர்த்திமானாறு ஆகிய ஆறுகளின் பெயர்களும் காணப்படுகின்றன.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் பரசேகரிவர்மனாகிய ராஜேந்திர தேவனின் நான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்த திருமகள் மருவிய என்னும் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்து சபையார்கள் கோயில் நிலங்கள் சிலவற்றிற்கு இறையிலி செய்து கொடுத்த செய்தியைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் திரிபுவனச் சக்ரவர்த்திகள் கோனேரின்மை கொண்டானின் பதினான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. குலோத்துங்க சோழ வளநாட்டு எயினனூரில் முடிகொண்ட சோழப் பேராற்றின் தென் கரையில் உள்ள தோட்டக்குடி என்ற ராஜேந்திர சோழ நல்லூரிலுள்ள 45 வேலி நிலத்தை இறையிலி செய்ய அரசு ஆணை பிறப்பித்த செய்தியும், அந்நிலம் மன்னன் பெயராகிய கோதண்டராமன் என்ற பெயரில் (கோதண்டராமன் சந்தி) என இவ்வூர் கோயிலில் வழிபாடு நடத்தும் செலவுக்கு அளிக்கப்பட்ட தென்ற செய்தியும் தெரிய வருகிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் திரிபுவனச் சக்ரவர்த்திகள் கோனேரின்மை கொண்டானின் 5-ஆவது ஆட்டு யாண்டைச் சேர்ந்த கல்வெட்டு. அரிசலாற்றிற்கும் முடிகொண்டானாற்றிற்கும் இடையில் உள்ள 10 வேலி நிலத்தை இறையிலி செய்ய அரசு ஆணை பிறப்பித்த செய்தியும் சாமிதேவன் அந்நிலத்தை வீரபாண்டியன் சந்தி என்று மன்னன் பெயரில் திருவிழாவும் வழிபாடும் நடத்துவதற்கு கோயிலுக்களித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் திரிபுவன சக்கரவர்த்தி யாகிய கோனேரின்மை கொண்டானின் 14-ஆம் அண்டு நாள் 186-ஐச் சேர்ந்தது திருப்புகலாருடையான் என்ற சிவப்பிராமணனுக்கு அரசன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட கோதண்டராமன் சந்தியில் இறைவனை வழிபாடு செய்யும் உரிமை பற்றி இக்கல்வெட்டுக் கூறுகிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் ராசராச ராசகேசரிவர்மன் இராசராசதேவரின் 27-வது ஆட்சியாண்டினைச் சேர்ந்தது இக்கல்வெட்டு, திருப்புகலூர்க் கோயிலில் இறைவன் கோணப் பெருமாள் முன்பு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்காக இத் தரப் புகலூர் சவப் பிராமணர்கள் பிராமணப் பெண்ணாகிய கணபதுப் பொண்ணாழ்வி என்ற சோலை என்பவளிடம் காசுகள் பெற்றுக் கொண்டதை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் இராஜகேசரி வர்மனாகிய ராஜேந்திரதேவனின் ஆரும் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இருமகள் மருவிய எனத்தொடங்குகிறது. கல்வெட்டின் இறுதி சிதைந்துள்ளது. முன்னர் கூறப்பட்ட பெண் [கல்வெட்டு எண் 6353-ல் கூறப்பட்ட சீருடை கழல் என்பவள்] இக்கோயிலில் உலகுட்யக்கொண்ட சோழ சூரியதேவன் என்ற இறைவனை எழுந்தருளுவித்த செய்தியும் பின்னர் அவருக்கு வேண்டும் வழிபாட்டுச் செலவுகளுக்கு பணம் தானம் செய்ததையும் இக்கல்வெட்டுக் குறிக்கிறது.