இக்கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்ல. இவ்வூர் கோயிலுக்கு நிலம் விலைக்கு வாங்கிய செய்தியும் நம்பிச்சடியார் என்பவர் திருப்பள்ளியஹறை அளுடையாள் என்ற இறைவியை எழுந்தருளவித்த செய்தியும், மற்றொருவன் / பெயர் கூறப்படும் பகுதி சரைந்தள்ளக. ] எழுந்தருஞவித்த நந்சீஸ் ர தேவர் வழிபாட்டிற்கு வேண்டும் செலைக்கு ஏழு மாநிலம் கொடுத்த செய்யும் பொத்தப்பிச் சோழர் என்பவர் திருவாபரணத்துற் த பொன் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இருக்குத்தி விளக்கு ஒன்றும் தகிருநொந்தா வீளக்கு ஒன்றிற்கு இருநந்தா விளக்குப்புறமாக கோயிலுக்கு கொடுத்த செய்தியும் தெரிய வருூறது. இக்கல்வெட்டின் ஆரம்பம் காணப்படவில்லை, Fa இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளது.
இராஜாதிராஜனின் ஆட்சியாண்டில் திருக்கோட்டியுடையார் கோயிலுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி முழுவதும் காணப்படவில்லை. குலோத்துங்கன் காலத்தில் இறையிலியாக அணையிட்ட செய்தி கூறப்பட்டுள் ளது.
ஆரம்பமும் முடிவும் காணப்படாது இடையிடையே சிதைந்துள்ளதுண்டுக் கல்வெட்டு, இறையிலியாக நாலு மா நிலம் கொடுத்த செய்தியும் பலரும் கையெழுத்திட்டுள்ள செய்தியும் காணப்படுகிறது.
நந்திவர்மன் காலத்தில் இவ்வூர் ரங்கநாதர் கோயில்க்கு மத்தியான சத்திக்கு அரைக்கால் நிலம் கொடுத்த செய்தியும் 250 குழி நிலத்தை ஊர் மேல் இறை ஏற்றி கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது சில இடங்களில் கல்வெட்டு தெளிவின்றி காண்ப்படுகிறது
இரண்டாம் குலோத்தங்க சோழனின் நான்காம் ஆட்சியாண்டச் சேர்ந்த இக்கல்வெட்டு பெய்க்கீர்த்தியுடன ஆரம்பிக்கிறது. இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இறுதியில் சில வரிகள் கிடைக்கவில்லை.
முதல் குலோத்துங்க சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில் பழையக் குடையான் வேளான் வெள்ளானை விடங்கனான உத்தமசோழ ஆர்வல நாட்டு மூவேந்த வேளானும், பழையக் குடையான் கோன் குலமாணிக்கமான செம்பியன் அர்வல தாட்டுக்கோனும், பழையக் குடையான் சைய்வ சிகாமணி வெள்ளானை விடங்கனான செம்பியன் ஆர்வலநாட்டு மூவேந்த வேளானும், வெள்ளானை விடங்க தேவர் கோயில் இறைவி முத்திறத்தார நங்கைக்கு நத்தம் குழி இருநூறும், நிலம் இரண்டு மாவும், விற்றக்கோடுத்து நான்கு காசுகள் பெற்றுக்கொண்ட செய்தியும், இறைவல் வெள்ளானை விடங்க தேவருக்கு பள்ளித்தாமம் சாத்துவதற்கு நத்தம் குழியுப, திருநந்தாவனப்புறமாக நீர் நிலமும் மொத்தம் குழி. நூறும் ஆறுகாசுகள் பெற்றுக் கொண்டு இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்ட மூவரும் பிறரும் கையெழுத்திட்டுள்ள செய்தி குறிக்கப்பட்டுள்ளது
முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டில், மெய்க்கீர்த்தியின் முற்பகுதியும் கல்வெட்டின் பிற்பகுதியும் கிடைக்கவில்லை. திருவந்தீஸ்வரம் உடைய மகாதேவர்க்கு, கல்லியாண மாதேவியா காசுகள். பெற்றுக் கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுக் கூறப்பட்டுள்ளது.
ராஜேந்திர சோழன் காலத்தில் ஓட்டைக் குடியான ராஜேந்திர சோழபுரத்து நகரத்தார்கள். சறைக்காவூர் தியாக பெருமாள் என்பவன் எழுந்தருளுவித்த திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்க்கு பூசைக்கும் திருப்பணிக்குமாக இரண்டு மாநிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும், அந்நிலத்திற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
மூன்றாம் குலோத்துங்கச் சோழனீன் பதினேழாவது ஆட்சியாண்டில் சிறுகுடியில் உள்ள திருவகத்தீஸ்வரமுடையாற்கு ஊரார்கள் இறையிலியாக மூன்று மா நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளன. கல்வெட்டு முழுதும் கிடைக்கவில்லை.
ஆரம்பமும் முடிவும் காணப்படாத இக்கல்வெட்டில் நிலத்தின் அளவுகளும் எல்லைகளும் கூறப்பட்டிருக்கின்றன. கொற்றூருடையார் நல்லூரிருந்தாரான வில்லவ ராயர் அன்னிய திருநதாமத்து தியாகப் பெருமானை எழுந்தருளுவித்து திருப்பணி செய்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் கூறப்படும் நிலத்தில் ஒரு பாதி, மங்கையை இடமுடையாராகிய இறைவனுக்கும், மற்றொரு பாது நாச்சியார் அழகிய மங்கையாற்கும் இருந்தது எனத் தெரியவருகிறது. இராமதேவி நிலம், மண்ணிச் செசயான் சூற்றிய் சடைமுடி மயக்கல், சிற்றிடைஅழகிய மயக்கல், புள்ளிடங் கொண்ட மயக்கல், ஆகிய நிலங்களின் பெயர்களும், சரணாக வாய்க்கால், இராஜகம்பீரான் வாய்க்கால், வடகோடி வாய்க்கால், திருச்சிற்றம் பல வாய்க்கால், ஆகிய வாய்க்கால்களின் பெயர்களும் நூல்வாய் ஆறு, சீர்த்திமானாறு ஆகிய ஆறுகளின் பெயர்களும் காணப்படுகின்றன.
Begins with the introduction இருமகள் மருவிய. Registers the remission of taxes on some lands belonging to the temple by the assembly of Bhulokamanikka chaturvedimangalam.பரசேகரிவர்மனாகிய ராஜேந்திர தேவனின் நான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்த திருமகள் மருவிய என்னும் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்து சபையார்கள் கோயில் நிலங்கள் சிலவற்றிற்கு இறையிலி செய்து கொடுத்த செய்தியைக் குறிக்கிறது.
[4 - Registers the royal order remitting the taxes on 45 veli of land in Tottakkudi alias Rajendrasola nallur on the southern bank of the river Mudikonda sola peraru in the division of Eyinanur in Kulo- ttunga sola valanadu, which was granted for the expenses of conducting the service called Kodandaraman Sandhi institued in the temple a ter the name of the king.திரிபுவனச் சக்ரவர்த்திகள் கோனேரின்மை கொண்டானின் பதினான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. குலோத்துங்க சோழ வளநாட்டு எயினனூரில் முடிகொண்ட சோழப் பேராற்றின் தென் கரையில் உள்ள தோட்டக்குடி என்ற ராஜேந்திர சோழ நல்லூரிலுள்ள 45 வேலி நிலத்தை இறையிலி செய்ய அரசு ஆணை பிறப்பித்த செய்தியும், அந்நிலம் மன்னன் பெயராகிய கோதண்டராமன் என்ற பெயரில் (கோதண்டராமன் சந்தி) என இவ்வூர் கோயிலில் வழிபாடு நடத்தும் செலவுக்கு அளிக்கப்பட்ட தென்ற செய்தியும் தெரிய வருகிறது.
Registers the royal order remitting the taxes on 10 veli of land situated between the rivers Arisalaru and Mudikondanaru granted by Samidevan for the celebration and offerings during the Vira pandiyan sandhi instituted in the temple in the name of the king.திரிபுவனச் சக்ரவர்த்திகள் கோனேரின்மை கொண்டானின் 5-ஆவது ஆட்டு யாண்டைச் சேர்ந்த கல்வெட்டு. அரிசலாற்றிற்கும் முடிகொண்டானாற்றிற்கும் இடையில் உள்ள 10 வேலி நிலத்தை இறையிலி செய்ய அரசு ஆணை பிறப்பித்த செய்தியும் சாமிதேவன் அந்நிலத்தை வீரபாண்டியன் சந்தி என்று மன்னன் பெயரில் திருவிழாவும் வழிபாடும் நடத்துவதற்கு கோயிலுக்களித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது
Registers that the right of conducting worship during the service called Kodandaraman sandhi instituted in the temple at Tiruppugalur in the name of the king was conferred on Tiruppu- galur - Udaiyan - a Siva brahmana of the village.திரிபுவன சக்கரவர்த்தி யாகிய கோனேரின்மை கொண்டானின் 14-ஆம் அண்டு நாள் 186-ஐச் சேர்ந்தது திருப்புகலாருடையான் என்ற சிவப்பிராமணனுக்கு அரசன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட கோதண்டராமன் சந்தியில் இறைவனை வழிபாடு செய்யும் உரிமை பற்றி இக்கல்வெட்டுக் கூறுகிறது.
Built in at the end. Registers an agreement by the Siva brahmanas of pugalur to burn a perpectual lamp before the god Konapperuma!] for the money received by them from a brahman lady named Gana- pati Ponnalvi alias solai.ராசராச ராசகேசரிவர்மன் இராசராசதேவரின் 27-வது ஆட்சியாண்டினைச் சேர்ந்தது இக்கல்வெட்டு, திருப்புகலூர்க் கோயிலில் இறைவன் கோணப் பெருமாள் முன்பு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்காக இத் தரப் புகலூர் சவப் பிராமணர்கள் பிராமணப் பெண்ணாகிய கணபதுப் பொண்ணாழ்வி என்ற சோலை என்பவளிடம் காசுகள் பெற்றுக் கொண்டதை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
Begins with the introdu- tion திருமகள் மருவிய. Damaged at the end. Registers a gift of money by the lady mentioned above for providing offerings to the image called Ulaguyyakkonda sola Suriyadeva, set up by her in the temple.இராஜகேசரி வர்மனாகிய ராஜேந்திரதேவனின் ஆரும் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இருமகள் மருவிய எனத்தொடங்குகிறது. கல்வெட்டின் இறுதி சிதைந்துள்ளது. முன்னர் கூறப்பட்ட பெண் [கல்வெட்டு எண் 6353-ல் கூறப்பட்ட சீருடை கழல் என்பவள்] இக்கோயிலில் உலகுட்யக்கொண்ட சோழ சூரியதேவன் என்ற இறைவனை எழுந்தருளுவித்த செய்தியும் பின்னர் அவருக்கு வேண்டும் வழிபாட்டுச் செலவுகளுக்கு பணம் தானம் செய்ததையும் இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
Commences with the introduction இங்களேர் குரு incomplete. Seems to register a remission of taxes by the assembly.மன்னன் பெயர் சிதைந்து விட்டது. திங்களேர் தர எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் கல்வெட்டு தொடங்குகிறது. ஊர் சபையினரால் நிலம் இறையிலி செய்யப்பட்ட செய்தியைக் குறிப்பனவாகத் தெரிகிறது.
Begins with the introduction இங்களேர் தரு. Built in at the beginn- ing. Records a gift of money by Pichchan Sirudaikalal a brahman lady of Seliyamangalan in Inga nadu. for a festival with offerings to the image of the consort of God Navalingeswara in the temple at Tiruppugalur on the day of Sadaiyam.இராஜகேசரி வார்மராகிய உடையார் ராஜாதிராஜதேவரின் 27-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது, இங்களேர் தரு என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது தொடக்கம் கட்டிடப் பகுதிக்குள் மறைந்து விட்டது. இங்க நாட்டிலுள்ள செமிய மங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பிச்சன் சீருடை கழல் என்ற அந்தணப் பெண் ஒருத்து, இறைவன் நவலிங்கேஸ்வரரின் தேதவிக்கு சதையத் திருவிழா நடத்துவதற்கும் பூஜைக்கும் தானமாக பணம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
States that the pillar was erected by Araiyan Gangaikondan alias Sola Vichchadira Pallavaraiyar of Iraiyur.இறையூரைச் சேர்ந்த கங்கை கொண்டானாகிய சோழ விச்சாதிர பல்லவரையர் என்பவர் அத்தூணை செய்தளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.