நாகப்பட்டினம்மன்னன் பெயர் சிதைந்து விட்டது. திங்களேர் தர எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் கல்வெட்டு தொடங்குகிறது. ஊர் சபையினரால் நிலம் இறையிலி செய்யப்பட்ட செய்தியைக் குறிப்பனவாகத் தெரிகிறது.
நாகப்பட்டினம்இராஜகேசரி வார்மராகிய உடையார் ராஜாதிராஜதேவரின் 27-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது, இங்களேர் தரு என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது தொடக்கம் கட்டிடப் பகுதிக்குள் மறைந்து விட்டது. இங்க நாட்டிலுள்ள செமிய மங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பிச்சன் சீருடை கழல் என்ற அந்தணப் பெண் ஒருத்து, இறைவன் நவலிங்கேஸ்வரரின் தேதவிக்கு சதையத் திருவிழா நடத்துவதற்கும் பூஜைக்கும் தானமாக பணம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்கோப்பரகேசரிவர்மனின் பதினாறாம் ஆட்சியாண்டில் உத்தமசோழனுடைய தேவியாகிய கோபன் சாகப்பூ. . என்பவள் ஸ்ரீகையிலாஸ முடைய மஹா தேவர்க்கு அவ்வூர் சபையாரிடம் நிலம் விலைக்கு வாங்கி இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது இக்கல்வெட்டு செப்பேட்டிலும் வெட்டப்பட்டிருந்தது எனத் தெரிகிறது
நாகப்பட்டினம்திருப்புகலூர் பெருங்குறி மகாசபையோர் இவ்வூர் கோயிலுக்கு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியைத் தெரிவிக்கின்றது. அந்நிலத்திழ்கு எல்லைகளும் மஹா சபையோர், ஊர்க்கணக்கு ஆகியோரின் கையெழுத்துக்களும் காணப்படுகின்றன.
நாகப்பட்டினம்மூன்றாம் இராஜராஜன் ஆட்சி காலத்தில் பெருமாள் புறத்து ஊரவர்கள் இவ்வா கோயிலுக்கு நிலன் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. நிலத் தன் எல்லைகளும் கையெழுத்திட்டவர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்கோனேரின்மை கொண்டான் ஆட்சி காலத்தில் இவ்வூர் திருப்புகலாருடையான் தேவகன் மிகளுக்கும், ஸ்ரீமாகேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும், கெநாயகம் செய்வானுக்கும், இக்கோயில் திருப்பொய்கைக்கு மேலக்கரையில் உள்ள திருக் காமீஸ்வரமுடையார் கோயிலுக்கும் நிமந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள நிலங்களை அந்தராயம், பாட்டம் உட்பட தேவதான இறையிலியாக கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்முதலாம் இராஜராஜ சோழனின் இருபத்தியிரண்டாம் ஆட்சியாண்டில் இவ்வூர்க் கோயிலுக்கு வெள்ளாளன் ஒருவன் சந்தி விளக்கு ஒன்றுக்கும் இறைவனுக்கு அமுது படைக்கவும் தானம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைவுடன் காணப்படுகிறது.
நாகப்பட்டினம்முதலாம் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டின் மெய்கீர்த்தி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. பிற்பகுதி காணப்படவில்லை. ஸ்ரீபுகலார் சபையோர் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியைக் குறிப்பனவாக இருக்கலாம்.
நாகப்பட்டினம்முதலாம் இராஜராஜ சோழனும் அவனுடைய தேவி பஞ்சவன் மாதேவியும். பிறந்த தினமாகிய சதைய நாளின் ஓவ்வொரு மாதமும் கோயிலில் திருவிழா நடத்துவதற்கு ஒன்பது மாவரையே அரையே மூன்று மா நிலம் கொடுத்த செய்தியும், காரோடு சேரி மகா சபையார். பதினைந்து காசுகள் பெற்றுக் கொண்டு அந்நிலத்தை இறையிலி செய்து கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்உத்தமசோழனின் தேவியாகிய கோபன் சாகப். . என்பவள் இவ்வூர் கோயிலுக்கு நிலத்தை இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. வரிகளின் இறுதியில் சில பகுதிகள் கட்டிடத்திற்குள் சென்றிருத்தல் வேண்டும்.
நாகப்பட்டினம்முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்டு காலத்தில் பூலோக மாணிக்க சதுர்வேதி மங்கலத்து சபையார்கள், திருப்புகலூர் ஸ்ரீகாமீஸ்வரமுடைய மகாதேதவர்க்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இறுதியில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்மூதலாம் இராஜாதிராஜ சோழனின் இருபத்தெட்டாம் ஆட்சியாண்டில் தோட்டக் குடி ஊரார்கள் திருப்புகலூர் கோயிலுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தியும் எழுபது காசுகள் பெற்றுக்கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும் தெரியவருகிறது. கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துன்ளது.
நாகப்பட்டினம்இக்கல்வெட்டின் தொடக்கம் காணப்படவில்லை. புவலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஒருவன் திருப்புகலூர் கோயிலுக்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்முதற்குலோத்துங்கனின் இருபத்தைந்தாவது ஆட்சியாண்டில் குருகாடிக்கிழான் இருச்சிற்றம்பலமுடையாந் நம்பியப்பி என்பவன் நான்கு திருநந்தா விளக்கு திருப்புகலாருடையார் கோயிலுக்குக் கொடுத்த செய்தியும், அவ்விளக்குகளுக்காக இக்கோயில் நிர்வாகத்தினரிடமிருந்து நாற்பது காசுகள் பெற்றுக் கொண்டு மஹா சபையார் நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும் காவேரியில் தண்ணமுது வைப்பார் இருவருக்கும் நிலம் இறையிலி செய்து கொடுக்கப்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்முதலாம் குலோத்துங்க சோழனின் இருபதாவது ஆட்சியாண்டில் தாநதுங்க சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோர், திருப்புகலூர் கணபதீஸ்வரமுடையாருக்கு, அக்கோயில் நிர்வாகத்தாரிடமிருந்து ஆறு காசுகள் பெற்றுக் கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது, அந்நிலத்தால் வரும் வருமானம் கொண்டு சிறுகாலை சந்திக்கு அரிசி, கறியமுது, வெற்றிலை, அடைக்காய் ஆகியவையும் வருடம் முழுவதும் படைக்க ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்முதலாம் குலோத்துங்க சோழனின் பதினான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. புவலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி மகாசபையார் திருப்புகலார் தேவர் கோயிலுக்கு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் திருப்புகலூர் பெருங்குறி மகாசபையோர் அவ்வூர் மாணிக்கதேவர் திருமண்டபத்தில் கூடியிருந்து இவ்வூர் கோயிலுக்கு இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்மனக்கினியாநாந வீரராஜராஜன் என்பவன் முடிகொண்ட சோழப் பேராற்றுத் தென்கரையில் ஒரு ஆதுல சாலை (ஆஸ்பத்திரி) செய்த செய்தியும், சத்திரியநாதச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையோர் திருப்புகலார் கோயிலில் உள்ள நரலோக வீரன் தருமண்டபத்தில் கூடியிருந்து இக்கோயில் கருவூலத்திலிருந்து காசு பெற்றுக் கொண்டு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்அரயன் கருவுணாயகரான களப்பாளராஜர் என்பவர் வரகூர் குளத்தின் தென்கரையிலே பிராமணர் உண்பதற்கு சாலை ஏற்படுத்திய செய்தியும், இச்சாலைப்புறமாக: புவலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் இக்கோயில் கருவூலத்தில் இருந்து 90 காசுகள் பெற்றுக்கொண்டு Gort 12 பிராமணர் உண்ண நிலம் இறையிலி செய்து விற்றுக் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. நம்பிராட்டியார் புவனமுழுதுடையார் என அரசியின் பெயர் கூறப்பட்டுள்ளது.