கோப்பரகேசரிவர்மனின் பதினாறாம் ஆட்சியாண்டில் உத்தமசோழனுடைய தேவியாகிய கோபன் சாகப்பூ. . என்பவள் ஸ்ரீகையிலாஸ முடைய மஹா தேவர்க்கு அவ்வூர் சபையாரிடம் நிலம் விலைக்கு வாங்கி இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது இக்கல்வெட்டு செப்பேட்டிலும் வெட்டப்பட்டிருந்தது எனத் தெரிகிறது
திருப்புகலூர் பெருங்குறி மகாசபையோர் இவ்வூர் கோயிலுக்கு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியைத் தெரிவிக்கின்றது. அந்நிலத்திழ்கு எல்லைகளும் மஹா சபையோர், ஊர்க்கணக்கு ஆகியோரின் கையெழுத்துக்களும் காணப்படுகின்றன.
மூன்றாம் இராஜராஜன் ஆட்சி காலத்தில் பெருமாள் புறத்து ஊரவர்கள் இவ்வா கோயிலுக்கு நிலன் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. நிலத் தன் எல்லைகளும் கையெழுத்திட்டவர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
கோனேரின்மை கொண்டான் ஆட்சி காலத்தில் இவ்வூர் திருப்புகலாருடையான் தேவகன் மிகளுக்கும், ஸ்ரீமாகேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும், கெநாயகம் செய்வானுக்கும், இக்கோயில் திருப்பொய்கைக்கு மேலக்கரையில் உள்ள திருக் காமீஸ்வரமுடையார் கோயிலுக்கும் நிமந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள நிலங்களை அந்தராயம், பாட்டம் உட்பட தேவதான இறையிலியாக கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
முதலாம் இராஜராஜ சோழனின் இருபத்தியிரண்டாம் ஆட்சியாண்டில் இவ்வூர்க் கோயிலுக்கு வெள்ளாளன் ஒருவன் சந்தி விளக்கு ஒன்றுக்கும் இறைவனுக்கு அமுது படைக்கவும் தானம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைவுடன் காணப்படுகிறது.
முதலாம் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டின் மெய்கீர்த்தி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. பிற்பகுதி காணப்படவில்லை. ஸ்ரீபுகலார் சபையோர் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியைக் குறிப்பனவாக இருக்கலாம்.
முதலாம் இராஜராஜ சோழனும் அவனுடைய தேவி பஞ்சவன் மாதேவியும். பிறந்த தினமாகிய சதைய நாளின் ஓவ்வொரு மாதமும் கோயிலில் திருவிழா நடத்துவதற்கு ஒன்பது மாவரையே அரையே மூன்று மா நிலம் கொடுத்த செய்தியும், காரோடு சேரி மகா சபையார். பதினைந்து காசுகள் பெற்றுக் கொண்டு அந்நிலத்தை இறையிலி செய்து கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
உத்தமசோழனின் தேவியாகிய கோபன் சாகப். . என்பவள் இவ்வூர் கோயிலுக்கு நிலத்தை இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. வரிகளின் இறுதியில் சில பகுதிகள் கட்டிடத்திற்குள் சென்றிருத்தல் வேண்டும்.
முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்டு காலத்தில் பூலோக மாணிக்க சதுர்வேதி மங்கலத்து சபையார்கள், திருப்புகலூர் ஸ்ரீகாமீஸ்வரமுடைய மகாதேதவர்க்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இறுதியில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.
மூதலாம் இராஜாதிராஜ சோழனின் இருபத்தெட்டாம் ஆட்சியாண்டில் தோட்டக் குடி ஊரார்கள் திருப்புகலூர் கோயிலுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தியும் எழுபது காசுகள் பெற்றுக்கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும் தெரியவருகிறது. கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துன்ளது.
இக்கல்வெட்டின் தொடக்கம் காணப்படவில்லை. புவலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஒருவன் திருப்புகலூர் கோயிலுக்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
முதற்குலோத்துங்கனின் இருபத்தைந்தாவது ஆட்சியாண்டில் குருகாடிக்கிழான் இருச்சிற்றம்பலமுடையாந் நம்பியப்பி என்பவன் நான்கு திருநந்தா விளக்கு திருப்புகலாருடையார் கோயிலுக்குக் கொடுத்த செய்தியும், அவ்விளக்குகளுக்காக இக்கோயில் நிர்வாகத்தினரிடமிருந்து நாற்பது காசுகள் பெற்றுக் கொண்டு மஹா சபையார் நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும் காவேரியில் தண்ணமுது வைப்பார் இருவருக்கும் நிலம் இறையிலி செய்து கொடுக்கப்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.
முதலாம் குலோத்துங்க சோழனின் இருபதாவது ஆட்சியாண்டில் தாநதுங்க சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோர், திருப்புகலூர் கணபதீஸ்வரமுடையாருக்கு, அக்கோயில் நிர்வாகத்தாரிடமிருந்து ஆறு காசுகள் பெற்றுக் கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது, அந்நிலத்தால் வரும் வருமானம் கொண்டு சிறுகாலை சந்திக்கு அரிசி, கறியமுது, வெற்றிலை, அடைக்காய் ஆகியவையும் வருடம் முழுவதும் படைக்க ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.
முதலாம் குலோத்துங்க சோழனின் பதினான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. புவலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி மகாசபையார் திருப்புகலார் தேவர் கோயிலுக்கு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் திருப்புகலூர் பெருங்குறி மகாசபையோர் அவ்வூர் மாணிக்கதேவர் திருமண்டபத்தில் கூடியிருந்து இவ்வூர் கோயிலுக்கு இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
மனக்கினியாநாந வீரராஜராஜன் என்பவன் முடிகொண்ட சோழப் பேராற்றுத் தென்கரையில் ஒரு ஆதுல சாலை (ஆஸ்பத்திரி) செய்த செய்தியும், சத்திரியநாதச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையோர் திருப்புகலார் கோயிலில் உள்ள நரலோக வீரன் தருமண்டபத்தில் கூடியிருந்து இக்கோயில் கருவூலத்திலிருந்து காசு பெற்றுக் கொண்டு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
அரயன் கருவுணாயகரான களப்பாளராஜர் என்பவர் வரகூர் குளத்தின் தென்கரையிலே பிராமணர் உண்பதற்கு சாலை ஏற்படுத்திய செய்தியும், இச்சாலைப்புறமாக: புவலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் இக்கோயில் கருவூலத்தில் இருந்து 90 காசுகள் பெற்றுக்கொண்டு Gort 12 பிராமணர் உண்ண நிலம் இறையிலி செய்து விற்றுக் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. நம்பிராட்டியார் புவனமுழுதுடையார் என அரசியின் பெயர் கூறப்பட்டுள்ளது.
திருப்புகலூர் கோயிலுக்கு தானதுங்க சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மஹா சபையோர் ஒரு கற்பூர திருநந்தா விளக்கு வைத்த செய்தியும் மன்னனுடைய தேவி யாருக்கு அதிகாரிச்சியாக உள்ள செறுகுல மாணிக்கத்தார் ஒரு விளக்கும் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இவ்விளக்கு எரிக்க கோயில் நிர்வாகத்திலிருந்து முப்பது காசுகளை அவ்வூர் சபையார் பெற்றுக் கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும், அந்நிலத்துற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
இவ்வூர் கோயில் சிவபிராமணர்கள் இருபத்தைந்து காசுகளைப் பெற்றுக் கொண்டு கோயிலுக்கு அமாவாசி தோறும் இறைவனை நீராட்டவும், அமுது செய்விக்கவும், தேவப் பெருமாளை பவனி எழுந்தருள செய்யவும் ஒப்புக்கொண்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் காணப்படவில்லை.