Skip to main content

1146 results found

நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் திருப்புகலூர் கோயிலுக்கு தானதுங்க சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மஹா சபையோர் ஒரு கற்பூர திருநந்தா விளக்கு வைத்த செய்தியும் மன்னனுடைய தேவி யாருக்கு அதிகாரிச்சியாக உள்ள செறுகுல மாணிக்கத்தார் ஒரு விளக்கும் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இவ்விளக்கு எரிக்க கோயில் நிர்வாகத்திலிருந்து முப்பது காசுகளை அவ்வூர் சபையார் பெற்றுக் கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும், அந்நிலத்துற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் இவ்வூர் கோயில் சிவபிராமணர்கள் இருபத்தைந்து காசுகளைப் பெற்றுக் கொண்டு கோயிலுக்கு அமாவாசி தோறும் இறைவனை நீராட்டவும், அமுது செய்விக்கவும், தேவப் பெருமாளை பவனி எழுந்தருள செய்யவும் ஒப்புக்கொண்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் காணப்படவில்லை.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் இவ்வூர் கோயிலில் இருந்து மூன்றரை காசுகள் பெற்றுக்கொண்டு மகாசபையார் தந்தாவனத்திற்கு நிலம்: இறையிலி செய்தி கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து கரணத்தான் நாங்குடையான் மூவாயிரவன் அழகிய மணவாளன் என்பவன் அவ்வூர் கணக்கெழுதி சுகவீன மடைந்ததாகவும் அவன் உடல் நலனை முன்னிட்டு இவ்வூர் கோயில் சித்திரைத் திருநாள் ஐந்தாவது நாள் திருவிழா கொண்டாடுவதற்கு திருவிழாப்புறமாக நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மஹாசபையோர் பல இடங்களிலும் நிலம் தானமாக கொடுத்ததையும், . அதன் எல்லைகளையும் கையெழுத்திட்டோரின் பெயர்களையும் இக்கல்வெட்டுக் கூறுகிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் இரையூரூடையான் அரையன் கங்கை கொண்டாதாந சோழ விச்சாதிர பல்லவரையன் இக்கோயில் இறைவனுக்கு அமாவாஸி தோறும் நீராடுதல் செய்யவும் அழுது செய்தருளவும் நெல்லும் தேவப் பெருமாளுக்கு திருவாபரணம் செய்ய பொன் இருபதின் கழஞ்சும் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் ஏழுமுலகமுடையார் பரிவாரத்து பெண்களில் ஒருத்தியான ராஜராஜன் ரம்பையார் என்பவள் இவ்வூர் கோயிலுக்கு சித்திரைத் திருநாள் நடத்துவதற்கும், அத்திருவிழாவிற்கு வரும் ஸ்ரீமாகேஸ்வரருக்கு நம்பி முருகன் திருமடத்தில் உணவு அளிப்ப குற்கும் நிலம் கொடுத்த செய்தியும், இவ்வூர் கோயிலிலிருந்து ஸ்ரீமூடி கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் நான்கு காசுகள் பெற்றுக் கொண்டு அந்நிலத்தினை இறையிலி செய்து கொடுத்த செய்தியும், பலரும் கையெழுத் இட்டுள்ள செய்தியும் தெரியவருகிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் இறைவனுக்கு, செங்கழுனீர் திருப்பள்ளித்தாமம் [மாலை] சாத்துவதற்கு செங்கழுனீர் பயிரிட ஓடை கோண்டிவதற்கு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் தோட்டக்குடியான ராஜேந்திர சோழ மங்கலத்தில் உள்ள குளிச்செழுந்த நாயனார் கோயிலுக்கு ஊர் கழ் இறையிலியாக நிலம் விட்ட செய்தி தெரியவருகிறது. அந் நிலம்-இக்கோயில் பழுதுபட்டு கிடக்கும் போது கோயிலும், இருமண்டபமும், சுற்றுத் திருப்பணிகளும் செய்வதற்கு [ஒரு முக்காணி இந்நம் நிலம்] கொடுத்ததாக தெரியவருகிறது. ஊரார் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>திருப்புகலூர்
நாகப்பட்டினம் இரண்டாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது ஆட்சியாண்டில் காரைக் காலைச் சேர்ந்த ஊரார்கள் பலர் இவ்வூர் கோயிலில் இருந்து இருபத்தைந்து காசுகள் பெற்றுக் கொண்டு பொன் மேந்த சோழன் என்ற பெயருடைய நிலத்தை இருநந்தாவனப்புறமாக இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் இக்கல்வெட்டின் நடுப்பகுதியிலிருந்து கட்டிடம் மறைத்து விட்டது. மன்னவனால் கோயிலுக்கு நிலம் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் குலோத்துங்க சோழ தேவரின் பதினோேரும் ஆட்சியாண்டு 81-வது நாளைச்சேர்ந்த குமிழ்க்கல்வெட்டு. கல்வெட்டு நடுப்பகுதியிலிருந்து கட்டிடத்திற்குள் மறைந்து விட்டது. முந்தியகல்வெட்டின் தொடர்ச்சியாக இக்கல்வெட்டு உள்ளது. இரண்டுவேலிநிலத்தின் உள்வரியை இறையிலியாக கோயிலுக்கு மன்னனால் கொடுக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது, On the North wall of the Somanathesvara Temple-chola- Kulottunga chola deva If[l]th year [31]st day. Tamil-Built in the middle. Engraved in continvation of the previous inscription. Records the grant of ulvari for another gift of 2 veli of land free of taxes (to the same temple) made by the king.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் இறையிலி நிலம் பற்றிக் கூறுகிறதுண்டுக் கல்வெட்டு
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் துண்டுக் கல்வெட்டு. ஸ்ரீகோயில், தீர்த்தக்குளம், திருநந்தவனம் ஆகியவை அமைக்க தேவதானமாக நிலம் கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் இறையிலி நிலம் பற்றிக் கூறுகிறதுண்டுக் கல்வெட்டு.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் கோனேரின்மை கொண்டானின் ஆட்சி காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு, உள் வரி யைப் பற்றிக் கூறுகிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்து முடிவின்றி காணப்படுகிறது
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் சோமனாதசுவாமி கோயிலுக்கு இறையிலியாக நிலம் விட்ட செய்தியும் அதற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் அச்சுதமங்கலத்து கோயில் தேவகன்மிகளும் தானத்தாரும் சேர்ந்து இவ்வூரைச் சேர்ந்த கைக்கோளர் அண்ணாமலையார் கலிங்கதரையர் என்பவருக்கு கல்வெட்டுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது, கயிலைநாயகப் பெருமாளுக்கு அம்பலம் பிரியாத நாச்சியாரை செய்துவித்த செய்தியைக் கூறுவனவாக இருத்தல் வேண்டும். கல்வெட்டு பாதியில் நின்று விட்டதால் பிறசெய்திகளை அறிந்து கொள்ள இயலவில்லை.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் மூன்றாம் இராஜராஜ சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் திருநட்டப் பெருமாள் உலகனான விசையாலைய முத்தரையன் என்பவன் இவ்வூர் கோயில் திருப்பணி முதலியவைகளுக்கு இறையிலியாக நிலம் பதின்மூன்றே முக்காலும் காணியும் பல்வேறு இடங்களிலிருந்து கொடுத்த செய்து கூறப்பட்டுள்ளது. அவ்வாறு திரு நட்டப் பெருமாள் நிலம் கொடுத்தது தன் தந்தையின் (பிதாக்களுக்கு நன்றாக) நன்மைக்காக வென்று கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் புதியதாக வீதிகள் செய்யப்பட்டு, அதில் மனைகள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மனைகளைத் தானமாகப் பெறுபவர்கள் புதியவர்கள் அல்ல. பழைய வீதியில் மனைகளைப் பெற்றிருந்தவர்களே ஆவார், அம்மனைகளை விற்கவும், பிற மாற்றங்கள் செய்யவும் உரிமைகளும் அளிக்கப்படுகின்றன. அடுத்த கல்வெட்டும் இச்செய்தி யோடு தொடர்புடையதே.
திருவாரூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
திருவாரூர் சோமநாத சருப்பேதி மங்கலத்து ஊரார்க்கும் சீதக்க மங்கலத்து ஊரார்க்கும் முடி கொண்ட சோழப் பேராற்றிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு நீர் பாய்ச்சுவது பற்றி தகராறு ஏற்பட்டது. அந்தத் தகராறின் காராணமாக உடையோனான இராஜ ராஜப் பேரையன் என்பவன் தவறுதலாக மற்றொருவனுக்குப் பதிலாகத் தண்டிக்கப்படுகிறான். பின்னர் இவனுடைய மகனுக்கு உதிரப்பட்டி யாக நிலம் கொடுக்கப்பட்டது, அத்நிலத்தை இரண்டாயிரத்து நூறு காசுகள் பெற்றுக் கொண்டு இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.