Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்புகலூர்
ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து கரணத்தான் நாங்குடையான் மூவாயிரவன் அழகிய மணவாளன் என்பவன் அவ்வூர் கணக்கெழுதி சுகவீன மடைந்ததாகவும் அவன் உடல் நலனை முன்னிட்டு இவ்வூர் கோயில் சித்திரைத் திருநாள் ஐந்தாவது நாள் திருவிழா கொண்டாடுவதற்கு திருவிழாப்புறமாக நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மஹாசபையோர் பல இடங்களிலும் நிலம் தானமாக கொடுத்ததையும், . அதன் எல்லைகளையும் கையெழுத்திட்டோரின் பெயர்களையும் இக்கல்வெட்டுக் கூறுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்புகலூர்
இரையூரூடையான் அரையன் கங்கை கொண்டாதாந சோழ விச்சாதிர பல்ல வரையன் இக்கோயில் இறைவனுக்கு அமாவாஸி தோறும் நீராடுதல் செய்யவும் அழுது செய்தருளவும் நெல்லும் தேவப் பெருமாளுக்கு திருவாபரணம் செய்ய பொன் இருபதின் கழஞ்சும் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்புகலூர்
ஏழுமுலகமுடையார் பரிவாரத்து பெண்களில் ஒருத்தியான ராஜராஜன் ரம்பையார் என்பவள் இவ்வூர் கோயிலுக்கு சித்திரைத் திருநாள் நடத்துவதற்கும், அத்திருவிழாவிற்கு வரும் ஸ்ரீமாகேஸ்வரருக்கு நம்பி முருகன் திருமடத்தில் உணவு அளிப்ப குற்கும் நிலம் கொடுத்த செய்தியும், இவ்வூர் கோயிலிலிருந்து ஸ்ரீமூடி கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் நான்கு காசுகள் பெற்றுக் கொண்டு அந்நிலத்தினை இறையிலி செய்து கொடுத்த செய்தியும், பலரும் கையெழுத் இட்டுள்ள செய்தியும் தெரியவருகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்புகலூர்
இறைவனுக்கு, செங்கழுனீர் திருப்பள்ளித்தாமம் [மாலை] சாத்துவதற்கு செங்கழுனீர் பயிரிட ஓடை கோண்டிவதற்கு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்புகலூர்
தோட்டக்குடியான ராஜேந்திர சோழ மங்கலத்தில் உள்ள குளிச்செழுந்த நாயனார் கோயிலுக்கு ஊர் கழ் இறையிலியாக நிலம் விட்ட செய்தி தெரியவருகிறது. அந் நிலம்-இக்கோயில் பழுதுபட்டு கிடக்கும் போது கோயிலும், இருமண்டபமும், சுற்றுத் திருப்பணிகளும் செய்வதற்கு [ஒரு முக்காணி இந்நம் நிலம்] கொடுத்ததாக தெரியவருகிறது. ஊரார் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்புகலூர்
இரண்டாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது ஆட்சியாண்டில் காரைக் காலைச் சேர்ந்த ஊரார்கள் பலர் இவ்வூர் கோயிலில் இருந்து இருபத்தைந்து காசுகள் பெற்றுக் கொண்டு பொன் மேந்த சோழன் என்ற பெயருடைய நிலத்தை இருநந்தாவனப்புறமாக இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
குலோத்துங்க சோழ தேவரின் பதினோேரும் ஆட்சியாண்டு 81-வது நாளைச்சேர்ந்த குமிழ்க்கல்வெட்டு. கல்வெட்டு நடுப்பகுதியிலிருந்து கட்டிடத்திற்குள் மறைந்து விட்டது. முந்தியகல்வெட்டின் தொடர்ச்சியாக இக்கல்வெட்டு உள்ளது. இரண்டுவேலிநிலத்தின் உள்வரியை இறையிலியாக கோயிலுக்கு மன்னனால் கொடுக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது, On the North wall of the Somanathesvara Temple-chola- Kulottunga chola deva If[l]th year [31]st day. Tamil-Built in the middle. Engraved in continvation of the previous inscription. Records the grant of ulvari for another gift of 2 veli of land free of taxes (to the same temple) made by the king.
தஞ்சாவூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
இறையிலி நிலம் பற்றிக் கூறுகிறதுண்டுக் கல்வெட்டு
தஞ்சாவூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
இறையிலி நிலம் பற்றிக் கூறுகிறதுண்டுக் கல்வெட்டு.
தஞ்சாவூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
சோமனாதசுவாமி கோயிலுக்கு இறையிலியாக நிலம் விட்ட செய்தியும் அதற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
மூன்றாம் இராஜராஜ சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் திருநட்டப் பெருமாள் உலகனான விசையாலைய முத்தரையன் என்பவன் இவ்வூர் கோயில் திருப்பணி முதலியவைகளுக்கு இறையிலியாக நிலம் பதின்மூன்றே முக்காலும் காணியும் பல்வேறு இடங்களிலிருந்து கொடுத்த செய்து கூறப்பட்டுள்ளது. அவ்வாறு திரு நட்டப் பெருமாள் நிலம் கொடுத்தது தன் தந்தையின் (பிதாக்களுக்கு நன்றாக) நன்மைக்காக வென்று கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
சோமநாத சருப்பேதி மங்கலத்து ஊரார்க்கும் சீதக்க மங்கலத்து ஊரார்க்கும் முடி கொண்ட சோழப் பேராற்றிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு நீர் பாய்ச்சுவது பற்றி தகராறு ஏற்பட்டது. அந்தத் தகராறின் காராணமாக உடையோனான இராஜ ராஜப் பேரையன் என்பவன் தவறுதலாக மற்றொருவனுக்குப் பதிலாகத் தண்டிக்கப்படுகிறான். பின்னர் இவனுடைய மகனுக்கு உதிரப்பட்டி யாக நிலம் கொடுக்கப்பட்டது, அத்நிலத்தை இரண்டாயிரத்து நூறு காசுகள் பெற்றுக் கொண்டு இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>அச்சுதமங்கலம்
சரன்ஆட்கொண்ட நாயனான பாம்பூர் நாட்டுக் கோன் என்பவன் இறையிலி தேவதானமாக நிலம் விட்ட செய்தியும் அதன் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. இறுதியில் சிலவரிகள் ககிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>நன்னிலம்>கீரனூர்
இறைவனை ஸ்ரீபலி எழுந்தருளச் செய்வதற்கு வேண்டும் பலகைகள் செய்வதற்கு கோயிலைச் சேர்ந்தவர்கள் செய்த ஏற்பாடுபற்றிக் கூறுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>கீரனூர்
துண்டுக் கல்வெட்டு, இறைவனுக்கு நீராட்டுவதற்கும் திருவிழாநடத்துவதற்கும் நிலம் அளிக்கப்பட்ட செய்தியைக் குறிப்பதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>கீரனூர்
கீரனூரைச் சேர்ந்த வெள்ளாளன் மாதேவன் ஆச்சன் ஒரு சந்தி விளக்கு எரிக்க மூன்று மாநிலமும், காஸ்யபல் சன்ன சந்திரசேகரன் ஒரு சந்தி விளக்கு எரிக்க நிலம் மூன்று மாவும், இக்கோயிலுக்காக, பொன் கொடுத்து வாங்கிய நிலம் நான்கு மாவும், ஆக மொத்தம் நிலம் பத்துமாவையும் பெற்றுக்கொண்டு கோயிலில் பணி புரிபவர்கள் [ஸ்ரீகோயிலுடையார்கள்] இதை, வாசலிற் போந்த குடிமை ஆகிய வரிகளைச் செலுத்தி, இரண்டு சந்தி விளக்கு எரித்து, மேலும் இருபத்திருகலனே தூணிப்பதக்கு நெல் கோயிலுக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், கோயிலில் பணி புரியும் கவரி வீசுவோர் இருக்கும் மடமும் உவச்சர், கோயிலுடையார், ஆகியோர் குடியிருக்கும் மனைகளும் இறையிலியாக ஆக்கப்பட்ட செய்தியும் தெரிய வருகிறது. கல்வெட்டின் ஆரம்பமும் முடிவும் காணப்படவிவ்லை
தஞ்சாவூர்>நன்னிலம்>கீரனூர்
முதலாம் இராஜராஜ சோழனின் இருபத்தாறாம் ஆட்சியாண்டில் கீரனூர் சிவ புரமுடைய மாதேவர் கோயிலிலுள்ள பிள்ளையாருக்கு இருவமுதுக்கும் [உணவு] சந்தி விளக்கிற்கும் கீரனூர் ஊரார்கள் கால் நிலம் இறையிலியாகக் கொடுத்த செய்தியும் அந்நிலத்துற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்>நன்னிலம்>கீரனூர்
முதலாம் இராஜராஜ சோழனின் ஏழாவது ஆட்சியாண்டில் அருமொழி பல்ல வரையர் என்பவர் விண்ணப்பம் செய்தபடி முன்புள்ள ராஜாக்கள் தேவதானமாக கொடுத்த பன்னிருவேலி நிலமும் எவ்வெவற்றிற்கு பயன்படுத்தப் பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. அவ்வாறு வரையரை செய்யப்பட்டப் பொழுது நாற்பத் தெண்ணாயிர பட்டன் போன்றோர் உடனிருந்து இகைச் செய்திருக்கிரறுர்கள். அதாவது இனம் இக்கோயில் இறைவனை ஆராதனை செய்யும் பிராமணனுக்கு இனம் பதக்கு நெல்லுக்கும் துணிகளுக்கும் ஒரு கழஞ்சு பொன்னுக்கும் நான்கு மாக்காணி நிலம் கொடுக்கப்பட்டது. இந்நிலம் உமையா பிடாரி என்றழைக்கப்பட்டது. இக்கோயிலில் பரிசாரகஞ் [பிழபணிகள்] செய்யும் மாணிகள் இருவர்க்கு தினம் தூணி நெல்லுக்கும் துணிகளுக்கும் இருகழஞ்சு பொன்னுக்கும் எட்டுமாக்காணி நிலம் கொடுக்கப்பட்டது. இத்திலம் மூன்று வெவ்வேதநு இடங்களிலிருந்து கொடுக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட ஆராதனையும். பிறபணிகளும் செய்பவர்களே இக்கோயிலுக்கு திருவமுதும் திருவிளக்கும் செலுத்து வதற்கு நிலம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இக்கோயில் இறைவனுக்கு அர்த்த ஜாமத்தில் படைக்கும் அமுதினுக்கும், கூத்தப் பெருமாள் திரிபுவன சுந்தரர் ஆகியோருக்கு ஸ்ரீபலி, அன்னபலி ஆகியவற்றிற்கும் செம்மரிசி கொடுக்கப் பட்ட செய்தியும், பருப்பமுது, நெய், பொறிக்கறி, தயிர், அடைக்காய், வெற்றிலை அடருயைவற்றிற்கத நெல் கொடுக்கப்பட்ட செய்தியும் தெரிய வருகிறது. சங்க ராதந்திக்கும், கிரஹணத்திற்கும், இறைவனை திரவியம், தேன், சந்தனம் முதலிய வற்றால் நீராட்டவும், நிலங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் மேலையாற்றில் பொமுதிருகால் இறைவனை நீராட்டும் யோகியும், மஞ்சள் நீராட்டுவானும் குறிக்கப்படுகின்றனர். எனவே இக்கோயிலில் அபிஷேகம் சிறந்த முறையில் நடை பெற்றிருத்தல் வேண்டும். நந்தாவனத்தை தபஸ்யர் இருவர் கவனித்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நெல் வழங்கப்பட்டு வந்தது. வழங்கப்பட்ட நெல்லின் அளவுகளும்: கூறப்பட்டுள்ளன. (திருப்பவும்) தவிரவும் இரண்டு சங்குகள் ஊதும் இரு அடியார்களுக்கும் திருப்பள்ளித் தாமம் பறிச்சுத் தொடுப்பாள் ஒருத்திக்கும், திருமெழுக்கிட்டு நிருப்பிண்டியட்டு வாள் [உணவு பரிமாறுபவள்] ஒருத்திக்கும், இருமெழுக்கிடும் ஒருவனுக்கும், இருவலகிட்டு [சுத்தம் செய்து] நீர் தெளிக்கும் ஒருவனுக்கும், நேோர்காளமூதுவார் நால்வர்க்கும், இருப்பதியம் பாடும் மூவர்க்கும் நெல் வழங்கப்பட்டிருந்த செய்தியும் தெரியவருகிறது. இக்கோயிலில் தினம் நொந்தா விளக்கு எட்டும், இராவை சந்தி விளக்கு பதினாறும், பிடிவிளக்கு எட்டும் எரிப்பதற்கு நெல் கொடுக்கப். பட்டிருந்தன. பிடிவிளக்கென்பது சந்தப்போதில் ஸ்ரீபலி செய்யும் போது பயன் படுத்தப் பட்டிருத்தல் வேண்டும். இறைவனுக்குப் படைக்கும் அழூது வகைகள் செந்நெல் என்ற. ஒருவகை நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசியாகும். அது செம்மரிசி என வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>கீரனூர்
முதல் இராஜேந்திர சோமனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டு, இசைக்கருவிகளான Cara, அறிஞ்சு, காளம் முதலியவை கொட்டுபவர்களுக்கும் பள்ளியெழுச்சி ஆட்டத்துக்கு வாசிக்கும் உவச்சர்களுக்கும் சாக்கைக் கூத்து ஆடுபவனுக்கும் குறிப்பிட்ட அளவில் நெல் கொடுக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. இவ்வாறு கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெல்லின் அளவுகளும், அந் நெல் எந்த நிலத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. மேலும் திருவிழாவின் போது ஓவ்வொரு நாளும் கலம் இடுபவர் எழுபதின் மார்க்கும் ஸ்ரீகாரியம் செய்யும் சிவபிராமணர் நாற்பத்தெண்ணாயிர படாரர்க்கும் எவ்வளவு நெல் கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு கோயில் பணியாளர்களுக்குப் பல்வேறு பெயருடன் கூடிய நிலங்களிலிருந்து நெல் தரப்பட்டது. ஸ்ரீகரணமயக்கல், சண்டேஸ்வர விளாகம், போன்ற நிலங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. பரமேஸ்வரன் ஸ்ரீகண்டனான மருதூர் சாக்கை என்பது மேற்கூறிய சாக்கை கூத்து ஆடு பவனின் பெயராகும். இவ்வூரில் ஞானசம்பந்தசேரி என்ற ஓரு பகுதி இருந்ததென்றும், அங்கு இக்கோயில் இறைவனுக்கு வேண்டிய எண்ணெய் ஆட்டப் பட்டது என்ற செய்தியும் தெரியவருகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>சிதக்கமங்கலம்
கோவிராஜகேசரிவர்மனின் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டு மிகவும் சிதைத்த ஊர் சபையார் இறையிலியாக நிலம் விற்றுக் குடுத்து கல்வெட்டிய செய்தியைக் குறிப்பனவாக இருத்தல் வேண்டும்.