வேலூர்கல்வெட்டின் ஆரம்பப்பகுதி காணப்படவில்லை. முந்தைய கல்வெட்டோடு (தொ.எண்: 316) தொடர்புடையது. சோழகேரளவிடங்கருக்கு அர்ச்சனைக்காக சபையார் அளித்த நிலத்தின் எல்லை விவரங்கள் மற்றும் பதினறுசாண் கோலால் நிலம் அளக்கப்பட்டு அந்நிலத்திற்கான விலைப்பொருள் மற்றும் இறைப்பொருள் பெறப்பட்டு இறையிலியாக்கப்பட்டுள்ளது.
வேலூர்சங்கரதேவன் சோமநாதனுக்கு வாணபுரத்து ஊரார் ஆயிரம் குழி நிலத்தை விற்று அதன் மீதுள்ள இறையை விலக்கியுள்ளனர். இவன் வைய்தும்பன் என்றும் புகழப்பட்டுள்ளான். இந்நிலம் பதினறுசாண் கோலால் அளக்கப் பட்டது. இந்நிலத்தின் எல்லைகளில் மணலிக்கால், கண்ணக்கால் போன்ற நீர்வழிகளும் தச்சர்களின் வாழ்விடமான தச்சன் குண்டும் சொல்லப்பட்டுள்ளன. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் படுவூர்க்கோட்டத்துப் பெரும்பாணப் பாடியில் அமைந்துள்ள நகரம் வாணபுரம் என்று சொல்லப்பட்டுள்ளது.
வேலூர்சேனாபதிகள் ராஜராஜ சோழியவரையரிடம் அறுபத்துநான்கு அன்றாடு நற்காசுகள் பெற்றுக்கொண்டு 800 குழி நிலத்தை திருவல்லத்து சபையார் இறையிலி தேவதானமாக விற்றனர். கல்வெட்டின் பின்பகுதி தென்படவில்லை என்பதால் இந்நிலம் எதற்காக விற்கப்பட்டது என்பதை அறிய இயலவில்லை.
வேலூர்கல்வெட்டின் இறுதிப்பகுதி இல்லை. ஐயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர்க் கோட்டத்து திருத்தீக்காலிவல்லம் ஆளுங்கணத்தார் வாணபுரத்து ஊரில் மஞ்சிக்கமான 500 குழி நிலத்தை நம்பூர் திருநீலகண்டக் கிரமவித்தநுக்கு விற்றுள்ளனர். இதற்கான விலைப்பொருள், இறைப்பொருள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு இந்நிலத்தின் மீதான சோறுமாட்டு, வெட்டி, அமஞ்சி, சில்லிறை போன்ற இறைகளைக் கழித்துள்ளனர். மேலும் இந்நிலத்திற்கு கிணறு, ஏரி நீர்க்கால், ஏத்தநீர்க்கால்கள் மூலம் முன்புள்ளவாறே நீர்பாய்ச்சிக் கொள்வதற்கான உரிமையையும் அளித்துள்ளனர். நிலத்தின் எல்லைகளாக ஆரிதைப்பட்டி, சங்கரதேவ மணலி, கடம்பங்குழி, மழபட்டடி ஆகிய ஊர்கள் இருந்துள்ளன. இவ்வாவணத்தை ஊரார் சொல்ல இவ்வூர் ஊர்க்கரணத்தாந் சீராளசந்மந் எழுதி ஒப்பம் இட்டுள்ளான்.
வேலூர்கல்வெட்டின் ஆரம்பப்பகுதி இல்லை. இருபது கழஞ்சு பொன் கொண்டு ஊர் மஞ்சிக்கமான 1000 குழி நிலத்தை திருவல்லத்துச் சபையார் இறையிலியாக விற்றுள்ளனர். இந்நிலத்தைக்கொண்டு திருவல்லமுடையார் கோயிலில் உள்ள விக்கிரமசோழந் சாலையில் தினமும் ஒரு பிராமணனுக்கு உணவளிக்க ஒத்துக்கொண்டுள்ளனர். நிலத்தின் எல்லைகளாக வைத்திய போக நிலம், ராஜராஜப் பேரேரி, காடேற்றிக்கால் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
வேலூர்வாணபுரத்து ஊரார் திருவைய்யன் மகன் சங்கரதேவனுக்கு 700 குழி நிலத்தை இறையிலியாக விற்றனர். அவன் இந்நிலத்தை திருத்தீக்காலிவல்லப் பெருமான் கோயிலுக்கு தெற்கில் அமைந்த திருவய்ய ஈசுவரர் கோயிலுக்கு அர்ச்சனாபோகமாக வழங்கினான். இவன் மேலைக் கங்க அரசகுலத்தைச் சேர்ந்தவன்.
வேலூர்முன் கல்வெட்டின் (தொ. எண் :264) தொடர்ச்சியாக இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ஈராயிரவன் பல்லவயநாந மும்மடி சோழ போசன் நிர்வாகத்தில் திருவல்லத்து சபையாரால் ஆறு மா நிலம் இறையிலியாக விற்கப்பட்டது. மூன்று சந்திகளிலும் கோயிலில் விளக்கு எரிக்க இந்நிலம் தரப்பட்டது.
வேலூர்இக்கல்வெட்டு பழங்கல்வெட்டின் பிரதி; முன் கல்வெட்டின் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுள்ளது. கொங்குணி அரசனான பிரதிபதி அரையரின் மகளும், வாணமகாதேவியுமான குந்தவையார் கொடுத்த 40 கழஞ்சு பொன் கொண்டு ஊர் மஞ்சிக்கம் நிலத்தை இறையிலியாகப் பெற்று இரண்டு நொந்தா விளக்குகள் எரிக்க தீக்காலிவல்லத்து சபையார் ஒப்புக்கொண்டுள்ளனர். கல்வெட்டின் சமஸ்கிருதப்பகுதியில் மகாபலி குலத்தில் உதித்தவன், தேவ, அசுரர்களின் வாயில்காப்போன், மூவுலகில் எல்லோராலும் வணங்கப் பெறுபவன் என்று வாணர் அரசர் வாணவித்யாதரன் போற்றப்பட்டுள்ளான்.
வேலூர்படுவூர்க் கோட்டத்து காரை நாட்டின் நரதுங்க சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த சிவபிராமணரான கீர்த்தி மார்த்தாண்ட பிரம்மாதிராஜர் திருத்தீய்க்காலி ஆள்வார் கோயிலில் உமாதேவியாரை நிறுவி, நொந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கும், திருவமுதுது படைப்பதற்கும் ஆயிரத்தெழுநூறு குழி நிலம் அளித்துள்ளார். இந்நிலத்திற்கான இறைப்பொருளைப் பெற்றுக்கொண்ட மந்திரமாகிய ஜயமேரு சீகரணமங்கலத்து சபையார் அந்நிலத்தின் மீதான வரிகளை விலக்கியுள்ளனர். விளக்கு எரிப்பதற்கும், திருவமுது படைப்பதற்கும் சிவப் பிராமணர்கள் உடன் பட்டுள்ளனர்.
வேலூர்இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள் சற்று பிற்காலத்தைச் சேர்ந்தன என்பதால் இதனை பழம் கல்வெட்டின் பிரதியாகக் கருதலாம். கச்சிப்பேட்டு இறையான் சேரியிலமைந்த பொன்படு குட்டத்தைச் சேர்ந்த சோழியவரையனான மாநாபரணனிடமிருந்து கோயிலில் திருவமிர்து செலுத்துவதற்கும், நொந்தாவிளக்கு எரிக்கவும் 40 பொன்னை சபையார் பெற்றுக்கொண்டு 1300 குழி நிலத்தை இறையிலியாக விற்றுள்ளனர். இப்பணிகளைச் செய்யும் சிவப் பிராமணருக்கு 400 குழி நிலமும் அளிக்கப்பட்டது. மகாபலி குலத்தில் உதித்த பெருமை மிக்கவன், தேவ, அசுரர்களின் வாயில்காப்போன், பரமேசுவரன், மூவுலகில் எல்லோராலும் வணங்கப்பெறுபவன், என்று மாவலி வாணராயன் போற்றப் பட்டுள்ளான்.
வேலூர்ஆரம்பமும் முடிவும் இல்லாத துண்டுக் கல்வெட்டு. நிலப்பரிமாற்றம் தொடர்பான நிலத்தின் மீதான விலைத் திரவியம் மற்றும் வரிவிலக்கு பெறுவதற்கான இறைத் திரவியம் பெற்றுக்கொண்டதைப் பற்றித் தெரிவிக்கிறது.
வேலூர்வெண்சங்கின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில் எழுத்துகள் மிகவும் தேய்ந்துள்ளன. கெஞ்ஞூரில் உள்ள இறையாநீசுவரம் உடையார் (சொர்ணமுகீசுவரர்) கோயிலுக்கு செய்யகோவன் என்பான் இச்சங்கினை அளித்துள்ளான். இச்சங்கினை அளித்த செய்யகோவன், நகர் என்ற ஊரினைச் சேர்ந்தவர். கெஞ்ஞூர் என்ற பழம் ஊர்ப்பெயர் காலப்போக்கில் கழிஞ்சூர் என்று மருவி இருக்கலாம். கல்வெட்டின் எழுத்தமைதியை நோக்கும்போது இச்சங்கு இரண்டு நூற்றாண்டுகளாக அக்கோயில் வழிபாட்டில் உள்ளது புலப்படும்.
இராணிப்பேட்டைகோவிந்தபாடியில் உள்ள உய்யக்கொண்டாள்வார் கோயிலுக்கு அமண்பாக்கம் ஊரவர் விற்றுக்கொடுத்த இறையிலி நிலம் பற்றிக் கூறுகின்றது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
இராணிப்பேட்டைபெருமானடிகள் (பராந்தகன்) மாதேவியார் கோவிந்தபாடி நின்றருளின இறைவனுக்கு நந்தா விளக்கு வைக்க நூற்றிருபது ஆடுகள் கொடையாக அளிக்கப்பெற்ற செய்தி. இரண்டாவது கல்வெட்டு ஓம்படைக்கிளவி.