Skip to main content

1128 results found

வேலூர்>காட்பாடி>திருவலம்
The inscription is connected with the previous one. It records the iraiyili land granted to Chōlakērala vitankar for services in the temple (archanābōga) by the sabha of Tiruvallam. The land was measured by the sixteen span rod (padinaṛu cāṇ kōl). கல்வெட்டின் ஆரம்பப்பகுதி காணப்படவில்லை. முந்தைய கல்வெட்டோடு (தொ.எண்: 316) தொடர்புடையது. சோழகேரளவிடங்கருக்கு அர்ச்சனைக்காக சபையார் அளித்த நிலத்தின் எல்லை விவரங்கள் மற்றும் பதினறுசாண் கோலால் நிலம் அளக்கப்பட்டு அந்நிலத்திற்கான விலைப்பொருள் மற்றும் இறைப்பொருள் பெறப்பட்டு இறையிலியாக்கப்பட்டுள்ளது.
வேலூர்>காட்பாடி>திருவலம்
The ūr of Vānapuram, a nagaram situated in the Perumbāṇappāḍi karaivali, a division of Paduvur kōṭṭam, sold a piece of land measuring 1000 kulito Sankaradevan Sōmanathan, a Vaidumba chieftain as iraiyili. The purpose of the sale could not be ascertained from the record. The land was measured by the sixteen span rod (pathinaṛu can kōl) and the land was bounded by irrigation canals like maṇalikāl and kannakkal and also the land of carpenters (taccan kundu). சங்கரதேவன் சோமநாதனுக்கு வாணபுரத்து ஊரார் ஆயிரம் குழி நிலத்தை விற்று அதன் மீதுள்ள இறையை விலக்கியுள்ளனர். இவன் வைய்தும்பன் என்றும் புகழப்பட்டுள்ளான். இந்நிலம் பதினறுசாண் கோலால் அளக்கப் பட்டது. இந்நிலத்தின் எல்லைகளில் மணலிக்கால், கண்ணக்கால் போன்ற நீர்வழிகளும் தச்சர்களின் வாழ்விடமான தச்சன் குண்டும் சொல்லப்பட்டுள்ளன. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் படுவூர்க்கோட்டத்துப் பெரும்பாணப் பாடியில் அமைந்துள்ள நகரம் வாணபுரம் என்று சொல்லப்பட்டுள்ளது.
வேலூர்>காட்பாடி>திருவலம்
The sabhā of Tiruvallam sold a piece of land measuring 800 kuli for 64 anrādu naṛkāsu to Rājarāja Chōliyavaraiyar, a Sēnāpati. The purpose of the sale could not be ascertained. சேனாபதிகள் ராஜராஜ சோழியவரையரிடம் அறுபத்துநான்கு அன்றாடு நற்காசுகள் பெற்றுக்கொண்டு 800 குழி நிலத்தை திருவல்லத்து சபையார் இறையிலி தேவதானமாக விற்றனர். கல்வெட்டின் பின்பகுதி தென்படவில்லை என்பதால் இந்நிலம் எதற்காக விற்கப்பட்டது என்பதை அறிய இயலவில்லை.
வேலூர்>காட்பாடி>திருவலம்
The members of the local village sabhā (alungaṇam) of Tikkālivallam, in Paḍuvur kōṭṭam a subdivision of Jayankonda Chölamandalam sold a piece of land (mañjikkam) measuring 500 kuli in Vāṇapuram. After accepting an amount due for taxes, the land was exempted from tax (iraiyili ). The taxes like chörumāttu, vetti, amañji and cillirai were exempted. The ūr agreed to the right of drawing water from old well, and irrigation canals pertaining to the land as before. The Ūrkkaraṇam, the village accountant wrote the document. கல்வெட்டின் இறுதிப்பகுதி இல்லை. ஐயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர்க் கோட்டத்து திருத்தீக்காலிவல்லம் ஆளுங்கணத்தார் வாணபுரத்து ஊரில் மஞ்சிக்கமான 500 குழி நிலத்தை நம்பூர் திருநீலகண்டக் கிரமவித்தநுக்கு விற்றுள்ளனர். இதற்கான விலைப்பொருள், இறைப்பொருள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு இந்நிலத்தின் மீதான சோறுமாட்டு, வெட்டி, அமஞ்சி, சில்லிறை போன்ற இறைகளைக் கழித்துள்ளனர். மேலும் இந்நிலத்திற்கு கிணறு, ஏரி நீர்க்கால், ஏத்தநீர்க்கால்கள் மூலம் முன்புள்ளவாறே நீர்பாய்ச்சிக் கொள்வதற்கான உரிமையையும் அளித்துள்ளனர். நிலத்தின் எல்லைகளாக ஆரிதைப்பட்டி, சங்கரதேவ மணலி, கடம்பங்குழி, மழபட்டடி ஆகிய ஊர்கள் இருந்துள்ளன. இவ்வாவணத்தை ஊரார் சொல்ல இவ்வூர் ஊர்க்கரணத்தாந் சீராளசந்மந் எழுதி ஒப்பம் இட்டுள்ளான்.
வேலூர்>காட்பாடி>திருவலம்
The sabhā of Tiruvallam sold a piece of land (marjikkam) measuring 1000 kuli for 20 kalanju of gold as iraiyili for feeding daily a brāhmaṇa in the Vikramachōlan sālai in the temple of Tiruvallam uḍaiyār. A tank called Rājarājap pērēri and an irrigation canal Kāḍērik kāl are mentioned as boundaries of land. கல்வெட்டின் ஆரம்பப்பகுதி இல்லை. இருபது கழஞ்சு பொன் கொண்டு ஊர் மஞ்சிக்கமான 1000 குழி நிலத்தை திருவல்லத்துச் சபையார் இறையிலியாக விற்றுள்ளனர். இந்நிலத்தைக்கொண்டு திருவல்லமுடையார் கோயிலில் உள்ள விக்கிரமசோழந் சாலையில் தினமும் ஒரு பிராமணனுக்கு உணவளிக்க ஒத்துக்கொண்டுள்ளனர். நிலத்தின் எல்லைகளாக வைத்திய போக நிலம், ராஜராஜப் பேரேரி, காடேற்றிக்கால் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
வேலூர்>காட்பாடி>திருவலம்
Sankaradēvan, the son of Tiruvaiyyan, the western Ganga ruler, granted a piece of land measuring 700 kuli to the Tiruvayya isvaram temple, situated on the south of the Tirukkālivallam Perumā! temple for services as archanābōga. The land was earlier sold to him by the ūr of Vāṇapuram. வாணபுரத்து ஊரார் திருவைய்யன் மகன் சங்கரதேவனுக்கு 700 குழி நிலத்தை இறையிலியாக விற்றனர். அவன் இந்நிலத்தை திருத்தீக்காலிவல்லப் பெருமான் கோயிலுக்கு தெற்கில் அமைந்த திருவய்ய ஈசுவரர் கோயிலுக்கு அர்ச்சனாபோகமாக வழங்கினான். இவன் மேலைக் கங்க அரசகுலத்தைச் சேர்ந்தவன்.
வேலூர்>காட்பாடி>திருவலம்
A piece of land with the extent of 6 mā was sold as iraiyili at the instance of the Chōla official, Trayiravan Pallavayan alias Mummuḍichōla Pōsan by the sabha of Tiruvallam for maintaining lamp at the three sandis in the temple. முன் கல்வெட்டின் (தொ. எண் :264) தொடர்ச்சியாக இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ஈராயிரவன் பல்லவயநாந மும்மடி சோழ போசன் நிர்வாகத்தில் திருவல்லத்து சபையாரால் ஆறு மா நிலம் இறையிலியாக விற்கப்பட்டது. மூன்று சந்திகளிலும் கோயிலில் விளக்கு எரிக்க இந்நிலம் தரப்பட்டது.
வேலூர்>காட்பாடி>திருவலம்
The characters of the inscription are little late suggesting that it was a copy made during the Chōla period. The Sanskrit portion in the beginning praises the glory of Bāṇa king Māvalivāṇarāyar as the one who was born in the family of Bāņas, the door keepers of the Gods and Asuras, a Paramēśvara and respected by all. Kundavai, the Bāṇa queen and the daughter of Pritipati Araiyar, of the Western Ganga ruler, granted 40 kalanju of gold and the sabha of Tikkālivallam sold a piece of land and exempted tax on it and agreed to maintain two perpetual lamps in the temple. இக்கல்வெட்டு பழங்கல்வெட்டின் பிரதி; முன் கல்வெட்டின் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுள்ளது. கொங்குணி அரசனான பிரதிபதி அரையரின் மகளும், வாணமகாதேவியுமான குந்தவையார் கொடுத்த 40 கழஞ்சு பொன் கொண்டு ஊர் மஞ்சிக்கம் நிலத்தை இறையிலியாகப் பெற்று இரண்டு நொந்தா விளக்குகள் எரிக்க தீக்காலிவல்லத்து சபையார் ஒப்புக்கொண்டுள்ளனர். கல்வெட்டின் சமஸ்கிருதப்பகுதியில் மகாபலி குலத்தில் உதித்தவன், தேவ, அசுரர்களின் வாயில்காப்போன், மூவுலகில் எல்லோராலும் வணங்கப் பெறுபவன் என்று வாணர் அரசர் வாணவித்யாதரன் போற்றப்பட்டுள்ளான்.
வேலூர்>காட்பாடி>திருவலம்
from the Naratunga Caturvedimangalam of Paduvur kōṭṭam, installed the image of Umādēvi in the temple of Tikkālivallam at Tiruvallam and granted 1700 kuli of land for sacred food and maintaining one perpetual lamp. The sabhā of Śrīkaraṇa mangalam remitted the taxes on the land and made it iraiyili after receiving an amount for taxes. The śivabrāhmaṇās agreed to maintain the grant. படுவூர்க் கோட்டத்து காரை நாட்டின் நரதுங்க சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த சிவபிராமணரான கீர்த்தி மார்த்தாண்ட பிரம்மாதிராஜர் திருத்தீய்க்காலி ஆள்வார் கோயிலில் உமாதேவியாரை நிறுவி, நொந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கும், திருவமுதுது படைப்பதற்கும் ஆயிரத்தெழுநூறு குழி நிலம் அளித்துள்ளார். இந்நிலத்திற்கான இறைப்பொருளைப் பெற்றுக்கொண்ட மந்திரமாகிய ஜயமேரு சீகரணமங்கலத்து சபையார் அந்நிலத்தின் மீதான வரிகளை விலக்கியுள்ளனர். விளக்கு எரிப்பதற்கும், திருவமுது படைப்பதற்கும் சிவப்பிராமணர்கள் உடன் பட்டுள்ளனர்.
வேலூர்>காட்பாடி>திருவலம்
The characters of the inscription are little late suggesting that it was a latter copy. The Sanskrit section in the beginning praises the glory of Bāṇa king Māvalivāṇarāyar as the one who was born in the family of Bānas, the door keepers of the Gods and Asuras, a Paramēśvara and respected by all. The sabhā received 40 kalanju of gold from Chōliyavaraiyan alias Māṇābharaṇan, of Ponpatukuttam a part of Igaiyānchēri, in Kachchippēdu (Kāñichipuram), and sold 1300 kulis of land as iraiyili for maintaining perpetual lamp and for the supply of sacred food in the temple. The śivabrāhmaṇa who performed the duties in the temple was also granted a piece of land measuring 400 kulis. இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள் சற்று பிற்காலத்தைச் சேர்ந்தன என்பதால் இதனை பழம் கல்வெட்டின் பிரதியாகக் கருதலாம். கச்சிப்பேட்டு இறையான் சேரியிலமைந்த பொன்படு குட்டத்தைச் சேர்ந்த சோழியவரையனான மாநாபரணனிடமிருந்து கோயிலில் திருவமிர்து செலுத்துவதற்கும், நொந்தாவிளக்கு எரிக்கவும் 40 பொன்னை சபையார் பெற்றுக்கொண்டு 1300 குழி நிலத்தை இறையிலியாக விற்றுள்ளனர். இப்பணிகளைச் செய்யும் சிவப்பிராமணருக்கு 400 குழி நிலமும் அளிக்கப்பட்டது. மகாபலி குலத்தில் உதித்த பெருமை மிக்கவன், தேவ, அசுரர்களின் வாயில்காப்போன், பரமேசுவரன், மூவுலகில் எல்லோராலும் வணங்கப்பெறுபவன், என்று மாவலி வாணராயன் போற்றப் பட்டுள்ளான்.
வேலூர்>காட்பாடி>காவனூர்
Fragment. Seems to refer to some land transaction made by the ur of Viracantra for the provision of sacred food to the temple. ஆரம்பமும் முடிவும் இல்லாத துண்டுக் கல்வெட்டு. நிலப்பரிமாற்றம் தொடர்பான நிலத்தின் மீதான விலைத் திரவியம் மற்றும் வரிவிலக்கு பெறுவதற்கான இறைத் திரவியம் பெற்றுக்கொண்டதைப் பற்றித் தெரிவிக்கிறது.
வேலூர்>காட்பாடி>கழிஞ்நூர்
Records that the conch was gifted to the temple of Iraiyānīśvaram uḍaiyār (Sorṇamukīsuvarar) at Keñjūr (Kaliñjūr) by Ceyya kōvan of Nagarūr, வெண்சங்கின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில் எழுத்துகள் மிகவும் தேய்ந்துள்ளன. கெஞ்ஞூரில் உள்ள இறையாநீசுவரம் உடையார் (சொர்ணமுகீசுவரர்) கோயிலுக்கு செய்யகோவன் என்பான் இச்சங்கினை அளித்துள்ளான். இச்சங்கினை அளித்த செய்யகோவன், நகர் என்ற ஊரினைச் சேர்ந்தவர். கெஞ்ஞூர் என்ற பழம் ஊர்ப்பெயர் காலப்போக்கில் கழிஞ்சூர் என்று மருவி இருக்கலாம். கல்வெட்டின் எழுத்தமைதியை நோக்கும்போது இச்சங்கு இரண்டு நூற்றாண்டுகளாக அக்கோயில் வழிபாட்டில் உள்ளது புலப்படும்.
வேலூர்>வேலூர்>திருமால்பூர்
It records the pledge of an individual who pledged to measure the paddy in the front gate of the temple as interest. பொன் கொடை பெற்றுக் கொண்டு பெற்ற கொடை மூலம் வட்டியாக வரும் நெல்லை கோவிந்தபாடிஇறைவன் முற்றத்தில் அளப்பதாக உறுதி செய்துள்ளனர்.
வேலூர்>வேலூர்>திருமால்பூர்
It records the pledge of an individual who pledged to measure the paddy in the front gate of the temple as interest. பொன் கொடை பெற்றுக் கொண்டு பெற்ற கொடை மூலம் வட்டியாக வரும் நெல்லை கோவிந்தபாடிஇறைவன் முற்றத்தில் அளப்பதாக உறுதி செய்துள்ளனர்.
வேலூர்>வேலூர்>திருமால்பூர்
It records the gift of tax free land. கோவிந்தபாடியில் உள்ள உய்யக்கொண்டாள்வார் கோயிலுக்கு அமண்பாக்கம் ஊரவர் விற்றுக்கொடுத்த இறையிலி நிலம் பற்றிக் கூறுகின்றது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
வேலூர்>வேலூர்>திருமால்பூர்
Cōla mādēviyār had donated 120 sheeps to Kovindapāḍi god for lamp. Another portion is an end portion of another inscription. பெருமானடிகள் (பராந்தகன்) மாதேவியார் கோவிந்தபாடி நின்றருளின இறைவனுக்கு நந்தா விளக்கு வைக்க நூற்றிருபது ஆடுகள் கொடையாக அளிக்கப்பெற்ற செய்தி. இரண்டாவது கல்வெட்டு ஓம்படைக்கிளவி.
வேலூர்>வேலூர்>தெள்ளேரி
It records the gift of land which was irrigated from Thelleri (Tank) as tax free land (museum). தெள்ளையூர்(தெள்ளேரி) ஏரிக்குக் கீழ் இறையிலியாக கொடை கொடுத்து செய்தி கூறப்பெறுகின்றது.
வேலூர்>வேலூர்>பள்ளிகொண்டா
It records the gift of land for rituals in the temple Brāhmaṇi is referred to. எட்டுப் பட்டி நிலம் இறையிலியாகக் கொடுத்த செய்தி கூறப்பெறுகின்றது. ஸந்திநேரத்தில் அமுதுபடி செய்வதாக சிவப்பிராமணர்கள் உறுதி அளித்துள்ளனர்.
சிவகங்கை>திருப்பத்தூர்>கம்பனூர்
utilated record regarding land donation. நிலதானம் இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை>திருப்பத்தூர்>கம்பனூர்
Incomplete record mentions land donation. இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தி.