திருவாரூர்சரன்ஆட்கொண்ட நாயனான பாம்பூர் நாட்டுக் கோன் என்பவன் இறையிலி தேவதானமாக நிலம் விட்ட செய்தியும் அதன் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. இறுதியில் சிலவரிகள் ககிடைக்கவில்லை.
திருவாரூர்கீரனூரைச் சேர்ந்த வெள்ளாளன் மாதேவன் ஆச்சன் ஒரு சந்தி விளக்கு எரிக்க மூன்று மாநிலமும், காஸ்யபல் சன்ன சந்திரசேகரன் ஒரு சந்தி விளக்கு எரிக்க நிலம் மூன்று மாவும், இக்கோயிலுக்காக, பொன் கொடுத்து வாங்கிய நிலம் நான்கு மாவும், ஆக மொத்தம் நிலம் பத்துமாவையும் பெற்றுக்கொண்டு கோயிலில் பணி புரிபவர்கள் [ஸ்ரீகோயிலுடையார்கள்] இதை, வாசலிற் போந்த குடிமை ஆகிய வரிகளைச் செலுத்தி, இரண்டு சந்தி விளக்கு எரித்து, மேலும் இருபத்திருகலனே தூணிப்பதக்கு நெல் கோயிலுக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், கோயிலில் பணி புரியும் கவரி வீசுவோர் இருக்கும் மடமும் உவச்சர், கோயிலுடையார், ஆகியோர் குடியிருக்கும் மனைகளும் இறையிலியாக ஆக்கப்பட்ட செய்தியும் தெரிய வருகிறது. கல்வெட்டின் ஆரம்பமும் முடிவும் காணப்படவிவ்லை
திருவாரூர்முதலாம் இராஜராஜ சோழனின் இருபத்தாறாம் ஆட்சியாண்டில் கீரனூர் சிவ புரமுடைய மாதேவர் கோயிலிலுள்ள பிள்ளையாருக்கு இருவமுதுக்கும் [உணவு] சந்தி விளக்கிற்கும் கீரனூர் ஊரார்கள் கால் நிலம் இறையிலியாகக் கொடுத்த செய்தியும் அந்நிலத்துற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
திருவாரூர்முதலாம் இராஜராஜ சோழனின் ஏழாவது ஆட்சியாண்டில் அருமொழி பல்லவரையர் என்பவர் விண்ணப்பம் செய்தபடி முன்புள்ள ராஜாக்கள் தேவதானமாக கொடுத்த பன்னிருவேலி நிலமும் எவ்வெவற்றிற்கு பயன்படுத்தப் பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. அவ்வாறு வரையரை செய்யப்பட்டப் பொழுது நாற்பத் தெண்ணாயிர பட்டன் போன்றோர் உடனிருந்து இகைச் செய்திருக்கிரறுர்கள். அதாவது இனம் இக்கோயில் இறைவனை ஆராதனை செய்யும் பிராமணனுக்கு இனம் பதக்கு நெல்லுக்கும் துணிகளுக்கும் ஒரு கழஞ்சு பொன்னுக்கும் நான்கு மாக்காணி நிலம் கொடுக்கப்பட்டது. இந்நிலம் உமையா பிடாரி என்றழைக்கப்பட்டது. இக்கோயிலில் பரிசாரகஞ் [பிழபணிகள்] செய்யும் மாணிகள் இருவர்க்கு தினம் தூணி நெல்லுக்கும் துணிகளுக்கும் இருகழஞ்சு பொன்னுக்கும் எட்டுமாக்காணி நிலம் கொடுக்கப்பட்டது. இத்திலம் மூன்று வெவ்வேதநு இடங்களிலிருந்து கொடுக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட ஆராதனையும். பிறபணிகளும் செய்பவர்களே இக்கோயிலுக்கு திருவமுதும் திருவிளக்கும் செலுத்து வதற்கு நிலம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இக்கோயில் இறைவனுக்கு அர்த்த ஜாமத்தில் படைக்கும் அமுதினுக்கும், கூத்தப் பெருமாள் திரிபுவன சுந்தரர் ஆகியோருக்கு ஸ்ரீபலி, அன்னபலி ஆகியவற்றிற்கும் செம்மரிசி கொடுக்கப் பட்ட செய்தியும், பருப்பமுது, நெய், பொறிக்கறி, தயிர், அடைக்காய், வெற்றிலை அடருயைவற்றிற்கத நெல் கொடுக்கப்பட்ட செய்தியும் தெரிய வருகிறது. சங்க ராதந்திக்கும், கிரஹணத்திற்கும், இறைவனை திரவியம், தேன், சந்தனம் முதலிய வற்றால் நீராட்டவும், நிலங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் மேலையாற்றில் பொமுதிருகால் இறைவனை நீராட்டும் யோகியும், மஞ்சள் நீராட்டுவானும் குறிக்கப்படுகின்றனர். எனவே இக்கோயிலில் அபிஷேகம் சிறந்த முறையில் நடை பெற்றிருத்தல் வேண்டும். நந்தாவனத்தை தபஸ்யர் இருவர் கவனித்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நெல் வழங்கப்பட்டு வந்தது. வழங்கப்பட்ட நெல்லின் அளவுகளும்: கூறப்பட்டுள்ளன. (திருப்பவும்) தவிரவும் இரண்டு சங்குகள் ஊதும் இரு அடியார்களுக்கும் திருப்பள்ளித் தாமம் பறிச்சுத் தொடுப்பாள் ஒருத்திக்கும், திருமெழுக்கிட்டு நிருப்பிண்டியட்டு வாள் [உணவு பரிமாறுபவள்] ஒருத்திக்கும், இருமெழுக்கிடும் ஒருவனுக்கும், இருவலகிட்டு [சுத்தம் செய்து] நீர் தெளிக்கும் ஒருவனுக்கும், நேோர்காளமூதுவார் நால்வர்க்கும், இருப்பதியம் பாடும் மூவர்க்கும் நெல் வழங்கப்பட்டிருந்த செய்தியும் தெரியவருகிறது. இக்கோயிலில் தினம் நொந்தா விளக்கு எட்டும், இராவை சந்தி விளக்கு பதினாறும், பிடிவிளக்கு எட்டும் எரிப்பதற்கு நெல் கொடுக்கப். பட்டிருந்தன. பிடிவிளக்கென்பது சந்தப்போதில் ஸ்ரீபலி செய்யும் போது பயன்படுத்தப் பட்டிருத்தல் வேண்டும். இறைவனுக்குப் படைக்கும் அழூது வகைகள் செந்நெல் என்ற. ஒருவகை நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசியாகும். அது செம்மரிசி என வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
திருவாரூர்முதல் இராஜேந்திர சோமனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டு, இசைக்கருவிகளான Cara, அறிஞ்சு, காளம் முதலியவை கொட்டுபவர்களுக்கும் பள்ளியெழுச்சி ஆட்டத்துக்கு வாசிக்கும் உவச்சர்களுக்கும் சாக்கைக் கூத்து ஆடுபவனுக்கும் குறிப்பிட்ட அளவில் நெல் கொடுக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. இவ்வாறு கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெல்லின் அளவுகளும், அந் நெல் எந்த நிலத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. மேலும் திருவிழாவின் போது ஓவ்வொரு நாளும் கலம் இடுபவர் எழுபதின் மார்க்கும் ஸ்ரீகாரியம் செய்யும் சிவபிராமணர் நாற்பத்தெண்ணாயிர படாரர்க்கும் எவ்வளவு நெல் கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு கோயில் பணியாளர்களுக்குப் பல்வேறு பெயருடன் கூடிய நிலங்களிலிருந்து நெல் தரப்பட்டது. ஸ்ரீகரணமயக்கல், சண்டேஸ்வர விளாகம், போன்ற நிலங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. பரமேஸ்வரன் ஸ்ரீகண்டனான மருதூர் சாக்கை என்பது மேற்கூறிய சாக்கை கூத்து ஆடு பவனின் பெயராகும். இவ்வூரில் ஞானசம்பந்தசேரி என்ற ஓரு பகுதி இருந்ததென்றும், அங்கு இக்கோயில் இறைவனுக்கு வேண்டிய எண்ணெய் ஆட்டப் பட்டது என்ற செய்தியும் தெரியவருகிறது.
திருவாரூர்கோவிராஜகேசரிவர்மனின் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டு மிகவும் சிதைத்த ஊர் சபையார் இறையிலியாக நிலம் விற்றுக் குடுத்து கல்வெட்டிய செய்தியைக் குறிப்பனவாக இருத்தல் வேண்டும்.
நாகப்பட்டினம்நரிமணம் என்னும் கிடாரப்பிராந்தக. நல்லூர் என இவ்வூர் அக்காலத்தில் வழங்கப்பட்டது. இவ்வூர் கோயிலில் மரூத்துறையாதான் என்பவன் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாரை எழுந்த நரவித்ததையும், பூஜை அமுது படிக்காக, குற்றாலம் என்னும் நந்திககேஸ்வர நல்லூர், புற்றிடங்கொண்ட நல்லூர், வள்ளைப் பாக்கம் அகிய மூன்று ஊரவர்களும் ஊர்க்கீழ் இறையிலியாக மூன்றுமா நிலம் கொடுத்த செய்தியையும் தெரிவிக்கிறது. இவ்வூர் கோயி 3ல் உள்ள சுப்பிர மணியப் பிள்ளையாருக்கு முன்னாளில் இரு அமுதுபடிக்கு விட்ட நிலம் அரைமா வினையும் சேர்த்து மூன்றுமா எனக் கூறப்பட்டுள்ளது. ஊரார்கள் கையெழுத்து இட்டுள்ளனர், இறுதியில் ஓரிரு வரிகள் காணப்படவில்லை.
நாகப்பட்டினம்துண்டுக் கல்வெட்டு. இக்கல்வெட்டின் மூலம் ஊர்க் SIP இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தியை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. 3-வது வரியும், 2-வது வரியும் முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது, இறுதியில் சில வரிகள் காணப்படவில்லை. அகஸ்தீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புறச் சுவரில் உள்ளது. சோழ மன்னன் திரிபுவனச் சக்கரவத்திகள் ரரஜராஜ சோழனின் 19-ஆவது ஆட்சியாண்டு, மேஷம், சுக்ல பக்ஷத்து சீவது நாள் சனிக்கிழமை ரோகிணி இ. பி. 1235 எப்ரல் 21, சனிக்கிழமை. நரிமணம் என்ற கடாரப் பிரான்தக நல்லூர் இறைவன் அகஸ்கீஸ்வரருக்கு குற்றாலம், ஆனியூர் என்ற ஊரினச் சேர்ந்த ஊரவர் சிலவரிகள் நீக்கி இரண்டரை மா நிலத்தினை இறையிலியாக வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்இவ்வூர் கோயிலில் உள்ள சுப்பிரமணியப் பிள்ளையாருக்கு வேண்டிய : பூசைக்கும் சந்திக்கும், அமுதுபடிக்கும் [கூர] மங்கலத்து ஊரார்கள் இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி தெரிய வருகிறது. கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்இராஜ ஈதிராஜ சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் திருப்புகலார் அழக நாயனார் கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்து முடிவின்றி காணப்படுகிறது.
நாகப்பட்டினம்இவ்வூர் கோயிலுக்கு நிலம் இரண்டரை இறையிலி செய்து குடுத்து முப்பத்து ஏழரை காசுகள் பெற்றுக்கொண்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டு இடையிடையேயும் இறுதியிலும் சிதைந்து காணப்படுகிறது.
நாகப்பட்டினம்இவ்வூர் கோயிலுக்கு ஊரார் லர் அரை நிலம் இறையிலி செய்து கொடுத்து ஏழரை காசுகள் பெற்றுக் கொண்ட செய்தியும், மேற்கூறிய நிலத்திற்கு எல்லைகளும் காணப்படுகின்றன. 100. குமி கொண்டது 1 மா என்பதும் 2 குழி அல்லது 20 மா கொண்டிது 1 நிலம் என்பதும் இக்கல்வெட்டினால் தெரிய வருகிறது.
நாகப்பட்டினம்அழகிய நாயனார் கோயிலுக்கு ஒரு மா நிலம் இறையிலியாக கொடுத்த செய்தியும் இராஜராஜ மங்கலத்தைச் சேர்ந்த இபங்குடையான் என்பவன் இக்கோயில் பண்டாரத்தில் (treasury) பதினைந்து காசுகள் கொடுத்து மூன்று சந்தி விளக்கெரிக்க ஏற்பாடு செய்த செய்தியும், ஓராண்டுக்கு இந்த மூன்று விளக்கினுக்கும் முக்குறுணி முந்நாழி உமக்காழாக்கு எண்ணை கொடுக்க வேண்டும் என்ற செய்தியும் தெரிய வருகிறது. அத்துடன் திருவம்பலநம்பி போன்றோர் திருமந்திர போகப்புறமாக ஒரு மாமுக்காணி அளவுள்ள நிலம்கொடுத்த செய்தியும் கூறப்படடுள்ளது.
நாகப்பட்டினம்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. அழகிய தேவர்க்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்காக ஆறுமரக்காணி முத்திரிகைக் &ழனர் நிலம் ஏழு காசுகளைப்பெற்றுக் கொண்டு இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்தொன்றாம் ஆட்சியாண்டில் இவ்வூர் சபையார் உடையார் அழகிய தேவர் கோயிலுக்கு மத்தியான சந்திக்கும் சிவயோகிகளுக்கு இரண்டு சட்டி சோற்றுக்கும் சட்டிச் சோற்றுப்புறமாக மூன்று மா நிலம் இறையிலி செய்துகொடுத்த செய்து கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் ஐந்து பேர்கள் இவ்வூர் கோயிலுக்கு இருமாவரை முத்திரிகை அளவுள்ள நிலத்தை இரண்டரைக் காசுகளுக்கு இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்து கூறப்பட்டுள்ளது.