Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>நன்னிலம்>தலையூர்
நிலம் இறையிலி செய்து கொடுத்ததைக் கூறும் துண்டுக் கல்வெட்டு, பலரும் கையெழுத்திட்டுள்ளனர்
தஞ்சாவூர்>நன்னிலம்>நரிமணம்
நரிமணம் என்னும் கிடாரப்பிராந்தக. நல்லூர் என இவ்வூர் அக்காலத்தில் வழங்கப்பட்டது. இவ்வூர் கோயிலில் மரூத்துறையாதான் என்பவன் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாரை எழுந்த நரவித்ததையும், பூஜை அமுது படிக்காக, குற்றாலம் என்னும் நந்திககேஸ்வர நல்லூர், புற்றிடங்கொண்ட நல்லூர், வள்ளைப் பாக்கம் அகிய மூன்று ஊரவர்களும் ஊர்க்கீழ் இறையிலியாக மூன்றுமா நிலம் கொடுத்த செய்தியையும் தெரிவிக்கிறது. இவ்வூர் கோயி 3ல் உள்ள சுப்பிர மணியப் பிள்ளையாருக்கு முன்னாளில் இரு அமுதுபடிக்கு விட்ட நிலம் அரைமா வினையும் சேர்த்து மூன்றுமா எனக் கூறப்பட்டுள்ளது. ஊரார்கள் கையெழுத்து இட்டுள்ளனர், இறுதியில் ஓரிரு வரிகள் காணப்படவில்லை.
தஞ்சாவூர்>நன்னிலம்>நரிமணம்
Registers to gift of 2. 5 ma of Jand, free of certain specified taxes god Agastisvara of Narimanam alias Kadarapirantakanallur by the uravar of Kurralam and Antyur. துண்டுக் கல்வெட்டு. இக்கல்வெட்டின் மூலம் ஊர்க் SIP இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தியை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. 3-வது வரியும், 2-வது வரியும் முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது, இறுதியில் சில வரிகள் காணப்படவில்லை. அகஸ்தீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புறச் சுவரில் உள்ளது. சோழ மன்னன் திரிபுவனச் சக்கரவத்திகள் ரரஜராஜ சோழனின் 19-ஆவது ஆட்சியாண்டு, மேஷம், சுக்ல பக்ஷத்து சீவது நாள் சனிக்கிழமை ரோகிணி இ. பி. 1235 எப்ரல் 21, சனிக்கிழமை. நரிமணம் என்ற கடாரப் பிரான்தக நல்லூர் இறைவன் அகஸ்கீஸ்வரருக்கு குற்றாலம், ஆனியூர் என்ற ஊரினச் சேர்ந்த ஊரவர் சிலவரிகள் நீக்கி இரண்டரை மா நிலத்தினை இறையிலியாக வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
இவ்வூர் கோயிலில் உள்ள சுப்பிரமணியப் பிள்ளையாருக்கு வேண்டிய : பூசைக்கும் சந்திக்கும், அமுதுபடிக்கும் [கூர] மங்கலத்து ஊரார்கள் இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி தெரிய வருகிறது. கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
இராஜ ஈதிராஜ சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் திருப்புகலார் அழக நாயனார் கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்து முடிவின்றி காணப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
இவ்வூர் கோயிலுக்கு நிலம் இரண்டரை இறையிலி செய்து குடுத்து முப்பத்து ஏழரை காசுகள் பெற்றுக்கொண்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டு இடையிடையேயும் இறுதியிலும் சிதைந்து காணப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
இவ்வூர் கோயிலுக்கு ஊரார் லர் அரை நிலம் இறையிலி செய்து கொடுத்து ஏழரை காசுகள் பெற்றுக் கொண்ட செய்தியும், மேற்கூறிய நிலத்திற்கு எல்லைகளும் காணப்படுகின்றன. 100. குமி கொண்டது 1 மா என்பதும் 2 குழி அல்லது 20 மா கொண்டிது 1 நிலம் என்பதும் இக்கல்வெட்டினால் தெரிய வருகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
இக்கல்வெட்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியைக் குறிப்பதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
அழகிய நாயனார் கோயிலுக்கு ஒரு மா நிலம் இறையிலியாக கொடுத்த செய்தியும் இராஜராஜ மங்கலத்தைச் சேர்ந்த இபங்குடையான் என்பவன் இக்கோயில் பண்டாரத்தில் (treasury) பதினைந்து காசுகள் கொடுத்து மூன்று சந்தி விளக்கெரிக்க ஏற்பாடு செய்த செய்தியும், ஓராண்டுக்கு இந்த மூன்று விளக்கினுக்கும் முக்குறுணி முந்நாழி உமக்காழாக்கு எண்ணை கொடுக்க வேண்டும் என்ற செய்தியும் தெரிய வருகிறது. அத்துடன் திருவம்பலநம்பி போன்றோர் திருமந்திர போகப்புறமாக ஒரு மாமுக்காணி அளவுள்ள நிலம்கொடுத்த செய்தியும் கூறப்படடுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. அழகிய தேவர்க்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்காக ஆறுமரக்காணி முத்திரிகைக் &ழனர் நிலம் ஏழு காசுகளைப்பெற்றுக் கொண்டு இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்தொன்றாம் ஆட்சியாண்டில் இவ்வூர் சபையார் உடையார் அழகிய தேவர் கோயிலுக்கு மத்தியான சந்திக்கும் சிவயோகிகளுக்கு இரண்டு சட்டி சோற்றுக்கும் சட்டிச் சோற்றுப்புறமாக மூன்று மா நிலம் இறையிலி செய்துகொடுத்த செய்து கூறப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் ஐந்து பேர்கள் இவ்வூர் கோயிலுக்கு இருமாவரை முத்திரிகை அளவுள்ள நிலத்தை இரண்டரைக் காசுகளுக்கு இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்து கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
குலோத்துங்க சோழன் காலத்தில் பனையூர் கிழவன் எடுத்த பாதம் கூத்தாடி ஆன கங்கைகொண்ட சோழப் பனையூரூடைய வேளாநும், பனையூர் கிழவன் வேளான் கணபுர தேவனும், பனையூர் Sipser வேளான் Sor HT HOOD பனயூர் கிழவன் கொண்டாந் எடுத்தபாதமும் ஆகிய லவர், இவ்வர் கோயிலுக்கு நிலம் விஎக்கு வாங்கி இறையிலி செய்துகொடுகத்த செய்தி கூறப்பட்டுள்ளது
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் உடையார் அழகிய தேவர் கோயிலுக்கு இவ்வூர் சபையார்கள் இறையிலியாக ஆறுமா நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்நிலம் ஆறுமாவையுங்கொண்டு இக்கோயிலுக்குக் கும்பிட வரும் சிவயோகுகளுக் தம், தபஸியருக்கும் ஐந்து சட்டி சோறு குடுக்கவேண்டும் என்றும், பெருவரி, Heal, எச்சோறு, கூற்றரி௪, வாசலில் போந்த குடிமை ஆகியவற்றிற்கு காசு ஆறினையுங்கொண்டு இறையிலி செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பனையூர்
இரண்டாம் ராஜாதிராஜனின் பத்தாம் ஆட்சியாண்டில் இவ்வூர் அழகிய நாயனார் கோயிலுக்கு திருவிளக்குப்புறமாக இறையிலி நிலம் கொடுத்த செய்கி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருபள்ளிமுக்கூடல்
மிகவும் சிதைந்த கல்வெட்டு. இறைவனுக்கு மானியமாக நிலம் அளித்த செய்தியைக் குறிப்பிடுவதாகக் காணப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>இஞ்சிக்குடி
ஆரம்பமும் முடிவும் இல்லாத சிதைந்த கல்வெட்டு, இவ்வூர் கோயிலுக்கு காணிக்கையாக இறையிலி நிலம் வழங்கிய செய்தியைக் குறிக்கிறது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளதால் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள இயலவில்லை
தஞ்சாவூர்>நன்னிலம்>இஞ்சிக்குடி
இக்கல்வெட்டு இரண்டாம் ராஜாதிராஜன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். சாத்தங்குடையாந் அரையந் குஞ்சர மல்லர் என்பவர் தனது நலனை முன்னிட்டு இறைவன் அழகிய நாயகற்கும், நாச்சியாற்கும் அழுது படைப்பதற்காக நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும், இறைவன் அழகிய தாயகரும், நாச்சியாரும் சாத்தங்குடையாந் நா[ந்]தி பருமர் என்பவரால் எழுந்தருளுவிக்கப் பட்டனர் என்ற செய்தியும் தெரிய வருகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>இஞ்சிக்குடி
Damaged and fragmentary. Seems to record a gift of tax- free land. சிதைந்த குல்வெட்டு. இறையிலி நிலமளித்ததைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>இஞ்சிக்குடி
இக்கல்வெட்டின் முதல் வரியும் இறுதி வரியும் சிதைந்து விட்டது. ஸ்ரீகைலாச மான ஸ்ரீ மருதாந்தக ஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலிலே கூட்டம் குறை வறக் கூடி இருந்து-அக்கோயில் இறைவனுக்கு சாஸ்வகமாக இறையிலி :நிலம் - வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இறுதியில் சிதைந்துள்ளதால் யார் கொடுத்தார்கள் என்று தெரிந்துகொள்ள இயலவில்லை, அவ்வூர் லஹா சபையோராக இருக்கலாம்.