நாகப்பட்டினம்குலோத்துங்க சோழன் காலத்தில் பனையூர் கிழவன் எடுத்த பாதம் கூத்தாடி ஆன கங்கைகொண்ட சோழப் பனையூரூடைய வேளாநும், பனையூர் கிழவன் வேளான் கணபுர தேவனும், பனையூர் Sipser வேளான் Sor HT HOOD பனயூர் கிழவன் கொண்டாந் எடுத்தபாதமும் ஆகிய லவர், இவ்வர் கோயிலுக்கு நிலம் விஎக்கு வாங்கி இறையிலி செய்துகொடுகத்த செய்தி கூறப்பட்டுள்ளது
நாகப்பட்டினம்முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் உடையார் அழகிய தேவர் கோயிலுக்கு இவ்வூர் சபையார்கள் இறையிலியாக ஆறுமா நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்நிலம் ஆறுமாவையுங்கொண்டு இக்கோயிலுக்குக் கும்பிட வரும் சிவயோகுகளுக் தம், தபஸியருக்கும் ஐந்து சட்டி சோறு குடுக்கவேண்டும் என்றும், பெருவரி, Heal, எச்சோறு, கூற்றரி௪, வாசலில் போந்த குடிமை ஆகியவற்றிற்கு காசு ஆறினையுங்கொண்டு இறையிலி செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்இரண்டாம் ராஜாதிராஜனின் பத்தாம் ஆட்சியாண்டில் இவ்வூர் அழகிய நாயனார் கோயிலுக்கு திருவிளக்குப்புறமாக இறையிலி நிலம் கொடுத்த செய்கி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்ஆரம்பமும் முடிவும் இல்லாத சிதைந்த கல்வெட்டு, இவ்வூர் கோயிலுக்கு காணிக்கையாக இறையிலி நிலம் வழங்கிய செய்தியைக் குறிக்கிறது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளதால் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள இயலவில்லை
திருவாரூர்இக்கல்வெட்டு இரண்டாம் ராஜாதிராஜன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். சாத்தங்குடையாந் அரையந் குஞ்சர மல்லர் என்பவர் தனது நலனை முன்னிட்டு இறைவன் அழகிய நாயகற்கும், நாச்சியாற்கும் அழுது படைப்பதற்காக நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தியும், இறைவன் அழகிய தாயகரும், நாச்சியாரும் சாத்தங்குடையாந் நா[ந்]தி பருமர் என்பவரால் எழுந்தருளுவிக்கப் பட்டனர் என்ற செய்தியும் தெரிய வருகிறது.
திருவாரூர்இக்கல்வெட்டின் முதல் வரியும் இறுதி வரியும் சிதைந்து விட்டது. ஸ்ரீகைலாச மான ஸ்ரீ மருதாந்தக ஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலிலே கூட்டம் குறை வறக் கூடி இருந்து-அக்கோயில் இறைவனுக்கு சாஸ்வகமாக இறையிலி :நிலம் - வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இறுதியில் சிதைந்துள்ளதால் யார் கொடுத்தார்கள் என்று தெரிந்துகொள்ள இயலவில்லை, அவ்வூர் லஹா சபையோராக இருக்கலாம்.
திருவாரூர்குலோத்துங்க சோழனின் நாற்பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் கோளமாதேவி சதுர்வேதி மங்கலத்திலுள்ள ஸ்ரீமதுராந்தகாஸ்வரமுடைய மாதேவர் கோயிலுக்கு, சந்தி விளக்கு, கிருமெய்ப்பூச்சு ஆகியவற்றிற்கு நெல்லும் இறையிலியாக நிலமும், கொடுத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்இத்துண்டுக் கல்வெட்டில் மஹாசபை அங்கத்தினர்கள் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. சேனாதிபதி இராஜராஜ பிரம்மராயனும் குறிப்பிடப்படுகிருன். எனவே : இக்கல்வெட்டு [மூன்றாம்] இராஜராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதைத் தவிர வேறு செய்தியும் தெரிந்துகொள்ள இயலவில்லை.
திருவாரூர்மூன்றும் குலோத்துங்க சோழ தேவரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. வேசாணால்யார். என்பவர் மனைகுழி இருபத்தொன்று விலைக்கு வாங்கியது, திருப்பாம்புரமுடையார் கோயில் இறையிலி மனைக்குழி ஆகையால் அம்மனைக்குப் பதிலாக வேறு இடத்தில் திருவீதியின் நடுவில் இருபத்தோறு குழி இறையிலியாக கொடுக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை.
திருவாரூர்மூன்றாம் இராஜராஜ சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில், பழுவேட்டரையர் என்பவர், திருப்பாம்புரமுடையாருக்கு நித்தம் அரிசிலாற்றிலிருந்து இருமஞ்சனம் எடுத்து வருகிற கலத்துக்கும், ஐம்பத்திரண்டு செங்கழுனித் திருப்பள்ளித் தாமங்களுக்கும், தன்னுடைய காணியான நிலத்திலிருந்தும் குளத்திலிருந்தும் இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது அரிசிலாந்றிலிருந்து திருமஞ்சனம் எடுத்து வருிறவனுக்கும், செங் கழுனி இடவும் நிலம் கொடுக்கப்பட்டன. பெருளூரைச் சேர்ந்த ஒருவர் திருக்காமக்கோட்டமுடைய மாமலையாட்டியார்க்கு வேண்டும் அமுதுபடிக்காக நிலம் கொடுத்த செய்தியும் தெரிய வருகிறது, கல்வெட்டு முற்றுப் பெறாது இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர்இராஜராஜ சோழனின் இருபத்தெட்டாம் ஆட்யொண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில், தாமோதரனான சோழிய தரைய வேளான் என்பவன், இரப்பாம்புரமுடையார் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் ஆத்தான மண்டபம் ஒன்று கட்டிய செய்தி கூறப்படுகிறது. அத்துடன் பாம்புரமான குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலத்து மஹா சபையோர், மேற்கூறிய ஆத்தான மண்டபத்தை பழுதுபார்த்து சீர்படுத்துவதற்கு அந்தராயம் இறையிலி செய்து திருமண்டபப் புறமாக நிலம் கொடுத்த செய்தியும் கூறப்படுகிறது. கல்வெட்டின் கடைப் பகுதி காணப்பட வில்லை.
திருவாரூர்இராஜ இராஜ சோழனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. வாருணவா தீசுரமுடையானான கோசலராயர் என்பவர், திருப்பாம்புர முடையார் கோயில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும் அமுது படைப்பதற்கு வேண்டும் பால், நெய் முதலியவற்றிற்காகவும், பசுக்கள் பத்தும் கன்றுகள் மூன்றும் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இவர் திருப்பாம்புரமுடையார் கோயில் வாசலுக்கு உள்புறத்தில் பசு-கன்றுகளைக் கட்டுவதற்கு ஒரு கொட்டிலும் கட்டி அவை மேய்ப்பதற்கு ஒரு ஆளும் நியமித்து, அவனுக்கு இனம் குறுணி நெல் கூலியாக கொடுப்பதற்கு நிலம் கொடுத்த செய்தியும் கூறப்படுகிறது. இக்கல்வெட்டின் 5-ம் வரியில் இருநாழி அரிசச்சோறு. . எனக் கூறப்படுகிறது. அவ் வரிக்குப் பின்னுள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லாததால் அதுபற்றிய விவரம் அறிந்து கொள்ள இயலவில்லை.
திருவாரூர்மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்தைந்தாம் ஆட்யொண்டைச் சேர்ந் த்து இக்கல்வெட்டு. திருப்பாம்புரமுடையார் கோயில் தேவரடியார் பெண்களில் உடையளான நாற்பதீதெண்ணாயீர மாணிக்கம் என்பவள் எழுந்தருளுவித்த பெரியதேவற்கும். நாச்யொ௱ற்கும் பாம்புரமான குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்து மகாசபையோர், ஊர்க்கணக்கு உட்பட பன்னிருவரும், ஆயிரத்து எழு நூற்று. ஓம்பது காசு கைக்கொண்டு, . மும்மாவரை நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
திருவாரூர்அருள்மொழி பிரம்மராயர் என்பவர் குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரை வேண்டிக்கொண்டதற்ணெங்க, அச்சபையினர் ஊர்உழ் இறையின். யாக நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அன்றியும், கோயில் வழிபாட்டுச் செலவிற்காக காசு இரண்டாயிரமும் பிற செலவுகளுக்காக அதாவது காவிரியினிலிருத்து நீர் கொண்டு வரும் ஆளுக்கு கூலி கொடுத்தல் போன்ற செலவுகளுக்காகக்க காசு ஆயிரமுமாக மொத்தம் 3100 காசுகள் கொடுத்த செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது
திருவாரூர்இக்கல்வெட்டு. இக்கோயிலில் ஒரு இறைவனின் திருவுருவத்தை எழுந்தருளுவிப்பது பற்றி கூறப்படுகிறது. மேலும், கோடணீசுரமுடையார்க்கு பூஜைக்கும் திருப்பள் ஸித்தாமத்திற்கு அல்லது திருப்பள்ளி எழுச்சிக்கும் தானம் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனத்தெரிகிறது. விவரம் அறிந்து கொள்ள இயலாதவாறு, கல்வெட்டு சிதைந்து இறுதிப் பகுதி காணப்படவில்லை. முன்னூற்றுவப்பிரியன் என்பவன் அப்போது கோயிலில் எழுந்தருளியிருந்ததாக கூறப்படுகிறது. முன்னூற்றுவப்பிரியன் என்பவன். இவ்வூர் கல்வெட்டு எண் 4, 6-ல் ஊர்க் கணக்கு. எனக்கூறப்படுகிறான். இவனும் அவனும் ஒருவனாகத்தான் இருத்தல் வேண்டும். மேலும் அக்கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சார்ந் தது. எனவே இக்கல்வெட்டும் அதே மன்னனின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த. தாகவே இருத்தல் வேண்டும்.
திருவாரூர்மூன்றாம் குலோத்துங்க சோழனின் மூன்றாவது ஆட்சியாண்டில் இவ்வூர் மகா சபையோர், திருகோத்திட்டை நாயனார் கோயிலில் இருந்து 100 காசுகள் பெற்றுக் கொண்டு, அதற்கு பொலியூட்டாக [வட்டியாக] எட்டுமா நிலத்தினை இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.