Records a sale of land and tank made tax-free in lieu of 30 Kalanju of Pon ஆர the Mahasabha of Ambar, a devadana - brahmadeya in Ambar nadu.அம்பர் நாட்டு பிரம்மதேய தேவதானமான ஆம்பூர் மகா சபையார் 30 கழஞ்சுப் பொன்னுக்கு நிலத்தையும் குளத்தையும் இறையிலியாக விற்றதைக் குறிக்கிறது.
குலோத்துங்க சோழனின் நாற்பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் கோளமாதேவி சதுர்வேதி மங்கலத்திலுள்ள ஸ்ரீமதுராந்தகாஸ்வரமுடைய மாதேவர் கோயிலுக்கு, சந்தி விளக்கு, கிருமெய்ப்பூச்சு ஆகியவற்றிற்கு நெல்லும் இறையிலியாக நிலமும், கொடுத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
இத்துண்டுக் கல்வெட்டில் மஹாசபை அங்கத்தினர்கள் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. சேனாதிபதி இராஜராஜ பிரம்மராயனும் குறிப்பிடப்படுகிருன். எனவே : இக்கல்வெட்டு [மூன்றாம்] இராஜராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதைத் தவிர வேறு செய்தியும் தெரிந்துகொள்ள இயலவில்லை.
மூன்றும் குலோத்துங்க சோழ தேவரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டைச் சேர்ந் தது இக்கல்வெட்டு. வேசாணால்யார். என்பவர் மனைகுழி இருபத்தொன்று விலைக்கு வாங்கியது, திருப்பாம்புரமுடையார் கோயில் இறையிலி மனைக்குழி ஆகையால் அம்மனைக்குப் பதிலாக வேறு இடத்தில் திருவீதியின் நடுவில் இருபத்தோறு குழி இறையிலியாக கொடுக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட் டின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை.
மூன்றாம் இராஜராஜ சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில், பழுவேட்டரையர் என்பவர், திருப்பாம்புரமுடையாருக்கு நித்தம் அரிசிலாற்றிலிருந்து இருமஞ்சனம் எடுத்து வருகிற கலத்துக்கும், ஐம்பத்திரண்டு செங்கழுனித் திருப்பள்ளித் தாமங்களுக்கும், தன்னுடைய காணியான நிலத்திலிருந்தும் குளத்திலிருந்தும் இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது அரிசிலாந்றிலிருந்து திருமஞ்சனம் எடுத்து வருிறவனுக்கும், செங் கழுனி இடவும் நிலம் கொடுக்கப்பட்டன. பெருளூரைச் சேர்ந்த ஒருவர் திருக்காமக்கோட்டமுடைய மாமலையாட்டியார்க்கு வேண்டும் அமுதுபடிக்காக நிலம் கொடுத்த செய்தியும் தெரிய வருகிறது, கல்வெட்டு முற்றுப் பெறாது இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இராஜராஜ சோழனின் இருபத்தெட்டாம் ஆட்யொண்டைச் சேர்ந்த இக்கல்வெட் டில், தாமோதரனான சோழிய தரைய வேளான் என்பவன், இரப்பாம்புரமுடையார் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் ஆத்தான மண்டபம் ஒன்று கட்டிய செய்தி கூறப்படுகிறது. அத்துடன் பாம்புரமான குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலத்து மஹா சபையோர், மேற்கூறிய ஆத்தான மண்டபத்தை பழுதுபார்த்து சீர்படுத்துவதற்கு அந்தராயம் இறையிலி செய்து திருமண்டபப் புறமாக நிலம் கொடுத்த செய்தியும் கூறப்படுகிறது. கல்வெட்டின் கடைப் பகுதி காணப்பட வில்லை.
இராஜ இராஜ சோழனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. வாருணவா தீசுரமுடையானான கோசலராயர் என்பவர், திருப்பாம்புர முடையார் கோயில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும் அமுது படைப்பதற்கு வேண்டும் பால், நெய் முதலியவற்றிற்காகவும், பசுக்கள் பத்தும் கன்றுகள் மூன்றும் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இவர் திருப்பாம்புரமுடையார் கோயில் வாசலுக்கு உள்புறத்தில் பசு-கன்றுகளைக் கட்டுவதற்கு ஒரு கொட்டிலும் கட்டி அவை மேய்ப்பதற்கு ஒரு ஆளும் நியமித்து, அவனுக்கு இனம் குறுணி நெல் கூலியாக கொடுப்பதற்கு நிலம் கொடுத்த செய்தியும் கூறப்படுகிறது. இக்கல்வெட்டின் 5-ம் வரியில் இருநாழி அரிசச்சோறு. . எனக் கூறப்படுகிறது. அவ் வரிக்குப் பின்னுள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லாததால் அதுபற்றிய விவரம் அறிந்து கொள்ள இயலவில்லை.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்தைந்தாம் ஆட்யொண்டைச் சேர்ந் த்து இக்கல்வெட்டு. திருப்பாம்புரமுடையார் கோயில் தேவரடியார் பெண்களில் உடையளான நாற்பதீதெண்ணாயீர மாணிக்கம் என்பவள் எழுந்தருளுவித்த பெரியதேவற்கும். நாச்யொ௱ற்கும் பாம்புரமான குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்து மகாசபையோர், ஊர்க்கணக்கு உட்பட பன்னிருவரும், ஆயிரத்து எழு நூற்று. ஓம்பது காசு கைக்கொண்டு, . மும்மாவரை நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
அருள்மொழி பிரம்மராயர் என்பவர் குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரை வேண்டிக்கொண்டதற்ணெங்க, அச்சபையினர் ஊர்உழ் இறையின். யாக நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அன்றியும், கோயில் வழிபாட்டுச் செலவிற்காக காசு இரண்டாயிரமும் பிற செலவுகளுக்காக அதாவது காவிரியினிலிருத்து நீர் கொண்டு வரும் ஆளுக்கு கூலி கொடுத்தல் போன்ற செலவுகளுக்காகக்க காசு ஆயிரமுமாக மொத்தம் 3100 காசுகள் கொடுத்த செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது
இக்கல்வெட்டு. இக்கோயிலில் ஒரு இறைவனின் திருவுருவத்தை எழுந்தருளுவிப்பது பற்றி கூறப்படுகிறது. மேலும், கோடணீசுரமுடையார்க்கு பூஜைக்கும் திருப்பள் ஸித்தாமத்திற்கு அல்லது திருப்பள்ளி எழுச்சிக்கும் தானம் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனத்தெரிகிறது. விவரம் அறிந்து கொள்ள இயலாதவாறு, கல்வெட்டு சிதைந்து இறுதிப் பகுதி காணப்படவில்லை. முன்னூற்றுவப்பிரியன் என்பவன் அப்போது கோயிலில் எழுந்தருளியிருந்ததாக கூறப்படுகிறது. முன்னூற்றுவப்பிரியன் என்பவன். இவ்வூர் கல்வெட்டு எண் 4, 6-ல் ஊர்க் கணக்கு. எனக்கூறப்படுகிறான். இவனும் அவனும் ஒருவனாகத்தான் இருத்தல்வேண்டும். மேலும் அக்கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சார்ந் தது. எனவே இக்கல்வெட்டும் அதே மன்னனின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த. தாகவே இருத்தல் வேண்டும்.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில் இக்கோயிலில் காணியுடைய சிவபிராமணர்களில் ஆத்ரையன் இருள் நீக்கி ஆலால சுந்தரபட்டன். காஸ்யபன் காடுடையான் புற்றிடங் கொண்டான் ஆகிய இருவரும், இறைவனுக்கு. அமுதுபடிக்காக கொடுக்கப்பட்ட நெல் நாற்பது கலத்தினையும், இரண்டு சந்தி விளக்கு எரிப்பதற்கு கொடுக்கப்பட்ட காசு இருபதனையும் விளக்கு ஒன்றுக்கு சந்தி இருபதனையும் பெற்றுக்கொண்டு, பெற்றுக்கொண்ட அம்முதலுக்கு [நெல்லும் காசம்] வட்டி செலுத்துவதாக சம்மதித்த செய்து கூறப்பட்டுள்ளது
மெய்க்கீர்த்தியிடன் தொடங்கும் இக்கல்வெட்டு, இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்தது. அவனது பத்தாவது ஆட்சியாண்டில், இரண்டு ஊர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலமென்னும் பெயரால் அழைக்கப்பட்டதென்றும், திருக்கோத்துட்டை மஹாதேவர்க்கு வேண்டும் நித்த நிமந்தங்களுக்கு தேதேவதான இறையிலியாக நிலம் வழங்கப்பட்ட செய்தியும், சாந்திக் கூத்தாடுகிற இராமன் திருச்சிற்றம்பலமுஷையான் என்ற விக்கிரமசோழ வாசஸ்யன் என்பவனுக்கு நிலம் கொடுத்த செய்தியும் தெரியவருகிறது.
விக்கிரம சேர்ழனின் மூன்றாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு, வளவன் மழையூரூடையான் அரையன் வீர சோழன் என்பவனும், அரையன் உய்யவந் தான் என்பவனும், உலகாண்டாநஈநபரகேசரி விழுப்பரையனும் ஆகிய மூவரும் இருவிண்சாருடையார் கோயிலுக்கு நிலம் இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்நிலம் திருமடைப்பள்ளிப் புறமாகவும், திருவிளக்குப் புறமாகவும் விற்றுக் கொடுக்கப்பட்டது, மேலும் பிள்ளையார் விக்னேசுவர தேவருக்கு திருவிழாப் பூறமாசு சில நிலங்கள் விற்கப்பட்டதென்றும், அப்பிள்ளை யார் இவர்களுடைய பாட்டீனாரால் எழுத்தருளுவிக்கப்பட்டதென்றும் தெரிய வருகிறது.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்து சபையார்க்கு தலைமாராக நிலம் விட்டது பற்றிக் கூறப்படுகிறது. அவ்வூரிலுள்ள தரமிலி நிலத்தில், பயிர் செய்யக்கூடிய நிலத்தில் பயிர் செய்துகொண்டு, முன்னர் இறையிலியளித்தபடியே இறையிறுக் கும்படி ஆணையிட்டதாகத் தெரிய வருகிறது. இருமத்திரவோலையின் பெயரும் மற்ற அதிகாரிகளின் பெயரையும் குறிக்கிறது இக்கல்வெட்டு. கல்வெட்டின் ஒவ் வொரு வரியின் கடைப் பகுதிகளும் கட்டிடம் பகுதிக்குள் மறைந்திருக்க வேண்டும்.
விக்கிரமசோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு; இருவிண்சாருடைய மகாதேவர்க்கும், அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் வராகதேவர்க்கும் இறையிலியாக உள்ள நிலத்தின் அளவு பற்றிக் குறிக்கப்படுகிறது.
இக்கல்வெட்டின் ஆரம்பம் கிடைக்கவில்லை. எண்கண்ணிலுள்ள திருவிண்சாருடைய மஹாதேவர் கோயிலுக்கு மூன்று பேர்கள் இருமடைப் பள்ளிப்புறமாக ஐம்பத்தெட்டு காசுகள் பெற்றுக்கொண்டு, நிலம் விற்று, இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்து காணப்படுகிறது. :