திருவாரூர்மூன்றாம் குலோத்துங்க சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில் இக்கோயிலில் காணியுடைய சிவபிராமணர்களில் ஆத்ரையன் இருள் நீக்கி ஆலால சுந்தரபட்டன். காஸ்யபன் காடுடையான் புற்றிடங் கொண்டான் ஆகிய இருவரும், இறைவனுக்கு. அமுதுபடிக்காக கொடுக்கப்பட்ட நெல் நாற்பது கலத்தினையும், இரண்டு சந்தி விளக்கு எரிப்பதற்கு கொடுக்கப்பட்ட காசு இருபதனையும் விளக்கு ஒன்றுக்கு சந்தி இருபதனையும் பெற்றுக்கொண்டு, பெற்றுக்கொண்ட அம்முதலுக்கு [நெல்லும் காசம்] வட்டி செலுத்துவதாக சம்மதித்த செய்து கூறப்பட்டுள்ளது
திருவாரூர்மெய்க்கீர்த்தியிடன் தொடங்கும் இக்கல்வெட்டு, இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்தது. அவனது பத்தாவது ஆட்சியாண்டில், இரண்டு ஊர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலமென்னும் பெயரால் அழைக்கப்பட்டதென்றும், திருக்கோத்துட்டை மஹாதேவர்க்கு வேண்டும் நித்த நிமந்தங்களுக்கு தேதேவதான இறையிலியாக நிலம் வழங்கப்பட்ட செய்தியும், சாந்திக் கூத்தாடுகிற இராமன் திருச்சிற்றம்பலமுஷையான் என்ற விக்கிரமசோழ வாசஸ்யன் என்பவனுக்கு நிலம் கொடுத்த செய்தியும் தெரியவருகிறது.
திருவாரூர்விக்கிரமசோழனின் மூன்றாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு, வளவன் மழையூரூடையான் அரையன் வீர சோழன் என்பவனும், அரையன் உய்யவந்தான் என்பவனும், உலகாண்டாநஈநபரகேசரி விழுப்பரையனும் ஆகிய மூவரும் இருவிண்சாருடையார் கோயிலுக்கு நிலம் இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்நிலம் திருமடைப்பள்ளிப் புறமாகவும், திருவிளக்குப் புறமாகவும் விற்றுக் கொடுக்கப்பட்டது, மேலும் பிள்ளையார் விக்னேசுவர தேவருக்கு திருவிழாப் பூறமாசு சில நிலங்கள் விற்கப்பட்டதென்றும், அப்பிள்ளை யார் இவர்களுடைய பாட்டீனாரால் எழுத்தருளுவிக்கப்பட்டதென்றும் தெரிய வருகிறது.
திருவாரூர்மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்து சபையார்க்கு தலைமாராக நிலம் விட்டது பற்றிக் கூறப்படுகிறது. அவ்வூரிலுள்ள தரமிலி நிலத்தில், பயிர் செய்யக்கூடிய நிலத்தில் பயிர் செய்துகொண்டு, முன்னர் இறையிலியளித்தபடியே இறையிறுக் கும்படி ஆணையிட்டதாகத் தெரிய வருகிறது. இருமத்திரவோலையின் பெயரும் மற்ற அதிகாரிகளின் பெயரையும் குறிக்கிறது இக்கல்வெட்டு. கல்வெட்டின் ஒவ் வொரு வரியின் கடைப் பகுதிகளும் கட்டிடம் பகுதிக்குள் மறைந்திருக்க வேண்டும்.
திருவாரூர்விக்கிரமசோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு; இருவிண்சாருடைய மகாதேவர்க்கும், அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் வராகதேவர்க்கும் இறையிலியாக உள்ள நிலத்தின் அளவு பற்றிக் குறிக்கப்படுகிறது.
திருவாரூர்இக்கல்வெட்டில் ஆரம்பமும், முடிவும் இல்லை, திருவிண்சாருடையார் கோயிலுக்கு மூன்று பேர் சேர்ந்து Sad விற்று, இறையிலி செய்துகொடுத்த செய்தி கூறப்படுகிறது
திருவாரூர்இக்கல்வெட்டின் ஆரம்பம் கிடைக்கவில்லை. எண்கண்ணிலுள்ள திருவிண்சாருடைய மஹாதேவர் கோயிலுக்கு மூன்று பேர்கள் இருமடைப் பள்ளிப்புறமாக ஐம்பத்தெட்டு காசுகள் பெற்றுக்கொண்டு, நிலம் விற்று, இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்து காணப்படுகிறது. :
நாகப்பட்டினம்முதலாம் இராஜேந்திர சோழனின் மூன்றாம் ஆட்யொண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு, ஈர்க்காடு என்னும் பெருமூர் என்ற ஊரைச் சேர்ந்த தாயன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவன் இக்கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது, இந்நிலம் அவனது காணியராயப் பெருமூரில் இருத்தது எனத் தெரிய வருகிறது. எவ்வளவு நிலம் என்ன காரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு கல்வெட்டின் பிற்பகுதி காணப்படவில்லை, எனவே இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி இக்கல்வெட்டு கூறும் இறையிலி நிலம், ஆண்டறிக்கை 57 of 1913-ல் [கல்வெட்டு எண் 15] கூறப்படும் சித்திரைத் இருவாதிரை திருவிழாவிற்காக கொடுக்கப்பட்ட தாகத் தெரியவருகிறது.
நாகப்பட்டினம்முதல் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டு அவனது பத்தொன்பதாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இருச்செங்காட்டாங் குடியிலுள்ள இறைவன் சீராள தேவருக்காக கொண்டாடப்படும் இத்திரைத் இருவாதிரைத் திருநாளன்று, திருவிழாவை சேவிக்க வருகின்ற அடியார்களுக்கு சிறுத்தொண்ட நம்பி மாளிகையில் ஆஹாரமிட, மருகல் நாட்டுக் கரையுடையசன் தாயன் கிருஷ்ணன் என்பவன் இறையிலியாக நிலம் அளித்த செய்தி கூறப்பட்டிருக்கிறது. தாயன் கிருஷ்ணன் என்பவனும், இன்னும் சிலரும், ஊராரும் இறையிறுக்கும்படி இறையிலி செய்து கொடுத்தாக கூறப்படுகிறது
நாகப்பட்டினம்இக்கல்வெட்டு முதலாம் இராஜராஜ சோழனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. மருகலுடையான் தாரழிகுணநிலை என்பவனும், மருகலுடையான் பூவந் நக்கன் என்பவனும், உத்திராபதீஸ்வரர் கோயிலில் நடக்கும் சிறுத் தொண்டநம்பி திருவிழா செலவிற்காக இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி தெரிய வருகிறது. சறுத்தொண்டநம்பி என்பவர், இறைவன் சீராள தேவர்க்கு வழிபாட்டுப் பணி செய்து வந்தார் என்ற செய்தியும், பின்னர் அவர் பெயரில் திருவிழா நடத்தப்பட்டது என்ற செய்தியும் தெரிய வருகிறது. இம்மன்னனின் பதினேழாவது ஆட்சியாண்டிலும் நிலம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டிருக்கிறது. மெய்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, முப்பதாவது வரிக்கு மேல் வரிகளின் இரு ஓரங்களும் சிதைந்து காணப்படுகின்றன, முடிவில் ஓரிரு வரிகள் காணப்படவில்லை
நாகப்பட்டினம்மூன்றாம் இராஜராஜ சோழனின் ஏழாவது ஆட்சியாண்டில் மருங்கூர் ஊரார் நிலம் வாங்கி உத்தராபதி நாயனார்க்கும் சிறுத்தொண்ட தேவர்க்கும் இறையிலியாக ச€ீமாகேஸ்வர கண்காணி செய்வார், சீகாரியஞ்செய்வார், தேவர்கந்மி; கோயில் கணக்கன், ஆகியோரிடம் நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டிருக் Hang. கல்வெட்டின் இறுதிப் பகுதி சிதைந்து காணப்படுகிறது.
நாகப்பட்டினம்குலோத்துங்க சோழனின் 17-ஆவது ஆட்சியாண்டைச் சார்ந்த தாகவும், திரு சுவாமிகண்ணுப்பிள்ளை 82-ஆவது ஆட்சியாண்டைச் சார்ந்ததாகவும் கூறுகின்றனர். எனவே அவ்வறிக்கையினையும் கீழே தருகின்றோம்
நாகப்பட்டினம்மூன்றாம் குலோத்துங்கச் சோழ தேவரின் பதினெட்டாம் ஆட்சியாண்டில், இருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டதேவர் திருமாளிகையில் எழுந்தருளியிருக்கும் சீராளப்பிள்ளையார்க்கு வேண்டும் அர்ச்சனை செலவுக்கு மருகல் நாட்டைச் சேர்ந்த இனூந்தாமணி சருப்பேதி மங்கலத்திலுள்ள நிலங்களில் இக்கலுடையான் என்பவனின் காணியாருய நிலம் தவிர, பிற நிலங்கஷினால் வரும் அந்த சாயம், பாட்டீம் முதலியவை இறையிலியாக சுங்கம் தவிர்த்தருளின குலோத்துங்கச் சோழ தேவரின் பதினொன்றாம் ஆட்சியாண்டில் கொடுக்கப் பட்டதை மீண்டும் உறுதுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கல்வெட்டு, நிலவருவாய்த்துறை அதிகாரிகள் பதினேழுபேர் கையெழுத்திட்டுள்ள செய்தியும் தெரிய வருகிறது. மன்னனின் பெயர் காணப்படாத இக்கல்வெட்டு, முதல் கல்வெட்டின் தொடர்புடையதாக காணப்படுவதால் இதுவும் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தது என்பது உறுதி
நாகப்பட்டினம்இக்கல்வெட்டின் முதல் மூன்று வரிகள், கல்வெட்டு எண் இரண்டில் கூறப்பட்ட தீனசிந்தாமணி சதுர்வேதி மங்கலத்தில் ௪க்கலுடையான் காணி நிலம் தவிர மீதி நிலங்களின் அந்தராயம், பாட்டம் முதலியன அற்சனு போக இறையிலியாக அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றன, இச்சம்பவம் வெளிச்சேரியைச் சேர்ந்த சுவண்ணன் சுவாமி குமாரனான சவண்ணசக்கரவர்த்திகளும், திருச் செங்காட்டங்குடியைச் சேர்ந்த பிராம்மணி அல்லியங்கோதை என்ற அம்மையாரும், ஆண்டார் விளங்குடையார் சிறுத்தொண்டரும் விண்ணப்பம் (வேண்டு கோள்) செய்ததின் பேரில் நடந்தது என்பதைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. பிராம்மணி அல்லியங்கோதை என்ற பெண்மணி முதல் கல்வெட்டில் நிலம் அளித்த செய்தி நாமறிந்ததே. எனவே இம்மூன்று கல்வெட்டுக்களும் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக காணப்படுகின்றன.
நாகப்பட்டினம்உத்தமசோழனின் பதினொன்றாவது ஆட்சியாண்டில்: திருமருகல் நட்டு: மருகல் சபையோர் திருச்செங்காட்டங்குடி பரமேஸ்வரருக்கு இறைவனுக்கு), நொந்தா விளக்கிற்காக கோயிலிலிருந்து பொன் பெற்றுக்கொண்டு அஞ்சேயறு மாநிலம் விற்று இறையிலி செய்து கொடுத்த செய்த கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்உத்தமசோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் திருமருகல் நாட்டு மருகல் சபையோர் கோயிலிலிருந்து பொன் பெற்றுக் கொண்டு அஞ்சேயறு மாநிலம் இறையிலியாக விற்றுக் குடுத்த செய்தியும், அதே சபையோர் கோதுகுலவன் வீர சோழன் என்ற உத்தமசோழ நென்மலிநாட்டு மூவேந்த வேளான் என்பவனிடம் :பொன் பெற்றுக் கொண்டு இறையிலியாக நிலம் விற்றுக் குடுத்த செய்தியும் தெரிய வருகிறது. இரண்டு நிலங்களுக்கும் எல்லைகள் கூறப்பட்டிருக்கின்றன. இது தவிர நுந்தா விளக்கு இரண்டிற்கும் சபையோரால் நிலம் விற்றுக் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இடையில் சில வரிகள் இதைந்தள்ள தால் இது பற்றிய விவரம் அறிந்து கொள்ள இயலவில்லை