Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
முதலாம் இராஜேந்திர சோழனின் மூன்றாம் ஆட்யொண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு, ஈர்க்காடு என்னும் பெருமூர் என்ற ஊரைச் சேர்ந்த தாயன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவன் இக்கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது, இந்நிலம் அவனது காணியராயப் பெருமூரில் இருத்தது எனத் தெரிய வருகிறது. எவ்வளவு நிலம் என்ன காரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு கல்வெட்டின் பிற்பகுதி காணப்படவில்லை, எனவே இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி இக்கல்வெட்டு கூறும் இறையிலி நிலம், ஆண்டறிக்கை 57 of 1913-ல் [கல்வெட்டு எண் 15] கூறப்படும் சித்திரைத் இருவாதிரை திருவிழாவிற்காக கொடுக்கப்பட்ட தாகத் தெரியவருகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
முதல் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டு அவனது பத்தொன்பதாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இருச்செங்காட்டாங் குடியிலுள்ள இறைவன் சீராள தேவருக்காக கொண்டாடப்படும் இத்திரைத் இருவாதிரைத் திருநாளன்று, திருவிழாவை சேவிக்க வருகின்ற அடியார்களுக்கு சிறுத்தொண்ட நம்பி மாளிகையில் ஆஹாரமிட, மருகல் நாட்டுக் கரையுடையசன் தாயன் கிருஷ்ணன் என்பவன் இறையிலியாக நிலம் அளித்த செய்தி கூறப்பட்டிருக்கிறது. தாயன் கிருஷ்ணன் என்பவனும், இன்னும் சிலரும், ஊராரும் இறையிறுக்கும்படி இறையிலி செய்து கொடுத்தாக கூறப்படுகிறது
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
இக்கல்வெட்டு முதலாம் இராஜராஜ சோழனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. மருகலுடையான் தாரழிகுணநிலை என்பவனும், மருகலுடையான் பூவந் நக்கன் என்பவனும், உத்திராபதீஸ்வரர் கோயிலில் நடக்கும் சிறுத் தொண்டநம்பி திருவிழா செலவிற்காக இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி தெரிய வருகிறது. சறுத்தொண்டநம்பி என்பவர், இறைவன் சீராள தேவர்க்கு வழிபாட்டுப் பணி செய்து வந்தார் என்ற செய்தியும், பின்னர் அவர் பெயரில் திருவிழா நடத்தப்பட்டது என்ற செய்தியும் தெரிய வருகிறது. இம்மன்னனின் பதினேழாவது ஆட்சியாண்டிலும் நிலம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டிருக்கிறது. மெய்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, முப்பதாவது வரிக்கு மேல் வரிகளின் இரு ஓரங்களும் சிதைந்து காணப்படுகின்றன, முடிவில் ஓரிரு வரிகள் காணப்படவில்லை
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
துண்டுக் கல்வெட்டுகள், முழுமையான செய்தி தெரியவில்லை. இறைவனுக்கு நிலமும் அமுதுபடிக்கு தெல்லும் கொடுக்கப்பட்டது பற்றிக் குறிக்கிறது. -
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
மூன்றாம் இராஜராஜ சோழனின் ஏழாவது ஆட்சியாண்டில் மருங்கூர் ஊரார் நிலம் வாங்கி உத்தராபதி நாயனார்க்கும் சிறுத்தொண்ட தேவர்க்கும் இறையிலியாக ச€ீமாகேஸ்வர கண்காணி செய்வார், சீகாரியஞ்செய்வார், தேவர்கந்மி; கோயில் கணக்கன், ஆகியோரிடம் நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டிருக் Hang. கல்வெட்டின் இறுதிப் பகுதி சிதைந்து காணப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்து ஐந்தாவது ஆட்சியாண்டில் Boas செங்காட்டங்குடி ஊரார். உத்தராபதஸ்வரர் கோயிலில் உள்ள கணபதீஸ்வரம் உடையார்க்கும், உத்தராபதி நாயகர்க்கும், அர்த்தசாமக்கால பூசைக்கு செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம் மாலையாக்கி சாத்தவும், செங்கழுநீர் படர்த்த நீர்நிலையும், நீர்பாய்க் குளமும், கரையும் ஆக்கவும், திருப்பள்ளித்தாம நந்தவனம் அமைக்கவும், இக்கோயில் சணகேஸ்வரகண்காணிகளுக்கும் (மேற்பார்வையாளர் கள்), ஸ்ரீகாரியஞ்செய்வார்களுக்கும் (நிர்வாகத்தார்), கோயில் கணக்கனுக்கும் இறையிலியாக நிலம் ஒன்றே ஒருமா அளித்ததாகக் கூறப்படுகின்றது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
மூன்றாம் குலோத்துங்கச் சோழ தேவரின் பதினெட்டாம் ஆட்சியாண்டில், இருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டதேவர் திருமாளிகையில் எழுந்தருளியிருக்கும் சீராளப்பிள்ளையார்க்கு வேண்டும் அர்ச்சனை செலவுக்கு மருகல் நாட்டைச் சேர்ந்த இனூந்தாமணி சருப்பேதி மங்கலத்திலுள்ள நிலங்களில் இக்கலுடையான் என்பவனின் காணியாருய நிலம் தவிர, பிற நிலங்கஷினால் வரும் அந்த சாயம், பாட்டீம் முதலியவை இறையிலியாக சுங்கம் தவிர்த்தருளின குலோத்துங்கச் சோழ தேவரின் பதினொன்றாம் ஆட்சியாண்டில் கொடுக்கப் பட்டதை மீண்டும் உறுதுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கல்வெட்டு, நிலவருவாய்த்துறை அதிகாரிகள் பதினேழுபேர் கையெழுத்திட்டுள்ள செய்தியும் தெரிய வருகிறது. மன்னனின் பெயர் காணப்படாத இக்கல்வெட்டு, முதல் கல்வெட்டின் தொடர்புடையதாக காணப்படுவதால் இதுவும் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தது என்பது உறுதி
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
இக்கல்வெட்டின் முதல் மூன்று வரிகள், கல்வெட்டு எண் இரண்டில் கூறப்பட்ட தீனசிந்தாமணி சதுர்வேதி மங்கலத்தில் ௪க்கலுடையான் காணி நிலம் தவிர மீதி நிலங்களின் அந்தராயம், பாட்டம் முதலியன அற்சனு போக இறையிலியாக அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றன, இச்சம்பவம் வெளிச்சேரியைச் சேர்ந்த சுவண்ணன் சுவாமி குமாரனான சவண்ணசக்கரவர்த்திகளும், திருச் செங்காட்டங்குடியைச் சேர்ந்த பிராம்மணி அல்லியங்கோதை என்ற அம்மையாரும், ஆண்டார் விளங்குடையார் சிறுத்தொண்டரும் விண்ணப்பம் (வேண்டு கோள்) செய்ததின் பேரில் நடந்தது என்பதைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. பிராம்மணி அல்லியங்கோதை என்ற பெண்மணி முதல் கல்வெட்டில் நிலம் அளித்த செய்தி நாமறிந்ததே. எனவே இம்மூன்று கல்வெட்டுக்களும் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக காணப்படுகின்றன.
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
This registers a sale of land tax-free to the temple of Paramesvara at Trichchengattangudi - for the maintenance of a perpectual lamp in the temple by the assembly of the Marugal in Thirumarugal nadu. உத்தமசோழனின் பதினொன்றாவது ஆட்சியாண்டில்: திருமருகல் நட்டு: மருகல் சபையோர் திருச்செங்காட்டங்குடி பரமேஸ்வரருக்கு இறைவனுக்கு), நொந்தா விளக்கிற்காக கோயிலிலிருந்து பொன் பெற்றுக்கொண்டு அஞ்சேயறு மாநிலம் விற்று இறையிலி செய்து கொடுத்த செய்த கூறப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
This registers a. sale of two pieces of land, tax-free by the Sabha of Marugal in Thiru- marugal nadu of the temple of Paramesvara at Trichchengattan- gudi for the gold received by them from the temple and from an officer (or chief) named Godukulavan vira solan alias Uttamasola Nenmalinattu Muvendavelan to provide for the maintenance of two perpectual lamps in the temple. The surname of the latter suggests that the inscription may be assinged to Uttama-chola. உத்தமசோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் திருமருகல் நாட்டு மருகல் சபையோர் கோயிலிலிருந்து பொன் பெற்றுக் கொண்டு அஞ்சேயறு மாநிலம் இறையிலியாக விற்றுக் குடுத்த செய்தியும், அதே சபையோர் கோதுகுலவன் வீர சோழன் என்ற உத்தமசோழ நென்மலிநாட்டு மூவேந்த வேளான் என்பவனிடம் :பொன் பெற்றுக் கொண்டு இறையிலியாக நிலம் விற்றுக் குடுத்த செய்தியும் தெரிய வருகிறது. இரண்டு நிலங்களுக்கும் எல்லைகள் கூறப்பட்டிருக்கின்றன. இது தவிர நுந்தா விளக்கு இரண்டிற்கும் சபையோரால் நிலம் விற்றுக் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இடையில் சில வரிகள் இதைந்தள்ள தால் இது பற்றிய விவரம் அறிந்து கொள்ள இயலவில்லை
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவாஞ்சியம்
Begin with the introduction Tingaler-taru etc. Records the remission of taxes granted by the assembly of Abhimanabhusana - chaturvedi- mangalam on the lands endowed by Brammagal, wife of the general Rajendra chola Brahma marayar, for offerings to the god Brahmavinnagar Alvar, probably consecrated by her. The assembly is said to have held its meeting during night in the temple of Kumara-Vishnugrihattalvar. சோழ மன்னன் ராஜகேஸரிவர்மரான ராஜாதிராஜ தேவரின் (1) 22-ஆவது ஆட்சியாண்டு, துலா-28, ப. 8, மிருகசீருஷம், புதன்கிழமையில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு. திங்களேர் gop எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் ஆரம்பமாகிறது. சேநாதிபதி ராஜேந்திர சோழ பிரம்மா திராயரின் மனைவி பிரம்மகள் என்பவள், பிரம்மவிண்ணகர் ஆள்வாரை எழுந்தருளுவித்து அவருக்குத் தானமாக நிலம் கொடுத்த செய்தியும், கொடுக்கப்பட்ட அந்நிலம் அபிமான பூஷன சதுர்வேதி மங்கலத்துச் சபை யோரால் இறையிலி செய்யப்பட்ட செய்தியும் குறிக்கப்படுகின்றன, குமார கிருகத்தாழ்வார் கோயிலில் இரவில் அவ்வூர் சபை கூடிய தாகக் கூறப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவாஞ்சியம்
துண்டுக் கல்வெட்டு, நூற்று ஐம்பது காசுகள் பெற்றுக் கொண்டு நிலம் விற்றுக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு, இறைவனுக்குரிய வழிபாட்டு பொருள்களுக்காக நாள் ஒன்றுக்கு ஐந்து பணம் செலவு செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. இக்கல்வெட்டில் சோழியதரையர் என்பவர் குறிப் பிடப்படுகிறார்
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவாஞ்சியம்
பராக்கிரமபாண்டியனின் ஆட்டி காலத்தைச் சேர்த்த இக்கல்வெட்டில் துந்து பீஸ்வரர் கோயில் இறைவியாகய வேயன் தோழியாருக்கு அமுதுபடிக்கு விட்ட நிலம் பற்றிக் கூறப்படுகிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவாஞ்சியம்
இக்கல்வெட்டில் கூறப்படும் பாண்டிய மன்னன் : யாரென்று தெரியவில்லை, எஞ்சிங்கபட்டன் என்பவன் ஸ்ரீவாஞ்சிநாகர் கோயில் ஆதிசண்டேசுவரருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டிருக்கிறது. இத்நிலத்தில் இறைவனுக்கு திருநந்தாவனம் அமைக்கப்பட்டிருத்கல் வேண்டும். பு. த்தாறு என்ற ஆற்றின் பெயரும், பழியஞ்சிவழி என்ற aust, முத்துக்கண்ணாறு என்ற நிலத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கின்றன., ஒவ்வொரு வரியின் இறுதிப் பகுதிகளும், இறுதி வரிகள் சிலவும் காணப்படவில்லை.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவாஞ்சியம்
திருவாஞ்சியமுடையனார் கோயிலில் காமக்கோட்டமுடைய நாச்சியாராகயறைவியை எழுந்த விக்க வேண்டுகோள் விடுத்து, கோயிள் எடுப்பித் இறைவியை எழுந்தருளுவிக்கும்போது, இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியிலே நாலே சின்னங்கோல் மனையை காணியாசவும் இறையிலியாகவும், இக்கோயில் எடுத்து கும்பிட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது, ஆண்டார் புதுவருடையார் வினாயக தேவரான தைய்யல் பார முடையார் என்பவர், நிலம் தானமாக கொடுக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. முடிகொண்ட சோழப் பேராறு, கங்கைகொண்ட சோழ வாய்க்கால் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டின் இறுதிப் பகுதி காணப்படவில்லை
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவாஞ்சியம்
முதல் குலோத்துங்கச் சோழனின் இருபத்தாருவது ஆட்சியாண்டில் திருநவாஞ்சியமுடைய நாயனார் கோயிலில் திருவரங்கமுடையான் என்பவன் திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்த செய்தியும், அத்திருப்பள்ளியறை நாச்சியாருக்கு இறையிலியாக ஊர் சபையோர் நிலம் அளித்த செய்தியும் இக்கல்வெட்டில் கூறுப்பட்டிருக்கின்றன. ஊர்க் கணக்கர் போன்றோர் கையெழுத்திட்டிருக்கற செய்தியும் தெரியவருகிறது. செம்பியந் மாதேவி பேராறு, குலோத்துங்கப் பேராறு, இராஜேந்திர சோழ வாய்க்கால் ஆகிய ஆறுகளின் பெயரும், வாய்க்காலின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன, பவித்திர மாணிக்கவதி, சகாயவதி ஆகிய இரு வழிகளின் பெயரும் கூறப்பட்டிருக்கின்றன.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருமெய்ச்சூர்
சுந்தரபாண்டியனின் பத்தாவது ஆட்சியாண்டில் திருமிகைச்சூருடைய நாயனார் கோயில் இருக்காமக் கோட்டமுடைய சவகாமசுந்தரி நாச்சியாருக்கு சாத்துபடி, பரிவட்டம், விஞ்சனம் ஆகியவற்றுக்கு இறையிலியாக, விரையாவிடங்க நல்லூரிலும் பொன்மேய்ந்த பெருமாள் நல்லூரிலும் பல பட்டடை, தறிஇறை, தட்டார் பாட்டம், செனைக்கடை, வேட்டைக்காரர்கடை, குளவடை, மீன்பாட்டம், செக்காயம், வண்ணார் கற்காசு, உப்புவழிச்சாரிகை உள்ளிட்ட வரிகளை மார்கழி மாதம் முதல் இவ்வூர் சபையாரும், நாட்டாரும், உடையார் காலிங்கராயரும், ஆதித்ததேவரும் அளித்தனர் என்று இக்கல்வெட்டில் மூலம் தெரிய வருகிறது:
தஞ்சாவூர்>நன்னிலம்>திருமெய்ச்சூர்
கோப்பரகேசரிவர்மனின் நான்காம் ஆட்சியாண்டில் ஆலத்தாரிலுள்ள ஆளுங் கனத்தானாகிய அத்திகாடு. கருப்பிடவூர் ஸ்வாமி என்பவனிடமிருந்து அதே ஊரில் வாழும் வெள்ளாளந் சிங்கந் என்பவன், இக்கோயில் திருநந்தாவனத்திற்கு நீர் இறைப்பார்க்கும், திருமெழுக்கு இடுவார்க்கும் நிலம் வாங்கிய செய்தியும், ஆலத்தூர் சபையாரே அந்நிலத்திற்கு விலை நிர்ணயம் செய்து அவ்வாறு நிர்ணயம் செய்த விலையாக பொன் பெற்றுக் கொண்டு வரி நீக்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றன. நிலத்திற்கு எல்லைகளாக ஆற்று வாய்க்கால், உட்சிறு வாய்க்கால், ஆகிய வாய்க்கால்களும் தேவஸ்வாமி கிரமவித்தன் நிலம், திருவேங்கடகிரமவித்தன் நிலம், குணவந்தாழி நிலம் ஆய மூன்று பேர்களுடைய நிலமும் கூறப்படுகின்றன
தஞ்சாவூர்>நன்னிலம்>கண்கொடுத்தவனிதம்
மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஏழாம் ஆட்டியாண்டில், நல்லூருடையாள் இராமன் ஸ்ரீசயிலாசமுடையான் என்பவன் ஜயதுங்க சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதியான (பிடாகை) ஆலத்தாங்குடியில் புகமாபரணீஸ்வரமுடையாழ் எழுந்தருளிவித்த செய்தியும், எழுந்தருளுவித்தபின் இக்கோயில் ஆதிசண்டேசு வரதேவர் பெயரில் தேவதானமாக நிலம் கொடுத்த செய்தியும் தெரிய வருதிறது. இவ்வாறு நிலம் கொடுத்த நல்லூருடையான் இராமன் ஸ்ரீகயிலாசமூடையான், சுமார் நாற்பத்தொருவரிடமிருந்து நிலம் வாங்கியிருக்கின்றான். கல்வெட் டின் இறுதிப் பகுதி காணப்படவில்லையாதலால் மேலும் எத்தனை பேரிடம் நிலம் வாங்கினான், அந்நிலத்தில் வரும் வருமானம் கொண்டு இறைவனுக்கு என்னென்ன வழிபாடு செய்தார்கள் போன்ற விவரங்கள் தெரிந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. ;
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்
Records the royal order (sirumuri) sent to kariyavar, kanakkar & bandarikal. Gift of land as tax free for the repair works. It is also stated that this order (o/a/) may be treated as authorised to fix the boundaries and the settlement in the village and may be scribed on copper and stone. Among the signatories, Kulasehkara Nayabalan, Parakrama Pandya Danapalan are figured. அரசன் பெயரில் இல்லாத இக்கல்வெட்டு ராஜராஜப் பெரும்பள்ளியான ஸ்ரீமாகேஸ்வர பெரும்பள்ளியின் காரியவர், கணக்கர், பண்டாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சிறு முறி ஆகும். திருப்பணிக்காக இறையிலியாக நிலம் கொடுத்ததையும், இவ்வோலையினையே ஆணையாகக் கொண்டு (பிடிபாடு) ஊரெல்லையும், அதில் குடிகளும் வரையறுத்துக் கொண்டு, அதனைக் கல்லிலும் செம்பிலும் வெட்டி வைத்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. குலசேகர நயபாலன், பராக்கிரம பாண்டிய தனபாலன் என்ற கையொப்ப மிட்டோரின் பெயர்களைக் கொண்டு, இதனைப் பாண்டியர் கல்வெட்டாகக் கருத முடிகிறது.