திருவாரூர்சோழ மன்னன் ராஜகேஸரிவர்மரான ராஜாதிராஜ தேவரின் (1) 22-ஆவது ஆட்சியாண்டு, துலா-28, ப. 8, மிருகசீருஷம், புதன்கிழமையில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு. திங்களேர் gop எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் ஆரம்பமாகிறது. சேநாதிபதி ராஜேந்திர சோழ பிரம்மா திராயரின் மனைவி பிரம்மகள் என்பவள், பிரம்மவிண்ணகர் ஆள்வாரை எழுந்தருளுவித்து அவருக்குத் தானமாக நிலம் கொடுத்த செய்தியும், கொடுக்கப்பட்ட அந்நிலம் அபிமான பூஷன சதுர்வேதி மங்கலத்துச் சபையோரால் இறையிலி செய்யப்பட்ட செய்தியும் குறிக்கப்படுகின்றன, குமார கிருகத்தாழ்வார் கோயிலில் இரவில் அவ்வூர் சபை கூடிய தாகக் கூறப்படுகிறது.
திருவாரூர்துண்டுக் கல்வெட்டு, நூற்று ஐம்பது காசுகள் பெற்றுக் கொண்டு நிலம் விற்றுக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு, இறைவனுக்குரிய வழிபாட்டு பொருள்களுக்காக நாள் ஒன்றுக்கு ஐந்து பணம் செலவு செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. இக்கல்வெட்டில் சோழியதரையர் என்பவர் குறிப் பிடப்படுகிறார்
திருவாரூர்பராக்கிரமபாண்டியனின் ஆட்டி காலத்தைச் சேர்த்த இக்கல்வெட்டில் துந்து பீஸ்வரர் கோயில் இறைவியாகய வேயன் தோழியாருக்கு அமுதுபடிக்கு விட்ட நிலம் பற்றிக் கூறப்படுகிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.
திருவாரூர்இக்கல்வெட்டில் கூறப்படும் பாண்டிய மன்னன் : யாரென்று தெரியவில்லை, எஞ்சிங்கபட்டன் என்பவன் ஸ்ரீவாஞ்சிநாகர் கோயில் ஆதிசண்டேசுவரருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டிருக்கிறது. இத்நிலத்தில் இறைவனுக்கு திருநந்தாவனம் அமைக்கப்பட்டிருத்கல் வேண்டும். பு. த்தாறு என்ற ஆற்றின் பெயரும், பழியஞ்சிவழி என்ற aust, முத்துக்கண்ணாறு என்ற நிலத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கின்றன., ஒவ்வொரு வரியின் இறுதிப் பகுதிகளும், இறுதி வரிகள் சிலவும் காணப்படவில்லை.
திருவாரூர்திருவாஞ்சியமுடையனார் கோயிலில் காமக்கோட்டமுடைய நாச்சியாராகயறைவியை எழுந்த விக்க வேண்டுகோள் விடுத்து, கோயிள் எடுப்பித் இறைவியை எழுந்தருளுவிக்கும்போது, இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியிலே நாலே சின்னங்கோல் மனையை காணியாசவும் இறையிலியாகவும், இக்கோயில் எடுத்து கும்பிட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது, ஆண்டார் புதுவருடையார் வினாயக தேவரான தைய்யல் பார முடையார் என்பவர், நிலம் தானமாக கொடுக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. முடிகொண்ட சோழப் பேராறு, கங்கைகொண்ட சோழ வாய்க்கால் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டின் இறுதிப் பகுதி காணப்படவில்லை
திருவாரூர்முதல் குலோத்துங்கச் சோழனின் இருபத்தாருவது ஆட்சியாண்டில் திருநவாஞ்சியமுடைய நாயனார் கோயிலில் திருவரங்கமுடையான் என்பவன் திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்த செய்தியும், அத்திருப்பள்ளியறை நாச்சியாருக்கு இறையிலியாக ஊர் சபையோர் நிலம் அளித்த செய்தியும் இக்கல்வெட்டில் கூறுப்பட்டிருக்கின்றன. ஊர்க் கணக்கர் போன்றோர் கையெழுத்திட்டிருக்கற செய்தியும் தெரியவருகிறது. செம்பியந் மாதேவி பேராறு, குலோத்துங்கப் பேராறு, இராஜேந்திர சோழ வாய்க்கால் ஆகிய ஆறுகளின் பெயரும், வாய்க்காலின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன, பவித்திர மாணிக்கவதி, சகாயவதி ஆகிய இரு வழிகளின் பெயரும் கூறப்பட்டிருக்கின்றன.
திருவாரூர்சுந்தரபாண்டியனின் பத்தாவது ஆட்சியாண்டில் திருமிகைச்சூருடைய நாயனார் கோயில் இருக்காமக் கோட்டமுடைய சவகாமசுந்தரி நாச்சியாருக்கு சாத்துபடி, பரிவட்டம், விஞ்சனம் ஆகியவற்றுக்கு இறையிலியாக, விரையாவிடங்க நல்லூரிலும் பொன்மேய்ந்த பெருமாள் நல்லூரிலும் பல பட்டடை, தறிஇறை, தட்டார் பாட்டம், செனைக்கடை, வேட்டைக்காரர்கடை, குளவடை, மீன்பாட்டம், செக்காயம், வண்ணார் கற்காசு, உப்புவழிச்சாரிகை உள்ளிட்ட வரிகளை மார்கழி மாதம் முதல் இவ்வூர் சபையாரும், நாட்டாரும், உடையார் காலிங்கராயரும், ஆதித்ததேவரும் அளித்தனர் என்று இக்கல்வெட்டில் மூலம் தெரிய வருகிறது:
திருவாரூர்கோப்பரகேசரிவர்மனின் நான்காம் ஆட்சியாண்டில் ஆலத்தாரிலுள்ள ஆளுங் கனத்தானாகிய அத்திகாடு. கருப்பிடவூர் ஸ்வாமி என்பவனிடமிருந்து அதே ஊரில் வாழும் வெள்ளாளந் சிங்கந் என்பவன், இக்கோயில் திருநந்தாவனத்திற்கு நீர் இறைப்பார்க்கும், திருமெழுக்கு இடுவார்க்கும் நிலம் வாங்கிய செய்தியும், ஆலத்தூர் சபையாரே அந்நிலத்திற்கு விலை நிர்ணயம் செய்து அவ்வாறு நிர்ணயம் செய்த விலையாக பொன் பெற்றுக் கொண்டு வரி நீக்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றன. நிலத்திற்கு எல்லைகளாக ஆற்று வாய்க்கால், உட்சிறு வாய்க்கால், ஆகிய வாய்க்கால்களும் தேவஸ்வாமி கிரமவித்தன் நிலம், திருவேங்கடகிரமவித்தன் நிலம், குணவந்தாழி நிலம் ஆய மூன்று பேர்களுடைய நிலமும் கூறப்படுகின்றன
திருவாரூர்மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஏழாம் ஆட்டியாண்டில், நல்லூருடையாள் இராமன் ஸ்ரீசயிலாசமுடையான் என்பவன் ஜயதுங்க சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதியான (பிடாகை) ஆலத்தாங்குடியில் புகமாபரணீஸ்வரமுடையாழ் எழுந்தருளிவித்த செய்தியும், எழுந்தருளுவித்தபின் இக்கோயில் ஆதிசண்டேசு வரதேவர் பெயரில் தேவதானமாக நிலம் கொடுத்த செய்தியும் தெரிய வருதிறது. இவ்வாறு நிலம் கொடுத்த நல்லூருடையான் இராமன் ஸ்ரீகயிலாசமூடையான், சுமார் நாற்பத்தொருவரிடமிருந்து நிலம் வாங்கியிருக்கின்றான். கல்வெட்டின் இறுதிப் பகுதி காணப்படவில்லையாதலால் மேலும் எத்தனை பேரிடம் நிலம் வாங்கினான், அந்நிலத்தில் வரும் வருமானம் கொண்டு இறைவனுக்கு என்னென்ன வழிபாடு செய்தார்கள் போன்ற விவரங்கள் தெரிந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. ;
நாகப்பட்டினம்அரசன் பெயரில் இல்லாத இக்கல்வெட்டு ராஜராஜப் பெரும்பள்ளியான ஸ்ரீமாகேஸ்வர பெரும்பள்ளியின் காரியவர், கணக்கர், பண்டாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சிறு முறி ஆகும். திருப்பணிக்காக இறையிலியாக நிலம் கொடுத்ததையும், இவ்வோலையினையே ஆணையாகக் கொண்டு (பிடிபாடு) ஊரெல்லையும், அதில் குடிகளும் வரையறுத்துக் கொண்டு, அதனைக் கல்லிலும் செம்பிலும் வெட்டி வைத்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. குலசேகர நயபாலன், பராக்கிரம பாண்டிய தனபாலன் என்ற கையொப்ப மிட்டோரின் பெயர்களைக் கொண்டு, இதனைப் பாண்டியர் கல்வெட்டாகக் கருத முடிகிறது.
நாகப்பட்டினம்நாகப்பட்டினமான சோழகுலவல்லிப்பட்டினத்து ஊரார் மன்னன் சுந்தரபாண்டியனின் பிறந்தநட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் இறைவன் வீதி உலாச் சென்று தீர்த்தமாடவும், வழிபாட்டுச் செலவுகளுக்காகவும் சன்னமங்கலத்தில் 14 Ye நிலம் கொடுத்தமையைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்முற்பகுதி கிடைக்கவில்லை. அரசனின் பெயர், ஆட்சியாண்டு ஆகியவற்றை ஆண்டறிக்கை மூலம் அறிகிறோம். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வணிகன் (மாயிலட்டி) சேந்தனான கேரளாந்தகன் காற்செய் நிலக்கொடை அளித்ததையும், அதற்கு நாகப்பட்டின ஊரார் இறையிலி செய்தளித்ததும் குறிப்பிடப்படுகின்றன. ஸ்ரீகார்யம் [புத்த ம]ங்கலமுடையான் நாகன் குமரனும், பதிபாதமூலப்பட்டுடைப் பஞ்சாசாரியரும், கல்தச்சனும் குறிப்பிடப்படுகின்றனர்.
நாகப்பட்டினம்நாகப்பட்டினத்து ஊரவையினர், இவ்வூரினுள் அமைந்த பாலையூரில் வழங்கிய மாளிகைக் கோல் அளவுப்படி ஆயிரம் குழி நிலத்தினைத் திருக்காரோணமுடைய மகாதேவருக்கு இறையிலியாக்கிக் கொடுத்ததைக் குறிக்கிறது. நான்கெல்லைகளும் கூறப்படுகின்றன.
நாகப்பட்டினம்சோழகுலவல்லிப் பட்டினத்து ஊரவர்கள் இறைவனின் திருநீராட்டுக்கும் (திருமஞ்சனம்), வேதம் சொல்லும் (அத்யயனம்) பட்டர்கள் பத்துபேர் வாழ்வாதாரத்திற்கும் (ஜீவனம்) ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. ஒளியன் ஆண்டகுட்டி, அவன்தம்பி ஒளியன் திருச்சிற்றம்பலமுடையான் ஆகிய இருவரும் கண்காணி அதிகாரிகளாகக் குறிக்கப்படுகின்றனர். முன்பகுதி சிதைந்து விட்டது.
நாகப்பட்டினம்திரிசூலத்தின் படம் கோட்டுருவமாக சிறிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது. வலது மேல்பகுதி சிறிது உடைந்துள்ளது. நிறுதன மங்கல இறைவன் விசுவநாதர் கோயிலுக்கு சொக்கப்ப முதலியார் 6 வேலி நிலம் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. இறுதியில் சிறுமலரின் படம் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்கல்வெட்டு பெரிதும் சிதைந்து, பல்வேறு துண்டுகளாகச் சுவரில் கட்டப்பட்டுள்ளது. பெருங்குறிச் சபையாரும், தானத்தாரும் ஈடுபட்டுச் செய்த ஏற்பாட்டினைக் குறிப்பதாகத் தெரிகிறது. நில அளவுகள், இறையிலி செய்தமை ஆகியவற்றிலிருந்து, நிலக்கொடையினைப் பற்றியதெனக் கருதலாம். கையெழுத்திட்ட ஊர்க்கணக்கர் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் ஒருபகுதியில் காணப்படுகிறது.
நாகப்பட்டினம்கி. பி. 12, 13 ஆம் நூற்றாண்டெழுத்தமைதியில் மீட்டெழுதப்பட்ட கல்வெட்டு. திருவாய்மூரூுடைய மகாதேவர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில், பெருங்குறி மகாசபையார், நிலவிலையாகப் பத்துக் காசும், இறைகாவலாக 30 காசும் பெற்றுக் கொண்டு இறையிலி முற்றூட்டு செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தில் இருந்து வரும் நெல்லைக் கொண்டு, உச்சச் சந்தி வழிபாடு, அப்போதெரிக்கும் நொந்தா விளக்கு, இருதிருவிழா நாள்களில் அப்பமுது, அவலமுது ஆகியவை படைக்க அரிசி ஆகியவற்றை எந்தெந்த அளவு கொடுக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி இக்கல்வெட்டினைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது. எனவே முன்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதாகவும், அவற்றை இறையிலி செய்து கொடுத்ததைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
நாகப்பட்டினம்ஊர்ச் சபைக்குச் சொந்தமான பகுதியில் அமைந்த, திருவாய்மூருடையார் கோயிலுக்குரிய இறையிலி நிலங்களுக்கான, உள்வரியினை நிர்ணயம் செய்ததைக் குறிக்கிறது. அந்த நிலங்கள் யார் யாருடைய பொறுப்பில் [அடைப்பு] இருந்தன என்பதும் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள், பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலம், அமுதமங்கலம், ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கொடுக்கப்பட்டநிலங்களும் அடங்கும்.
நாகப்பட்டினம்திருவாய்மூருடையார் கோயில் சீபீடத்தின் முன்னர், முன்னாளில் தான் எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையாற்குக் காட்டுருடையான் செம்பொற்சோதி வட்டணையுடையான் என்பார் திருப்படிமாற்றுக்கு திருநாமத்துக் காணியாக அளித்த நிலக்கொடையைத் தெரிவிக்கிறது. இறை செலுத்தியது போக மீதமுள்ள வருமானம் இதற்காகச் செலவிடப் பட வகைசெய்யப்பட்டது.