Skip to main content

1128 results found

நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்
Gift of lands at Sannamangalam by the urar of Nagapattinam alias Cholakulavalli pattanam for the procession and holy both rituals of the deity during the days of king s natal star Tirumulam. நாகப்பட்டினமான சோழகுலவல்லிப்பட்டினத்து ஊரார் மன்னன் சுந்தரபாண்டியனின் பிறந்தநட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் இறைவன் வீதி உலாச் சென்று தீர்த்தமாடவும், வழிபாட்டுச் செலவுகளுக்காகவும் சன்னமங்கலத்தில் 14 Ye நிலம் கொடுத்தமையைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்
Records the gift of 1/4 sey of land by Sendan alias Keralantakan, a trader (mayilatti) of Nagapattinam and the land was made tax free by the urar of the same village. Puttamangalamudaiyan Nagan Kumaran and patipatamula pattudai panchacharyas and a scribe are also mentioned. முற்பகுதி கிடைக்கவில்லை. அரசனின் பெயர், ஆட்சியாண்டு ஆகியவற்றை ஆண்டறிக்கை மூலம் அறிகிறோம். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வணிகன் (மாயிலட்டி) சேந்தனான கேரளாந்தகன் காற்செய் நிலக்கொடை அளித்ததையும், அதற்கு நாகப்பட்டின ஊரார் இறையிலி செய்தளித்ததும் குறிப்பிடப்படுகின்றன. ஸ்ரீகார்யம் [புத்த ம]ங்கலமுடையான் நாகன் குமரனும், பதிபாதமூலப்பட்டுடைப் பஞ்சாசாரியரும், கல்தச்சனும் குறிப்பிடப்படுகின்றனர்.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்
Records the tax free land gift of 1000 kuli measured by maligalikkol made by யான of Nagapattinam to the temple of Kayarohana. நாகப்பட்டினத்து ஊரவையினர், இவ்வூரினுள் அமைந்த பாலையூரில் வழங்கிய மாளிகைக் கோல் அளவுப்படி ஆயிரம் குழி நிலத்தினைத் திருக்காரோணமுடைய மகாதேவருக்கு இறையிலியாக்கிக் கொடுத்ததைக் குறிக்கிறது. நான்கெல்லைகளும் கூறப்படுகின்றன.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்
Records the arrangements made to perform sacred bath and for the livelihood (jivanam) of the bhattas who recite (adyayana) vedas. Two Superintending officials namely Oliyan Andakutti and his younger brother Oliyan Tiruchirrambalamudalyan are mentioned. Damaged in the beginning portion. சோழகுலவல்லிப் பட்டினத்து ஊரவர்கள் இறைவனின் திருநீராட்டுக்கும் (திருமஞ்சனம்), வேதம் சொல்லும் (அத்யயனம்) பட்டர்கள் பத்துபேர் வாழ்வாதாரத்திற்கும் (ஜீவனம்) ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. ஒளியன் ஆண்டகுட்டி, அவன்தம்பி ஒளியன் திருச்சிற்றம்பலமுடையான் ஆகிய இருவரும் கண்காணி அதிகாரிகளாகக் குறிக்கப்படுகின்றனர். முன்பகுதி சிதைந்து விட்டது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>நர்த்தன மங்கலம்
Records the gift of 6 veli of land to the temple of Visvanatha temple at Nirudana mangalam according to the orders of Raja sri Chokkappa mudaliar as Vadakatta/ai and Ayyanar Kattalal. திரிசூலத்தின் படம் கோட்டுருவமாக சிறிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது. வலது மேல்பகுதி சிறிது உடைந்துள்ளது. நிறுதன மங்கல இறைவன் விசுவநாதர் கோயிலுக்கு சொக்கப்ப முதலியார் 6 வேலி நிலம் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. இறுதியில் சிறுமலரின் படம் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the establishment of a mutt on the northern side of south street of tirumadaivilagam Dy. . . kadudaiyan alias Kuttaduvan alias Rajendrachola Karaikkadudaiyan. He also appointed some people for the service. lravalar Mudaliyar Somanathadeva seems to be the head of the mutt. காடுடையானான கூத்தாடுவானான இராசேந்திர சோழக் காரைக்காடுடையான் என்பான், திருவாய்மூருடையார் கோயில் திருமடைவளாகத்து தெற்கில்த் திருவீதியின் வடசிறகில், மடமும் எடுத்து, அம்மடத்தின் பணிசெய்ய திருமேனிகளும் (துறவியர்) ஏற்பாடு செய்து, இறையிலியாக நிலமும் அளித்ததைக் குறிப்பிடுகிறது. இராவளர் முதலியார் சோமனாத [தேவர்] மட அதிபதியாக இருக்கலாம்.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Fragmentary. Built into the walls irregularly. Mentions perunguri sabha, tanattar, some measurements of lands. கல்வெட்டு பெரிதும் சிதைந்து, பல்வேறு துண்டுகளாகச் சுவரில் கட்டப்பட்டுள்ளது. பெருங்குறிச் சபையாரும், தானத்தாரும் ஈடுபட்டுச் செய்த ஏற்பாட்டினைக் குறிப்பதாகத் தெரிகிறது. நில அளவுகள், இறையிலி செய்தமை ஆகியவற்றிலிருந்து, நிலக்கொடையினைப் பற்றியதெனக் கருதலாம். கையெழுத்திட்ட ஊர்க்கணக்கர் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் ஒருபகுதியில் காணப்படுகிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the receipt of 10 kasu as sale price (nilavilai) and 30 kasu as tax amount (iraikaval) by perunguri mahasabha from Adichandesvara of Tiruvaymurudaiyar and made all the lands as tax free. (iralyili murruttu). The arrangements were made to perform mid-day worship and to celebrate two festivals in the temple. Aopamudhu, avalamudhu and rice were also offered. The second part is engraved in continuation. It gives the descriptions of lands and boundaries which may be connected with the lands mentioned in part I. கி. பி. 12, 13 ஆம் நூற்றாண்டெழுத்தமைதியில் மீட்டெழுதப்பட்ட கல்வெட்டு. திருவாய்மூரூுடைய மகாதேவர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில், பெருங்குறி மகாசபையார், நிலவிலையாகப் பத்துக் காசும், இறைகாவலாக 30 காசும் பெற்றுக் கொண்டு இறையிலி முற்றூட்டு செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தில் இருந்து வரும் நெல்லைக் கொண்டு, உச்சச் சந்தி வழிபாடு, அப்போதெரிக்கும் நொந்தா விளக்கு, இருதிருவிழா நாள்களில் அப்பமுது, அவலமுது ஆகியவை படைக்க அரிசி ஆகியவற்றை எந்தெந்த அளவு கொடுக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி இக்கல்வெட்டினைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது. எனவே முன்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதாகவும், அவற்றை இறையிலி செய்து கொடுத்ததைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
It records the fiation of local tax on the lands which come under the jurisdiction of ur. The names of the tenents, and the particulars of lands situated in the villages of Paramesvara Chaturvedi mangalam, Amudamangalam and Alangudi are mentioned. ஊர்ச் சபைக்குச் சொந்தமான பகுதியில் அமைந்த, திருவாய்மூருடையார் கோயிலுக்குரிய இறையிலி நிலங்களுக்கான, உள்வரியினை நிர்ணயம் செய்ததைக் குறிக்கிறது. அந்த நிலங்கள் யார் யாருடைய பொறுப்பில் [அடைப்பு] இருந்தன என்பதும் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள், பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலம், அமுதமங்கலம், ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கொடுக்கப்பட்டநிலங்களும் அடங்கும்.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the gift of land for the worship (Tiruppadimarru) of Alagiya Vinayakappillaiyar consecrated by Semborsoti Vattanai udaiyan of Kattur in front of Tiruvaymurudaiyar. The income from the land be spent after remmitting taxes. திருவாய்மூருடையார் கோயில் சீபீடத்தின் முன்னர், முன்னாளில் தான் எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையாற்குக் காட்டுருடையான் செம்பொற்சோதி வட்டணையுடையான் என்பார் திருப்படிமாற்றுக்கு திருநாமத்துக் காணியாக அளித்த நிலக்கொடையைத் தெரிவிக்கிறது. இறை செலுத்தியது போக மீதமுள்ள வருமானம் இதற்காகச் செலவிடப் பட வகைசெய்யப்பட்டது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the gift of land after purchase to the temple of Tiruvaymurudaiyar by Arayan Kambikkatan alias Virarajendra Pallavarayan to perform festivals in the month of Purattasi and Chittirai. After remitting taxes for the land, the temple should meet the expenses for the procession, sacred bath and other rituals. சிற்றாமூருடையான் அரையன் கம்பிக்காதனான வீரராஜேந்திரப் பல்லவரையன், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வட்டணை ஆடலுடையாருக்குச் செய்கின்ற புரட்டாசித் திருநாளுக்கும், சித்திரைத் திருநாளுக்கும், அந்நாள்களில் இறைவனின் ஊர்வலத்திற்கும், திருநீராட்டு (ஆடி அருளல்), சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், அமுதுபடி ஆகியவற்றுக்குமாக, விலைக்கு நிலம் வாங்கி, அளித்ததைக் குறிப்பிடுகிறது. அந்நிலத்துக்குரிய வரிகள் இறுத்தது போக மீதியில் மேற்படிச் செலவுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Registers the land of sengalunir Odaippuram belonged to Tiruvaymurudaiyar Temple as tax free by the perunguri mahasabha of |sanur alias Paramesvara chaturvedimangalam at Idaiyalanadu after receiving 6 ka/anju of gold. இடையள நாட்டு ஈசனூரான ஸ்ரீபரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், திருவாய்மூருடையார் கோயிலில் அறுகழலஞ்சுப் பொன் முதலாகப் பெற்றுக் கொண்டு, செங்கழுநீர் ஓடைப்புறமான அறுமாமுக்காணி நிலத்திற்கு இறையிலி செய்தளித்ததைக் கூறுகிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the deed of exchange of lands to compensate the deficit in non-graded (taramili) variety of land belonged to the temple of Tiruvaymurudaiyar made by lsanur alias Paramesvara chaturvedi mangalam. இறையிலி நிலங்களில் தரமிலி வகையில், அளவு குறைந்தமையை ஈடுகட்ட வேறுசில தரமிலி வகை நிலங்களை, ஈசனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து சபையார், திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரருக்கு அளித்தகைக் குறிப்பிடுகிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the sale of land by Adichandesvara of Tiruvaymurudalyar temple as chandesvara peruvilai to Atkondavilli alias Pattaraippanivar, a native of Neyvayiludaiyar for 4000 antradu narkasu. In turn he handed over this property to the tanattar of this temple, by which after remmitting tax they accepted to perform worship (tiruppadimarru) to the god Tirugnanam perra pillaiyar who was consecrated by the donar. திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவர் பெயரால் சண்டேஸ்வரப் பெருவிலையாக, நெய்வாயிலுடையான் ஆட்கொண்ட வில்லியான பத்தாராய்ப் பணிவாற்கு, மூன்றுமா முக்காணி அரைக்காணிச் சின்ன நிலத்தினை, நாலாயிரம் அன்றாடு நற்காசுகளுக்கு விற்றுக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. அத்நிலத்தினை இவர் கோயில் தானத்தாரிடம் வழங்க, அவர்கள் அந்நிலத்தால் வரும் வருமானத்தில் இறை செலுத்தியது போக மீதியிலிருந்து, இப்பத்தராய்ப் பணிவார் இக்கோயிலில் எழுத்ருளுவித்த, திருஞானம் பெற்ற பிள்ளையாருக்குத் இருப்படிமாற்றும், பூசைச் செலவுகளும் செய்யச் சம்மதித்ததைக் குறிப்பிடுகிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the gift of land as tirunamattukkani and money for the expences of the festival in the month of Purattasi and Chittirai to god Vattanai Adaludaiyar by Arayan Kambikkatan Pavalakunran, a native of Sirramur in Rajendrachola va/anadu. இராசேந்திர சோழ வளநாட்டுச் சிற்றாமூருடையான் அரயன் கம்பிக்காதன் பவழக்குன்றன் என்பான், வட்டணை ஆடலுடையாருக்குப் புரட்டாசி, சித்திரைத் திருநாள்களில் வரும் திருக்காப்பு நாளன்று செய்யும் அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், திருவிளக்கெண்ணைச் செலவுகளுக்காகத் திருநாமத்துக் காணியாக இறையிலி நிலமும், பண்டாரத்தில் காசும் கொடுத்தமையைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
Records the gift land and tank as tax free to cultivate a flower garden in the name of Narpattennayiravan by the perunguri sabha of Ichanur alias Paramesvara chaturvedi Mangalam In Idaiyala nadu, a division of Rajendra Chola valanadu. திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில் இராசேந்திர சோழ வளநாட்டு, இடையளநாட்டு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், நாற்பத்தெண்ணாயிரவன் திருநந்தவனம் என்ற நந்தவனத்தினை அமைக்கக் குளமும், நிலமும், இறையிலி செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
தவலோக நாதனான இறைவனுக்கு, திருப்பூரனை நடத்த, நவலோகபாலன் கைலாயன் வல்லைநரேசன் என்பான் செய்த திருப்பணியைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
Records the gift of money which was invested with sivabrahmanas who were the share holders of the temple tax free lands to burn the lamps. It is Stated that the cherity should be maintained by those who purchase, inherit and by other means also in future. திருக்கோளிலி உடையார் கோயில் இறையிலி நிலங்களில் காணியுடைய சிவப்பிராமணர்களிடம், காசுகளை மூதலாகக் கொடுத்து, விளக்கெரிக்கச் செய்த ஏற்பாட்டையும், சிவப்பிராமணர்கள் பங்கினை விலைக்கு வாங்கியோரும், பிறவகையால் பெற்றுக் கொள்வாரும் என்றென்றும் இதனைச் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதையும் தெரிவிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
Badly damaged. It seems to register the transaction of land to Tirukkolili udalyar by Ediroppilata Somanathadeva of Tirugnanasambanda Mutt. திருக்கோளிலி உடையார் கோயில் தானத்தார்களில் இராவளர் சோமனாததேவரும், தேவகன்மிகளில் திருச்சிற்றம்பல பட்டனும் பிறரும் கூறியதன்படி, இவ்வூரில் உள்ள திருஞான சம்பந்தன் மடத்தைச் சேர்ந்த பழகினார் வினை தீர்த்தார் என்ற ஆச்சாரியர்க்கு, மடப்புற இறையிலியாகப் பையூர், பாரணை நல்லூர் ஆகிய ஊர்களில் நிலம் வழங்கியதையும், அதனின்று 120 கல நெல்லினை மடத்திற்களிக்கச் செய்த ஏற்பாட்டினையும் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
Stops with the mention of king s name. மாங்குடையான் விச்சாதிரன் அல்லது பிச்சன் கணவதி ஆண்டான் என்ற வணிகன், அவனது நன்மைக்காக, மாதந்தோறும் திருவாதிரை நாளில் இறைவனையும் தேவியையும் திருவுலாவாக எடுத்து வரச் செய்வதற்காக 260 பணம் கொடுத்து, ஒன்றே மூன்று மாநிலம் வாங்கி, சண்டேஸ்வர தேவகன்மிகளிடம் ஒப்படைத்தான். அதனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் திருவுலாச் செய்யும் பொறுப்பினை ஏற்றதைக குறிக்கிறது. பலரும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.