Skip to main content

1146 results found

நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
நாகப்பட்டினம் சிற்றாமூருடையான் அரையன் கம்பிக்காதனான வீரராஜேந்திரப் பல்லவரையன், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வட்டணை ஆடலுடையாருக்குச் செய்கின்ற புரட்டாசித் திருநாளுக்கும், சித்திரைத் திருநாளுக்கும், அந்நாள்களில் இறைவனின் ஊர்வலத்திற்கும், திருநீராட்டு (ஆடி அருளல்), சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், அமுதுபடி ஆகியவற்றுக்குமாக, விலைக்கு நிலம் வாங்கி, அளித்ததைக் குறிப்பிடுகிறது. அந்நிலத்துக்குரிய வரிகள் இறுத்தது போக மீதியில் மேற்படிச் செலவுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
நாகப்பட்டினம் இடையள நாட்டு ஈசனூரான ஸ்ரீபரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், திருவாய்மூருடையார் கோயிலில் அறுகழலஞ்சுப் பொன் முதலாகப் பெற்றுக் கொண்டு, செங்கழுநீர் ஓடைப்புறமான அறுமாமுக்காணி நிலத்திற்கு இறையிலி செய்தளித்ததைக் கூறுகிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
நாகப்பட்டினம் இறையிலி நிலங்களில் தரமிலி வகையில், அளவு குறைந்தமையை ஈடுகட்ட வேறுசில தரமிலி வகை நிலங்களை, ஈசனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து சபையார், திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரருக்கு அளித்தகைக் குறிப்பிடுகிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
நாகப்பட்டினம் திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவர் பெயரால் சண்டேஸ்வரப் பெருவிலையாக, நெய்வாயிலுடையான் ஆட்கொண்ட வில்லியான பத்தாராய்ப் பணிவாற்கு, மூன்றுமா முக்காணி அரைக்காணிச் சின்ன நிலத்தினை, நாலாயிரம் அன்றாடு நற்காசுகளுக்கு விற்றுக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. அத்நிலத்தினை இவர் கோயில் தானத்தாரிடம் வழங்க, அவர்கள் அந்நிலத்தால் வரும் வருமானத்தில் இறை செலுத்தியது போக மீதியிலிருந்து, இப்பத்தராய்ப் பணிவார் இக்கோயிலில் எழுத்ருளுவித்த, திருஞானம் பெற்ற பிள்ளையாருக்குத் இருப்படிமாற்றும், பூசைச் செலவுகளும் செய்யச் சம்மதித்ததைக் குறிப்பிடுகிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
நாகப்பட்டினம் இராசேந்திர சோழ வளநாட்டுச் சிற்றாமூருடையான் அரயன் கம்பிக்காதன் பவழக்குன்றன் என்பான், வட்டணை ஆடலுடையாருக்குப் புரட்டாசி, சித்திரைத் திருநாள்களில் வரும் திருக்காப்பு நாளன்று செய்யும் அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், திருவிளக்கெண்ணைச் செலவுகளுக்காகத் திருநாமத்துக் காணியாக இறையிலி நிலமும், பண்டாரத்தில் காசும் கொடுத்தமையைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருவாய்மூர்
நாகப்பட்டினம் திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில் இராசேந்திர சோழ வளநாட்டு, இடையளநாட்டு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், நாற்பத்தெண்ணாயிரவன் திருநந்தவனம் என்ற நந்தவனத்தினை அமைக்கக் குளமும், நிலமும், இறையிலி செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
நாகப்பட்டினம் தவலோக நாதனான இறைவனுக்கு, திருப்பூரனை நடத்த, நவலோகபாலன் கைலாயன் வல்லைநரேசன் என்பான் செய்த திருப்பணியைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
நாகப்பட்டினம் திருக்கோளிலி உடையார் கோயில் இறையிலி நிலங்களில் காணியுடைய சிவப் பிராமணர்களிடம், காசுகளை மூதலாகக் கொடுத்து, விளக்கெரிக்கச் செய்த ஏற்பாட்டையும், சிவப் பிராமணர்கள் பங்கினை விலைக்கு வாங்கியோரும், பிறவகையால் பெற்றுக் கொள்வாரும் என்றென்றும் இதனைச் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதையும் தெரிவிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
நாகப்பட்டினம் திருக்கோளிலி உடையார் கோயில் தானத்தார்களில் இராவளர் சோமனாததேவரும், தேவகன்மிகளில் திருச்சிற்றம்பல பட்டனும் பிறரும் கூறியதன்படி, இவ்வூரில் உள்ள திருஞான சம்பந்தன் மடத்தைச் சேர்ந்த பழகினார் வினை தீர்த்தார் என்ற ஆச்சாரியர்க்கு, மடப்புற இறையிலியாகப் பையூர், பாரணை நல்லூர் ஆகிய ஊர்களில் நிலம் வழங்கியதையும், அதனின்று 120 கல நெல்லினை மடத்திற்களிக்கச் செய்த ஏற்பாட்டினையும் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>திருக்குவளை>திருக்குவளை
நாகப்பட்டினம் மாங்குடையான் விச்சாதிரன் அல்லது பிச்சன் கணவதி ஆண்டான் என்ற வணிகன், அவனது நன்மைக்காக, மாதந்தோறும் திருவாதிரை நாளில் இறைவனையும் தேவியையும் திருவுலாவாக எடுத்து வரச் செய்வதற்காக 260 பணம் கொடுத்து, ஒன்றே மூன்று மாநிலம் வாங்கி, சண்டேஸ்வர தேவகன்மிகளிடம் ஒப்படைத்தான். அதனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் திருவுலாச் செய்யும் பொறுப்பினை ஏற்றதைக குறிக்கிறது. பலரும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்>கீழ்வேளூர்>திருக்கண்ணங்குடி
நாகப்பட்டினம் இராஜேந்திர சோழ வளநாட்டு இடையள நாட்டு இருக்கோளிலியில் உடையார் இருக்கோளிலி உடையாருக்குத் தைப்பூசம், வைகாசி (விசாகம்?) திருவிழா நடத்துவதற்கும், அந்நாளில் திருவெழுச்சி (திருவீதியுலா) நடத்துவதற்கும், பெரியகுடி, வடபெரியகுடி ஆகிய ஊர்களின் ஊரவர், நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது. தொடக்கம் கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>செம்பியன் மாதேவி
நாகப்பட்டினம் உத்தமசோழரின் தாயும், ஸ்ரீமதுராந்தகன் மாதேவடிகளும் ஆன செம்பியன் மாதேவியார், அளநாட்டுப் பிரமதேயம் ஆன செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் கட்டுவித்த கைலாயமுடைய மகாதேவர் கோயிலில் மாதப்பிறப்பு தோறும், இறைவனுக்குத் திருநீராட்டு (ஸ்னபனம்) செய்யவும், திருநந்தா விளக்குகள் எரிக்கவும், உத்தராயன நாளில் பிராமணர் உண்ணவும் ஆகிய செலவுகளுக்காக உறட்டயன் சோழப்பையரான திருபுவன மாதேவியார் பலரிடமும் விலைக்கு வாங்கி அளித்த நிலநிவந்தங்களைக் குறிக்கிறது. நிலத்தின் அளவுகளும், எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. செம்பியன் மாதேவி வாய்க்கால், கண்டராதித்தன் வாய்க்கால், பழுவூர்நக்க வாய்க்கால், பராந்தகன் மாதேவி வாய்க்கால், மாதேவடிகள் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களும், உத்தமசோழவதி, த்ரைலோக்ய சுந்தரவதி, செம்பியன் மாதேவிவதி, கண்டராதித்தவதி, மாதேவடிகள் வதி ஆகிய வதிகளும், செம்பியன் மாதேவிச்சேரி ஆகியனவும் எல்லைகளில் குறிப்பிடப்படுகின்றன.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>செம்பியன் மாதேவி
நாகப்பட்டினம் பங்கள நாடுடையார் மகளான? உத்தமசோழரின் தேவியார் ஒருவர், செம்பியன் மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்ட கைலாசமுடையார் கோயில் இறைவனுக்கு, அவர் பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில் திருவழுதுக்காக, 158 கழஞ்சுப் பொன்னினைச் சதுர்வேதி பட்டர்களிடம் அளித்து அதன் பலிசையிலிருந்து செலவு செய்யச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>கீழ்வேளூர்>கீழ்வேளூர்
நாகப்பட்டினம் இறைவன் கேடிலிநாயனார்க்கு நந்தவனம் ஏற்படுத்தப் புஞ்சைநிலத்தையும், நந்தவனம் பராமரிப்போருக்குக் குடியிருக்க மனை நிலத்தையும், திருவாரூர் இறைவனைப் பூசை செய்யும் குரவசேரி F மூலத்தான பட்டன் மற்றும் பெரும்பற்றப்புலியூர் விநாயகப் பட்டனின் மனைவி ஆவுடையாள்சானி ஆதிய இருவரும் விலைக்கு வாங்கிக் கொடுத்தமையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. நந்தவனத்திற்காக வாங்கப்பட்ட நிலம் செந்தாமரைக் கண்ணன் கொல்லை என்ற பெயரில் சாந்தங்குடியில் இருந்தது. பிற்பகுதி கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்>திருக்குவளை>இரிஞ்சியூர்
நாகப்பட்டினம் கல்வெட்டு சிதைந்துள்ளது. (9) a ay இறைவனுக்கு ஐந்நூற்றுவ இளவரையன் மற்றும் திருச்சிற்றம்பலமுடையான் ஆகியோர் அளித்த குறிப்பிட்ட விளை நிலங்களைப் பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக அவர்களுக்கு மனை நிலங்கள் வழங்கப்பட்டமை குறிக்க. ப்படுவதாகத் தெரிகிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>ஆவராணி
நாகப்பட்டினம் நிலவிலை ஆவணத்தின் இறுதிப்பகுதியாக உள்ளது. மூன்றாம் துண்டு நடுவிலுள்ள பகுதியாகும். இராஜேந்திர சோழீஸ்வரர் என்ற இறைவன் பெயர் உள்ளது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>ஆவராணி
நாகப்பட்டினம் துண்டுக் கல்வெட்டு. சிவன் கோயிலுக்கான இறையிலி நிலக்கொடை பற்றியது. நிலத்தின் எல்லை சொல்லும் போது சித்திரலேகைப் பெரும் பள்ளி என்ற சமண அல்லது பெளத்தக் கோயிலின் நிலம் குறிக்கப்பட்டுள்ளது. ஊர்க்கீழ் இறையிலிப் பிரமாண இசைவுத்தீட்டு என்று இந்த ஆவணம் பெயரிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>ஆவராணி
நாகப்பட்டினம் திருவாபரணச் சதுர்வேதி மங்கலத்து 5 இறைவனுக்கு நந்தா விளக்கிற்கு 60 காசுகளைச் சிவப் பிராமணர்களிடம் கொடுத்ததைக் கல்வெட்டுக் கூறுகிறது
நாகப்பட்டினம்>கீழ்வேளூர்>ஆந்தக்குடி
நாகப்பட்டினம் அருமொழி தேவ வளநாட்டுப் புலியூர் நாட்டு ஆந்தைக்குடியான நிகரிலி சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சோமநாத தேவர் கோயில் தானம். பற்றியும், திருவாரூர் கோயிலில் உண்ணும் தபசிகளுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தியையும் குறிப்பிடுகின்றது.
மதுரை>மதுரைகிழக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
மதுரை புளியங்குளத்தில் அப்பன் திருவேங்கடநாதன் மடம் என்ற ஒரு மடமிருந்தது, அம்மடத்திலிருந்த தலைவருக்கும் சீடருக்கும் மடப்புறமாக ; இறையிலியாகப் புளியங்குளம், கும்மங்குளம் ஆகிய ஊக்களிலிருந்து நிலங்கள் வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டில் திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலிவாணாதிராயருடைய விருதுப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்லின் நாற்புறமும் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. சக்கரம், பூர்ணகுமாம், கெளபீனத் தண்டம் ஆகியவை வரிப்படங்களாக உள்ளன.