Skip to main content

1128 results found

நாகப்பட்டினம்>கீழ்வேளூர்>திருக்கண்ணங்குடி
Records the gift of 2100 kasu by one Alan belonged to Sivan padava community and which was deposited with Damodhara Bhatta son of Ayyanayya Bhatta to perform the worship (Tiruppadimarru) of Adipatta Nayanar. It is also stated that the amount was begged by him from his community people and the deity Adipatta Nayanar (one among the 63 Nayanmars and said to belong to fishermen community) was set up by him earlier. இராஜேந்திர சோழ வளநாட்டு இடையள நாட்டு இருக்கோளிலியில் உடையார் இருக்கோளிலி உடையாருக்குத் தைப்பூசம், வைகாசி (விசாகம்?) திருவிழா நடத்துவதற்கும், அந்நாளில் திருவெழுச்சி (திருவீதியுலா) நடத்துவதற்கும், பெரியகுடி, வடபெரியகுடி ஆகிய ஊர்களின் ஊரவர், நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது. தொடக்கம் கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>செம்பியன் மாதேவி
Records the gift of land after purchase from various persons by Urattayan Solappayar alias Tribhuvana madeviyar to perform sacred bath, burning lamps, to feed brahmins on uttarayana and sankranti days in the temple of sri Kailasamudaiyar at Sembian madevi chaturvedimangalam, a brahmadeya in Alanadu. Boundaries and the measurements of all lands described. While making the description, many channels, namely Sembian madevi vaykkal, Kandaradittan vaykkal, Puluvar nakka vaykkal, Parantakan madevi vaykka/ and Madevadigal vayakkal and vathi namely Uttamacholavati, Trilokya sundara vat, Sembian madevivati, Kandaratitta vat), Madevadigal vati and one sector named Sembian madevichen are mentioned. உத்தமசோழரின் தாயும், ஸ்ரீமதுராந்தகன் மாதேவடிகளும் ஆன செம்பியன் மாதேவியார், அளநாட்டுப் பிரமதேயம் ஆன செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் கட்டுவித்த கைலாயமுடைய மகாதேவர் கோயிலில் மாதப்பிறப்பு தோறும், இறைவனுக்குத் திருநீராட்டு (ஸ்னபனம்) செய்யவும், திருநந்தா விளக்குகள் எரிக்கவும், உத்தராயன நாளில் பிராமணர் உண்ணவும் ஆகிய செலவுகளுக்காக உறட்டயன் சோழப்பையரான திருபுவன மாதேவியார் பலரிடமும் விலைக்கு வாங்கி அளித்த நிலநிவந்தங்களைக் குறிக்கிறது. நிலத்தின் அளவுகளும், எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. செம்பியன் மாதேவி வாய்க்கால், கண்டராதித்தன் வாய்க்கால், பழுவூர்நக்க வாய்க்கால், பராந்தகன் மாதேவி வாய்க்கால், மாதேவடிகள் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களும், உத்தமசோழவதி, த்ரைலோக்ய சுந்தரவதி, செம்பியன் மாதேவிவதி, கண்டராதித்தவதி, மாதேவடிகள் வதி ஆகிய வதிகளும், செம்பியன் மாதேவிச்சேரி ஆகியனவும் எல்லைகளில் குறிப்பிடப்படுகின்றன.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>செம்பியன் மாதேவி
Gift of 158 kalanju of gold by the queen of Uttamachola, (daughter of?) Pangalanadudaiyar to offer sacred food to Sri Kailasamudaiyar on the day of kettai in the month Chittirai. The expenses should be made out the interest derived. பங்கள நாடுடையார் மகளான? உத்தமசோழரின் தேவியார் ஒருவர், செம்பியன் மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்ட கைலாசமுடையார் கோயில் இறைவனுக்கு, அவர் பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில் திருவழுதுக்காக, 158 கழஞ்சுப் பொன்னினைச் சதுர்வேதி பட்டர்களிடம் அளித்து அதன் பலிசையிலிருந்து செலவு செய்யச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>கீழ்வேளூர்>கீழ்வேளூர்
Records the grant of land to cultivate a flower garden and house site for the gardeners after purchase by the priest of Tiruvarur temple namely Kuravacheri Mulattana Bhattan and Avudaiyal Sani, wife of Perumparrapuliyur Vinayaga bhatta. இறைவன் கேடிலிநாயனார்க்கு நந்தவனம் ஏற்படுத்தப் புஞ்சைநிலத்தையும், நந்தவனம் பராமரிப்போருக்குக் குடியிருக்க மனை நிலத்தையும், திருவாரூர் இறைவனைப் பூசை செய்யும் குரவசேரி F மூலத்தான பட்டன் மற்றும் பெரும்பற்றப்புலியூர் விநாயகப் பட்டனின் மனைவி ஆவுடையாள்சானி ஆதிய இருவரும் விலைக்கு வாங்கிக் கொடுத்தமையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. நந்தவனத்திற்காக வாங்கப்பட்ட நிலம் செந்தாமரைக் கண்ணன் கொல்லை என்ற பெயரில் சாந்தங்குடியில் இருந்தது. பிற்பகுதி கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>இரிஞ்சியூர்
It seems to record that the allotment of land and house site to Inurruva Ilavaraiyan and Triuchirrambalamudaiyan as exchange. கல்வெட்டு சிதைந்துள்ளது. (9) a ay இறைவனுக்கு ஐந்நூற்றுவ இளவரையன் மற்றும் திருச்சிற்றம்பலமுடையான் ஆகியோர் அளித்த குறிப்பிட்ட விளை நிலங்களைப் பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக அவர்களுக்கு மனை நிலங்கள் வழங்கப்பட்டமை குறிக்க. ப்படுவதாகத் தெரிகிறது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>ஆவராணி
நிலவிலை ஆவணத்தின் இறுதிப்பகுதியாக உள்ளது. மூன்றாம் துண்டு நடுவிலுள்ள பகுதியாகும். இராஜேந்திர சோழீஸ்வரர் என்ற இறைவன் பெயர் உள்ளது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>ஆவராணி
Paleography. Fragmentary. Refers a tax free land gift to a siva temple. While describing the boundaries, the name Chitralekhai Perumpalli, a Jain / Buddha shrine is mentioned. துண்டுக் கல்வெட்டு. சிவன் கோயிலுக்கான இறையிலி நிலக்கொடை பற்றியது. நிலத்தின் எல்லை சொல்லும் போது சித்திரலேகைப் பெரும் பள்ளி என்ற சமண அல்லது பெளத்தக் கோயிலின் நிலம் குறிக்கப்பட்டுள்ளது. ஊர்க்கீழ் இறையிலிப் பிரமாண இசைவுத்தீட்டு என்று இந்த ஆவணம் பெயரிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்>நாகப்பட்டினம்>ஆவராணி
Records the gift of 60 kasu to burn a perpectual lamp to the deity of Tiruvabarana Chaturvedi mangalam. The money was invested with the sivabrahmanas of this temple. திருவாபரணச் சதுர்வேதி மங்கலத்து 5 இறைவனுக்கு நந்தா விளக்கிற்கு 60 காசுகளைச் சிவப்பிராமணர்களிடம் கொடுத்ததைக் கல்வெட்டுக் கூறுகிறது
நாகப்பட்டினம்>கீழ்வேளூர்>ஆந்தக்குடி
This is an order send to devakanmis, Sn mahesvarakankani and srikaryanseyar of Somanatha devar temple at Andaikkudi alias Nikarilichola chaturvedimangalam in Puliyur nadu, a division of Arumolideva valanadu. This village was 8 (Andaddkudi) devadana tirunamathukkani of Srimulastanamudaiyar of Tiruvarur. Now the lands were distributed to Sediraya and Kachiraya, at the instance of Kangeyaraya and also confirms the earlier arrangement of brahmana parru through which the dapasi were fed in Tiyagavinodan Salai at Sri mulasthanamudaiyar temple of Tiruvarur. அருமொழி தேவ வளநாட்டுப் புலியூர் நாட்டு ஆந்தைக்குடியான நிகரிலி சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சோமநாத தேவர் கோயில் தானம். பற்றியும், திருவாரூர் கோயிலில் உண்ணும் தபசிகளுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தியையும் குறிப்பிடுகின்றது.
மதுரை>மதுரை வடக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
This inscription records the two villages Puliyankulam and Kumankulam were endowed as Madappura iraiyili to the mutt of Appan Thiruvankadanathin mutt at puliyankulam புளியங்குளத்தில் அப்பன் திருவேங்கடநாதன் மடம் என்ற ஒரு மடமிருந்தது, அம்மடத்திலிருந்த தலைவருக்கும் சீடருக்கும் மடப்புறமாக ; இறையிலியாகப் புளியங்குளம், கும்மங்குளம் ஆகிய ஊக்களிலிருந்து நிலங்கள் வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டில் திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலிவாணாதிராயருடைய விருதுப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்லின் நாற்புறமும் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. சக்கரம், பூர்ணகுமாம், கெளபீனத் தண்டம் ஆகியவை வரிப்படங்களாக உள்ளன.
மதுரை>மதுரை வடக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
This inscription engraved on the north wall of the Ardhamandapa of the Siva temple, records the gift of tax free land, located at Vikkirama Pandya nallur alias Kavanur, to the temple of Thaniyanai Jswaramudaiyar. This land was located on the northern side of the tank Adhichchap péréri. தனியானை ஈசுவரமுடையார் கோயிலுக்குக் குன்றத்தூர்குளக்கீழ் நாட்டுக்காவனூரான விக்கிரமபாண்டியநல்லூரில் ஒன்பது மாவரை நிலம் இறையிலியாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. காலகண்டதேவன என்ற அளவை மரக்காலும் பயனபாட்டிலிருந்ததையும் தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட நிலத்திற்கு வடக்கில் ஆதிச்சப்பேரேரி என்ற குளமும், மேற்கில் தட்டான் வாய்க்கால் என்ற வாய்க்காலும் இருந்துள்ளன.
மதுரை>மதுரை வடக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
This fragment inscription which is engraved on the South wall of the Kanni-mir mandapa of Nilakandéswara temple, seems to record the gift of tax free lands to meet the day to day expenses of the temple. திருக்கோயிலில் நாள்தோறும் நடைபெறும் செலவினங்களுக்காக வேண்டி. இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மதுரை>மதுரை வடக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
These are fragments engraved on the wall of the mandapa of the Kannimar temple of the Nilakandéswara (rock cut eave) temple. These fragments which can be dated to the period of Maravarman Sundhara Pandya I, seems to record the lands gifted to the temple. துண்டுக் கல்வெட்டுகள். : இவை சோணாடு. கொண்டருளிய முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - காலத்தவையாகக் காணப்படுகின்றன. மாடாபத்தியம் குறித்தும் இறைவனுக்கு நிலக்கொடை. வழங்கப்பட்டமை. பற்றியும் இத்துண்டுக் கல்வெட்டுகளில் காணலாம். இக்கல்வெட்டை : வெட்டிய தச்சாசாரியனின் பெயர் ஒரு துண்டுக் கல்வெட்டின் இறுதியில் காணப்படுகிறது, அப்பெயரில் விச்சாதா என்ற முன்பகுதி மட்டுமே காணப்படுகிறது. பெயரின் பின்பகுதி இல்லை.
மதுரை>மதுரை வடக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
This inscription engraved on the Kannimar mandapa of the Nilakandéswara (rock - cut cave) temple records some land gift. துண்டுக் கல்வெட்டுகள். பிற்காலப்பாண்டியரின் மெய்க்கீர்த்திப் பகுதிகளும் கோயிலுக்கு இறையிலியாகக் காணி வழங்கப்பட்டிருந்த செய்தியும் இத்துண்டுக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
மதுரை>மதுரை வடக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
These inscriptions engraved on the Nilakandéswara (rock-cut cave) temple records the constant devotion of a certain Tiththarama(pa)liyaichi and Ariyayara puththiran. தீர்த்தராம(ப)ழிஞ்சி, அரிஹரபுத்திரர் ஆகியோரின் இறைபக்தியைப் புலப்படுத்தும் கல்வெட்டுக்களாகக் காணப்படுகின்றன.
மதுரை>மதுரை வடக்கு>யானை மலை
Fragments, One records the provisions made to meet the expenses that occur while the deity is taken out in procession, Another fragment seems to record some provision made for the worship. In this the name of the temple is recorded as Narasinga Alwar Koyil . திருவானைமலையில் வீற்றிருந்தருளிய நரசிங்கஆழ்வார் புறப்பாடு செய்யும்போது ஆகும் திருப்படித்தரத்திற்காக இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது.
மதுரை>மதுரை வடக்கு>யானை மலை
Fragments, The first fragment seems to be a portion of a document in which the land donation made by a certain Srivallaban Alagiya Manavalan at Chojakulanthaka Chaturvedimangalam is recorded. In an another fragment the provisions made for a festival of this god (Alwar) is recorded. ஸ்ரீவல்லபன் அழகியமணவாளன் சோழகுலாந்தகச் சதுர்வேதி மங்கலத்தில் நிலக்கொடை அளித்ததையும், நரசிங்க ஆழ்வார்க்குத் திருநாளுக்கு வேண்டிய திருப்படித் தரங்களுக்குத் தேவதான இறையிலி நிலம் அளித்ததையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மதுரை>மதுரை வடக்கு>யானை மலை
Fragments. These fragments are engraved on the innerside of the north outer wall. These seems to be the portions of the documents of certain land gifts. The name of one village Siruvaliyur located in Méliranyamuttam is traceable. சிறுவாலியூரில் நிலக்கொடை அளித்ததையும், திருவோடைப்புறமாக இறையிலி அளிக்கப்பட்டதையும் கடமையிறுக்கும் கோலால் நிலம் அளக்கப்பட்டதையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
மதுரை>மதுரை வடக்கு>யானை மலை
Fragments placed on the innerside of the north wall of the mahamandapa. The first fragment seems to be a portion of the document of a land gift, The second fragment seems to be aportion of the document of the Pandya ruler Srivallaba deva s fifth year, The name of the village Sri Kundthavai Chaturvedi-mangalam is traceable. நரசிம்ம ஆழ்வார்க்கு மூன்று மா மற்றும் வேலி நிலம் இறையிலியாக அளிக்கப்பட்டிருந்ததைத் தெரிவிக்கிறது.
மதுரை>மதுரை வடக்கு>யானை மலை
This inscription records the provision made for a flower garden to the temple of Narasingapperumal. For this purpose, a certain Deivachchilaiyan Kilaiyilvan alias Sundhara Pandya Kalingarayan hailing from Kirttivisaiyalayanallur alias Kilai nettur located in Karunkudi nadu, purchased Puravuvarinallur and handed Over it to certain persons including Deivachchilalyan Kujlaikadhar. The flower garden was named as IJraiydlvan. இக்கல்வெட்டு தெய்வச்சிலையான் இளையாழ்வானான சுந்தரபாண்டிய காலிங்கராயன் என்பவன் புரவுவரிநல்லூர் என்ற ஊரை விலைக்கு வாங்கி நரசிங்கப் பெருமாளுக்குப் பூந்தோட்டம் செய்வதற்கு (காணி) இறையிலியாகத் தெய்வச் சிலையான குழைகாதனுள்ளிட்டார்க்கு அளித்ததைக் கூறுகிறது.