Skip to main content

1146 results found

மதுரை>மதுரைகிழக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
மதுரை தனியானை ஈசுவரமுடையார் கோயிலுக்குக் குன்றத்தூர்குளக்கீழ் நாட்டுக்காவனூரான விக்கிரமபாண்டியநல்லூரில் ஒன்பது மாவரை நிலம் இறையிலியாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. காலகண்டதேவன என்ற அளவை மரக்காலும் பயனபாட்டிலிருந்ததையும் தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட நிலத்திற்கு வடக்கில் ஆதிச்சப்பேரேரி என்ற குளமும், மேற்கில் தட்டான் வாய்க்கால் என்ற வாய்க்காலும் இருந்துள்ளன.
மதுரை>மதுரைகிழக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
மதுரை திருக்கோயிலில் நாள்தோறும் நடைபெறும் செலவினங்களுக்காக வேண்டி. இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மதுரை>மதுரைகிழக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
மதுரை துண்டுக் கல்வெட்டுகள். : இவை சோணாடு. கொண்டருளிய முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - காலத்தவையாகக் காணப்படுகின்றன. மாடாபத்தியம் குறித்தும் இறைவனுக்கு நிலக்கொடை. வழங்கப்பட்டமை. பற்றியும் இத்துண்டுக் கல்வெட்டுகளில் காணலாம். இக்கல்வெட்டை : வெட்டிய தச்சாசாரியனின் பெயர் ஒரு துண்டுக் கல்வெட்டின் இறுதியில் காணப்படுகிறது, அப்பெயரில் விச்சாதா என்ற முன்பகுதி மட்டுமே காணப்படுகிறது. பெயரின் பின்பகுதி இல்லை.
மதுரை>மதுரைகிழக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
மதுரை துண்டுக் கல்வெட்டுகள். பிற்காலப்பாண்டியரின் மெய்க்கீர்த்திப் பகுதிகளும் கோயிலுக்கு இறையிலியாகக் காணி வழங்கப்பட்டிருந்த செய்தியும் இத்துண்டுக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
மதுரை>மதுரைகிழக்கு>குன்னத்தூர் (வரிச்சியூர்)
மதுரை தீர்த்தராம(ப)ழிஞ்சி, அரிஹரபுத்திரர் ஆகியோரின் இறைபக்தியைப் புலப்படுத்தும் கல்வெட்டுக்களாகக் காணப்படுகின்றன.
மதுரை>மதுரைகிழக்கு>யானை மலை
மதுரை திருவானைமலையில் வீற்றிருந்தருளிய நரசிங்கஆழ்வார் புறப்பாடு செய்யும்போது ஆகும் திருப்படித்தரத்திற்காக இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது.
மதுரை>மதுரைகிழக்கு>யானை மலை
மதுரை ஸ்ரீவல்லபன் அழகியமணவாளன் சோழகுலாந்தகச் சதுர்வேதி மங்கலத்தில் நிலக்கொடை அளித்ததையும், நரசிங்க ஆழ்வார்க்குத் திருநாளுக்கு வேண்டிய திருப்படித் தரங்களுக்குத் தேவதான இறையிலி நிலம் அளித்ததையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மதுரை>மதுரைகிழக்கு>யானை மலை
மதுரை சிறுவாலியூரில் நிலக்கொடை அளித்ததையும், திருவோடைப்புறமாக இறையிலி அளிக்கப்பட்டதையும் கடமையிறுக்கும் கோலால் நிலம் அளக்கப்பட்டதையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
மதுரை>மதுரைகிழக்கு>யானை மலை
மதுரை நரசிம்ம ஆழ்வார்க்கு மூன்று மா மற்றும் வேலி நிலம் இறையிலியாக அளிக்கப்பட்டிருந்ததைத் தெரிவிக்கிறது.
மதுரை>மதுரைகிழக்கு>யானை மலை
மதுரை இக்கல்வெட்டு தெய்வச்சிலையான் இளையாழ்வானான சுந்தரபாண்டிய காலிங்கராயன் என்பவன் புரவுவரிநல்லூர் என்ற ஊரை விலைக்கு வாங்கி நரசிங்கப் பெருமாளுக்குப் பூந்தோட்டம் செய்வதற்கு (காணி) இறையிலியாகத் தெய்வச் சிலையான குழைகாதனுள்ளிட்டார்க்கு அளித்ததைக் கூறுகிறது.
மதுரை>மதுரைகிழக்கு>திருமோகூர்
மதுரை தென்பறப்பு நாட்டுத் திருமோகூர் காளமேகப் பெருமாளுக்குத் திருப்பணிக்காகத் திருப்பணிப்புறத் திருவிடையாட்டமாக வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து நிலங்கள் இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது இவ்வூர் உட நிலங்கள் சோழவந்தான் பகுதியில் இருந்துள்ளது. இக்கல்வெட்டில் எட்டாவது பாசன முதல் என்று பாசன ஆண்டும் (பசலி) குறிப்பிடப்படுகிறது.
மதுரை>மதுரைகிழக்கு>திருமோகூர்
மதுரை திருமோகூர் பெருமாளுக்கு இறையிலியாக நிலக்கொடை அளித்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு.
மதுரை>மதுரைகிழக்கு>திருமோகூர்
மதுரை இத்துண்டுக் கல்வெட்டுகள் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்கள் பற்றியும் அவற்றை இறையிறுக்கும் கோலால் அளந்ததையும் நிலம் விற்றுக் கொடுத்ததைப் பற்றியும் தெரிவிக்கின்றன. ஒரு துண்டுக் கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்திப் பகுதியுடன் உள்ளது;
மதுரை>மதுரைகிழக்கு>திருமோகூர்
மதுரை துங்கவனத்தில் பிரம்மதீர்த்தக்கரையில் அரசன் பெயரால் சுந்தர பாண்டிய சோழக் கோனார் என்பவர் எடுப்பித்த வேதநாயகர் கோயிலுக்குத் தெனபறப்பு காட்டுப் பன்னாட்டான் கோட்டை என்ற ஊர் காராண்மை திருவிடையாட்ட இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயில் யானை மலையின் தென்கோடியில் உள்ளது. இங்குள்ள பாறையில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது.
மதுரை>மேலூர்>பனங்காடி
மதுரை இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபைக்கு அமைந்த வேலி செய்வார்கள் அவ்வூர் வானவனமாதேவிச்சேரி ஏனாதிமங்கலத்து ஸ்ரீவாமனான கருமாணிககாழ்வானுக்கு ஆறுமா நிலத்தினை வரி நீக்கித் தேவதான இறையிலியாக விலை செய்து கொடுக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>மேலூர்>மருதூர்
மதுரை இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்தின் மேல் பிடாகையிலிருந்த கண்ணாழ்வார் கோயிலுக்குச் சில ஊர்களைச் சேர்த்து திருநாராயணநல்லூர் என்னும் பெயரால் தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>மேலூர்>மருதூர்
மதுரை மருதூர் பெருமாள் கோயில் திருமுற்றம், திருநந்தவனம், தீர்த்தக்குளம் ஆகியவை பனங்காடியான இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்து சபையாரிடமிருந்து பெற்று அனுபவித்து வரப்பெற்றது, கண்ணாழ்வார் என்று அழைக்கப்பட்ட இக் கோயில் இறைவர்க்கு திருப்படிமாற்றுள்ளிட்ட செலவினங்களுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
மதுரை கோயிலுக்கு நந்தவனப்புறமாக இறையிலி நிலம் அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. நிலத்திற்குரிய வரிகள் கூறப்பட்டுள்ளன.
மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
மதுரை சுரபிகாட்டு மேல்மலை அழகிய சேழீசுவரமுடையார்க்கு அடியாராக விளங்கும் திருச்சிற்றம்பலமுடையார் அரசு கண்டராமன் என்ற பெயரில் செய்கிற நந்தவனத்திற்கு இறையிலி நிலம் அளித்ததைத் தெரிவிக்கிறது.
மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
மதுரை இக்கல்வெட்டும் அடுத்த கல்வெட்டும் தொடர்புடையன. மதுரையில் உள்ள சைவ மடத் தலைவர்க்கு அகத்தியன் குளத்தினை மடப்புற இறையிலியாக அளித்ததைக் கூறுகிறது.