Skip to main content

1128 results found

மதுரை>மதுரை வடக்கு>திருமோகூர்
This inscription records that lands in Virandarayana chaturvedhimangalam, which was bifurcated from Thiruvadagam located very near Thénur in Pakanur Kurram (Solavantan area), were endowed as Thiruppanippurath thiruvidaiyattam to meet the renovation expenses of the Thirum5hur ninrraruliya Paramaswamigal. தென்பறப்பு நாட்டுத் திருமோகூர் காளமேகப் பெருமாளுக்குத் திருப்பணிக்காகத் திருப்பணிப்புறத் திருவிடையாட்டமாக வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து நிலங்கள் இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது இவ்வூர் உட நிலங்கள் சோழவந்தான் பகுதியில் இருந்துள்ளது. இக்கல்வெட்டில் எட்டாவது பாசன முதல் என்று பாசன ஆண்டும் (பசலி) குறிப்பிடப்படுகிறது.
மதுரை>மதுரை வடக்கு>திருமோகூர்
Fragment. Seems to be a portion of the document of a land gift to the temple of Thirumohurninraruliya Paramaswamigal. திருமோகூர் பெருமாளுக்கு இறையிலியாக நிலக்கொடை அளித்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு.
மதுரை>மதுரை வடக்கு>திருமோகூர்
Fragments. Seems to be the portions of the documents of land gifts to the temple. In one of the fragments a tank named after a Pandya ruler is noticed. Since Thirunanthavanappura iratyili land is mentioned in that fragment, that garden might have been located near that tank and might have been irrigated by that tank. இத்துண்டுக் கல்வெட்டுகள் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்கள் பற்றியும் அவற்றை இறையிறுக்கும் கோலால் அளந்ததையும் நிலம் விற்றுக் கொடுத்ததைப் பற்றியும் தெரிவிக்கின்றன. ஒரு துண்டுக் கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்திப் பகுதியுடன் உள்ளது;
மதுரை>மதுரை வடக்கு>திருமோகூர்
This inscription records that Pannattankottai was endowed as Karanmat thiruvidaiyatta iraiyili to the temple of Vedhanathar. This Véedhanathar temple which is located in the southern most part of Yanaimalai, was in dilapidated condition prior to the period of Mdaravarman Kulasekara Pandya I and it was reconstructed by one Suidharapandya cholakonarin the name of the ruling Pandya king, Maravarman Kulasekara Pandya 1, The location of this temple while it was in a dilapidated condition is recorded in this inscription as the tank of the Brahmathirttham located in Srithungavanam. துங்கவனத்தில் பிரம்மதீர்த்தக்கரையில் அரசன் பெயரால் சுந்தர பாண்டிய சோழக் கோனார் என்பவர் எடுப்பித்த வேதநாயகர் கோயிலுக்குத் தெனபறப்பு காட்டுப் பன்னாட்டான் கோட்டை என்ற ஊர் காராண்மை திருவிடையாட்ட இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயில் யானை மலையின் தென்கோடியில் உள்ளது. இங்குள்ள பாறையில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது.
மதுரை>மேலூர்>பனங்காடி
It recorcs that the boundary markers of the Sabha of Rajéndrachola chaturvétimangalam sold six ma extent of lands as tax free Devadana to one Karumanicka Alvan alias Srivamanan at Enathimangalam attached with Vanavan- madevicceéri. | இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபைக்கு அமைந்த வேலி செய்வார்கள் அவ்வூர் வானவனமாதேவிச்சேரி ஏனாதிமங்கலத்து ஸ்ரீவாமனான கருமாணிககாழ்வானுக்கு ஆறுமா நிலத்தினை வரி நீக்கித் தேவதான இறையிலியாக விலை செய்து கொடுக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>மேலூர்>மருதூர்
Records the gift of certain lands merged into a new village namely Thirundrayananallur as a tax free devadana to the Kannalvar temple which was situated on the western hamlet of Rajendra chola chaturvétimangalam. இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்தின் மேல் பிடாகையிலிருந்த கண்ணாழ்வார் கோயிலுக்குச் சில ஊர்களைச் சேர்த்து திருநாராயணநல்லூர் என்னும் பெயரால் தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>மேலூர்>மருதூர்
Registers the purchase of the flower garden, temple tank and open pavillion (Tirumurram) of Maruthur Vishnu temple from the Sabha of Panankdadi alias Rajéndra Chola Chaturvetimangalam, The other lands were also donated for the day to day expenditures to Kannalvar temple, which may be the another name of same Vishnu temple. மருதூர் பெருமாள் கோயில் திருமுற்றம், திருநந்தவனம், தீர்த்தக்குளம் ஆகியவை பனங்காடியான இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்து சபையாரிடமிருந்து பெற்று அனுபவித்து வரப்பெற்றது, கண்ணாழ்வார் என்று அழைக்கப்பட்ட இக் கோயில் இறைவர்க்கு திருப்படிமாற்றுள்ளிட்ட செலவினங்களுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
Deals about the land donated for the flower garden of the temple and some taxes are also mentioned. கோயிலுக்கு நந்தவனப்புறமாக இறையிலி நிலம் அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. நிலத்திற்குரிய வரிகள் கூறப்பட்டுள்ளன.
மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
Registers the land donation to the flower garden Arasu Kantaraman by name by 006 Thiruccirrambalamudaiydr a devotee of Alakiya Cholisvaramudatyar of Mealmalai in Surabinadu. சுரபிகாட்டு மேல்மலை அழகிய சேழீசுவரமுடையார்க்கு அடியாராக விளங்கும் திருச்சிற்றம்பலமுடையார் அரசு கண்டராமன் என்ற பெயரில் செய்கிற நந்தவனத்திற்கு இறையிலி நிலம் அளித்ததைத் தெரிவிக்கிறது.
மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
This record is connected with the next one. Deals about the donation of Akathiyan Kulam a tank to one Pontiff of a Saiva mutt at Madurai. இக்கல்வெட்டும் அடுத்த கல்வெட்டும் தொடர்புடையன. மதுரையில் உள்ள சைவ மடத் தலைவர்க்கு அகத்தியன் குளத்தினை மடப்புற இறையிலியாக அளித்ததைக் கூறுகிறது.
மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
Seems to be a royal order. Denotes the donation of Vanciyir tank and Thuratyur tank which was lies on the south of Amuthanerl for the day today expenses of Alakia Cholisvaram temple at Manmalaiyur in Surabinadu, As per the request of the official Kalingarayan when the king was camped at Alliyur, this donation was made. சுரபி நாட்டு மேன்மலையூர் அழகிய சேழீசுவரமுடையாரின் திருப்படி மாற்று உள்ளிட்ட நிவந்தங்களுக்கு வஞ்சியூர் குளமும் அமுதனேரியின் தென்பால் உள்ளதுறையூர் குளமும் தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் அரச ஆணை, அதிகாரி காலிங்கராயன கேட்டுக் கொண்டதற்கிணங்க மனனன் அள்ளியூரில் தங்கியிருந்தபோது வழங்கிய கொடை இது.
மதுரை>மேலூர்>தருக்காக்குடி
Fragmentary. Records the land donations with their boundaries tothe Siva temple. சிவன் கோயில் இறைவனுக்கு இறையிலியாக நிலமளித்ததையும் அதன் எல்லைகளையும் தெரிவிக்கிறது, இரண்டு துண்டுகளாக உளளது.
மதுரை>மேலூர்>தருக்காக்குடி
Registers the land donation by many villagers for the food offerings in the month of Aippasi at Thirukkotisvaramudaiyar temple at Tharkakudi. திருக்காய்க்குடி திருக்கோடீசுவர முடையார் கோயிலில் ஐப்பசித் திங்களில் திருவமுது செய்வதற்காக பல ஊரார் சேர்ந்து இறையிலி நிலம் அளித்ததை. இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
Mutilated record. Reveals one measuring jar called Virapandyan and a tax free land gift. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. வீரபாண்டியன் என்ற முகத்தலளவை கூறப்படுகிறது. இறையிலி நிலக்கொடை பற்றிய கல்வெட்டு.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
Unfinished inscription. An individual Oruvaurnarnthan Nallaperumal Annan Tamilpallavaraiyan of Rajavallipuram in. Kilvamba nadu, donated tax free lands at Kuladipan village as davadiva to Thiruvathavur temple. 24 ft. measuring rod Sundara Pandyan 1801 by name is also mentioned. கீழ்வேம்ப நாட்டு இராஜவல்லிபுரத்து ஒருவாறுணர்ந்தான் நல்லபெருமாள் அண்ணன் தமிழ்ப் பல்லவரையன் கண்ணிறைஞ்சான என்பவன திருமறை நாயனார்க்குத் திருப்படி. மாற்று உள்ளிட்டு வேண்டும் செலவினங்களுக்கு குலதீபன் ஊர்ப் பகுதியில் தேவதான இறையிலியாக நிலங்கள் கொடுத்ததைக் கூறுகிறது. இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன் Care என்ற நிலம் அளக்கும் கோலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
Highly damaged inscription. Details are lost. கல்வெட்டு சிதைந்துள்ளது. செய்தி அறிய முடியவில்லை. திருவாதவூர் இறைவனது தேவதானம் பற்றிய கலவெட்டாகத் தெரிகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
Records the tax free donation of lands to the temple which were bought from one Kalavali Nadalvar, The prasasti of Jatavarma MKulasekhara is engraved in the later portion. Another one village Mandalikanallir by name was also donated as tax free to the temple. Taxes levied according to the variety of crops and their yields are mentioned,. களவழி நாடாழ்வார் என்னும் அதிகாரியிடமிருந்து விலைக்குப் பெற்ற தச்சன்குடிப் பகுதியில் இருந்த நிலங்களை இக்கோயிலுக்கு இறையிலியாக அளித்த செய்தி கூறப்படுகிறது, கல்வெட்டின் பிற்பகுதியில் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தி இடம் பெறுகிறது. அதன் தொடர்ச்சியாக மண்டலீகர் கெம்பீரநல்லூர், இறையிலி தேவதானமாகக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. வரிவிதிப்புகள் பயிர் வகைகள் மற்றும் விளைச்சலுக்கு ஏற்ப வரி பெறப்பட்டமையும் சொல்லப்படுகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
Damaged record, Seems to be a land donation by one Sri Vikkiramapandya Vilupparaiyan and another individual to Thirumarainayanar temple. திருமறைநாத நாயனார் கோயில் நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு இணங்க இறையிலியாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலமுடையானான ஸ்ரீவிக்கிரமபாண்டிய விழுப்பரையரும் திருக்குடந்தையைச் சேர்ந்த மற்றொருவரும் இந்நிலக் கொடையை அளித்துள்ளனர். கல்வெட்டு சிதைந்துள்ளது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
Slightly damaged record. It 1s a royal order of Kalavali Nadalvan, The names of certain villages Panankattankudi, Tuppaikkudi and Valaiyankudi are mentioned. திருமறை நாயனார்க்கு பனங்காட்டங்குடி, இலுப்பைக்குடி, மடைக்கழி ஏம்பலான வலையங்குடி ஆகிய ஊர்களை இறையிலிதானமாக வழங்கப்பட்டமை பற்றிய செய்தி. நிலவரிகள் சிலவும் குறிப்பிடப்படுகின்றன. களவழி நாடாழ்வான் ஓலையாக இக்கல்வெட்டு உள்ளது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
Two mutilated fragments. King is mentioned as the son of God in the first bit, The second bit enumarates some land taxes levied and a land sale. இரண்டு துண்டுக் கல்வெட்டுகள் முதல் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. நம் பிள்ளை என்று அரசனைத் தெய்வம் குறிப்பது போலத் தொடங்குகிறது. பிடிபாடு ஒன்றினையும் கூறுகிறது. இரண்டாவது பகுதி இறையிலியாக நிலங்கள் கொடுக்கப்பட்டதையும் சிலவரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு விலைக்கு நிலம் பெறப்பட்டதைக் குறிப்பிடுகிறது.