Skip to main content

1146 results found

மதுரை>மேலூர்>சொக்கலிங்கபுரம்
மதுரை சுரபி நாட்டு மேன்மலையூர் அழகிய சேழீசுவரமுடையாரின் திருப்படி மாற்று உள்ளிட்ட நிவந்தங்களுக்கு வஞ்சியூர் குளமும் அமுதனேரியின் தென்பால் உள்ளதுறையூர் குளமும் தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் அரச ஆணை, அதிகாரி காலிங்கராயன கேட்டுக் கொண்டதற்கிணங்க மனனன் அள்ளியூரில் தங்கியிருந்தபோது வழங்கிய கொடை இது.
மதுரை>மேலூர்>தருக்காக்குடி
மதுரை சிவன் கோயில் இறைவனுக்கு இறையிலியாக நிலமளித்ததையும் அதன் எல்லைகளையும் தெரிவிக்கிறது, இரண்டு துண்டுகளாக உளளது.
மதுரை>மேலூர்>தருக்காக்குடி
மதுரை திருக்காய்க்குடி திருக்கோடீசுவர முடையார் கோயிலில் ஐப்பசித் திங்களில் திருவமுது செய்வதற்காக பல ஊரார் சேர்ந்து இறையிலி நிலம் அளித்ததை. இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. வீரபாண்டியன் என்ற முகத்தலளவை கூறப்படுகிறது. இறையிலி நிலக்கொடை பற்றிய கல்வெட்டு.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை கீழ்வேம்ப நாட்டு இராஜவல்லிபுரத்து ஒருவாறுணர்ந்தான் நல்லபெருமாள் அண்ணன் தமிழ்ப் பல்லவரையன் கண்ணிறைஞ்சான என்பவன திருமறை நாயனார்க்குத் திருப்படி. மாற்று உள்ளிட்டு வேண்டும் செலவினங்களுக்கு குலதீபன் ஊர்ப் பகுதியில் தேவதான இறையிலியாக நிலங்கள் கொடுத்ததைக் கூறுகிறது. இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன் Care என்ற நிலம் அளக்கும் கோலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை கல்வெட்டு சிதைந்துள்ளது. செய்தி அறிய முடியவில்லை. திருவாதவூர் இறைவனது தேவதானம் பற்றிய கலவெட்டாகத் தெரிகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை களவழி நாடாழ்வார் என்னும் அதிகாரியிடமிருந்து விலைக்குப் பெற்ற தச்சன்குடிப் பகுதியில் இருந்த நிலங்களை இக்கோயிலுக்கு இறையிலியாக அளித்த செய்தி கூறப்படுகிறது, கல்வெட்டின் பிற்பகுதியில் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தி இடம் பெறுகிறது. அதன் தொடர்ச்சியாக மண்டலீகர் கெம்பீரநல்லூர், இறையிலி தேவதானமாகக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. வரிவிதிப்புகள் பயிர் வகைகள் மற்றும் விளைச்சலுக்கு ஏற்ப வரி பெறப்பட்டமையும் சொல்லப்படுகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருமறைநாத நாயனார் கோயில் நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு இணங்க இறையிலியாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலமுடையானான ஸ்ரீவிக்கிரமபாண்டிய விழுப்பரையரும் திருக்குடந்தையைச் சேர்ந்த மற்றொருவரும் இந்நிலக் கொடையை அளித்துள்ளனர். கல்வெட்டு சிதைந்துள்ளது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருமறை நாயனார்க்கு பனங்காட்டங்குடி, இலுப்பைக்குடி, மடைக்கழி ஏம்பலான வலையங்குடி ஆகிய ஊர்களை இறையிலிதானமாக வழங்கப்பட்டமை பற்றிய செய்தி. நிலவரிகள் சிலவும் குறிப்பிடப்படுகின்றன. களவழி நாடாழ்வான் ஓலையாக இக்கல்வெட்டு உள்ளது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை இரண்டு துண்டுக் கல்வெட்டுகள் முதல் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. நம் பிள்ளை என்று அரசனைத் தெய்வம் குறிப்பது போலத் தொடங்குகிறது. பிடிபாடு ஒன்றினையும் கூறுகிறது. இரண்டாவது பகுதி இறையிலியாக நிலங்கள் கொடுக்கப்பட்டதையும் சிலவரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு விலைக்கு நிலம் பெறப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருமறை நாயனார்க்கு நாற்பத்தெண்ணாயிரஈல்லூர் போன்ற சில ஊர்களிலிருந்து நிலங்களை விலைக்குக் கொண்டு இறையிலியாகக் கொடை அளித்ததைக் கல்வெட்டு கூறுகிறது. நாற்பத்தெண்ணாயிரஈல்லூர், வாகைக்குடி, முதலிய ஊர்களும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகினறன.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை இறைபிலி தானத்தைக் குறிப்பிடுகின்றது. நிலங்களின் தரம், பயிர்வாரியான வரிவிதிப்பு ஆகியவை கூறப்பட்டுள்ளன.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருமறை நாயனார்க்கு வேலங்குடியான தேவர்கள் தேவநல்லூரில் இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இராசேந்திரச் சோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடமிருந்து இந்நிலம் பெறப்பட்டிருக்கலாம். கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை துண்டுக் கல்வெட்டுகள். இறையிலி தானம் பற்றிக் கூறுகின்றன. மன்னனின் மெய்க்கீர்த்தியும், பெயரும், வடகளவழிநாடு எனும் பெயரும் காணப்படுகின்றன.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருவாதவூர் திருமறை நாயனார் கோயிலுக்கு உலகளந்த சோழபுரம், திருமறைநாயக நல்லூர் முதலிய ஊர்களிலிருந்து பலர் சேர்ந்து இறையிலி நிலமளித்ததை. இக்கல்வெட்டு தெரிவிக்கிறது தென்னகங்கதேவன் என்பவன் அரசனிடம் எடுத்துச் சொல்லி மக்களின் காராண்மை உரிமை பாதிக்கப்படாமல் இத்தானத்தைப் பெற்றுள்ளான்.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருமறைநாத சுவாமி கோயிலுக்கு இறையிலியாக நிலமளித்ததைத் தெரிவிக்கிறது. இச்செய்தி முந்தைய கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோனேரின்மை கொண்டான் என்ற பெயரில் அரச ஆணையாக இக்கல்வெட்டு உள்ளது. அரசாணை பல நிலைகளில் பல காலக்கட்டங்களில் நிறைவேற்றப்படுவதற்கு இக்கல்வெட்டு நல்ல எடுத்துக்காட்டாகும்.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருமறை நாயனார்க்கு அழுதுபடி, சாத்துப்படி திருமேற்பூச்சு, திருவிளக்கு, பயணிகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றுக்காகத் திருவாதவூர் குளத்து நீர்ப்பாசனத்தில் அமைந்த நிலங்களை இறையிலியாக அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் குழைஞ்சாள் அரசனான ஆலால சுத்தரநங்கை எனற இக்கோயில் தேவரடியாள் இக்கோயிவில் சந்திரசேகர், கெளரி ஆகியோரது செப்புத்திருமேனிகளைச் செய்வித்து திருவீதி எழுந்தருளச் செய்தமையையும் கூறுகிறது.
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை பாண்டியன் மன்னனின் அண்ணன் (அண்ணாழ்வி) பெயரால் சிறப்பு வழிபாடு திருமறை நாயனார் கோயிலில் ஏற்படுத்தி இறையிலியாக நிலமளித்தை இக்கல்வெட்டு கூறுகிறது. இவ்வழிபாடு சேரனை வென்றான் சந்தி என்று அழைக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியனுக்கு (கி. பி, 1268) சேரனை வென்றான் என்ற பட்டப்பெயர் உண்டு
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருவாதவூர் திருமறைநாதர் கோயிலுக்கு இறையிலி நிலம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. :
மதுரை>மேலூர்>திருவாதவூர்
மதுரை திருவாதவூர் திருமறை நாயனார் கோயிலுக்குப் பள்ளிக்குறிச்சியான சோணாடு கொண்ட பெருமாள் நல்லூர் இறையிலியாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் அரசஆணை கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலத்துக்கு பொன்வரி வாங்கக்கூடாது என அரசஆணை வெளியிடப்பட்டுள்ளது.