Fragmentary. Records the gift of tax free lands to the Thirumarai Nayanar temple which were brought from the villages like Ndarppaththennayiranallur and Vakaikkudi. The name of the Sthapathit of this temple Perumal Periyan alias Thillaivithi Divakaran is also traceable. :திருமறை நாயனார்க்கு நாற்பத்தெண்ணாயிரஈல்லூர் போன்ற சில ஊர்களிலிருந்து நிலங்களை விலைக்குக் கொண்டு இறையிலியாகக் கொடை அளித்ததைக் கல்வெட்டு கூறுகிறது. நாற்பத்தெண்ணாயிரஈல்லூர், வாகைக்குடி, முதலிய ஊர்களும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகினறன.
Damaged record. Mentions about the gift of tax free devadana lands by the Sabha of Rajendra Chola Chaturvedimangalam. Details of taxes levied according to the standard of lands and the variety of crops are also traceable.இறைபிலி தானத்தைக் குறிப்பிடுகின்றது. நிலங்களின் தரம், பயிர்வாரியான வரிவிதிப்பு ஆகியவை கூறப்பட்டுள்ளன.
Badly damaged record, Gift of lands from the village Velankudi alias Devarkal Devanallur to the temple Thirumarainathar by the Sabha of Rajendra Chola Chaturvedi-mangalam.திருமறை நாயனார்க்கு வேலங்குடியான தேவர்கள் தேவநல்லூரில் இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இராசேந்திரச் சோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடமிருந்து இந்நிலம் பெறப்பட்டிருக்கலாம். கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
Fragmentary. Seems to be a record of land donation.துண்டுக் கல்வெட்டுகள். இறையிலி தானம் பற்றிக் கூறுகின்றன. மன்னனின் மெய்க்கீர்த்தியும், பெயரும், வடகளவழிநாடு எனும் பெயரும் காணப்படுகின்றன.
Records the gift of certain lands from the villages like Ulakalantha Cholapuram and Thirumarainayaka Nallur to this temple. Thennagangadévan an diginitory pleaded the king to retain the Karanmai right and succeeded.திருவாதவூர் திருமறை நாயனார் கோயிலுக்கு உலகளந்த சோழபுரம், திருமறைநாயக நல்லூர் முதலிய ஊர்களிலிருந்து பலர் சேர்ந்து இறையிலி நிலமளித்ததை. இக்கல்வெட்டு தெரிவிக்கிறது தென்னகங்கதேவன் என்பவன் அரசனிடம் எடுத்துச் சொல்லி மக்களின் காராண்மை உரிமை பாதிக்கப்படாமல் இத்தானத்தைப் பெற்றுள்ளான்.
Records the gift of a dévadana land to the temple of Thirumarainathar for food offerings and other expenses. This is a record of execution of a royal order in different stages.திருமறைநாத சுவாமி கோயிலுக்கு இறையிலியாக நிலமளித்ததைத் தெரிவிக்கிறது. இச்செய்தி முந்தைய கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோனேரின்மை கொண்டான் என்ற பெயரில் அரச ஆணையாக இக்கல்வெட்டு உள்ளது. அரசாணை பல நிலைகளில் பல காலக்கட்டங்களில் நிறைவேற்றப்படுவதற்கு இக்கல்வெட்டு நல்ல எடுத்துக்காட்டாகும்.
Seems to be a record of the gift of tax free lands for food offerings, lamps and other expenses of the temple. The donated lands were irrigated by Thiruvathavir tank, This record also mentions about the installation of bronze images of Chandrasekara and Gowri by the temple dancing girl Kulafjal Arasan alias Alala Sundara Nangai and made arrangements for procession of the deities.திருமறை நாயனார்க்கு அழுதுபடி, சாத்துப்படி திருமேற்பூச்சு, திருவிளக்கு, பயணிகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றுக்காகத் திருவாதவூர் குளத்து நீர்ப்பாசனத்தில் அமைந்த நிலங்களை இறையிலியாக அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் குழைஞ்சாள் அரசனான ஆலால சுத்தரநங்கை எனற இக்கோயில் தேவரடியாள் இக்கோயிவில் சந்திரசேகர், கெளரி ஆகியோரது செப்புத்திருமேனிகளைச் செய்வித்து திருவீதி எழுந்தருளச் செய்தமையையும் கூறுகிறது.
Incomplete, Seems to be a record of the tax free gift of certain lands for the expenses of Céranat Venran Santhi and another Santhi instituted in the name of Annalvi (brother), Céranai Venran was one of the titles of Maravarman Kulasekara I (1268A. D. ).பாண்டியன் மன்னனின் அண்ணன் (அண்ணாழ்வி) பெயரால் சிறப்பு வழிபாடு திருமறை நாயனார் கோயிலில் ஏற்படுத்தி இறையிலியாக நிலமளித்தை இக்கல்வெட்டு கூறுகிறது. இவ்வழிபாடு சேரனை வென்றான் சந்தி என்று அழைக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியனுக்கு (கி. பி, 1268) சேரனை வென்றான் என்ற பட்டப்பெயர் உண்டு
Records the royal order which explicit the tax free donation of the village Pallkiurichchi alias Sonadukondaperumal Nallur to the temple. Gold tax was excempted from this village according to the royal order.திருவாதவூர் திருமறை நாயனார் கோயிலுக்குப் பள்ளிக்குறிச்சியான சோணாடு கொண்ட பெருமாள் நல்லூர் இறையிலியாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் அரசஆணை கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலத்துக்கு பொன்வரி வாங்கக்கூடாது என அரசஆணை வெளியிடப்பட்டுள்ளது.
Records the tax free gift of Pallikurichi Ur to the Thirumarai Nayanar temple as per the royal order. This village was given as manya for the warriors and it was administered by. Karnavars (a warrior group).அரசனது திருமுகப்படி. பள்ளிக்குறிச்சி எனற ஊர் திருவாதவூர் திருமறை நாயனார் கோயிலுக்கு இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மானிய ஊர் பள்ளிக்குறிச்சி. இதனைப் படைக்காரணவர் என்பார் நிருவகித்துள்ளனர்.
Incomplete record. Seems tobe a gift of tax free lands by two ladies in the old Dévadana village Panafigadi parru.எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆணைப்படி. திருவாதவூர் திருமறைகாயனாரின். பழந்தேவதானமான பனங்காடிப் பற்றில் இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கூத்தாண்டாள் மகள் அழகியநாச்சி, தாயாண்டாள் என்ற பெண்கள் இக்கொடையைச் செய்துள்ளனர்.
Records the gift of service lands to eight deity bearers by the temple authorities.திருமறைகாதர் கோயிலில் உலாக் காலங்களில் இறைவனைச் சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் தாங்கிகளான எட்டு நபர்களுக்குக் கோயிலைச் சேர்ந்த ஸ்ரீருத்ர மாகேஸ்வரர் ஆன தர்மகர்த்தாக்கள் இவ்வூரின் சில ஏரிகளின் பாசணத்தில உள்ள நிலங்களைக் காணியாகக் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
Incomplete inscription. Records aland donation to conduct Valangai Mikaman Thirunal (Festival).திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் அம்மான் மஹாபலி வாணாதராயர் அவருடைய பெயரால் பங்குனித் திங்களில் ஏற்படுத்திய வலங்கை மீகாமன் திருநாள் செலவினங்களுக்கு கூட்டாம்புளி, பாதிரிக்குடிப் பகுதியில் குடிநீங்கா இறையிலியாக நிலங்கள் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இந்நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் பெயர்களும் இவற்றிற்குரிய வரிகளும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பிள்ளையார் நோன்பு என்ற வரியும் குறிப்பிடப்படுகிறது.
Records an annual expenditure of eighty Palam Pon and eight hundred Irasi Panam collected from certain villages including Kuttampuli alias Valangai Mikamanallur.அரசனுக்குரிய அடுக்களைப்புறமான தென்பறப்பு நாட்டு கூட்டாம்புளியான வலங்கை மீகாமநல்லூரில் உள்ள நிலங்கள் இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இதன்படி பழம்பொன் எண்பதும், இராசிபணம் எண்ணூறும் ஆண்டு தோறும் திருவாதவூர்க் கோயில் நிர்வாகத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
Records certain land donation which was irrigated by the Ulakalantha Chola Péréri, for repairing some jewels of the temple.திருவாதவூரில் இருக்கும் சீவல்லவபுரத்து திருப்பூவணமுடையான அரசப்பிள்ளை சக்கரவர்த்தி என்பவன் திருவாதவூர் உலகளந்த சோழப் பேரேரியின் பாசனத்திலுள்ள சில நிலங்களைத் திருவாதவூர் கோயிலுக்கு இறையிலியாக அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது கோயிலில் திருவாபரணம் பழுது நீக்குவதற்கு (திருவாபரணப்- பார்வைக்கு) இக்கொடை அளிக்கப்பட்டது. இளவரசர்) தேவப் பெருமாள் திருமுகப்படி பலவரிகள் அரசவருவாயிலிருந்து கழிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
Records a land gift by one Thiruppuvanamudatyan alias Arasan Chakravarti, who was a merchant of Sivalapuram located within Thiruvathavar in Thenparappu Nadu.தென்பறப்பு நாட்டுத் திருவாதவூரில் நடுவீதியில் இருந்த சீவலலவபுரத்து வியாபாரி திருப்பூவணமுடையானான அரசன் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் திருவாதவூர் கோயிலுக்கு இறையிலியாக இருமா அரையே அரைக்காணி நிலம் அளித்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது, இது அரசனது அரண்மனைக்குரிய அடுக்களைப் புறப் பற்றிலிருந்து அளிக்கப்பட்டது, இக்கல்வெட்டில் கோயில் வினியோகம் தரவுக்கூலி, ஊர் வினியோகம் போன்ற பல வரிகள் அரசனது கணக்கிலிருந்து கழித்துக் கொடுக்கப்பட்டன.
Records that Periyan Uyyavandhan alias vikkirama singadevan, the Ahambadi Mudali of Pillai Mahavalivanadhirayar endowed this sluice.தென்கல்லக நாட்டுத் திருக்குறுமுள்ளூர் திருவக்கீ. . . ரமுடைய நாயனார்க்குத் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்காக வேண்டி இறையிலி தேவதானமாக ௬ழங்கப்பட்டிருந்த சில ஊர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
Seems to record an endowment of 50 sheep by one Thennavan Pallavaraiyan of Alanadu to the God at Thirukurmullur in Then Kallaka Naduதென்கல்லக நாட்டுத் திருக்குறுமுள்ளூர் இறைவனுக்கு அழநாட்டு தென்னவன் பல்லவரையன், கோவன் மாதேவன் என்பவரைச் சார்த்தி நொந்தா விளக்கொன்று இரவும் பகலும் எரிவதற்காக ஐம்பது ஆடுகள் கொடை வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
Seems to record an endowment for celebrating a certain festival in the temple.திருக்குறுமுள்ளூர் இறைவன் கோயிலில் விழாக் கொண்டாடுவதற்காக அளிக்கப்பட்ட கொடையைக் கூறுகிறது.