மதுரைஅரசனது திருமுகப்படி. பள்ளிக்குறிச்சி எனற ஊர் திருவாதவூர் திருமறை நாயனார் கோயிலுக்கு இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மானிய ஊர் பள்ளிக்குறிச்சி. இதனைப் படைக்காரணவர் என்பார் நிருவகித்துள்ளனர்.
மதுரைஎம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆணைப்படி. திருவாதவூர் திருமறைகாயனாரின். பழந்தேவதானமான பனங்காடிப் பற்றில் இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கூத்தாண்டாள் மகள் அழகியநாச்சி, தாயாண்டாள் என்ற பெண்கள் இக்கொடையைச் செய்துள்ளனர்.
மதுரைதிருமறைகாதர் கோயிலில் உலாக் காலங்களில் இறைவனைச் சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் தாங்கிகளான எட்டு நபர்களுக்குக் கோயிலைச் சேர்ந்த ஸ்ரீருத்ர மாகேஸ்வரர் ஆன தர்மகர்த்தாக்கள் இவ்வூரின் சில ஏரிகளின் பாசணத்தில உள்ள நிலங்களைக் காணியாகக் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
மதுரைதிருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் அம்மான் மஹாபலி வாணாதராயர் அவருடைய பெயரால் பங்குனித் திங்களில் ஏற்படுத்திய வலங்கை மீகாமன் திருநாள் செலவினங்களுக்கு கூட்டாம்புளி, பாதிரிக்குடிப் பகுதியில் குடிநீங்கா இறையிலியாக நிலங்கள் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இந்நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் பெயர்களும் இவற்றிற்குரிய வரிகளும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பிள்ளையார் நோன்பு என்ற வரியும் குறிப்பிடப்படுகிறது.
மதுரைஅரசனுக்குரிய அடுக்களைப்புறமான தென்பறப்பு நாட்டு கூட்டாம்புளியான வலங்கை மீகாமநல்லூரில் உள்ள நிலங்கள் இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இதன்படி பழம்பொன் எண்பதும், இராசிபணம் எண்ணூறும் ஆண்டு தோறும் திருவாதவூர்க் கோயில் நிர்வாகத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
மதுரைதென்பறப்பு நாட்டுத் திருவாதவூரில் நடுவீதியில் இருந்த சீவலலவபுரத்து வியாபாரி திருப்பூவணமுடையானான அரசன் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் திருவாதவூர் கோயிலுக்கு இறையிலியாக இருமா அரையே அரைக்காணி நிலம் அளித்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது, இது அரசனது அரண்மனைக்குரிய அடுக்களைப் புறப் பற்றிலிருந்து அளிக்கப்பட்டது, இக்கல்வெட்டில் கோயில் வினியோகம் தரவுக்கூலி, ஊர் வினியோகம் போன்ற பல வரிகள் அரசனது கணக்கிலிருந்து கழித்துக் கொடுக்கப்பட்டன.
மதுரைதென்கல்லக நாட்டுத் திருக்குறுமுள்ளூர் திருவக்கீ. . . ரமுடைய நாயனார்க்குத் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்காக வேண்டி இறையிலி தேவதானமாக ௬ழங்கப்பட்டிருந்த சில ஊர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
மதுரைதென்கல்லக நாட்டுத் திருகுறுமுள்ளூர் இறைவனுக்கு இந்நாட்டு மலவார்சோலை என்பவன் நிவந்தம் அளித்தமையைத் தெரிவிக்கும் கல்வெட்டாக இது இருக்கலாம். கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
மதுரைதென்கல்லக நாட்டுத் திருக்குறுமுள்ளூரான திருகோவனூர் இறைவர்க்கு இந்நாட்டைச் சேர்ந்த விக்கிரமசோழபுரத்து வியாபாரி குற்றாலம் நம்பனான இளைஞ்சிங்க தன்ம செட்டி என்பவன் அளித்த கொடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரைதுண்டுக் கல்வெட்டுகள். இறையிலியாக நிலம் வழங்கப்பட்டதைக் குறிக்கும் ஆவணத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. திருமந்திர ஓலை, திருநந்தி ஊருடையாள், மூவேந்தவேளான் போன்றோர் குறிப் பிடப்பட்டுள்ளனர். இவ்வாவணம் கல்லிலும் செம்பிலும் வெட்டிடப் பட்டிருந்தமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
மதுரைதிடியன் சீர்மை நாட்டாரான நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சந்தக்குடி திருக்குள இறைவனுக்கு துப்பக்குடி, சேந்தங்குடி, பாப்பாரபட்டி முதலிய ஊர்களின் நிலவருவாயினை நல்கி பட்டையம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
மதுரைதுண்டுக் கல்வெட்டுகள். விக்கிரம பாண்டிய ஈ. சுவரத்திற்குத் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதான இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்தமையைத் தெரிவிக்கிறது.
மதுரைஅரசன் குலசேகரன் பிறந்த நாளில் கோயிலில் திருநாள் கொண்டாடி இறைவன் எழுந்தருள வெள்ளெரிச்சிலான குலசேகரநல்லூர் தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பணத்திற்கு நில விற்பனை செய்யப்பட் டதையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
மதுரைதுண்டுக் கல்வெட்டுகள். குலசேகர பாண்டியன் பெயரால் வைகாசி திருநாளில் அவன் பிறந்த நட்சத்திரத்தில் கோயிலில் வழிபாடு செய்ய இறையிலியாக நிலக்கொடை அளித்ததை இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வெள்ளெரிச்சில் என்ற ஊர் குலசேகர நல்லூர் என்ற பெயரில் கோயிலுக்குத் தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது.
மதுரைகோயில் நிர்வாகத்தினர், பலதரப்பட்ட அரச அலுவலர்கள் ஆகியோரது பெயர்கள் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருநாளில் இறைவன் எழுந்தருளுவதற்குக் கொடை அளித்ததையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.