Skip to main content

1128 results found

மதுரை>உசிலம்பட்டி>ஆனையூர்
Fragment. Seems to record an endow- ment made by a certain individna! by name Malavar solai to the temple at Thirukkurumullur, in Thenkallaka Nadu. தென்கல்லக நாட்டுத் திருகுறுமுள்ளூர் இறைவனுக்கு இந்நாட்டு மலவார்சோலை என்பவன் நிவந்தம் அளித்தமையைத் தெரிவிக்கும் கல்வெட்டாக இது இருக்கலாம். கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
மதுரை>உசிலம்பட்டி>ஆனையூர்
Records an endowment made bya merchant of Vikkirama Cholapuram, by name Kurralam Namban alias llanchinga Dhanma Chetty to the God at Dhina Kovanur alias Thirukkurumullur, located within Kallaka nadu. தென்கல்லக நாட்டுத் திருக்குறுமுள்ளூரான திருகோவனூர் இறைவர்க்கு இந்நாட்டைச் சேர்ந்த விக்கிரமசோழபுரத்து வியாபாரி குற்றாலம் நம்பனான இளைஞ்சிங்க தன்ம செட்டி என்பவன் அளித்த கொடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>உசிலம்பட்டி>ஆனையூர்
Fragment. Prasasthi of Rajaraja 1 and the name of the God at Thirukkurumullur are traaceable கல்வெட்டு முழுமையாக இல்லை. இராசராசனின் மெய்க்கீர்த்திப் பகு; கோயில் இறைவன் பற்றிய குறிப்புமே கிடைக்கின்றன.
மதுரை>உசிலம்பட்டி>ஆனையூர்
Records an endowment of 2௦ sheep for a perpetual lamp to the God Thirukuru Mullur Devar of Then Kallaka Nadu, by a Kaikkola by name Damodharan Paranjothi. தென்கல்லக நாட்டுத் திருகுறுமுள்ளூர் இறைவனுக்குத் தாமோதரன். பரஞ்சோதி என்ற கைக்கோளர் நித்தம் ஆழாக்கு நெய்யால் நொந்தா விளக்கெரிப்பதற்காக 25 ஆடுகள் வழங்கியுள்ளமையைக் குறிப்பிடுகிறது.
மதுரை>உசிலம்பட்டி>ஆனையூர்
Seems to be a portion of the document of a donated land. துண்டுக் கல்வெட்டுகள். இறையிலியாக நிலம் வழங்கப்பட்டதைக் குறிக்கும் ஆவணத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. திருமந்திர ஓலை, திருநந்தி ஊருடையாள், மூவேந்தவேளான் போன்றோர் குறிப் பிடப்பட்டுள்ளனர். இவ்வாவணம் கல்லிலும் செம்பிலும் வெட்டிடப் பட்டிருந்தமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
மதுரை>திருமங்கலம்>சிந்துபட்டி
Damaged Thidiyan village 6 mentioned as Sirmai. The names of certain people like Nagama Nayakkar, Namashivaya Nayakkar, Govindhappa Nayakkar, Oluvaiya Nayakkar, Sundhaiya Nayakkar, Dhilanagappa Nayakkar, Kaathalya Nayakkar etc. are traceable. who were the then nattars of Thidiyan Sirmai. The names of certain villages like Gundukudi Sendhankudi, Pappakkudi etc. also are traceable from this inscription. திடியன் சீர்மை நாட்டாரான நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சந்தக்குடி திருக்குள இறைவனுக்கு துப்பக்குடி, சேந்தங்குடி, பாப்பாரபட்டி முதலிய ஊர்களின் நிலவருவாயினை நல்கி பட்டையம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
மதுரை>திருமங்கலம்>கொக்குலாஞ்சேரி
Mention the details of a land endowed to the temple Vikkrama Pandya iswaram. துண்டுக் கல்வெட்டுகள். விக்கிரம பாண்டிய ஈ. சுவரத்திற்குத் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதான இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்தமையைத் தெரிவிக்கிறது.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
Mutilated records. Arrangement was made to celebrate special festival on the birthday of the Pandya King Kulasekhara by the donation of the village Vellericcil alias Kulasekhara Nallur. Sale deed of a land for a cost of 1000 panam is also known. அரசன் குலசேகரன் பிறந்த நாளில் கோயிலில் திருநாள் கொண்டாடி இறைவன் எழுந்தருள வெள்ளெரிச்சிலான குலசேகரநல்லூர் தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பணத்திற்கு நில விற்பனை செய்யப்பட் டதையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
Fragmentary inscriptions. Donation of tax free land to the temple for the special pooja on the natal star of the king Kulasekhara Pandya in the month of Vaikasi is mentioned. A village Vellericcil by name is renamed as Kulasekhara nallur and donated to the temple as a devadana. துண்டுக் கல்வெட்டுகள். குலசேகர பாண்டியன் பெயரால் வைகாசி திருநாளில் அவன் பிறந்த நட்சத்திரத்தில் கோயிலில் வழிபாடு செய்ய இறையிலியாக நிலக்கொடை அளித்ததை இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வெள்ளெரிச்சில் என்ற ஊர் குலசேகர நல்லூர் என்ற பெயரில் கோயிலுக்குத் தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
Fragmentary records. Temple administration and royal officers are mentioned. Donation for the temple festivals and procession of Gods are also known. கோயில் நிர்வாகத்தினர், பலதரப்பட்ட அரச அலுவலர்கள் ஆகியோரது பெயர்கள் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருநாளில் இறைவன் எழுந்தருளுவதற்குக் கொடை அளித்ததையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
Damaged records. Donations for the food offerings on the festival days, for making flower garden in the name of Pandya King Kulasekhara Pandya. Details of temple administration and certain taxes are also mentioned. திருநாளின்போது இறைவன் எழுந்தருளுவதற்கும் திருவமுது செய்வதற்கும் திருநந்தவனத்திற்கும் பாண்டியன் குலசேகரனின் பெயரால் தானம் அளித்தது தொடர்பான கல்வெட்டுகள் கோயில் நிர்வாகம், வரிகள் பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
Gift of tax free lands to the temple. Individuals names such as Punniyan alias Purana Vilanka Marayan, Ambalavan Seevan, Pukazhiventhan are some how related to this record. கோயிலுக்கு இறையிலியாக கொடுத்த நிலங்களின் விபரம் இடம் பெறுகிறது. புண்ணியனான புராண விடங்கமாராயன், அம்பலவன் சீவன், புகழிவேந்தன் ஆகியோர் இதில் தொடர்புடையவர்களாக வருகின்றனர்.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
Fregmentary records. Seems to be a tax free gift of land to the temple. Various taxes are mentioned. Names of some signatories are also traceable. சிவன் கோயிலுக்கு இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டு அவற்றிற் குரிய வரி விகிதங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாவணத்தில் கையொப்பம் இட்டவர் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
Seems to be a land sale to the Manikaya- mudaiyar temple by the Sabha of Chola Pandya Chaturvedimangalam in Karunilakkudinadu. தென்முட்ட நாட்டு மணிக்கயமுடைய பரம சுவாமிகள் கோயிலுக்குக் கருநிலக்குடி நாட்டுப் பிரமதேயம் சோழ பாண்டியச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
A sale deed of a land given to the Siva temple of the village Manikayam is mentioned. பல இடங்களில் சிதைந்துள்ளது. மணிக்கயமுடைய இறைவனுக்கு நிலம் விற்றுத் தரப்பட்டதைச் சொல்லும் ஆவண அமைப்புக் கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திரைலோக்கி
- முதலாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்தியுடன் கல்வெட்டுத் தொடங்குகிறது பிற்பகுதி விடுபட்டுள்ளது. மகாதேவபட்ட சோமாஸியார் மகன் கொண்டம் பட்ட வஸந்தயாஜி என்பார் கோயிலுக்குப் பெருமக்கள் உண்ணுவதற்காக நிலம் கொடையளித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு, அந்நிலம் இறையிலியாக்கித் தரப்படுவதாக, மகாசபைப் பெருமக்கள் எழுதிக்கொடுத்த ஆவணம் இது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திரைலோக்கி
- கல்வெட்டின் முதலிலும், இறுதியிலும் ஒவ்வொரு வரியும் கட்டிடத்தினுள் சென்று விட்டது. இக்கோயில் இறைவனுக்குத் திருவிழாப்புறமாக விட்ட நிலத்தினை மகாசபையினர் இறையிலியாக்கியதைக் குறிக்கிறது. இந்நிலம், முன்னாளில் வரகுணப் பெருமாளால் அளிக்கப்பட்டது. இறைவன் கலியாணசுந்தரராக மார்கழித் திருவிழாவின்போது நகர்வலம் வருவதற்கும், பிற விழா, வழிபாடுகளுக்கும் அளிக்கப்பட்டது. மேலும், நாட்டுக்கும், ஊருக்கும் நன்மையாகும் பொருட்டு இத்திருவிழா எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
- கல்வெட்டின் இறுதிப்பகுதி மட்டுமே உள்ளது. தக்ஷிணாயனம், உத்திராயனம் ஆகிய இரு அயனங்களும், சித்திரை விஷு, ஐப்பசி விஷு ஆகிய இரு விஷுக்களும், (சூரிய சந்திர] கிரணங்களும் ஆகிய நாட்களில் இறைவன் அமுது செய்தருள நிலம் கொடையளித்ததைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
- இராஜசுந்தரிச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையினர், செந்நெறியுடையார் கோயிலில் உள்ள உமாமகேஸ்வரருக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு நிலம் அளித்ததைக் குறிக்கிறது. திரிபுவன மாதேவி வதி, ராஜராஜ வாய்க்கால் ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன. திருமுத்தீசுரமுடையார் என்ற இறைவன் பெயரும் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. கல்வெட்டு முழுவதும் கிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
- திருவிசலூர்க் கோயில் பட்டப் பெருமக்கள் உள்ளிட்ட மகாசபையினர், திருச்சி செந்நெகி உடையாற்கு இறையிலியாக நிலம் அளித்ததைக் குறிப்பிடுகிறது.