Skip to main content

1146 results found

மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
மதுரை திருநாளின்போது இறைவன் எழுந்தருளுவதற்கும் திருவமுது செய்வதற்கும் திருநந்தவனத்திற்கும் பாண்டியன் குலசேகரனின் பெயரால் தானம் அளித்தது தொடர்பான கல்வெட்டுகள் கோயில் நிர்வாகம், வரிகள் பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
மதுரை கோயிலுக்கு இறையிலியாக கொடுத்த நிலங்களின் விபரம் இடம் பெறுகிறது. புண்ணியனான புராண விடங்கமாராயன், அம்பலவன் சீவன், புகழிவேந்தன் ஆகியோர் இதில் தொடர்புடையவர்களாக வருகின்றனர்.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
மதுரை சிவன் கோயிலுக்கு இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டு அவற்றிற் குரிய வரி விகிதங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாவணத்தில் கையொப்பம் இட்டவர் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
மதுரை தென்முட்ட நாட்டு மணிக்கயமுடைய பரம சுவாமிகள் கோயிலுக்குக் கருநிலக்குடி நாட்டுப் பிரமதேயம் சோழ பாண்டியச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
மதுரை>பேரையூர்>மேலத்திருமாணிக்கம்
மதுரை பல இடங்களில் சிதைந்துள்ளது. மணிக்கயமுடைய இறைவனுக்கு நிலம் விற்றுத் தரப்பட்டதைச் சொல்லும் ஆவண அமைப்புக் கல்வெட்டு.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திரைலோக்கி
தஞ்சாவூர் முதலாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்தியுடன் கல்வெட்டுத் தொடங்குகிறது பிற்பகுதி விடுபட்டுள்ளது. மகாதேவபட்ட சோமாஸியார் மகன் கொண்டம் பட்ட வஸந்தயாஜி என்பார் கோயிலுக்குப் பெருமக்கள் உண்ணுவதற்காக நிலம் கொடையளித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு, அந்நிலம் இறையிலியாக்கித் தரப்படுவதாக, மகாசபைப் பெருமக்கள் எழுதிக்கொடுத்த ஆவணம் இது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திரைலோக்கி
தஞ்சாவூர் கல்வெட்டின் முதலிலும், இறுதியிலும் ஒவ்வொரு வரியும் கட்டிடத்தினுள் சென்று விட்டது. இக்கோயில் இறைவனுக்குத் திருவிழாப்புறமாக விட்ட நிலத்தினை மகாசபையினர் இறையிலியாக்கியதைக் குறிக்கிறது. இந்நிலம், முன்னாளில் வரகுணப் பெருமாளால் அளிக்கப்பட்டது. இறைவன் கலியாணசுந்தரராக மார்கழித் திருவிழாவின்போது நகர்வலம் வருவதற்கும், பிற விழா, வழிபாடுகளுக்கும் அளிக்கப்பட்டது. மேலும், நாட்டுக்கும், ஊருக்கும் நன்மையாகும் பொருட்டு இத்திருவிழா எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
தஞ்சாவூர் கல்வெட்டின் இறுதிப்பகுதி மட்டுமே உள்ளது. தக்ஷிணாயனம், உத்திராயனம் ஆகிய இரு அயனங்களும், சித்திரை விஷு, ஐப்பசி விஷு ஆகிய இரு விஷுக்களும், (சூரிய சந்திர] கிரணங்களும் ஆகிய நாட்களில் இறைவன் அமுது செய்தருள நிலம் கொடையளித்ததைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
தஞ்சாவூர் இராஜசுந்தரிச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையினர், செந்நெறியுடையார் கோயிலில் உள்ள உமாமகேஸ்வரருக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு நிலம் அளித்ததைக் குறிக்கிறது. திரிபுவன மாதேவி வதி, ராஜராஜ வாய்க்கால் ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன. திருமுத்தீசுரமுடையார் என்ற இறைவன் பெயரும் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. கல்வெட்டு முழுவதும் கிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
தஞ்சாவூர் திருவிசலூர்க் கோயில் பட்டப் பெருமக்கள் உள்ளிட்ட மகாசபையினர், திருச்சி செந்நெகி உடையாற்கு இறையிலியாக நிலம் அளித்ததைக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
தஞ்சாவூர் சாரபரமேஸ்வரர் (திருச்செந்நெறியுடையார்) கோவிலுக்கு மூன்று மா நிலத்தினை ஏழு கழஞ்சரைப் பொன்னுக்கு வாங்கிக்கொண்டு, அதனை இறையிலி நிலமாக்கியதைக் குறிக்கிறது, இவ்வூர் மகாசபைப் பெருமக்கள் இதனை எழுதி அளித்தள்ளனர். கங்கைகொண்ட சோழ விண்ணகராழ்வார் என்ற ஒரு வைணவக் கோயிலின் இறைவன் பெயர் இதில் இடம் பெறுகின்றது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
தஞ்சாவூர் திருவிசலூர் பட்டப் பெருமக்கள் உள்ளிட்ட மகாசபைப் பெருமக்கள், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பள்ளியறை நாச்சியாற்கு இறையிலியாக நிலம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. தனித்தனியாக மூன்று இடங்களில், இவ்வூர் இறைவன் செந்நெறியுடையார் பெயரில் நிலம் வாங்கியுள்ளனர். அந்த மொத்த நிலம் இரண்டரையே ஒருமாவினையும், இருநூற்று நாற்பத்தெட்டுக் காசுகளுக்கு வாங்கி இறையிலியாக்கியிருக்கின்றனர். மற்றொரு நிலம், நாற்பத்தேழரைக் காசுகளுக்கு வாங்கி அளிக்கப்பட்டு இருக்கின்றது. அச்செய்தியும் இறுதியில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நிலங்களுக்கும் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரியிலும் இறுதி சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>கஞ்சனூர்
தஞ்சாவூர் துண்டுக் கல்வெட்டுக்கள், முதல் தண்டு வீரராஜேந்திர சோழனின் காலத்தது. அவிமுக்தீஸ்வரமுடையார் என்று இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. இரண்டானது துண்டில், இக்கோயில் கல்லால் செய்யப்பட்ட குறிப்பு வருகின்றது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருவல்லியங்குடி
தஞ்சாவூர் க்ஷேத்திரபாலக்கு அளித்த நிலக்கொடையைக் குறிப்பதாகக் தெரிகிறது. உடையார் விக்கிறக சோளீசுரமுடையார் என்ற இறைவன் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்களித்திட்டை
தஞ்சாவூர் இராஜாதிராஜனின் (முதலாம்) ஆட்சியாண்டில் திருக்குடித்திட்டை இறைவனுக்கு பெரியரையைபட்டன் மனையாள் உய்யக்கொண்டசானி என்பாள் முப்பது வட்டத்து சிவப் பிராமணர்களான குலோத்துங்க சோழ பட்டன், திருச் சிற்றம்பல பட்டன், தில்லை நாயகபட்டன், ராஜதிரபட்டன் நாற்பத்தெண்ணாயிர பட்டன் ஆகியோரிடம் பத்து காசு அளித்து சத்திராதித்யவரை சந்தி விளக்கு ஒன்று எரிக்கச் செய்தாள் என்பதை இக்கல்வெட்டு கூறுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்களித்திட்டை
தஞ்சாவூர் வடகரை வேம்பற்றூர் ஸ்ரீகுடித்திட்டை இறைவனுக்கு ஸேதா பத்யம் (சேனபதி) செய்கின்ற சிறிய வேளானான திருக்கற்றளிப் பிச்சன் என்பான் இத்தேவரின் திருமந்திர போநகத்துக்கு இறையிலியாக நிலம் அளித்திருக்கிறான். அந்த நிலத்திற்கு எல்லையும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப் பகுதி சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்களித்திட்டை
தஞ்சாவூர் இக்கல்வெட்டு பெரிதும் சிதைந்துள்ளது. கோயிலுக்கு இறையிலி அளித்தது. பற்றி இருக்கலாம். சேந்தன் தாமோதிரனான ஆயிரத்தொரு நாற்றுவன். பரம சிவன் ஸ்ரீகுருகூர் திருமாதிரஞ்சோலை ஆகிய பெயர்களும் காணப்படுகின்றன. கல்லெட்டில் தொடக்கம் இல்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் பாண்டிய குலாசநி வளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்தைச் சார்ந்த அரைசூருடையான் அரையன் குணதாயான் இலங்கேங்வரன் என்பானின் மனைவி, அவளது மாமனார் மலைக்கினிய நின்றான் இராமதேவனான சயங்கொண்ட சோழப் பல்லவரையனை முதுகண்ணாகக் கொண்டு, அமாவாஸி தோறும் இறைவன், தேவி, செல்லர், அத்திரதேவர் ஆகியோரை எழுத்தருளச் செய்யவும், வழிபாட்டுக்காகவும் இறையிலியாகக் கொடையளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டின் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் மாறஞ்சடையனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திருக்குடமூக்குத் திருக்கீழ்க்கோட்டத்துப் படாரகர் கோயிலில் இரண்டு விளக்கெரிக்க 100 காசுகளும், பாலுக்கு 138 பசுக்களும் இம்மன்னன் கொடையளித்ததைக் கூறுகிறது. [இம்மன்னன் யாரென அறிய இயலவில்லை. திருக்கீழ்க்கோட்டம் சைவசமயத்தின் சிறப்பிடம் பெறுவது. இங்கு விஸ்வகர்மாவின் சாபத்திற்கு இலக்கான சூரியன் இறைவன் வழிபட்டு, மீண்டும் ஒளி பெற்றதாகக் கூறும் புராண வரலாறு உண்டு. )
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் பகுதி I-ல் காரோணமுடையார் என்ற இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. துண்டுக் கல்வெட்டு. இவ்வூர்க் கல்வெட்டு எண் 36-லும் திருக்காரோணமுடையார் என்ற இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. பகுதிII-ல் விளக்கெரிக்க அளித்த கொடையும். பகுதி III-ல் அமுதுசெய்யஅளித்த கொடையும் குறிப்பிடப்படுகிறது.