1128 results found
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
- சாரபரமேஸ்வரர் (திருச்செந்நெறியுடையார்) கோவிலுக்கு மூன்று மா நிலத்தினை ஏழு கழஞ்சரைப் பொன்னுக்கு வாங்கிக்கொண்டு, அதனை இறையிலி நிலமாக்கியதைக் குறிக்கிறது, இவ்வூர் மகாசபைப் பெருமக்கள் இதனை எழுதி அளித்தள்ளனர். கங்கைகொண்ட சோழ விண்ணகராழ்வார் என்ற ஒரு வைணவக் கோயிலின் இறைவன் பெயர் இதில் இடம் பெறுகின்றது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருச்சேறை
- திருவிசலூர் பட்டப் பெருமக்கள் உள்ளிட்ட மகாசபைப் பெருமக்கள், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பள்ளியறை நாச்சியாற்கு இறையிலியாக நிலம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. தனித்தனியாக மூன்று இடங்களில், இவ்வூர் இறைவன் செந்நெறியுடையார் பெயரில் நிலம் வாங்கியுள்ளனர். அந்த மொத்த நிலம் இரண்டரையே ஒருமாவினையும், இருநூற்று நாற்பத்தெட்டுக் காசுகளுக்கு வாங்கி இறையிலியாக்கியிருக்கின்றனர். மற்றொரு நிலம், நாற்பத்தேழரைக் காசுகளுக்கு வாங்கி அளிக்கப்பட்டு இருக்கின்றது. அச்செய்தியும் இறுதியில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நிலங்களுக்கும் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரியிலும் இறுதி சிதைந்துள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கஞ்சனூர்
- துண்டுக் கல்வெட்டுக்கள், முதல் தண்டு வீரராஜேந்திர சோழனின் காலத்தது. அவிமுக்தீஸ்வரமுடையார் என்று இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. இரண்டானது துண்டில், இக்கோயில் கல்லால் செய்யப்பட்ட குறிப்பு வருகின்றது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவல்லியங்குடி
- க்ஷேத்திரபாலக்கு அளித்த நிலக்கொடையைக் குறிப்பதாகக் தெரிகிறது. உடையார் விக்கிறக சோளீசுரமுடையார் என்ற இறைவன் பெயரும் குறிப்பிடப்படுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்களித்திட்டை
- இராஜாதிராஜனின் (முதலாம்) ஆட்சியாண்டில் திருக்குடித்திட்டை இறைவனுக்கு பெரியரையைபட்டன் மனையாள் உய்யக்கொண்டசானி என்பாள் முப்பது வட்டத்து சிவப்பிராமணர்களான குலோத்துங்க சோழ பட்டன், திருச் சிற்றம்பல பட்டன், தில்லை நாயகபட்டன், ராஜதிரபட்டன் நாற்பத்தெண்ணாயிர பட்டன் ஆகியோரிடம் பத்து காசு அளித்து சத்திராதித்யவரை சந்தி விளக்கு ஒன்று எரிக்கச் செய்தாள் என்பதை இக்கல்வெட்டு கூறுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்களித்திட்டை
- வடகரை வேம்பற்றூர் ஸ்ரீகுடித்திட்டை இறைவனுக்கு ஸேதா பத்யம் (சேனபதி) செய்கின்ற சிறிய வேளானான திருக்கற்றளிப் பிச்சன் என்பான் இத்தேவரின் திருமந்திர போநகத்துக்கு இறையிலியாக நிலம் அளித்திருக்கிறான். அந்த நிலத்திற்கு எல்லையும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப் பகுதி சிதைந்துள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்களித்திட்டை
- இக்கல்வெட்டு பெரிதும் சிதைந்துள்ளது. கோயிலுக்கு இறையிலி அளித்தது. பற்றி இருக்கலாம். சேந்தன் தாமோதிரனான ஆயிரத்தொரு நாற்றுவன். பரம சிவன் ஸ்ரீகுருகூர் திருமாதிரஞ்சோலை ஆகிய பெயர்களும் காணப்படுகின்றன. கல்லெட்டில் தொடக்கம் இல்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- பாண்டிய குலாசநி வளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்தைச் சார்ந்த அரைசூருடையான் அரையன் குணதாயான் இலங்கேங்வரன் என்பானின் மனைவி, அவளது மாமனார் மலைக்கினிய நின்றான் இராமதேவனான சயங்கொண்ட சோழப் பல்ல வரையனை முதுகண்ணாகக் கொண்டு, அமாவாஸி தோறும் இறைவன், தேவி, செல்லர், அத்திரதேவர் ஆகியோரை எழுத்தருளச் செய்யவும், வழிபாட்டுக்காகவும் இறையிலியாகக் கொடையளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டின் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
On the West wall of the shrine of the goddess in the Nagesvara Temple. A record in the eighth year of the Pandya king Maran - jadaiyan. Records gift of 138 cows for milk and 100 kasu for two lamps by the king to the temple of Tirukkilkottattu Bhatara at Thirukkudamukku (The exact identity of Maranjadaiyan is not known. Thirukkudandai kilkottam is famous in Saivaite tradition as the place where the sun worshipped Siva and got back the splendour which he had lost owing to Visvakarma s curse). மாறஞ்சடையனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திருக்குடமூக்குத் திருக்கீழ்க்கோட்டத்துப் படாரகர் கோயிலில் இரண்டு விளக்கெரிக்க 100 காசுகளும், பாலுக்கு 138 பசுக்களும் இம்மன்னன் கொடையளித்ததைக் கூறுகிறது. [இம்மன்னன் யாரென அறிய இயலவில்லை. திருக்கீழ்க்கோட்டம் சைவசமயத்தின் சிறப்பிடம் பெறுவது. இங்கு விஸ்வகர்மாவின் சாபத்திற்கு இலக்கான சூரியன் இறைவன் வழிபட்டு, மீண்டும் ஒளி பெற்றதாகக் கூறும் புராண வரலாறு உண்டு. )தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- பகுதி I-ல் காரோணமுடையார் என்ற இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. துண்டுக் கல்வெட்டு. இவ்வூர்க் கல்வெட்டு எண் 36-லும் திருக்காரோணமுடையார் என்ற இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. பகுதிII-ல் விளக்கெரிக்க அளித்த கொடையும். பகுதி III-ல் அமுதுசெய்யஅளித்த கொடையும் குறிப்பிடப்படுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- துர்க்கை கருவறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினுள் சென்று விட்ட தால் பாதி மறைந்த கல்வெட்டு. பள்ளியறை கல்வெட்டு. பள்ளியறை இறைவனுக்கு. உச்சியம் போது அமுது செய்வதனைக் குறிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்குத் தொண்ணூற்று ஆறு ஆடுகளை விளக்கெரிக்க காரி விழுப்பரையன் என்பான் அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- விசைய ராஜேந்திரனான முதலாம் இராஜாதிராஜன் காலத்தில், திருக்காரோண முடைய மகாதேவருக்கும், கன்னியாபிடாரிக்கும் மூலபருடையார் இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதற்காக நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது கழஞ்சுப் பொன் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இவ்விலை யாவணத்தினை, திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் வெட்டியுள்ளனர். இதில் குறிப்பிடப்பெறும் இறைவன் கோயில் எங்குளது என அறிய இயலவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு எழுதிக்கொடுத்த நிலவிலை ஆவணம் இது. கல்வெட்டு சிதைந்துவிட்டதால் முழுச் செய்தியும் அறிய இயலவில்லை. இதைவிட சிறிது விளக்கம் கிடைப்பதால், இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையும் இத்துடன் தரப்படுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- மலைநாட்டு நெடும்புறையூர் நாட்டைச் சேர்ந்த. பூவங்கண்ணன் என்பான் திருக் கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 25 பொன் அளிக்கக் கருதி, அதற்குப்பதிலாக நிலமாகக் கொடுத்துள்ளான்.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- மாடிலன் பட்டன் மகாதேவன் நாராயணன் என்பான் திருக்கீழ்க் கோட்டத்து இறைவனுக்கு நொந்தா விளக்குக்கும், சூரிய தேவற்கு, சிதாரிக்கும், கற்பூர விளக்குக்கும் வகை செய்ததைக் குறிக்கிறது. அதற்காக 30 மஞ்சாடிப் பொன் கொடுத்து அதன் மூலம் நிலம் வாங்கித் தந்ததைக் குறிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- வீரசோழத் தெரிஞ்ச கைக்கோளர் என்பார், தான் எழுந்தருளச் செய்த இறைவனுடைய ஸ்ரீபலிக்காக 70 ஈழக்காசுகளை அளித்து, அதில் வரும் வட்டியின் மூலமாக, ஆண்டுக்கு 60 கல நெல்லினை அளிக்க வகை செய்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இக்கல்வெட்டுள், பாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேஸரி வர்மனின் மூன்றாம் ஆட்சியாண்டும் குறிக்கப்படுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- தஞ்சாவூர் கற்றளிப்பிராட்டியார் வேளத்துப் பெண்டாட்டி மாநெதநங்கண்டி 20 காசினை மூலபருடைப் பெருமக்களிடம் அளித்துள்ளாள். அதனைக் கொண்டு காவிரியிலிருந்து மூன்று போதும் இறைவன் நீராட்டுக்கு நீர் கொண்டு தருவான் ஒருவனுக்கு போகமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இக்கல்வெட்டில் பஞ்சாங்கக் குறிப்புக்கள் ஆண்டு, திங்கள், பக்கம், பொழுது, பருவம் என்ற முறையில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- ஆழ்வான் திருப்புறம்பியமுடையான் ஆன செம்பியன் பல்லவரையன் என்பான் கீழ்க்கோட்டமுடையார் கோயிலின் கிழக்குத் திருச்சுற்று மாளிகையில், தன் பெயரில் திருப்புறம்பியமுடையாரெனும் இறைவனை எழுந்தருளச் செய்தான். விறைவனுக்குப் பூசை, திருவமுது. திருவிளக்குகள் இவைகளுக்குள். பூசை செய்யும் தம்பிமார்களுக்கு நிமந்தத்திற்குள், திருக்கீழ்க்கோட்டமுடையாருக்கு மகர தோரணம் செய்து அளிப்பதற்கும் ஆகிய திருப்பணிகளுக்குக் கோவிற் பண்டாரத் தில் 17, 000 காசுகள் அளித்துள்ளான். இச்செய்தியினை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- ஆற்றாருடையான் அரையன் ராஜராஜ தேவனான வாணகோவரையன் என்பான் ராஜராஜீஸ்யரமுடையார் மாநிலைத் திருநந்தவனம் என்னும் பெயரால் நந்தவனம் அமைத்ததையும், இக்கோவிலும் திருமுற்றமும் திருமடை விளாகமும் தீர்த்தக் குளமும், திருநந்தவனமும், உள்ளிட்டவைகளுக்கு நிலம் இறையிலியாக வழங்கியதையும் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகள் குறிக்கப்படுகின்றன. கல்லெட்டின் இறுதிப்பகுதியில் அளக்கவேண்டிய நெல்லின் அளவைகள் குறிக்கப்படுகின்றன. முதற்குலோத்துங்க சோழனின் 16-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்படுகிறது.கல்வெட்டின் நடுநடுவே புதிய கட்டடங்களை எழுப்பிவிட்டதால் தொடர்ச்சியாகப் படிக்க இயலவில்லை.