Skip to main content

1146 results found

தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் துர்க்கை கருவறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினுள் சென்று விட்ட தால் பாதி மறைந்த கல்வெட்டு. பள்ளியறை கல்வெட்டு. பள்ளியறை இறைவனுக்கு. உச்சியம் போது அமுது செய்வதனைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்குத் தொண்ணூற்று ஆறு ஆடுகளை விளக்கெரிக்க காரி விழுப்பரையன் என்பான் அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் விசைய ராஜேந்திரனான முதலாம் இராஜாதிராஜன் காலத்தில், திருக்காரோண முடைய மகாதேவருக்கும், கன்னியாபிடாரிக்கும் மூலபருடையார் இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதற்காக நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது கழஞ்சுப் பொன் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இவ்விலை யாவணத்தினை, திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் வெட்டியுள்ளனர். இதில் குறிப்பிடப்பெறும் இறைவன் கோயில் எங்குளது என அறிய இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு எழுதிக்கொடுத்த நிலவிலை ஆவணம் இது. கல்வெட்டு சிதைந்துவிட்டதால் முழுச் செய்தியும் அறிய இயலவில்லை. இதைவிட சிறிது விளக்கம் கிடைப்பதால், இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையும் இத்துடன் தரப்படுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் மலைநாட்டு நெடும்புறையூர் நாட்டைச் சேர்ந்த. பூவங்கண்ணன் என்பான் திருக் கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 25 பொன் அளிக்கக் கருதி, அதற்குப்பதிலாக நிலமாகக் கொடுத்துள்ளான்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் மாடிலன் பட்டன் மகாதேவன் நாராயணன் என்பான் திருக்கீழ்க் கோட்டத்து இறைவனுக்கு நொந்தா விளக்குக்கும், சூரிய தேவற்கு, சிதாரிக்கும், கற்பூர விளக்குக்கும் வகை செய்ததைக் குறிக்கிறது. அதற்காக 30 மஞ்சாடிப் பொன் கொடுத்து அதன் மூலம் நிலம் வாங்கித் தந்ததைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் வீரசோழத் தெரிஞ்ச கைக்கோளர் என்பார், தான் எழுந்தருளச் செய்த இறைவனுடைய ஸ்ரீபலிக்காக 70 ஈழக்காசுகளை அளித்து, அதில் வரும் வட்டியின் மூலமாக, ஆண்டுக்கு 60 கல நெல்லினை அளிக்க வகை செய்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இக்கல்வெட்டுள், பாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேஸரி வர்மனின் மூன்றாம் ஆட்சியாண்டும் குறிக்கப்படுகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் தஞ்சாவூர் கற்றளிப்பிராட்டியார் வேளத்துப் பெண்டாட்டி மாநெதநங்கண்டி 20 காசினை மூலபருடைப் பெருமக்களிடம் அளித்துள்ளாள். அதனைக் கொண்டு காவிரியிலிருந்து மூன்று போதும் இறைவன் நீராட்டுக்கு நீர் கொண்டு தருவான் ஒருவனுக்கு போகமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இக்கல்வெட்டில் பஞ்சாங்கக் குறிப்புக்கள் ஆண்டு, திங்கள், பக்கம், பொழுது, பருவம் என்ற முறையில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் ஆழ்வான் திருப்புறம்பியமுடையான் ஆன செம்பியன் பல்லவரையன் என்பான் கீழ்க்கோட்டமுடையார் கோயிலின் கிழக்குத் திருச்சுற்று மாளிகையில், தன் பெயரில் திருப்புறம்பியமுடையாரெனும் இறைவனை எழுந்தருளச் செய்தான். விறைவனுக்குப் பூசை, திருவமுது. திருவிளக்குகள் இவைகளுக்குள். பூசை செய்யும் தம்பிமார்களுக்கு நிமந்தத்திற்குள், திருக்கீழ்க்கோட்டமுடையாருக்கு மகர தோரணம் செய்து அளிப்பதற்கும் ஆகிய திருப்பணிகளுக்குக் கோவிற் பண்டாரத் தில் 17, 000 காசுகள் அளித்துள்ளான். இச்செய்தியினை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் ஆற்றாருடையான் அரையன் ராஜராஜ தேவனான வாணகோவரையன் என்பான் ராஜராஜீஸ்யரமுடையார் மாநிலைத் திருநந்தவனம் என்னும் பெயரால் நந்தவனம் அமைத்ததையும், இக்கோவிலும் திருமுற்றமும் திருமடை விளாகமும் தீர்த்தக் குளமும், திருநந்தவனமும், உள்ளிட்டவைகளுக்கு நிலம் இறையிலியாக வழங்கியதையும் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகள் குறிக்கப்படுகின்றன. கல்லெட்டின் இறுதிப்பகுதியில் அளக்கவேண்டிய நெல்லின் அளவைகள் குறிக்கப்படுகின்றன. முதற்குலோத்துங்க சோழனின் 16-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்படுகிறது.
கல்வெட்டின் நடுநடுவே புதிய கட்டடங்களை எழுப்பிவிட்டதால் தொடர்ச்சியாகப் படிக்க இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் கல்வெட்டின் தொடக்கம் மட்டுமே உள்ளது. இக்கோயில் இறைவனுக்கு உதராசப்பர் சோமன். . . என்பார் ஏதோ செய்வித்ததைக் குறிப்பதாக இருக்கலாம்.
தர்மபுரி>தர்மபுரி>பரிகம்
தர்மபுரி இராசேந்திரசோழனுடைய பத்தொன்பதாவது ஆட்சியாண்டில், பந்ந நாட்டு வாணபுரத்து ஊராளி காவிதி வீரசோழ வாணவரையானான மாசந் என்பவன் ஆநிரைகள் மீட்டு உயிர் நீத்தான். அவன் நினைவாக அவ்வூரார் நீத்தார் பட்டியாக ஊருக்குத் தெற்கில் தென்னிட்டேரி பாசண நிலங்களை இறையிலியாக விட்டனர் என்பதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.
தர்மபுரி>தர்மபுரி>தருமபுரி
தர்மபுரி சோழர் கால எழுத்தமைதியோடு காணப்படும் ஒரு துண்டுக் கல்வெட்டு. இறைவனுக்குக் கொடுக்கப்பட்ட திருவாபரணம் முதலியவற்றைக் குறிக்கிறது. இக்கல்வெட்டு எந்தக் கோயிலில் எந்த இடத்தில் இருந்தது என்பது பற்றி அறிய இயலவில்லை. இது 12ஆம் நூற்றாண்டினதாக இருக்க வேண்டும்.
தர்மபுரி>நல்லம்பள்ளி>இலளிகம்
தர்மபுரி மூன்று துண்டுக் கல்வெட்டுக்கள் ஒரே இடத்தில் உடைபட்டுக் கிடைத்துள்ளன. மூன்றின் எழுத்துக்களையும் நோக்கச் சமகாலத்தனவாகத் தோன்றுகின்றன. ஆயின் மூன்று ஒரே கல்வெட்டின் சிதைவாகத் தோன்றவில்லை. இரண்டு கல்வெட்டுக்களில் போசள அரசன் சோமீசுவரன் குறிக்கப்பட்டுள்ளமையால் இவை அவனது காலக் கல்வெட்டுக்கல் என்பதில் ஐயமில்லை. முதல் கல்வெட்டு சோமீசுவரனுடைய 11 ஆம் ஆட்சியாண்டில் (கி. பி. 13ஆம் நூற்றாண்டு) தான்றோன்றி ஈசுவரமுடைய நாயனாற்கு தகடை நாடு, வடகரை நாடு, புறமலை நாடு ஆகிய நாடுகளின் நாட்டவர்கள் தானமளித்ததைக் குறிப்பதாக இருக்கலாம். இரண்டாவது கல்வெட்டும் கொடை கொடுத்ததைக் குறிப்பதே. மூன்றாவது கல்வெட்டு சோமீசுவரனுடைய நன்மைக்காகவும், சோமையதண்ணாக்கர் நன்மைக்காகவும் சிங்கையதண்ணாக்கர் என்பவர் இறைவனுக்குத் தானம் கொடுத்ததைக் குறிப்பதாகக் காணப்படுகிறது. சிங்கய தண்ணாக்கர், சோமையதண்ணாக்கர் ஆகிய பெயர்கள் சோமீசுவரன் காலத்துப் பிற கல்வெட்டுக்களிலும் வந்துள்ளமை நோக்கற்பாலது.
தர்மபுரி>தர்மபுரி>கடகத்தூர்
தர்மபுரி சோழீச்சுர நாயனார்க்குத் திருவெழுச்சி, திருச்சாந்து ஆகியவற்றிற்கு நகரத்தார் நிவந்தம் அளித்தது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. இறைவன் பெயர் முடிகொண்ட சோழீச்சுரமுடையார் என்று கல்வெட்டில் உள்ளது. திருமடை விளாகத்தில் நெசவாளர் இருந்தனர் என்பது தறிகளின் மீது விதிக்கப்பட்ட வரி மூலம் தெரியவருகிறது.
தர்மபுரி>நல்லம்பள்ளி>அதியமான்கோட்டை
தர்மபுரி வீர நரசிம்மனின் தானைத் தலைவனான மாதவ தண்ணாயக்கனின் மந்திரியான பரமேய்சுரகணி என்பவன் மகேந்திரமங்கலத்தில் பரமேஸ்வரமுடையார் கோயிலை அடி முதல் நுனி வரை கட்டியதையும் இறைவனைப் பிரதிஷ்டை செய்ததையும் சைவாசாரியர் பெரிய தேவரின் மகனான விடுகாதற்குக் கோயில் திருநாமத்துக் காணியாகச் சில நிலங்களை நீர்வார்த்துக் கொடுத்ததையும் குறிக்கிறது.
தர்மபுரி>பாலக்கோடு>அத்திமோட்டுலு
தர்மபுரி இறைவனின் வழிபாட்டுக்காகவும், அமுதுபடி, திருவிளக்கிடல் ஆகியவற்றுக்காகவும் வரிகளின் மூலம் வரும் வருவாயினைக் கொடுக்கச் செய்த ஆணையாகத் தெரிகிறது. கல்வெட்டின் முதலும் முடிவும் இல்லை. எழுத்தமைதியை நோக்க 15, அல்லது 16ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம்.
கிருஷ்ணகிரி>சூளகிரி>பேரிகை
கிருஷ்ணகிரி திரிபுவனமல்ல பூரத்தாழ்வார் அத்திமல்லன் மகன் தாமத்தாழ்வார் தம்பியார் கங்காண்ண மகன் பூமிநாயகன் பேரிகையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரமுடைய நாயனாருக்கு பக்கமாராழ்வான் பள்ளி ஏரி, நுளம்ப சமுத்திரம், ஆகிய ஏரிகளை மீன் உரிமையுடன்(மச்ச கட்டு) இறையிலியாகக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. மேலும் இக்கல்வெட்டில் அடிமை சாரிகை, குடிமைச் சாரிகை போன்ற வரிகள் குறிக்கப்படுகின்றன. தேவநாயகர், தாயகர், உமையோடிருந்த மாராயர் திருநீற்றுச் சோழமாராயர் என்ற நால்வர் பெயர்களும் பல்வேறு நிலங்களின் பெயர்களும் உள்ளன.
கிருஷ்ணகிரி>கிருஷ்ணகிரி>பென்னேஸ்வரமடம்
கிருஷ்ணகிரி கல்வெட்டு முன்பின் தொடர்பில்லாது இரு பகுதிகளாக உள்ளது. தியாகப் பெருமாள் கொடுத்த தன்மத்தைக் குறிக்கிறது. செவிடை என்ற பெயர் ஓசூரில் உள்ள சிவன் கோயில் இறைவன் பெயரை நினைவூட்டுகிறது.
கிருஷ்ணகிரி>கிருஷ்ணகிரி>பென்னேஸ்வரமடம்
கிருஷ்ணகிரி ஆதிசண்டேஸ்வரரைப் புகழும் வெண்பா பாடல் தொடக்கத்தில் உள்ளது. கல்வெட்டு இறைவனே பேசுவதுபோல் உள்ளது. சித்திரைத் திருவிழாவில் ஆறாம் நாள் விழா, கத்தாரி என்று ஊரில் இருக்கும் வெள்ளாழனும் முதலிப்பிள்ளை உலகனுமான ஒரு பக்தன் தொடர்ந்து நடத்தவும் அவனுக்கு உரிய கோயில் மரியாதைகள் வழங்கவும் இறையாணை வழங்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது.