Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
- கல்வெட்டின் தொடக்கம் மட்டுமே உள்ளது. இக்கோயில் இறைவனுக்கு உதராசப்பர் சோமன். . . என்பார் ஏதோ செய்வித்ததைக் குறிப்பதாக இருக்கலாம்.
தருமபுரி>தருமபுரி>பரிகம்
- இராசேந்திரசோழனுடைய பத்தொன்பதாவது ஆட்சியாண்டில், பந்ந நாட்டு வாணபுரத்து ஊராளி காவிதி வீரசோழ வாணவரையானான மாசந் என்பவன் ஆநிரைகள் மீட்டு உயிர் நீத்தான். அவன் நினைவாக அவ்வூரார் நீத்தார் பட்டியாக ஊருக்குத் தெற்கில் தென்னிட்டேரி பாசண நிலங்களை இறையிலியாக விட்டனர் என்பதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.
தருமபுரி>தருமபுரி>தருமபுரி
- சோழர் கால எழுத்தமைதியோடு காணப்படும் ஒரு துண்டுக் கல்வெட்டு. இறைவனுக்குக் கொடுக்கப்பட்ட திருவாபரணம் முதலியவற்றைக் குறிக்கிறது. இக்கல்வெட்டு எந்தக் கோயிலில் எந்த இடத்தில் இருந்தது என்பது பற்றி அறிய இயலவில்லை. இது 12ஆம் நூற்றாண்டினதாக இருக்க வேண்டும்.
தருமபுரி>தருமபுரி>கோட்டைபைரஹல்லி
- மூன்று துண்டுக் கல்வெட்டுக்கள் ஒரே இடத்தில் உடைபட்டுக் கிடைத்துள்ளன. மூன்றின் எழுத்துக்களையும் நோக்கச் சமகாலத்தனவாகத் தோன்றுகின்றன. ஆயின் மூன்று ஒரே கல்வெட்டின் சிதைவாகத் தோன்றவில்லை. இரண்டு கல்வெட்டுக்களில் போசள அரசன் சோமீசுவரன் குறிக்கப்பட்டுள்ளமையால் இவை அவனது காலக் கல்வெட்டுக்கல் என்பதில் ஐயமில்லை. முதல் கல்வெட்டு சோமீசுவரனுடைய 11 ஆம் ஆட்சியாண்டில் (கி. பி. 13ஆம் நூற்றாண்டு) தான்றோன்றி ஈசுவரமுடைய நாயனாற்கு தகடை நாடு, வடகரை நாடு, புறமலை நாடு ஆகிய நாடுகளின் நாட்டவர்கள் தானமளித்ததைக் குறிப்பதாக இருக்கலாம். இரண்டாவது கல்வெட்டும் கொடை கொடுத்ததைக் குறிப்பதே. மூன்றாவது கல்வெட்டு சோமீசுவரனுடைய நன்மைக்காகவும், சோமையதண்ணாக்கர் நன்மைக்காகவும் சிங்கையதண்ணாக்கர் என்பவர் இறைவனுக்குத் தானம் கொடுத்ததைக் குறிப்பதாகக் காணப்படுகிறது. சிங்கய தண்ணாக்கர், சோமையதண்ணாக்கர் ஆகிய பெயர்கள் சோமீசுவரன் காலத்துப் பிற கல்வெட்டுக்களிலும் வந்துள்ளமை நோக்கற்பாலது.
தருமபுரி>தருமபுரி>கடகத்தூர்
- சோழீச்சுர நாயனார்க்குத் திருவெழுச்சி, திருச்சாந்து ஆகியவற்றிற்கு நகரத்தார் நிவந்தம் அளித்தது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. இறைவன் பெயர் முடிகொண்ட சோழீச்சுரமுடையார் என்று கல்வெட்டில் உள்ளது. திருமடை விளாகத்தில் நெசவாளர் இருந்தனர் என்பது தறிகளின் மீது விதிக்கப்பட்ட வரி மூலம் தெரியவருகிறது.
தருமபுரி>தருமபுரி>அதியமான்கோட்டை
- வீர நரசிம்மனின் தானைத் தலைவனான மாதவ தண்ணாயக்கனின் மந்திரியான பரமேய்சுரகணி என்பவன் மகேந்திரமங்கலத்தில் பரமேஸ்வரமுடையார் கோயிலை அடி முதல் நுனி வரை கட்டியதையும் இறைவனைப் பிரதிஷ்டை செய்ததையும் சைவாசாரியர் பெரிய தேவரின் மகனான விடுகாதற்குக் கோயில் திருநாமத்துக் காணியாகச் சில நிலங்களை நீர்வார்த்துக் கொடுத்ததையும் குறிக்கிறது.
தருமபுரி>தருமபுரி>அத்திமோட்டுலு
- இறைவனின் வழிபாட்டுக்காகவும், அமுதுபடி, திருவிளக்கிடல் ஆகியவற்றுக்காகவும் வரிகளின் மூலம் வரும் வருவாயினைக் கொடுக்கச் செய்த ஆணையாகத் தெரிகிறது. கல்வெட்டின் முதலும் முடிவும் இல்லை. எழுத்தமைதியை நோக்க 15, அல்லது 16ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம்.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>பேரிகை
- திரிபுவனமல்ல பூரத்தாழ்வார் அத்திமல்லன் மகன் தாமத்தாழ்வார் தம்பியார் கங்காண்ண மகன் பூமிநாயகன் பேரிகையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரமுடைய நாயனாருக்கு பக்கமாராழ்வான் பள்ளி ஏரி, நுளம்ப சமுத்திரம், ஆகிய ஏரிகளை மீன் உரிமையுடன்(மச்ச கட்டு) இறையிலியாகக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. மேலும் இக்கல்வெட்டில் அடிமை சாரிகை, குடிமைச் சாரிகை போன்ற வரிகள் குறிக்கப்படுகின்றன. தேவநாயகர், தாயகர், உமையோடிருந்த மாராயர் திருநீற்றுச் சோழமாராயர் என்ற நால்வர் பெயர்களும் பல்வேறு நிலங்களின் பெயர்களும் உள்ளன.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>பெண்ணேஸ்வரமடம்
- கல்வெட்டு முன்பின் தொடர்பில்லாது இரு பகுதிகளாக உள்ளது. தியாகப் பெருமாள் கொடுத்த தன்மத்தைக் குறிக்கிறது. செவிடை என்ற பெயர் ஓசூரில் உள்ள சிவன் கோயில் இறைவன் பெயரை நினைவூட்டுகிறது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>பெண்ணேஸ்வரமடம்
- ஆதிசண்டேஸ்வரரைப் புகழும் வெண்பா பாடல் தொடக்கத்தில் உள்ளது. கல்வெட்டு இறைவனே பேசுவதுபோல் உள்ளது. சித்திரைத் திருவிழாவில் ஆறாம் நாள் விழா, கத்தாரி என்று ஊரில் இருக்கும் வெள்ளாழனும் முதலிப்பிள்ளை உலகனுமான ஒரு பக்தன் தொடர்ந்து நடத்தவும் அவனுக்கு உரிய கோயில் மரியாதைகள் வழங்கவும் இறையாணை வழங்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>பாரூர்
- போசளமன்னன் விஸ்வநாதனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் பாரூர் இறைவனுக்கு விக்கிரம பாண்டியச் சோழகோநார் சர்வ மாநியமாக தேவதானம் கொடுத்ததைக்க குறிக்கிறது. பாரூர் சிவன் கோயில் ஈசாநீஸ்வரம் என வழங்கப்பட்டுள்ளது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>நெடுசால்
- ஜெயம் கொண்ட சோழ மண்டலத்து மோந்தூர் நாட்டு மாந சிகாமணி நல்தூர் பாணபாக்கம் இறைவனுக்கு விளச்சேரிக் மாதேவட்ட பட்டன் நீராட்டுக்குத் தானம் கொடுத்துள்ளான்.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>நெடுசால்
- காரைக்கிழான் என்பவன் நெடுந்தேவநாயனார்க்கு ஒரு பொன் கொடுத்து அதனால் வரும் வட்டியைக் கொண்டு சந்திர சூரியன் உள்ளவரை ஒரு சந்தி விளக்கெரிக்க செய்ததைக் குறிக்கின்றது. நெடுஞ்தேவர் நாயநார் நெடுசால் இறைவன் பெயராகும்.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>தீர்த்தம்
- அமுதுபடி, மாலை, பரிவட்டம், விளக்கு பிற திருப்பணிகளுக்காக அண்ணாமலை செட்டியார் என்பவர் நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இறைவன் பெயர் சிவனீஸ்வரமுடைய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>தீர்த்தம்
- சில இடங்களில் காரை பூசப் பட்டு எழுத்துக்கள் மறைக்கப்ட்டுவிட்டன. அன்னதாத உடையாரது போர் வெற்றி மற்றும் நன்மைக்காக வழங்கப்பட்ட கொடையைக் குறிப்பதாகத் தெரிகிறது. பதினெட்டு என்பது ஒருபத்தெட்டு என்று இலக்கிய நடையில் உள்ளது. தானம் வழங்கியவர் வியாபாரி ஆவார். தீர்த்தத்து உடையார் சிவனீஸ்வரமுடையார் என இறைவன் பெயர் உள்ளது. பல்வகை வருவாய்ச் சொற்கள் உள்ளன. அவற்றின் வருமானம் இராக்கால பூசைக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>தீர்த்தம்
- பூவனியத்தில் இருக்கும் வியாபாரி இறைவனுக்குச் சந்திவிளக்கிற்கு ஒரு பொன் கொடுத்ததையும் அதைக் கோயில் காணியாளர் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க கடமைப்பட்டதையும் குறிக்கிறது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>சின்னகொத்தூர்
- திரிபுவனமல்லபூர்வாதி ராயரான பூமிநாயக்கர் தனது பிறந்த நக்ஷத்திரமான மூலம் தோறும் திருவேகம்பமுடைய நாயனாருக்கு திருவமுது செய்யவும். நாள் தோறும் ஒரு திருமாலை சாத்திவரவும் அவரது நாட்டில் புதுப்பற்றில் உள்ள காக்கும்நாயகன்நல்லூரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார். இத்தேவதான ஊரிலிருந்து கிடைக்கும் நல்லெருது, நற்பசு, நற்கிடா, பஞ்சு நூல், தறித்தணியன் எள்ளு, இருப்பு கட்டி, அசுவம், வெட்டி. பயறுகாணம், விச்சுப்பாட்டம், அம்சைச்சாரிகை, குதிரைச் சாரிகை, கலியாணத்தாயம் போன்ற எல்லா விதமான ஆயங்களும் இவ்விறைவனுக்கே இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தேவதானத்தைக் கோயில் தேவகன்மிகள் காலார்கள் ஆகியோரில் நால்வர் பெற்றுக் கொண்டதும், இத்தருமம் இவர்களால் எந்நாளும் கண்காணிக்கப் படவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>குருவிநாயனபள்ளி
- கல்வெட்டு சிதைந்தும் முற்றுப் பெறாமலும் உள்ளது. தேவராய உடையாரது நன்மைக்காகச் சில நாட்டவர்கள் தலைத்தூக்கினூர் என்ற ஊரினை இறையிலியாக தக்ஷிணாமூர்த்தி பண்டிதற்குக் கொடுத்ததைக் குறிக்கிறது.
கிருட்டிணகிரி>கிருட்டிணகிரி>குருவிநாயனபள்ளி
- வராந்த முதலியார் நெல்லூர் இறைவன் கோயிலுக்கு கப்பரைப் பிச்சை நிலமாக கொல்லை நிலம் கொடுத்ததைக் குறிக்கிறது. கப்பரை சிவபெருமான் கையில் இருக்கும் கபாலம் என்ற பிச்சைப் பாத்திரமாகலாம்.
கிருட்டிணகிரி>தேன்கனிக்கோட்டை>கங்கதேவன்பள்ளி
- முதலாம் குலோத்துங்க சோழனுடைய மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு அவனது 32வது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டதாகும். வீரராஜேந்திர ஜனனாடுடையானும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் (கோயிற்றர்) தீர்த்தமலை திரிபுராந்தக தேவர் என்ற இறைவனுக்கு பராந்தக நல்லூர் என்ற ஊர் தேவதானமாகக் கொடுத்தனர். அவ்வூரின் எல்லைகளில் எல்லைக் கற்கள் நடப்பட்டன. கோயில் சிவபிராமணர்கள் தேவதான ஊரினைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.