1128 results found
சிவகங்கை>திருப்பத்தூர்>கம்பனூர்
Mutilated record regarding land donation. இறையிலி நிலம் கொடுத்த செய்தி.சிவகங்கை>திருப்பத்தூர்>கம்பனூர்
Mutilated record regarding land donation. இறையிலி நிலம் கொடுத்த செய்தி.சிவகங்கை>திருப்பத்தூர்>பெரிச்சிகோயில்
Mentions the land donation by Uthaya Diväkaran Aļuḍaiyan alias Ilangēśvaran. இறையிலியாகக் கொடை அளித்த செய்தி இடம்பெற்றுள்ளது.சிவகங்கை>திருப்பத்தூர்>பெரிச்சிகோயில்
Registers the tax free land donation. இறையிலியாக நிலம் கொடுத்தது பற்றிய செய்தி.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Mentions sarvamanya tax-free land to the temple. மிகவும் சிதைந்த துண்டுக் கல்வெட்டு. சில வரிகள் நீக்கம் செய்யப்பட்ட சறுவமானிய இறையிலி பற்றித் தெரிவிக்கின்றது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of certain taxes to the temple of Taḍuttaṭkondu-Aruliya nayanar in Tiruvennainallur as Tirunamattukkāṇi - iraiyili by an order of Sambhuvarayan sent to the temple authorities, for the food offerings to the deity of the temple. திருவெண்ணைநல்லூர் தடுத்தாட்கொண்ட நாயனார்க் கோயில் தானத்தார்க்கு சம்புவராயன் ஓலை அனுப்பிய செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு. அவ்வோலையின்படி இக்கோயில் திருமடைவளாகத்திலும் ஊரிலும் இருக்கும் செட்டிகள், கைக்கோளர், வாணியர் ஆகியோரின் அங்காடிகளிலிருந்து வசூலிக்கப்படும் பல்வேறு வரிகள் கோயிலுக்கு இறையிலி திருநாமத்துக்காணியாக அளிக்கப்பட்டது. மேலும், அவ்வூர் ஏரிமீன் பாட்டம் என்ற வருமானத்தின் மூலம் அவ்வேரியை குழிவெட்டி ஆழப்படுத்தும் பணியை செய்துகொள்ள வேண்டும். மேற்கூறிய இச்செய்திகளைக் கூறிய சம்புவராயனின் ஓலை என்ற இந்த ஆணை கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி பல அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of lands divided into 114% shares by the King in the villages Kuraṭṭür, Irundai, Kuvaļai and Kurumbür in Naduvil-mandalam for the charities made by him, in his brother s name to certain brahmans of Kulasekhara-chaturvēdimangalam called after the King s elder brother (Annālvär) at 4 mă of wet land and one mă of dry land per share and gifts of two shares each to the two shrines of Kulasekharisvaram-uḍaiyār and Kulasekhara-Vinnagar-Emberumän. Makes provision for worship and offerings at the Vikrama-Pändia Sandhi called after the king. Refers to the charities of Kōppernijingadeva பாண்டிய மன்னன் விக்கிரமபாண்டியன் நடுவில் மண்டலத்திலுள்ள குறட்டூர், இருந்தை, காவளை, குறும்பூர் ஆகிய ஊர்களிலுள்ள பலதளி நிலங்களை நீக்கிய பின் வந்த நன்செய் நிலம், புஞ்சை நிலம் ஆகியவற்றை தன் அண்ணன் குலசேகர பாண்டியன் பெயரில் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் சதுர்வேதிபட்டர்களுக்கும் கோயில்களுக்கும் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட அந்நிலங்கள், 4 மா நன்செய் நிலமும் ஒரு மா புன்செய் நிலமும் ஒரு பங்காக மொத்தம் 1142 பங்குகளாகப் பிரித்தளிக்கப்பட்டிருந்தது.இதில் குலசேகர ஈஸ்வரமுடையார்க் கோயிலுக்கு பங்கு ஒன்றும், குலசேகர விண்ணகர் எம்பெருமானுக்கு பங்கு இரண்டும், வேத விருத்தி பங்கு ஒன்றும், வைத்யன் பங்கு ஒன்றும், ஊர்ப்பிராமணன் பங்கு அரையும் உள்பட 114% பங்குகள் ஏறக்குறைய 30 வகை வரிகளையும் நீக்கி தன்மதான இறையிலியாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ள மிக முக்கிய கல்வெட்டு இது.
இக்கோயில் இறைவன் தடுத்தாட்க்கொண்டருளிய நாயனார்க்கு விக்கிரமபாண்டியன் பேரில் வைத்த விக்கிரமபாண்டியன் சந்தியில் நாள் ஒன்றுக்கு பதினோரு பேர் அத்யாயனம் பண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு வரிகள் மிகவும் சிதைந்து விட்டன.
விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records the tax-free gift of the village of Melur in Sendamangalap-parru for conducting a service called Vikrama Pāṇḍyan Sandi, instituted in the King s name in the temple and for festivals to the god. Mentions the road Kadavarädittan peruvali among the boundaries of the village and Ponparri - Udiyan among the signatories. சேந்தமங்கலம் பற்றைச் சேர்ந்த மேலூர் என்ற ஊரிலுள்ள சில நிலங்கள் மன்னர் பெயரில் ஏற்படுத்திய விக்ரம பாண்டியன் சந்திக்கும் திருநாமத்துக்கும் தேவதான இறையிலியாக நிலம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of 4 cows by a devotee of the temple for the daily supply of milk for the god s sacred bath. திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் பாலாடி அருளுவதற்காக (பால் அபிஷேகம்) அக்கோயிலில் கும்பிட்டுக் கொண்டிருக்கும் ஆண்டார் [சிவனடியார்]சுந்தர வேடர் என்பவர் நான்கு பசுக்களை கோயிலுக்கு அளித்த செய்தியும் அப்பசுக்களைப் பெற்றுக் கொண்டு இக்கோயில் சுரபி மன்றாடி நம்பியான திருஞான சம்பந்தக்கோன் என்பவர் பசு ஒன்றுக்கு உழக்கு பால் வீதம் நான்கு பசுக்களுக்கும் நாழி பால் சிறுகாலைச் சந்தியின் போது இறைவன் பாலாடுவதற்கு அளப்பதாக ஒத்துக்கொண்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of a cow to the Temple by an individual of Araisür. The word Slya is prefixed to the king s name. திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர்க்கு அரசூரைச் சேர்ந்த அகம்படியாரில் திருமழப்பாடி என்பவரின் மகன் சுப்பிரமணியன் என்பவன் இறைவன் ஆடியருள ஒரு பசு அளித்த செய்தியைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. பாலாடியருள என்பதையே ஆடியருள [பாலால் அபிஷேகம் செய்ய] என்று கூறப்பட்டுள்ளது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Record gift of 4 cows by Vellälan kävanudaiyān malaiyan to burn a twilight lamp in the temple. The Sivabraḥmanās of the temple recevied the cows and accepted to burn the lamp. திருவெண்ணைநல்லூர் கோயில் இறைவனுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு வெள்ளாளன் காவநுடையான் மலையன் என்பவன் நான்கு பசுக்கள் கொடையளித்த செய்தியும், அதனைப் பெற்றுக்கொண்ட இக்கோயில் சிவப்பிராமணர் சிலர் விளக்கெரிப்பதாக உறுதியளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Begins with the Prasasti Pugalmāthu vilanga . States that a judgement given to a person to burn a half of perpetual lamp by 16 cows to the temple, who killed a person by mistake. The shepherds of this temple received the 16 cows and accepted to supply ghee to the temple. திருவெண்ணைநல்லூர் குடிப்பள்ளி ஐய்யாறன் பொற்காரி பிச்சன் என்பவன் பரமன் என்பவனை தவறுதலாக கைப்பிழையால் கொன்ற காரணத்தினால் திருவெண்ணைநல்லூர் இறைவன் முன்னிலையில் திருநுந்தா விளக்கு அரை எரிப்பதற்கு கோயிலுக்கு 16 பசுக்களை அளித்துள்ளான். இப்பசுக்களைப் பெற்றுக் கொண்டு இவ்வூர் மன்றாடி செவலை நாலன் அனக்குடி அரசந் என்பவன் நெய்யளக்க ஒப்புக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of 32 cows for the sacred bath of milk to the god Atkondadevar in the temple of Thiruveņņainallur by certain Vaļļal Gangadharan Thiruvan Kälingarayan. These cows were given to four persons by each 8 cows, and also fixed uļakku milk per cow by the measurement called Arumolidēvannāli. Total milk of 8 nali., used for the sacred bath to the god. திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் தினமும் பாலாடி அருளுவதற்கு, வள்ளல் கங்கதரையன் திருவன் காலிங்கராயன் என்பவர் 32 பசுக்கள் வழங்கினார். இப்பசுக்களை இக்கோயில் சுரவி மன்றாடிகள் நால்வர்க்கு ஆளுக்கு எட்டு பசுக்கள் வீதம் கொடுத்து பசு ஒன்றுக்கு அருமொழிதேவன் நாழியால் உழக்கு பால் வீதம் 32 பசுக்களுக்கு எட்டு நாழி பால் தினந்தோறும் கோயிலுக்கு அளக்க வேண்டும் என்றும், அந்த எட்டு நாழி பால் கொண்டு தினமும் இறைவன் பாலாட வேண்டும் என்றும் கூறுகிறது இக்கல்வெட்டுச் செய்தி.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records that the king exempted certain lands from payment of taxes and ordered this amount to be utilized for rearing fruit gardens for the god and the balance, if any, for worship and repairs to the temple. The record is signed by Kōpperufijingan and Toṇḍaimän. கோப்பெருஞ்சிங்களின் 18-ஆவது ஆட்சியாண்டு முதல் தோப்புக்கள் பழந்தேவதானம் போன்ற நிலங்களுக்கு இறையிலியாக ஆணை வழங்கப்பட்டது. 17-ஆவது ஆட்சியாண்டில் தானமுறியின்படி புஞ்சை புறவடை நிலங்களுக்குரிய காசாயம் போன்றவற்றை வசூலித்து முதலீடாகக் கொண்டு, அதில் மேலும் திருத்தோப்புக்கள் செய்விக்கவும், மீதி உள்ள முதல் கொண்டு பூஜையும் திருப்பணியும் செய்யுமாறும் ஆனணயிடப்பட்ட செய்தியும் சில அதிகாரிகளின் கையொப்பமும் இக்கல்வெட்டில் காணப்படுகிறது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Built in. Records the gift of lands to the temple made by Päräyitan Uttamasōla-Mārāyan of Perumür, by purchase from the assembly of Thiruveņņainallur. திருவெண்ணைநல்லூர் சபையார், தங்களூர் நிலத்தை பெருமூரைச் சேர்ந்த பாரயிதன் உத்தம சோழ மாராயன் என்பவருக்கு இறையிலியாக விற்று அதற்குரிய விலைப் பொருளையும் இறைப்பொருளையும் பெற்றுக் கொண்டனர். நிலத்தை விலைக்கு வாங்கியவர், அதை கோயிலுக்கே தேவதானமாக வழங்கியுள்ளார். கல்வெட்டின் தொடக்க வரிகள் கட்டடப் பகுதிக்குள் மறைந்து விட்டன. உத்தமசோழன் காலத்தைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டு இருக்கலாம்.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of land as dēvadāna iraiyili after purchasing it from an individual by the Sabha of Sri Parantaka chaturvēdimangalam in Thirumunaippaḍi nāḍu to the temple of Atkoṇḍadēvar at Thiruvennainallur. திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த பிரமதேயம் ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்து சபையார் திருவெண்ணைநல்லூர் ஆட்கொண்டதேவர்க் கோயிலுக்கு தேவதானமாக நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலத்தை ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி கோயிலுக்கு அளித்தனர். அந்நிலத்திற்கு செலுத்த வேண்டிய சில்லிறை, பெருவரி, எச்சோறு, உற்று நெல்லு உள்ளிட்ட பல வரிகளையும் தேவதானமளித்த சபையாரே அரசுக்கு செலுத்துவதாகவும் கூறி தானமளித்துள்ளனர்.கல்வெட்டு வரிகளின் இறுதிப்பகுதி கட்டடத்திற்குள் மறைந்திருத்தல் வேண்டும். அப்பகுதிகளில் தேவதான இறையிலி என்று குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்