கிருஷ்ணகிரிபோசளமன்னன் விஸ்வநாதனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் பாரூர் இறைவனுக்கு விக்கிரம பாண்டியச் சோழகோநார் சர்வ மாநியமாக தேவதானம் கொடுத்ததைக்க குறிக்கிறது. பாரூர் சிவன் கோயில் ஈசாநீஸ்வரம் என வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரிஜெயம் கொண்ட சோழ மண்டலத்து மோந்தூர் நாட்டு மாந சிகாமணி நல்தூர் பாணபாக்கம் இறைவனுக்கு விளச்சேரிக் மாதேவட்ட பட்டன் நீராட்டுக்குத் தானம் கொடுத்துள்ளான்.
கிருஷ்ணகிரிகாரைக்கிழான் என்பவன் நெடுந்தேவநாயனார்க்கு ஒரு பொன் கொடுத்து அதனால் வரும் வட்டியைக் கொண்டு சந்திர சூரியன் உள்ளவரை ஒரு சந்தி விளக்கெரிக்க செய்ததைக் குறிக்கின்றது. நெடுஞ்தேவர் நாயநார் நெடுசால் இறைவன் பெயராகும்.
கிருஷ்ணகிரிஅமுதுபடி, மாலை, பரிவட்டம், விளக்கு பிற திருப்பணிகளுக்காக அண்ணாமலை செட்டியார் என்பவர் நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இறைவன் பெயர் சிவனீஸ்வரமுடைய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரிசில இடங்களில் காரை பூசப் பட்டு எழுத்துக்கள் மறைக்கப்ட்டுவிட்டன. அன்னதாத உடையாரது போர் வெற்றி மற்றும் நன்மைக்காக வழங்கப்பட்ட கொடையைக் குறிப்பதாகத் தெரிகிறது. பதினெட்டு என்பது ஒருபத்தெட்டு என்று இலக்கிய நடையில் உள்ளது. தானம் வழங்கியவர் வியாபாரி ஆவார். தீர்த்தத்து உடையார் சிவனீஸ்வரமுடையார் என இறைவன் பெயர் உள்ளது. பல்வகை வருவாய்ச் சொற்கள் உள்ளன. அவற்றின் வருமானம் இராக்கால பூசைக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கிருஷ்ணகிரிபூவனியத்தில் இருக்கும் வியாபாரி இறைவனுக்குச் சந்திவிளக்கிற்கு ஒரு பொன் கொடுத்ததையும் அதைக் கோயில் காணியாளர் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க கடமைப்பட்டதையும் குறிக்கிறது.
கிருஷ்ணகிரிதிரிபுவனமல்லபூர்வாதி ராயரான பூமிநாயக்கர் தனது பிறந்த நக்ஷத்திரமான மூலம் தோறும் திருவேகம்பமுடைய நாயனாருக்கு திருவமுது செய்யவும். நாள் தோறும் ஒரு திருமாலை சாத்திவரவும் அவரது நாட்டில் புதுப்பற்றில் உள்ள காக்கும்நாயகன்நல்லூரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார். இத்தேவதான ஊரிலிருந்து கிடைக்கும் நல்லெருது, நற்பசு, நற்கிடா, பஞ்சு நூல், தறித்தணியன் எள்ளு, இருப்பு கட்டி, அசுவம், வெட்டி. பயறுகாணம், விச்சுப்பாட்டம், அம்சைச்சாரிகை, குதிரைச் சாரிகை, கலியாணத்தாயம் போன்ற எல்லா விதமான ஆயங்களும் இவ்விறைவனுக்கே இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தேவதானத்தைக் கோயில் தேவகன்மிகள் காலார்கள் ஆகியோரில் நால்வர் பெற்றுக் கொண்டதும், இத்தருமம் இவர்களால் எந்நாளும் கண்காணிக்கப் படவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரிகல்வெட்டு சிதைந்தும் முற்றுப் பெறாமலும் உள்ளது. தேவராய உடையாரது நன்மைக்காகச் சில நாட்டவர்கள் தலைத்தூக்கினூர் என்ற ஊரினை இறையிலியாக தக்ஷிணாமூர்த்தி பண்டிதற்குக் கொடுத்ததைக் குறிக்கிறது.
கிருஷ்ணகிரிவராந்த முதலியார் நெல்லூர் இறைவன் கோயிலுக்கு கப்பரைப் பிச்சை நிலமாக கொல்லை நிலம் கொடுத்ததைக் குறிக்கிறது. கப்பரை சிவபெருமான் கையில் இருக்கும் கபாலம் என்ற பிச்சைப் பாத்திரமாகலாம்.
கிருஷ்ணகிரிமுதலாம் குலோத்துங்க சோழனுடைய மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு அவனது 32வது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டதாகும். வீரராஜேந்திர ஜனனாடுடையானும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் (கோயிற்றர்) தீர்த்தமலை திரிபுராந்தக தேவர் என்ற இறைவனுக்கு பராந்தக நல்லூர் என்ற ஊர் தேவதானமாகக் கொடுத்தனர். அவ்வூரின் எல்லைகளில் எல்லைக் கற்கள் நடப்பட்டன. கோயில் சிவபிராமணர்கள் தேவதான ஊரினைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
கன்னியாகுமரிபூதப்பாண்டீச்சுரமுடைய நயினார் சீகாரியம் செய்பவர்களிடத்தில் அய்யப்பன் பரியேறும் பெருமாள் என்பவர், இறைவனுக்கு ஐந்து திரியுள்ள திருக்குத்து விளக்கு 25 அளித்து அவற்றை எரிப்பதற்கு எண்ணைக்காக நிலம் அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரிகுறுநாட்டு மருதத்தூரைச் சேர்ந்த உதையன் பொன்னாண்டியும், உதையன் மங்கல நங்கையும் திருவிடைக்கோட்டு கோயில் இறைவனுக்கு திருவமுது படைக்கவும் ஏழு பிராமணர்க்கு துவாதசி நாளில் உணவு அளிக்கவும் நிலம் அளித்ததைக் குறிக்கிறது
கன்னியாகுமரிதிருவிதாங்கோட்டைச் சேர்ந்த பாலைக்கோட்டில் வாழ்ந்துவரும் பூங்காமன் அய் யன் என்பாரின் மனைவி கண்ட திருவிக்கிரமி, சிவகிரி மஹாதேவர் கோயிலில் வந்து கூடும் அக்நிஹோத்திரர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு உணவு அளிக்கவும். இறைவழிபாட்டிற்குமாகத் தேவன்சேரியைச் சேர்ந்த நாராயணன் அரங் கன் என்பானிடம் பணம் அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரிநாஞ்சி நாட்டுப் பிரமதேயம் புரவரிச் சதுர்வேதி மங்கலத்துப் புரவரி விண்ணகர் ஆழ்வார் கோயிலில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்க்கும், நம்பு செய்வாருக்கும். - சீகாரியம் செய்வாருக்கும். ஆழ்வாருக்கு வேண்டிய நித்த நிமந்தங்களுக்குமாக முக்காலே இரண்டு மா நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரிநாஞ்சி நாட்டுப் பிரமதேயம் புரவரிச் சதுர்வேதி மங்கலத்துப் புரவரி விண்ணகர் ஆர்வார்க்கு திருப்படிமாற்று உள்ளிட்ட தினப்படி பூசைகள் நடத்துவதற்காக முக்காலே இரண்டு மா நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரிமதுசூதனப்பெருமாளுக்குத் திருவமிர்து அளிக்க, இலாடப்பாடி வக்கணி நல்லூர் காராம்பிசெட்டர் குமாரன் கோவிந்தன் என்பவர் நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரிகோட்டாறான மும்முடி சோழபுரத்து கோட்டாற்று நாகர்க்கும், நாகராஜாவுக் கும் இறைவன் வழிபாட்டுக்காக மேற்படி கோயிலில் தங்கியிருந்த குணவீர பண்டிதனும், கமலவாகன பண்டிதனும், சேரவன் மாதேவி என்னும் ஊரில் சில நிலங்களைப் பள்ளிச்சந்தமாக கொடுத்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரிஅரங்கன் கணபதி என்பான் ஸ்ரீமத்துவாரகை எம்பெருமானுக்கு ஒரு திருநந்தா விளக்கு எரிப்பதற்காக முன்னர் தந்த பிடிபாடு ஸ்ரீபண்டாரத்தில் காணாமல் போய்விடவே, ஸபையும், மஹாலோகரும், ஸ்ரீகாரியஞ் செய்கின்ற பள்ளிக்கல் நாயரும், பிடார திருவடியும் வேணாட்டு நாராயணன் திருவடியும் சுசீந்திர முடைய நாயனார் ஸ்ரீகோயில் கீழைத்திருவாசல் மாடத்தே கூடி கணபதி அரங்கன் அடிகளே திரும்பவும் அவ்விளக்குக்கான பத்துப் புதுக்காசுகள் தரவேண்டுமென்றும், அதைப் பெற்றுக்கொண்டு நந்தா விளக்கு ஒன்று எரிக்கவும் சுசீந்திரமுடைய நாயனார்க்குத் திருப்பட்டம் ஒன்று சார்த்தவும் செலவு செய்ய வேண்டுமென்று தீர்மானித்ததையும், அவ்வச்சுக்காக நிலம் இறையிலியாக அளிக்கப்பட்டதையும் குறிக்கிறது.