Skip to main content

1128 results found

கன்னியாகுமரி>தோவாளை>பூதப்பாண்டி
- பூதப்பாண்டீச்சுரமுடைய நயினார் சீகாரியம் செய்பவர்களிடத்தில் அய்யப்பன் பரியேறும் பெருமாள் என்பவர், இறைவனுக்கு ஐந்து திரியுள்ள திருக்குத்து விளக்கு 25 அளித்து அவற்றை எரிப்பதற்கு எண்ணைக்காக நிலம் அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரி>கல்குளம்>திருவிடைக்கோடு
- குறுநாட்டு மருதத்தூரைச் சேர்ந்த உதையன் பொன்னாண்டியும், உதையன் மங்கல நங்கையும் திருவிடைக்கோட்டு கோயில் இறைவனுக்கு திருவமுது படைக்கவும் ஏழு பிராமணர்க்கு துவாதசி நாளில் உணவு அளிக்கவும் நிலம் அளித்ததைக் குறிக்கிறது
கன்னியாகுமரி>கல்குளம்>சிவகிரி
- திருவிதாங்கோட்டைச் சேர்ந்த பாலைக்கோட்டில் வாழ்ந்துவரும் பூங்காமன் அய் யன் என்பாரின் மனைவி கண்ட திருவிக்கிரமி, சிவகிரி மஹாதேவர் கோயிலில் வந்து கூடும் அக்நிஹோத்திரர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு உணவு அளிக்கவும். இறைவழிபாட்டிற்குமாகத் தேவன்சேரியைச் சேர்ந்த நாராயணன் அரங் கன் என்பானிடம் பணம் அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>புரவசேரி
- வைகுந்த வளநாட்டுப் பிரமதேயம் வீரகேரள மங்கலத்துச் சபையார் நாஞ்சி நாட்டுப் பிரமதேயம் புரவரிச் சதுர்வேதி மங்கலத்துப் புரவரி விண்ணகர் ஆழ்வார்க்கு நித்த நிமித்தங்கள் நடைபெறுவதற்காக முக்காலே இரண்டு மா நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>புரவசேரி
- நாஞ்சி நாட்டுப் பிரமதேயம் புரவரிச் சதுர்வேதி மங்கலத்துப் புரவரி விண்ணகர் ஆழ்வார் கோயிலில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்க்கும், நம்பு செய்வாருக்கும். - சீகாரியம் செய்வாருக்கும். ஆழ்வாருக்கு வேண்டிய நித்த நிமந்தங்களுக்குமாக முக்காலே இரண்டு மா நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>புரவசேரி
- நாஞ்சி நாட்டுப் பிரமதேயம் புரவரிச் சதுர்வேதி மங்கலத்துப் புரவரி விண்ணகர் ஆர்வார்க்கு திருப்படிமாற்று உள்ளிட்ட தினப்படி பூசைகள் நடத்துவதற்காக முக்காலே இரண்டு மா நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>பறக்கை
- மதுசூதனப்பெருமாளுக்குத் திருவமிர்து அளிக்க, இலாடப்பாடி வக்கணி நல்லூர் காராம்பிசெட்டர் குமாரன் கோவிந்தன் என்பவர் நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>நாகர் கோயில்
- கோட்டாறான மும்முடி சோழபுரத்து கோட்டாற்று நாகர்க்கும், நாகராஜாவுக் கும் இறைவன் வழிபாட்டுக்காக மேற்படி கோயிலில் தங்கியிருந்த குணவீர பண்டிதனும், கமலவாகன பண்டிதனும், சேரவன் மாதேவி என்னும் ஊரில் சில நிலங்களைப் பள்ளிச்சந்தமாக கொடுத்ததைக் குறிக்கிறது.
கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>சுசீந்திரம்
- அரங்கன் கணபதி என்பான் ஸ்ரீமத்துவாரகை எம்பெருமானுக்கு ஒரு திருநந்தா விளக்கு எரிப்பதற்காக முன்னர் தந்த பிடிபாடு ஸ்ரீபண்டாரத்தில் காணாமல் போய்விடவே, ஸபையும், மஹாலோகரும், ஸ்ரீகாரியஞ் செய்கின்ற பள்ளிக்கல் நாயரும், பிடார திருவடியும் வேணாட்டு நாராயணன் திருவடியும் சுசீந்திர முடைய நாயனார் ஸ்ரீகோயில் கீழைத்திருவாசல் மாடத்தே கூடி கணபதி அரங்கன் அடிகளே திரும்பவும் அவ்விளக்குக்கான பத்துப் புதுக்காசுகள் தரவேண்டுமென்றும், அதைப் பெற்றுக்கொண்டு நந்தா விளக்கு ஒன்று எரிக்கவும் சுசீந்திரமுடைய நாயனார்க்குத் திருப்பட்டம் ஒன்று சார்த்தவும் செலவு செய்ய வேண்டுமென்று தீர்மானித்ததையும், அவ்வச்சுக்காக நிலம் இறையிலியாக அளிக்கப்பட்டதையும் குறிக்கிறது.
கன்னியாகுமரி>அகத்தீஸ்வரம்>அகத்தீஸ்வரம்
- கல்வெட்டின் இடைப் பகுதி மட்டும் உள்ளது. அகத்தீச்வரர் கோயில் மகா தேவர்க்கு நித்த நிவந்தங்கள் செய்வதற்கு இறையிலியாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இவ்வூர் கல்வெட்டு எண் 14-இல் பிரமதேயம் முன்னூற்றுவமங்கலம் குறிப்பிடப்படுவதால் இக்கல்வெட்டும் அதன் தொடர்ச்சியாக இருக்கலாம்.
கன்னியாகுமரி>கல்குளம்>திக்கணங்கோடு
- திருக்கண்ணங்கோட்டு இறைவனுக்கு திருவக்கரத்துக்காக நிலதானம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the assignment, free of taxes, of Uttamachdlanalliir alias Kolipakkam, a village in BrahmadéSapparru in Virpédu-nadu, in the sub-division of Kaliyiir-kdttam, by Konappa, son of Muddappar for worship and daily offerings to the god. Arumbagandan and Bashaikkutappuvarayaragandan are mentioned as birudas of Muddappar. முத்தப்பர் மகன் கோனப்பன் அருளாளப் பெருமாள் கோயிலில் தன்னுடைய பெயரில் ஏற்படுத்திய சந்திக்கு அமுதுபடி, சாத்துபடி செய்ய வேண்டி காலியூர் கோட்டத்து விற்ப்பேட்டு நாட்டு பிரமதேசப்பற்று உத்தமசோழ நல்லூர் என்னும் கொளிபாக்கம் என்ற ஊரினை இறை இழித்து தானமாக அளித்துள்ளான்
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Built in. States that while Krishnadéva-Maharaya was camping at Kafichi, he granted two villages for the floating festival of god Ekambaranaha and that he constructed two small cars for the Vinayaka in that temple and for Krishna in the Perumal temple and also specifics the routes which the Siva and Vishnu temple cars should take on the respective festival days. கிருஷ்ணதேவராயர் ஏகாம்பரநாதர் கோயில் இறைவனுக்குத் திருப்பள்ளி ஒடத்திருநாள் நடத்துவதற்கு கிறாமம் ஒன்றை கொடையாக அளித்துள்ளார். ஏகாம்பரநாதன் கோயிலுக்கு சிறிய விநாயகர் தேர் ஒன்றும், பேரருளாளர் கோமிலுக்கு கிருஷ்ணன் தேர் ஒன்றும் செய்தளித்துள்ளார். பேரருளாளர் தேர், சொன்னவண்ணம் செய்த பெருமாள் மற்றும் முத்திகுடுத்த நாயனார் கோமிலுக்கு மேலத் திருவீதியே வந்து ஒதியஞ் சந்தி வழியாக பெரிய திருவீதி வழியாக தேர் செல்லவும், இதே வழியாக திரும்பி வரவும் ஆணையிட்டுள்ளார். அதேபோன்று ஏகாம்பரநாதர் கோயில் தேர் முன்பு போலே முத்திகுடுத்த நாயனார் திருவீதி வழியாக செல்லவும் ஆணையிட்டுள்ளச் செய்தி.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Built in. Records the assignment of certain taxes from the village of Nallalam in Vayalamur-parru. A certain Goppanan figures as the signatory. வயலாமூர்ப் பற்று நல்லாலம் என்னும் ஊரிலிருந்து பெறப்படும் வரிகள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருவிடையாட்டமாக உள்ள இவ்வூரில் பலதளி பூசை, கல்வியில் வல்ல பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம் சாகைப்புறம் (வேதங்களை கற்றுத் தருபவர்களுக்கு அளிக்கப்படும் நிலம்) நீங்கலாக ஏனைய நிலங்கள் மற்றும் அனைத்து வரிகளும் இறையிலி ஆக விடப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of 250 panam for offering cakes on ékadasi days after the return of the god from procession. The money was deposited on interest with the manradis of Tiruvattiyir. திருவத்தியூர் அருளாளப் பெருமாள் ஏகாதேசி தோறும் திருவீதி உலா சென்று திரும்பும் போது கெருட மண்டபத்தில் எழுந்தருளும்போது, இறைவனுக்கு தோசைப்படி படைக்க செல்லக்குட்டியார் என்பவர் 200 பணம் கொடையாக அளித்துள்ளார். இந்த 200 பணத்தினை சோமங்கலம் ஏரிப்பாசனத்தில் விளையும் திருவிடையாட்ட நிலத்தின் வழியாக வரும் அதிக வருவாயைக் கொண்டு செயல்படுத்திட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Enumerates the locali- ties to which the (image of the) god may resort to after it was carried in procession on the elephant, horse and garuda Vehicles respectively and after the car festival. திருவீதி உலாவின் போது யானை, குதிரை, கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளவும், திருத்தேர் விழாவின் போது கங்கை கொண்டான் மண்டபத்தில் எழுந்தருளவும், ஏகாம்பரநாதன் திருநாமத்துக்காணி திருத்தோப்புகளான சேரமான் பெருமாள் திருத்தோப்பு, அறங்பெருஞ்செல்வி திருப்தோப்பு, செண்பகத்தோப்பு, ஈசான் தேவர் திருப்தோப்பு ஆகிய நான்கு தோப்புகளிலும் இறைவன் எழுந்தருள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Incomplete. Gift of 100 panam for offering cakes during certain festivals. திருவைகாசித் திருநாள் மூன்றாம் திருநாள், திருமாசித் திருநாள் மூன்றாம் திருநாள், திருவாவணித் திருநாள், திருப்புரட்டாசி ஆகிய திருநாட்களில் சுகியன்படி இறைவனுக்கு படைக்க வேண்டி 100 பணம் அளித்து அதன் வட்டியிலிருந்து செலவு செய்து வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Beginning built in. Gilt of the village of Sittanaiijéri by Ramabhatta, son of Bhiitanatha Chittabhatlu for offerings to the god Végavati Raghunathan. பூதநாத சிட்டயப்பட்டுலு மகன் ராமபட்டர் என்பவர் வேகவதியில் அமைந்துள்ள இறைவன் ரகுனாதனுக்கு தேவையான அமுதுபடிகளுக்காக சீட்டணஞ்சேரி என்னும் கிராமத்தினைத் தானமாக வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of 80 pon for offering cakes on the festival days in the months of Ani, Purattadi, Masi and Vaigasi, out of the 9 pon and 6 panam accruing as interest every year at 1 panam per cent. During one of the festivals the god had to be taken to the temple of Sonnavannaméeyda-perimal on two days and cakes offered. தீத்தாரபிள்ளை மகன் எல்லப்பா பிள்ளை என்பவர் 80 பொன் அளித்து இதனின் வட்டி நூற்றுக்கு ஒரு பணமாக ஆண்டொன்றுக்கு ஒன்பது பொன்னும், ஆறு பணத்தின் வாயிலாக திருவாவணித் திருநாள், திருப்புரட்டாசித் திருநாள், திருமாசித் திருநாள், திருவைகாசித் திருநாள் ஆகிய நான்கு திருவிழாக்களின் போது இறைவனுக்கு அமுதுபடி செய்ய வழிவகைச் செய்துள்ளார். சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் ஐந்தாவது மற்றும் ஒன்பதாம் திருநாள் ஆகிய இரு நாட்களில் இறைவனுக்கு அமுது செய்தருளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the assign- ment of the income of certain villages to Ramaraja, son of Mahamandalésvara Chikkaraja of Araviti (?) for conducting the annual festivals of the god and for providing certain offerings and cakes. ஆரைவிடாய் ஜிக்கராஜாவின் மகன் ராமராஜா பேரருளாளர் கோயிலில் திருமார்கழித்திருநாள், தைத்திருநாள், ஆழ்வார் திருநாள், திருமுளைத் திருநாள் ஆகிய திருநாள் வழிபாடுகளை நடத்துவதற்கு சில ஊர்களின் வருமானங்களை அளித்துள்ளார். மேலும் இறைவன் திருவீதி உலா வரும் 25 ஏகாதேசி திருநாள்கள், உத்தியான துவாதேசி நாள், திருப்பவுத்தி திருநாள், ஸ்ரீஜயந்தி உறியடி நாட்கள் மகாலட்சுமி திருநாள், வன்னிமர நாள், திருக்கார்த்திகை நாள், பாடிவேட்டை நாள், ஊஞ்சல் திருநாள், வைகாசி வசந்தத்திருநாள் திருப்பளிஓடத் திருநாள், உகாதி தீவளிகை தோப்புத் திருநாள் என மொத்தம் 100 நாட்கள் வழிபாட்டுத் தேவைகளும், அமுதுபடிகளும் செய்யவேண்டி இவ்வூர்களின் வருவாய் தரப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற கோயில் கருவூலத்தார் ஒப்புக் கொண்டு அவருக்கு கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். திருவிழாக்களின் நடைமுறைகள், தேவையான பொருள்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் 100 நாட்கள் விழா நடைபெறுவது பற்றி இக்கல்வெட்டில் சொல்லப்படுவது சிறப்பாகும்.