Skip to main content

1146 results found

கன்னியாகுமரி>அகஸ்தீஸ்வரம்>அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி கல்வெட்டின் இடைப் பகுதி மட்டும் உள்ளது. அகத்தீச்வரர் கோயில் மகா தேவர்க்கு நித்த நிவந்தங்கள் செய்வதற்கு இறையிலியாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இவ்வூர் கல்வெட்டு எண் 14-இல் பிரமதேயம் முன்னூற்றுவமங்கலம் குறிப்பிடப்படுவதால் இக்கல்வெட்டும் அதன் தொடர்ச்சியாக இருக்கலாம்.
கன்னியாகுமரி>தோவாளை>இறச்சகுளம்
கன்னியாகுமரி புத்தேரி ஊரைச் சேர்ந்த சங்குப்பிள்ளை, ராமலெட்சமி வகையார் சுமை தாங்கிக் கல் நிறுவியதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கன்னியாகுமரி>கல்குளம்>திக்கணங்கோடு
கன்னியாகுமரி திருக்கண்ணங்கோட்டு இறைவனுக்கு திருவக்கரத்துக்காக நிலதானம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் முத்தப்பர் மகன் கோனப்பன் அருளாளப் பெருமாள் கோயிலில் தன்னுடைய பெயரில் ஏற்படுத்திய சந்திக்கு அமுதுபடி, சாத்துபடி செய்ய வேண்டி காலியூர் கோட்டத்து விற்ப்பேட்டு நாட்டு பிரமதேசப்பற்று உத்தமசோழ நல்லூர் என்னும் கொளிபாக்கம் என்ற ஊரினை இறை இழித்து தானமாக அளித்துள்ளான்
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கிருஷ்ணதேவராயர் ஏகாம்பரநாதர் கோயில் இறைவனுக்குத் திருப்பள்ளி ஒடத்திருநாள் நடத்துவதற்கு கிறாமம் ஒன்றை கொடையாக அளித்துள்ளார். ஏகாம்பரநாதன் கோயிலுக்கு சிறிய விநாயகர் தேர் ஒன்றும், பேரருளாளர் கோமிலுக்கு கிருஷ்ணன் தேர் ஒன்றும் செய்தளித்துள்ளார். பேரருளாளர் தேர், சொன்னவண்ணம் செய்த பெருமாள் மற்றும் முத்திகுடுத்த நாயனார் கோமிலுக்கு மேலத் திருவீதியே வந்து ஒதியஞ் சந்தி வழியாக பெரிய திருவீதி வழியாக தேர் செல்லவும், இதே வழியாக திரும்பி வரவும் ஆணையிட்டுள்ளார். அதேபோன்று ஏகாம்பரநாதர் கோயில் தேர் முன்பு போலே முத்திகுடுத்த நாயனார் திருவீதி வழியாக செல்லவும் ஆணையிட்டுள்ளச் செய்தி.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வயலாமூர்ப் பற்று நல்லாலம் என்னும் ஊரிலிருந்து பெறப்படும் வரிகள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருவிடையாட்டமாக உள்ள இவ்வூரில் பலதளி பூசை, கல்வியில் வல்ல பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம் சாகைப்புறம் (வேதங்களை கற்றுத் தருபவர்களுக்கு அளிக்கப்படும் நிலம்) நீங்கலாக ஏனைய நிலங்கள் மற்றும் அனைத்து வரிகளும் இறையிலி ஆக விடப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் திருவத்தியூர் அருளாளப் பெருமாள் ஏகாதேசி தோறும் திருவீதி உலா சென்று திரும்பும் போது கெருட மண்டபத்தில் எழுந்தருளும்போது, இறைவனுக்கு தோசைப்படி படைக்க செல்லக்குட்டியார் என்பவர் 200 பணம் கொடையாக அளித்துள்ளார். இந்த 200 பணத்தினை சோமங்கலம் ஏரிப்பாசனத்தில் விளையும் திருவிடையாட்ட நிலத்தின் வழியாக வரும் அதிக வருவாயைக் கொண்டு செயல்படுத்திட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் திருவீதி உலாவின் போது யானை, குதிரை, கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளவும், திருத்தேர் விழாவின் போது கங்கை கொண்டான் மண்டபத்தில் எழுந்தருளவும், ஏகாம்பரநாதன் திருநாமத்துக்காணி திருத்தோப்புகளான சேரமான் பெருமாள் திருத்தோப்பு, அறங்பெருஞ்செல்வி திருப்தோப்பு, செண்பகத்தோப்பு, ஈசான் தேவர் திருப்தோப்பு ஆகிய நான்கு தோப்புகளிலும் இறைவன் எழுந்தருள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் திருவைகாசித் திருநாள் மூன்றாம் திருநாள், திருமாசித் திருநாள் மூன்றாம் திருநாள், திருவாவணித் திருநாள், திருப்புரட்டாசி ஆகிய திருநாட்களில் சுகியன்படி இறைவனுக்கு படைக்க வேண்டி 100 பணம் அளித்து அதன் வட்டியிலிருந்து செலவு செய்து வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பூதநாத சிட்டயப்பட்டுலு மகன் ராமபட்டர் என்பவர் வேகவதியில் அமைந்துள்ள இறைவன் ரகுனாதனுக்கு தேவையான அமுதுபடிகளுக்காக சீட்டணஞ்சேரி என்னும் கிராமத்தினைத் தானமாக வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தீத்தாரபிள்ளை மகன் எல்லப்பா பிள்ளை என்பவர் 80 பொன் அளித்து இதனின் வட்டி நூற்றுக்கு ஒரு பணமாக ஆண்டொன்றுக்கு ஒன்பது பொன்னும், ஆறு பணத்தின் வாயிலாக திருவாவணித் திருநாள், திருப்புரட்டாசித் திருநாள், திருமாசித் திருநாள், திருவைகாசித் திருநாள் ஆகிய நான்கு திருவிழாக்களின் போது இறைவனுக்கு அமுதுபடி செய்ய வழிவகைச் செய்துள்ளார். சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் ஐந்தாவது மற்றும் ஒன்பதாம் திருநாள் ஆகிய இரு நாட்களில் இறைவனுக்கு அமுது செய்தருளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஆரைவிடாய் ஜிக்கராஜாவின் மகன் ராமராஜா பேரருளாளர் கோயிலில் திருமார்கழித்திருநாள், தைத்திருநாள், ஆழ்வார் திருநாள், திருமுளைத் திருநாள் ஆகிய திருநாள் வழிபாடுகளை நடத்துவதற்கு சில ஊர்களின் வருமானங்களை அளித்துள்ளார். மேலும் இறைவன் திருவீதி உலா வரும் 25 ஏகாதேசி திருநாள்கள், உத்தியான துவாதேசி நாள், திருப்பவுத்தி திருநாள், ஸ்ரீஜயந்தி உறியடி நாட்கள் மகாலட்சுமி திருநாள், வன்னிமர நாள், திருக்கார்த்திகை நாள், பாடிவேட்டை நாள், ஊஞ்சல் திருநாள், வைகாசி வசந்தத்திருநாள் திருப்பளிஓடத் திருநாள், உகாதி தீவளிகை தோப்புத் திருநாள் என மொத்தம் 100 நாட்கள் வழிபாட்டுத் தேவைகளும், அமுதுபடிகளும் செய்யவேண்டி இவ்வூர்களின் வருவாய் தரப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற கோயில் கருவூலத்தார் ஒப்புக் கொண்டு அவருக்கு கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். திருவிழாக்களின் நடைமுறைகள், தேவையான பொருள்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் 100 நாட்கள் விழா நடைபெறுவது பற்றி இக்கல்வெட்டில் சொல்லப்படுவது சிறப்பாகும்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தெக்கூரைச் சேர்ந்த சோமாசியர் மகன் உக்கிறாணி ராயன் என்பவன் திருவைகாசி திருவிழாவின் போது மூன்றாம் மற்றும் நான்காம் திருநாள்களில் இறைவனுக்கு அமுது செய்தருள, 320 பணம் அளித்துள்ளார். அதன் வட்டியிலிருந்து அச்செலவுகளைச் செய்யக் கோயில் பண்டாரத்தார் ஒப்புக் கொண்டு இக்கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் இராமானுஜ பண்டிதர் என்பவர் கோயில் பண்டாரத்தாரிடம் 50 பணம் கொடுத்து திருவிடையாட்ட நிலங்களுக்குப் புதிய வாய்க்கால்ப் பாசனம் ஏற்படுத்திக் கிடைக்கும் அதிக விளைச்சல் வருவாயிலிருந்து பெறப்படும் தொகைமினை திருவேட்டை நாளன்று இறைவனுக்கு அமுதுபடிக்காகச் செலவிட வழிவகைச் செய்துள்ளார்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பல்லிப்பாடு திம்மயங்கார் மகன் சென்னயங்கார் என்பவன் தன் முப்பாட்டனார் ராஜராமராஜ அவர்களின் நலனுக்காக கட்டிவித்த பொற்தாமரைத் திருக்குளம் இடிந்து தகர்ந்து போனதால் இத்திருக்குளத்தினை சீர் செய்ய 30 பொன் அளித்துள்ளார். அக்குளத்தின் அருகேயுள்ள தோட்டத்தில் நான்கு திருநாள்களிலும் இறைவனை எழுந்தருளி அமுது செய்யவேண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பொன் கொண்டு வாய்க்கால்களைச் சீர்திருத்தி அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் கொண்டு ஆவணி, புரட்டாசி, மாசி, வைகாசி ஆகிய மாதத் திருவிழாக்களில் 4 மற்றும் 9-ஆம் நாள் விழாக்களில் தோசை, பணியாரம் முதலியவை படைக்கவும் பிறபொருள்களுக்குமான செலவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பொத் துநாயக்கர் மகன் சூரப்ப நாயக்கர் திருவத்தியூர் பேரருளாளர் இறைவனுக்கு சங்கிறம்பாடி வேட்டைத்தோப்பு, திருநந்தவனத் தோட்டம் ஆகிய உபையத்துக்காக கூடலூர் அக்கிரகாரம் கொடையாக அளித்த செய்தி.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சடகோபஜீயரின் சீடரான சடகோபம்மன் லக்ஷ்ம்மன் பெருமாளுக்கு அப்பப்படி செய்வதற்கு பத்துப் பொன் கொடையளித்துள்ளார். இப்பொன் கொண்டு கோயில் நிலங்களுக்கு நல்ல நீர்ப்பாசன வசதி செய்து கிடைக்கும் கூடுதல் வருவாயின் மூலம் இறைவன் ஆவணி, புரட்டாசி, மாசி, வைகாசி ஆகிய மாதத் திருவிழாக்களின்போது உடையார் கோயிலுக்கும் கிருஷ்ணஜெயந்தியின் போது கிருஷ்ணன் கோயிலுக்கும் எழுந்தருளச் செய்யவும், அதுபோது அப்பம் படைத்து கொடை கொடுத்தவர்க்காக வழங்கப்படும் அப்பத்தை சடகோபஜீயர் மடத்தில் வழங்கவும் கோயில் பண்டாரத்தார் ஒப்புக்கொண்டு இக்கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பெரிய கோயில் கேழ்விப் பணிபுரியும் அழகிய மணவாளசீயர் திருவதி ராச்சியத்து விழுப்புரத்து சீர்மைமில் உள்ள தாங்கியநல்லூர், சிற்றாமூர், கோனூர், மத்தூர் ஆகிய நான்கு ஊர்களுக்கு இடைப்பட்ட காணையாந பிரதாபதேவராஜேந்திர புரத்துக்கும்மான எதிராஜபுரம் என்ற கிராமம் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதியில் இறைவன் எழுந்தருளும்போது நடக்கும் திருநாள், அனுமன் கோயில் வாசலில் அமுதுபடி, சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள்) தொடர்பான விழா, அழகியமணவாளப் பெருந்தோப்பு மண்டபத்தில் ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி, வைகாசி மாத திருவிழாக்களில் எழுந்தருளும்போது படைக்கப்படும் அமுதுபடி, பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு ஆகிய விழாச் செலவுகளுக்காக இவ்வூர் வருவாய் தானமாக வழங்கப்பட்டுளளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள் கோயிலில் கேழ்வி பணிபுரியும் அழகிய மணவாளஜீயர் நெடுங்கல், சாலைப்பாக்க சீர்மைக்குள் உள்ள கரும்பாக்கம், மாம்பாக்கம் மற்றும் சங்கராசார்யபுரம் எனும் சுறுட்டில் ஆகிய நான்கு ஊர்களைத் தானமாக அளித்துள்ளார். இவற்றின் வருவாய் கொண்டு நாள்தோறும் பெரிய தளிகை இறைவனுக்குப் படைக்கவும் அதனை உரியவர்களுக்குப் பிரித்து வழங்கவும் கோயில் பண்டாரத்தார் ஒப்புக்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அச்சுத தேவமகாராயரால் அருளாளப் பெருமாள் கோயிலில் அவசரச் சிறப்பு மகாநைவேத்தியத்துக்கு இறைவனுக்கு படைக்கும் சிறப்பு உணவு) சீயப்புரத்துக்குள் உள்ள 14 கிராமங்களைத் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.