Skip to main content

1128 results found

காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of money for offerings. The money was deposited for interest with Madabiisi Ugrant-rayar. | தெக்கூரைச் சேர்ந்த சோமாசியர் மகன் உக்கிறாணி ராயன் என்பவன் திருவைகாசி திருவிழாவின் போது மூன்றாம் மற்றும் நான்காம் திருநாள்களில் இறைவனுக்கு அமுது செய்தருள, 320 பணம் அளித்துள்ளார். அதன் வட்டியிலிருந்து அச்செலவுகளைச் செய்யக் கோயில் பண்டாரத்தார் ஒப்புக் கொண்டு இக்கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Built in at the beginning. Records gift by Ramanujapanditar ayyan of 50 panam of gold which was to be invested on land and the income therefrom utilized for providing certain offerings to the god on certain specified occasions. இராமானுஜ பண்டிதர் என்பவர் கோயில் பண்டாரத்தாரிடம் 50 பணம் கொடுத்து திருவிடையாட்ட நிலங்களுக்குப் புதிய வாய்க்கால்ப் பாசனம் ஏற்படுத்திக் கிடைக்கும் அதிக விளைச்சல் வருவாயிலிருந்து பெறப்படும் தொகைமினை திருவேட்டை நாளன்று இறைவனுக்கு அமுதுபடிக்காகச் செலவிட வழிவகைச் செய்துள்ளார்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records a gift of gold by Chennayyangar, son of Timmayyangar of Pallipipadu, for certain repairs to a ruined tank called Porramaraikkulam and for offerings to the god to be made in the garden adjoining, on four festival days. The above charities are stated to have been made for the merit of Raja Ramaraju Ayyan. பல்லிப்பாடு திம்மயங்கார் மகன் சென்னயங்கார் என்பவன் தன் முப்பாட்டனார் ராஜராமராஜ அவர்களின் நலனுக்காக கட்டிவித்த பொற்தாமரைத் திருக்குளம் இடிந்து தகர்ந்து போனதால் இத்திருக்குளத்தினை சீர் செய்ய 30 பொன் அளித்துள்ளார். அக்குளத்தின் அருகேயுள்ள தோட்டத்தில் நான்கு திருநாள்களிலும் இறைவனை எழுந்தருளி அமுது செய்யவேண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பொன் கொண்டு வாய்க்கால்களைச் சீர்திருத்தி அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் கொண்டு ஆவணி, புரட்டாசி, மாசி, வைகாசி ஆகிய மாதத் திருவிழாக்களில் 4 மற்றும் 9-ஆம் நாள் விழாக்களில் தோசை, பணியாரம் முதலியவை படைக்கவும் பிறபொருள்களுக்குமான செலவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
End much damaged, Records the gift, by purchase, of the village Kiidaliir agraharam by Sirappa- nayaka, son of Pottu-nayaka of Kasyapa-gotra, for the Padivéttai and the Topputirunal festivals. பொத் துநாயக்கர் மகன் சூரப்ப நாயக்கர் திருவத்தியூர் பேரருளாளர் இறைவனுக்கு சங்கிறம்பாடி வேட்டைத்தோப்பு, திருநந்தவனத் தோட்டம் ஆகிய உபையத்துக்காக கூடலூர் அக்கிரகாரம் கொடையாக அளித்த செய்தி.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of gold for offering cakes during festival days by SatagSpa[mman] Lakshmana[mman], a disciple of Satagdpa-Jiyar. It is stated that Urrukkattu-kéttam in which Kafichipuram was situated is said to have belonged to Chandragiri-rajya. சடகோபஜீயரின் சீடரான சடகோபம்மன் லக்ஷ்ம்மன் பெருமாளுக்கு அப்பப்படி செய்வதற்கு பத்துப் பொன் கொடையளித்துள்ளார். இப்பொன் கொண்டு கோயில் நிலங்களுக்கு நல்ல நீர்ப்பாசன வசதி செய்து கிடைக்கும் கூடுதல் வருவாயின் மூலம் இறைவன் ஆவணி, புரட்டாசி, மாசி, வைகாசி ஆகிய மாதத் திருவிழாக்களின்போது உடையார் கோயிலுக்கும் கிருஷ்ணஜெயந்தியின் போது கிருஷ்ணன் கோயிலுக்கும் எழுந்தருளச் செய்யவும், அதுபோது அப்பம் படைத்து கொடை கொடுத்தவர்க்காக வழங்கப்படும் அப்பத்தை சடகோபஜீயர் மடத்தில் வழங்கவும் கோயில் பண்டாரத்தார் ஒப்புக்கொண்டு இக்கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records a gift of land by Alagiyamanavala Jiyar for offerings. Mentions the shrine of Tondaradippodi-Alvar and Pratapadévarajéndrapuram alias Etirajapuram. பெரிய கோயில் கேழ்விப் பணிபுரியும் அழகிய மணவாளசீயர் திருவதி ராச்சியத்து விழுப்புரத்து சீர்மைமில் உள்ள தாங்கியநல்லூர், சிற்றாமூர், கோனூர், மத்தூர் ஆகிய நான்கு ஊர்களுக்கு இடைப்பட்ட காணையாந பிரதாபதேவராஜேந்திர புரத்துக்கும்மான எதிராஜபுரம் என்ற கிராமம் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதியில் இறைவன் எழுந்தருளும்போது நடக்கும் திருநாள், அனுமன் கோயில் வாசலில் அமுதுபடி, சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள்) தொடர்பான விழா, அழகியமணவாளப் பெருந்தோப்பு மண்டபத்தில் ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி, வைகாசி மாத திருவிழாக்களில் எழுந்தருளும்போது படைக்கப்படும் அமுதுபடி, பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு ஆகிய விழாச் செலவுகளுக்காக இவ்வூர் வருவாய் தானமாக வழங்கப்பட்டுளளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gilt of the four villages Nedungal, Karumbakkam, Mambakkam, and Sankaracharyapuram alias Suruttil by Alagiyamanavala-Jiyar, the kélvi of Periyakoyil. அருளாளப் பெருமாள் கோயிலில் கேழ்வி பணிபுரியும் அழகிய மணவாளஜீயர் நெடுங்கல், சாலைப்பாக்க சீர்மைக்குள் உள்ள கரும்பாக்கம், மாம்பாக்கம் மற்றும் சங்கராசார்யபுரம் எனும் சுறுட்டில் ஆகிய நான்கு ஊர்களைத் தானமாக அளித்துள்ளார். இவற்றின் வருவாய் கொண்டு நாள்தோறும் பெரிய தளிகை இறைவனுக்குப் படைக்கவும் அதனை உரியவர்களுக்குப் பிரித்து வழங்கவும் கோயில் பண்டாரத்தார் ஒப்புக்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of 14 villages by the king for the big special offering in the temple for the king s own merit. அச்சுத தேவமகாராயரால் அருளாளப் பெருமாள் கோயிலில் அவசரச் சிறப்பு மகாநைவேத்தியத்துக்கு இறைவனுக்கு படைக்கும் சிறப்பு உணவு) சீயப்புரத்துக்குள் உள்ள 14 கிராமங்களைத் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the sale of certain services and the celebration of certain festivals in the temple to Tiruvengadasirukkar alias Sri Parankuéa Tiruppani-Pillai of the temple at Tiruppullani in Pandi-mandalam, by Ettiir Tirumalai Kumira-Tatacharya and others of the temple. There was another appointed but the order was cancelled subsequently in favour of the above individual by Venkatapatirasayyan, (probably Venkata J). பாண்டி மண்டலம் திருப்புல்லாணி, திருமலை, திருப்பதி திருவேங்கடச் சக்கரான ஸ்ரீபராங்குசத் திருப்பணிப் பிள்ளைக்கு காஞ்சிபுரம் திருவத்தியூர் பேரருளாளப் பெருமாள் கோயில் திருப்பணி நிர்வாகம் செய்ய கோயில் ஸ்ரீகாரிய துரந்தரான சேனை முதலியார், ஸ்ரீபண்டாரத்தார், ஸ்ரீகாரியஞ் செய்யும் எட்டுர் திருமலை குமாரத் தாத்தாச்சாரியார் ஆகியோர் 500 பொன்னினை பெற்றுக்கொண்டு விலையாவணம் செய்துள்ளனர். இப்பொன் ஸ்ரீபண்டாரத்தில் ஓப்படைக்கப்பட்டது. இதற்கு முன்னர் திருப்பணி நிருவாகம் செய்த ராமயன் என்பவர் வேங்டபதிராசய்யன்னால் நீக்கப்பட்டு இவருக்கு நிர்வாகம் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பணி நிருவாகத்திற்கு அளிக்கப்படும் பிரசாதம், திருப்பணியாரம், மனை உள்பட அனைத்து வசதிகளும் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிரு வாகத்தினர் ஸ்ரீஜயந்தி உறிக்கட்டி, திருப்பணி ஓடத்திருநாள் ஆகிய விழாக்களை நடத்திக் கொண்டு வரும் லாபங்களும் இவர்களை அனுபவித்துக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது. புனுகு காப்பு இவர் சாத்தும் போது இறைவனுக்குச் சாத்தும் ஆடைகள் on முடிந்ததும் இவருக்கு உரியன என்றும் சொல்லப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Incom- plete, Gift of gold by the same individual for meeting the expenses on the [9] Ekadasi days and on the Kausika-dvadasi days during the chaturmasa (4 months) after hearing the Kausika Purana. The items of expenditure included the presentation of a cloth to Van Satagdpa-Jiyar; who seems to have read the Kausika- Purana. ஸ்ரீபராங்குச ஜீயர், சாதுர் (நான்கு) மாதத்தில் ஒன்பது ஏகாதெசியும், கவிசிகபுராணம் கேட்ட பின்பு வரும் கவிசிகபுராண துவாதசி ஒன்றும் ஆக பத்து நாட்கள் திருவிழா வழிபாட்டுத் தேவைக்காக 800 பொன் தானமளித்துள்ளார். இதன்படி பத்துநாட்களும் இறைவனுக்குத் திருநீராடலும், கிராம உலாவும் நடத்தவும் அதுபொழுது, சிங்கார நடை ஆழ்வார் முறை நிகழ்த்தவும் கொடி, குடை வாகனம், தீப்பந்தம் சுமப்பவர்கள் ஊதியம் ஆகியவற்றுக்கான செலவுகள் செய்யவும் கோயிலார் ஒப்புக்கொண்டு கல்வெட்டு வெட்டிக்கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of village of Pilambakkam in Vadap[a}nadu, a subdivision of Puttantir-kottam, a district of Padaividurajya in Jayangondasola- mandalam, for celebrating the festival in the month of Avani, by Vyasa-Tirtha (a Madhvaguru), disciple of Brahmanya-Tirtha. Vy4sa- Tirtha seems to have got the village as a gift from Krishnaraya and the festival was instituted in his name. _Vyasa- Tirtha also made a gift of the serpent-vehicle to be carried in procession on the 4th day of all festivals. ஸ்ரீமத் பிராமணீய தீர்த்த ஸ்ரீபாதங்கள் என்பவரின் சிஷ்யரான ஸ்ரீமத் வியாஸ தீர்த்த ஸ்ரீபாதங்கள் தாம் விஜயநகர மன்னரிடமிருந்து பெற்ற புலம்பாக்கம் என்ற ஊரை அருளாளப் பெருமாள் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட கோயில் தானத்தார் அவருடைய உபயமாக ஆவணித் திருவிழா பூர நட்சத்திரத்தில் கொடியேற்றம் தொடங்கி மூல நட்சத்திரத்தில் தீர்த்தவாரியாக ஆண்டுதோறும் நடத்த சம்மதித்துக் கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். மேலும் நாலாம் திருவிழாவில் இவர் செய்து கொடுத்த அனந்த பீட வாகனத்தில்(நாக வாகனம்) இறைவன் எழுந்தருள செய்யவும் சம்மதித்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the gift of gold (yajñōpavīta) thread and ten perpetual jamps to the god Vishnu of Attiyur by Kalingarkōn. பாடலாக இயற்றப்பட்டுள்ளது. காலிங்கற்கோன் என்பவன் கரிய திருமுகிற்(திருமால்) இறைவனுக்கு பொன்னாலான பூனூல் மற்றும் 10 திருநந்தா விளக்கு வைத்துள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of the village of Ārpākkam in Māgaral-nādu for conducting the daily expenses in the same temple. Gurukularayan, Nigariliśōlappallavaraiyan and Nilagangaraiyan figure among the signatories. திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயில் தினசரி வழிபாட்டிற்காக மாகறல் நாட்டு ஆற்பாக்கம் என்னும் கிராமத்தினை தேவதான இறையிலியாக கொள்ள இக்கோயில் ஸ்ரீவயிஷ்ணவக் கண்காணி செய்பவர்களுக்கும் வரிக் கூறு செய்பவர்களுக்கும் மன்னன் நேரடி ஆணை வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the gift by Mahābalivāṇarāyar of the village of Kulottunga-vilagam in the eastern portion of Urrukkäṭṭu-kōṭṭam, free of taxes, for offerings, daily worship, lamp, garland and other things required for the god Pagaiyar-mud südumperumal set up by him in the temple. அருளாளநாதன் கோயிலில் மகாபலி வாணராயர் என்பவர் எழுந்தருளுவித்த நாயனார் பகையற முடிசூடு பெருமாளின் திருமேனி வழிபாட்டிற்காக அமுதுபடி, சாத்துப்படி, திருப்பரிவட்டம், திருவிளக்கு, திருமாலை ஆகியவற்றிற்காக ஊற்றுக்காட்டுக் கோட்டத்து கீழ்துண்டத்தில் திரையனூர் பிடாகை குலோத்துங்க சோழ விளாகம் என்னும் ஊரினை இறை இழித்துத் தானமாக இம்மன்னன் வழங்கியுள்ளான். இது மன்னனின் நேரடி ஆணையாக கோயில் தானத்தாற்கு அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Registers the orders of Nilagangaraiyan Tiruvēkambamuḍaiyan making a gift, free of taxes, of the village of Vallavadaraiyancheri in Urrukkāṭṭu-kōṭṭam for offerings and worship, to the god and for the service called Kumāragōpālan-sandi instituted by him. நீலகங்கரையன் திருவேகம்பமுடையான் என்பவன் தன்னுடைய பெயரால் குமாரகோபாலன் என்ற சன்தி ஒன்றினை திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயிலில் ஏற்படுத்தினான். இச்சன்திக்கு அமுதுபடி, சாத்துப்படி, வெஞ்சனம், அக்கரணை போன்ற தேவைகளுக்காக ஊற்றுக்காட்டுக்கோட்டத்து வல்லத்தரையன்சேரி கிராமத்தினை திருவிடையாட்டமாக இக்கோயிலுக்கு தானமளித்துள்ளான். இவ்வூரில் வசூலிக்கப்படும் கடமை ஆயம், காசு கடமை, பொன் வரி, நாட்டு வரி, காணிக்கை, களபட்டி, கார்த்திகைப்பச்சை, தறிஇறை, தட்டாரப்பாட்டம், பொதுமக்கள் பேர்க்கடமை, இனவரி, ஏரிமீன்பாட்டம், மாவடை, செக்குக்கடமை, புறக்கலனை மற்றும் அனைத்து வரிகளையும் இறை நீக்கி இவ்வூரினை திருவிடையாட்டமாக தானமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of land in the villages of Perumbudur with its hamlets Mēlaipattu, Kōṭṭuppakkam, Pañchalipaṭṭu, Payvaniyapattu, Kusapattu and Kachchipattu, for conducting the service Rāhuttarayan- sandi called after the donor Nallasiddarasa, who bears various birudas and who is stated to have been born of the Pallava family and of Bharadvaja-gōtra. மீசரகண்ட ராகுதராய நல்லசித்தராசன் என்னும் குறுநில மன்னன் பல்லவகுலத்தைச் சார்ந்தவன் என்றும் பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்தவன் என்றும் ரிஷப(காளை) இலச்சினையை கொண்டவன் என்றும் முக்கண்டி காடுவட்டி என்றும் காஞ்சிபுரவராதீஸ்வர் என்றும் கூறிக்கொள்கிறான். பல்லவர்குல சிற்றரசனான இவன் தனது பெயரால் இராகுத்தராய சன்திக்கு அமுதுபடி வெஞ்சனம், அப்ப அமுது, இலை அமுது, அடைக்காயமுது(பாக்கு) சந்தனம், கத்தூரி, கற்பூரம், குங்குமம், திருமாலை, திருக்குழல் திருப்பள்ளித்தாமம் ஆகியவற்றினை அளிப்பதற்காக வேண்டி செங்காட்டு கோட்டம் பெரும்பூதூர், மேலைப்பட்டு, கொட்டுப்பாக்கம், பாஞ்சாலிப்பட்டு, பாயவாணிப்பட்டு, குசப்பட்டு, கச்சிப்பட்டு இவ்வூரிலுள்ள விளைநிலம், கொல்லை நிலங்களில் இவ்வூர்களுக்கு என்ற ஒதுக்கிய தேவதானம் திருவிடையாட்டம், பட்டவிருத்தி இறையிலி நிலங்கள் ஆகிய நிலங்களை நீக்கி ஏனைய நிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் அனைத்து வரிகளை மேற்சொன்னவற்றிற்கு பயன்படுத்த வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Registers royal gift of tax-free lands in Pulippakkam for conducting the Kodandaraman sandhi and other services and worship in the Arualap perumal temple. The services were be conducted by periyaperumal jiyar. அருளாளப் பெருமாள் கோயிலில் மன்னனின் பெயரால் ஏற்படுத்திய கோதண்டராமன் சந்தி திருநாள் திங்கட் திருவிழா ஆகியவற்றின் போது வழிபாட்டிற்காக புலிப்பாக்கமும் அவ்வூரின் பிடாகைகளும் திருவிடையாட்டாமாக இட்டு இறை இழித்து தானமளித்துள்ளான். இச்சந்தி வழிபாட்டினையும், திருநாள் வழிபாட்டினையும் பெரியபெருமாள் ஜீயர் நடத்திட அறிவுறுத்தி உள்ளன.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of land in Eriyagaram, a hamlet of Kuttanur alias Rājādhirāja- chaturvēṇdimangalam, by a native of the latter village for maintaining a flower-garden for supplying sacred garlands. கூத்தானூர் எனும் ராஜாதிராஜச் சதுர்வேதி மங்கலத்து பிடாகை ஏரியகரத்து நிலம் ஒன்றினை மௌலிபட்டன் சர்வகிருதுயாஜியர் என்றும் அரிகரச்சக்கரவத்தி என்பவன் தனிநலன் வேண்டி அருளாளப் பெருமாள் கோயிலில் திருநந்தவனம் செய்ய அளித்துள்ளான். இத்திருநந்தவனத்தின் வாயிலாக இறைவனுக்குத் திருமாலை அளித்திட வழிவகை செய்துள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Assignment of certain taxes in Sōmangalam for offerings and repairs in the same temple by Kadakkan alias Nilagangaraiyan. கடகன் என்கிற நீலகங்கரையன் என்பவன் சோமங்கலம் என்னும் கிராமத்தில் வசூலிக்கப்படும் வரிகளில் அரிப்பாடிகாவல் என்ற வரியினைத் தவிர்த்து ஏனைய அனைத்து வரிகளும் அருளாளப் பெருமாள் கோயில் திருநிலைகோபுரத்து திருப்பணிகளுக்கும் மற்றும் இறைவன் வழிபாட்டிற்காகவும் அளித்திட வழிவகைச் செய்துள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Registers an order of Madurantaka Pottappichchōlan stating that the assembly of the people of Jayangonda-solamandalam remitted six kalam of paddy per vēli of lands granted as dēvadānam, tiruvidaiyāṭṭam, pallichchandam, agara-parru, maḍapparru, jivita-parru, padaiparru, and vanniya-parru. மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து நாட்டுப் பிரிவு தலைவர்களுக்கு நேரடி ஆணை ஒன்று பிறப்பித்துள்ளான். திறப்பு, தேவதானம், திருவிடையாட்டம் (பெருமாள் கோயிலுக்கு அளிக்கப்படும் நிலம்), பள்ளிச்சந்தம் (பௌத்த கோயிலுக்கு வழங்கிய நிலம்), அகரப்பற்று, மடப்புறம், சீவிதப்பற்று, படைப்பற்று, வன்னியப்பற்று ஆகிய நிலங்களில் இருந்து வேலி ஒன்றுக்கு ஆறு கலநெல் கழித்துக் கொண்டு மீதயை வரி வசூல் செய்ய ஆணையிட்டுள்ளான். திறப்பு என்பது நேரடியாக அரசுக்கு இறை செலுத்தும் வெள்ளான் வகைநிலம்; இன்றைய ரயத்வாரி போன்றது.