காஞ்சிபுரம்பாண்டி மண்டலம் திருப்புல்லாணி, திருமலை, திருப்பதி திருவேங்கடச் சக்கரான ஸ்ரீபராங்குசத் திருப்பணிப் பிள்ளைக்கு காஞ்சிபுரம் திருவத்தியூர் பேரருளாளப் பெருமாள் கோயில் திருப்பணி நிர்வாகம் செய்ய கோயில் ஸ்ரீகாரிய துரந்தரான சேனை முதலியார், ஸ்ரீபண்டாரத்தார், ஸ்ரீகாரியஞ் செய்யும் எட்டுர் திருமலை குமாரத் தாத்தாச்சாரியார் ஆகியோர் 500 பொன்னினை பெற்றுக்கொண்டு விலையாவணம் செய்துள்ளனர். இப்பொன் ஸ்ரீபண்டாரத்தில் ஓப்படைக்கப்பட்டது. இதற்கு முன்னர் திருப்பணி நிருவாகம் செய்த ராமயன் என்பவர் வேங்டபதிராசய்யன்னால் நீக்கப்பட்டு இவருக்கு நிர்வாகம் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பணி நிருவாகத்திற்கு அளிக்கப்படும் பிரசாதம், திருப்பணியாரம், மனை உள்பட அனைத்து வசதிகளும் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிரு வாகத்தினர் ஸ்ரீஜயந்தி உறிக்கட்டி, திருப்பணி ஓடத்திருநாள் ஆகிய விழாக்களை நடத்திக் கொண்டு வரும் லாபங்களும் இவர்களை அனுபவித்துக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது. புனுகு காப்பு இவர் சாத்தும் போது இறைவனுக்குச் சாத்தும் ஆடைகள் on முடிந்ததும் இவருக்கு உரியன என்றும் சொல்லப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்ஸ்ரீபராங்குச ஜீயர், சாதுர் (நான்கு) மாதத்தில் ஒன்பது ஏகாதெசியும், கவிசிகபுராணம் கேட்ட பின்பு வரும் கவிசிகபுராண துவாதசி ஒன்றும் ஆக பத்து நாட்கள் திருவிழா வழிபாட்டுத் தேவைக்காக 800 பொன் தானமளித்துள்ளார். இதன்படி பத்துநாட்களும் இறைவனுக்குத் திருநீராடலும், கிராம உலாவும் நடத்தவும் அதுபொழுது, சிங்கார நடை ஆழ்வார் முறை நிகழ்த்தவும் கொடி, குடை வாகனம், தீப்பந்தம் சுமப்பவர்கள் ஊதியம் ஆகியவற்றுக்கான செலவுகள் செய்யவும் கோயிலார் ஒப்புக்கொண்டு கல்வெட்டு வெட்டிக்கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
காஞ்சிபுரம்ஸ்ரீமத் பிராமணீய தீர்த்த ஸ்ரீபாதங்கள் என்பவரின் சிஷ்யரான ஸ்ரீமத் வியாஸ தீர்த்த ஸ்ரீபாதங்கள் தாம் விஜயநகர மன்னரிடமிருந்து பெற்ற புலம்பாக்கம் என்ற ஊரை அருளாளப் பெருமாள் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட கோயில் தானத்தார் அவருடைய உபயமாக ஆவணித் திருவிழா பூர நட்சத்திரத்தில் கொடியேற்றம் தொடங்கி மூல நட்சத்திரத்தில் தீர்த்தவாரியாக ஆண்டுதோறும் நடத்த சம்மதித்துக் கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். மேலும் நாலாம் திருவிழாவில் இவர் செய்து கொடுத்த அனந்த பீட வாகனத்தில்(நாக வாகனம்) இறைவன் எழுந்தருள செய்யவும் சம்மதித்துள்ளனர்.
காஞ்சிபுரம்பாடலாக இயற்றப்பட்டுள்ளது. காலிங்கற்கோன் என்பவன் கரிய திருமுகிற்(திருமால்) இறைவனுக்கு பொன்னாலான பூனூல் மற்றும் 10 திருநந்தா விளக்கு வைத்துள்ளான்.
காஞ்சிபுரம்திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயில் தினசரி வழிபாட்டிற்காக மாகறல் நாட்டு ஆற்பாக்கம் என்னும் கிராமத்தினை தேவதான இறையிலியாக கொள்ள இக்கோயில் ஸ்ரீவயிஷ்ணவக் கண்காணி செய்பவர்களுக்கும் வரிக் கூறு செய்பவர்களுக்கும் மன்னன் நேரடி ஆணை வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்அருளாளநாதன் கோயிலில் மகாபலி வாணராயர் என்பவர் எழுந்தருளுவித்த நாயனார் பகையற முடிசூடு பெருமாளின் திருமேனி வழிபாட்டிற்காக அமுதுபடி, சாத்துப்படி, திருப்பரிவட்டம், திருவிளக்கு, திருமாலை ஆகியவற்றிற்காக ஊற்றுக்காட்டுக் கோட்டத்து கீழ்துண்டத்தில் திரையனூர் பிடாகை குலோத்துங்க சோழ விளாகம் என்னும் ஊரினை இறை இழித்துத் தானமாக இம்மன்னன் வழங்கியுள்ளான். இது மன்னனின் நேரடி ஆணையாக கோயில் தானத்தாற்கு அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்நீலகங்கரையன் திருவேகம்பமுடையான் என்பவன் தன்னுடைய பெயரால் குமாரகோபாலன் என்ற சன்தி ஒன்றினை திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயிலில் ஏற்படுத்தினான். இச்சன்திக்கு அமுதுபடி, சாத்துப்படி, வெஞ்சனம், அக்கரணை போன்ற தேவைகளுக்காக ஊற்றுக்காட்டுக்கோட்டத்து வல்லத்தரையன்சேரி கிராமத்தினை திருவிடையாட்டமாக இக்கோயிலுக்கு தானமளித்துள்ளான். இவ்வூரில் வசூலிக்கப்படும் கடமை ஆயம், காசு கடமை, பொன் வரி, நாட்டு வரி, காணிக்கை, களபட்டி, கார்த்திகைப்பச்சை, தறிஇறை, தட்டாரப்பாட்டம், பொதுமக்கள் பேர்க்கடமை, இனவரி, ஏரிமீன்பாட்டம், மாவடை, செக்குக்கடமை, புறக்கலனை மற்றும் அனைத்து வரிகளையும் இறை நீக்கி இவ்வூரினை திருவிடையாட்டமாக தானமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்மீசரகண்ட ராகுதராய நல்லசித்தராசன் என்னும் குறுநில மன்னன் பல்லவகுலத்தைச் சார்ந்தவன் என்றும் பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்தவன் என்றும் ரிஷப(காளை) இலச்சினையை கொண்டவன் என்றும் முக்கண்டி காடுவட்டி என்றும் காஞ்சிபுரவராதீஸ்வர் என்றும் கூறிக்கொள்கிறான். பல்லவர்குல சிற்றரசனான இவன் தனது பெயரால் இராகுத்தராய சன்திக்கு அமுதுபடி வெஞ்சனம், அப்ப அமுது, இலை அமுது, அடைக்காயமுது(பாக்கு) சந்தனம், கத்தூரி, கற்பூரம், குங்குமம், திருமாலை, திருக்குழல் திருப்பள்ளித்தாமம் ஆகியவற்றினை அளிப்பதற்காக வேண்டி செங்காட்டு கோட்டம் பெரும்பூதூர், மேலைப்பட்டு, கொட்டுப்பாக்கம், பாஞ்சாலிப்பட்டு, பாயவாணிப்பட்டு, குசப்பட்டு, கச்சிப்பட்டு இவ்வூரிலுள்ள விளைநிலம், கொல்லை நிலங்களில் இவ்வூர்களுக்கு என்ற ஒதுக்கிய தேவதானம் திருவிடையாட்டம், பட்டவிருத்தி இறையிலி நிலங்கள் ஆகிய நிலங்களை நீக்கி ஏனைய நிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் அனைத்து வரிகளை மேற்சொன்னவற்றிற்கு பயன்படுத்த வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்அருளாளப் பெருமாள் கோயிலில் மன்னனின் பெயரால் ஏற்படுத்திய கோதண்டராமன் சந்தி திருநாள் திங்கட் திருவிழா ஆகியவற்றின் போது வழிபாட்டிற்காக புலிப்பாக்கமும் அவ்வூரின் பிடாகைகளும் திருவிடையாட்டாமாக இட்டு இறை இழித்து தானமளித்துள்ளான். இச்சந்தி வழிபாட்டினையும், திருநாள் வழிபாட்டினையும் பெரியபெருமாள் ஜீயர் நடத்திட அறிவுறுத்தி உள்ளன.
காஞ்சிபுரம்கூத்தானூர் எனும் ராஜாதிராஜச் சதுர்வேதி மங்கலத்து பிடாகை ஏரியகரத்து நிலம் ஒன்றினை மௌலிபட்டன் சர்வகிருதுயாஜியர் என்றும் அரிகரச்சக்கரவத்தி என்பவன் தனிநலன் வேண்டி அருளாளப் பெருமாள் கோயிலில் திருநந்தவனம் செய்ய அளித்துள்ளான். இத்திருநந்தவனத்தின் வாயிலாக இறைவனுக்குத் திருமாலை அளித்திட வழிவகை செய்துள்ளான்.
காஞ்சிபுரம்கடகன் என்கிற நீலகங்கரையன் என்பவன் சோமங்கலம் என்னும் கிராமத்தில் வசூலிக்கப்படும் வரிகளில் அரிப்பாடிகாவல் என்ற வரியினைத் தவிர்த்து ஏனைய அனைத்து வரிகளும் அருளாளப் பெருமாள் கோயில் திருநிலைகோபுரத்து திருப்பணிகளுக்கும் மற்றும் இறைவன் வழிபாட்டிற்காகவும் அளித்திட வழிவகைச் செய்துள்ளான்.
காஞ்சிபுரம்மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து நாட்டுப் பிரிவு தலைவர்களுக்கு நேரடி ஆணை ஒன்று பிறப்பித்துள்ளான். திறப்பு, தேவதானம், திருவிடையாட்டம் (பெருமாள் கோயிலுக்கு அளிக்கப்படும் நிலம்), பள்ளிச்சந்தம் (பௌத்த கோயிலுக்கு வழங்கிய நிலம்), அகரப்பற்று, மடப்புறம், சீவிதப்பற்று, படைப்பற்று, வன்னியப்பற்று ஆகிய நிலங்களில் இருந்து வேலி ஒன்றுக்கு ஆறு கலநெல் கழித்துக் கொண்டு மீதயை வரி வசூல் செய்ய ஆணையிட்டுள்ளான். திறப்பு என்பது நேரடியாக அரசுக்கு இறை செலுத்தும் வெள்ளான் வகைநிலம்; இன்றைய ரயத்வாரி போன்றது.
காஞ்சிபுரம்மூன்றாம் இராசராசனின் 22-ஆம் ஆட்சியாண்டில் பொத்தப்பி என்னும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தெலுங்கு சோழ சிற்றரசன் மதுராந்தப்பொத்தப்பிச் சோழன் மனுமசித்தரசன் என்பவன் படுவூர் கோட்டத்திலுள்ள கண்டகோபால விண்ணகர் எம்பெருமான் கோயில் அழகப் பெருமாளுக்கு இக்கோட்டத்திலுள்ள ஊர் ஒன்றினை இறைஇழித்துத் தானமாக வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்அருளாளப் பெருமாள் கோயிலில் இறை பணி செய்யும் திரிபுவனவீரந் பதியிலார் இரு நூறு நபர்களுக்கு வீட்டு மனையும், நிலமும் வழங்கிட வேண்டுமென்று இக்கோயில் வைணவக் கண்காணி செய்பவர்களுக்கு திரிபுவன வீரதேவர் என்றழைக்கப்படும் மூன்றாம் குலோத்துங்கள் நேரடி ஆணை வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்கண்ட கோபாலன், ஸ்ரீதேவி ஆகியோரது மகனும், தெலுங்குச் சோழ மன்னன் மனும சித்தியின் தம்பியுமான தம்முசித்தி என்பவன் நெல்லூரில் முடிசூட்டிக் கொண்டபோது பண்டராஷ்ட்ராத்தின் முதன்மையான கிராமம் முட்டியம்பாக்கத்தை ஹஸ்திசைல (அத்திகிரி) இறைவனுக்கு தானமளித்துள்ளான்.
காஞ்சிபுரம்குலோத்துங்க சோழன் தனது பெயரால் ஏற்படுத்திய குலோத்துங்க சோழன் சன்திக்கு இறைவன் வழிபாட்டிற்காக தேவைப்படும் பொருளுக்காக வேண்டி ஊற்றுக்காட்டு கோட்டத்து மேல் துண்டம் கிராமத்தினை இறைஇழித்து கொடையளித்துள்ளான்.
காஞ்சிபுரம்காலியூர் கோட்டத்துத் தனியூர் இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்து வடவெல்லை ஊரான உலகளந்த சோழ நல்லூரில் ஆற்பாக்கிழான் வாணராயர் விட்ட 21 பாடக நிலத்தினை அருளாளப் பெருமாள் கோயில் மடத்தினை நிர்வகிக்க வேண்டி இராஜேந்திர சோழ சருப்பேதி மங்கலத்து பெருங்குடி சபையார் இறை இழித்து தானமாக அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம்திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயில் மண்டபத்து எதிரிலுள்ள குளத்தின் (திருப்பொய்கை) வடகரையில் அமைந்திருந்த அரிகேசுவன் மடத்தில் பிராமணர்களுக்கு உணவளிக்கும் பெரிய கோயில் மாமுனிகளிடம் ஜயங்கொண்ட சோழ மண்டலம், ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வைய்தவூர் ஊரார் பதினைந்து காசுகள் பெற்றுக் கொண்டு இறை நீக்கி நிலமொன்றினை விற்றுக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்திரைமூர் நாட்டைச் சார்ந்த ஊர்த்தலைவர் இக்கோயில் திருநந்தவனத்தில் திருமாம்பழமுடையான் எனும் பெயரில் எடுப்பித்த திருமண்டபத்தில் இறைவன் எழுந்தருளும்போது வழிபாட்டிற்காக அறுபது காசுகள் திருவத்தியூர் பண்டாரத்தில் கொடுத்துள்ளார். சபையார் அறுபது காசுகள் பெற்றுக்கொண்டு நிலம் ஒன்றினைத் திருவத்தியூர் இறைவன் வழிபாட்டுக்காக விற்றுக் கொடுத்துள்ளனர்.