Skip to main content

1128 results found

காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Damaged. Seems to record a gift of land to the temple of Alagapperumal by Madurantaka Pottappi alias Manumasiddharasa dēva in the 2[2]nd, year of Rajarājadēva. மூன்றாம் இராசராசனின் 22-ஆம் ஆட்சியாண்டில் பொத்தப்பி என்னும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தெலுங்கு சோழ சிற்றரசன் மதுராந்தப்பொத்தப்பிச் சோழன் மனுமசித்தரசன் என்பவன் படுவூர் கோட்டத்திலுள்ள கண்டகோபால விண்ணகர் எம்பெருமான் கோயில் அழகப் பெருமாளுக்கு இக்கோட்டத்திலுள்ள ஊர் ஒன்றினை இறைஇழித்துத் தானமாக வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records an order of Madurantaka Pottappicholan and the gift, free of all taxes, of the village of Tukankūḍal in Nirvēlür-nādu in the district of Urrukkaṭṭu-kottam for conducting the Arpasi-festival and the service called Rajagandagopalan-sandi. மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் முன்றாம் இராசராசனின் 21-ஆம் ஆட்சியாண்டில் அருளாளநாதனுக்கு ஐப்பசி திருநாள், மட்டும் இராசகண்டகோபாலன் சந்திவழிபாட்டிற்காக ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டு தூகன்கூடல் ஊரினை இறைஇழித்து தானமளித்துள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the gift of houses and lands to 200 persons who serve the god and who are called Tribhuvanaviran-padiyilār . அருளாளப் பெருமாள் கோயிலில் இறை பணி செய்யும் திரிபுவனவீரந் பதியிலார் இரு நூறு நபர்களுக்கு வீட்டு மனையும், நிலமும் வழங்கிட வேண்டுமென்று இக்கோயில் வைணவக் கண்காணி செய்பவர்களுக்கு திரிபுவன வீரதேவர் என்றழைக்கப்படும் மூன்றாம் குலோத்துங்கள் நேரடி ஆணை வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records that Tammusiddhi, the son of Gandagōpāla and Sridevi, and the younger brother of the great king Manumasiddhi having performed the anointmen in Nellur presented the village of Muttiyampakkam, the head quarters of Panta-rashtra to the god, the lord of Hastiśaila. கண்ட கோபாலன், ஸ்ரீதேவி ஆகியோரது மகனும், தெலுங்குச் சோழ மன்னன் மனும சித்தியின் தம்பியுமான தம்முசித்தி என்பவன் நெல்லூரில் முடிசூட்டிக் கொண்டபோது பண்டராஷ்ட்ராத்தின் முதன்மையான கிராமம் முட்டியம்பாக்கத்தை ஹஸ்திசைல (அத்திகிரி) இறைவனுக்கு தானமளித்துள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records gift of land in the meltundam of Tirukkattu- kōṭṭam, free of taxes, for the expenses of the service called Kulōttungaśōlan-sandi and for offerings to the god. Vaḍnuvarāvata- virruirundān Palavarayan of Muttūru-kūrram in Pandi-mandalam figures as a signatory. குலோத்துங்க சோழன் தனது பெயரால் ஏற்படுத்திய குலோத்துங்க சோழன் சன்திக்கு இறைவன் வழிபாட்டிற்காக தேவைப்படும் பொருளுக்காக வேண்டி ஊற்றுக்காட்டு கோட்டத்து மேல் துண்டம் கிராமத்தினை இறைஇழித்து கொடையளித்துள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Gift of land in Sirilangōvilāgām in Ulagalanda-Chōlanallur, a hamlet of Rājēdra- Chōla-chaturvedimangalam, for maintaining a matha. காலியூர் கோட்டத்துத் தனியூர் இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்து வடவெல்லை ஊரான உலகளந்த சோழ நல்லூரில் ஆற்பாக்கிழான் வாணராயர் விட்ட 21 பாடக நிலத்தினை அருளாளப் பெருமாள் கோயில் மடத்தினை நிர்வகிக்க வேண்டி இராஜேந்திர சோழ சருப்பேதி மங்கலத்து பெருங்குடி சபையார் இறை இழித்து தானமாக அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Registers a sale of land, free of taxes, by the people of Vaigavür in Urrukkattu-köttam, a district of Jayangonda- Sölamandalam to the Mahamuni of Periyakōyil who was feeding the Brahmans versed in the sacred lore at Arikēśuvan-matha situated on the north bank of the sacred tank (Tiruppoigai), of Arulālaperumāļ. திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயில் மண்டபத்து எதிரிலுள்ள குளத்தின் (திருப்பொய்கை) வடகரையில் அமைந்திருந்த அரிகேசுவன் மடத்தில் பிராமணர்களுக்கு உணவளிக்கும் பெரிய கோயில் மாமுனிகளிடம் ஜயங்கொண்ட சோழ மண்டலம், ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வைய்தவூர் ஊரார் பதினைந்து காசுகள் பெற்றுக் கொண்டு இறை நீக்கி நிலமொன்றினை விற்றுக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Damaged. Begins with the historical introduction, etc. Sale of land by the assembly to the temple for offerings and worship. திரைமூர் நாட்டைச் சார்ந்த ஊர்த்தலைவர் இக்கோயில் திருநந்தவனத்தில் திருமாம்பழமுடையான் எனும் பெயரில் எடுப்பித்த திருமண்டபத்தில் இறைவன் எழுந்தருளும்போது வழிபாட்டிற்காக அறுபது காசுகள் திருவத்தியூர் பண்டாரத்தில் கொடுத்துள்ளார். சபையார் அறுபது காசுகள் பெற்றுக்கொண்டு நிலம் ஒன்றினைத் திருவத்தியூர் இறைவன் வழிபாட்டுக்காக விற்றுக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Begins with the historical introduction திங்களெர்தெரு etc. The inscription is highly damaged and is incomplete. Records the gift of an ear-ornament and of sheep for a perpetual lamp to the god Tiruvattiyur-Alvar by Setti-Rājamānikkattar alias Nulambamādēviyar, the daughter of Ayyan-settiyar, the headman of Kolavāmangalam in Arumolideva-valanādu. Her full name is give Jayangonda-sōla Viranulambamādēviyār. கல்வெட்டுச் சேதமடைந்துள்ளது. அருமொழிதேவ வளநாட்டு, அளநாட்டு கொழவாய் மங்கலத்து ஊர்த்தலைவன் ஐய்யந் செட்டியார் மகள் செட்டி ராஜமாணிக்கத்தார் எனும் நுளம்பமாதேவியார் என்பவள் திருவத்தியூர் ஆழ்வாருக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் தானமளித்துள்ளாள். மேலும் இறைவனுக்கு காதணி (திருவாளி) தானமளித்துள்ளாள். இவளது முழுப்பெயர் ஜெயங்கொண்ட சோழவீர நுளம்பமாதேவியாராந செட்டி ராஜமாணிக்கத்தார் என்பதாகும். இவள், நிலங்குடிதாங்கியாரான ஜயங்கொண்ட சோழ வீரநுளம்பரின் மனைவியாவாள்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>மாடம்பாக்கம்
Records an additional endowment of 3000 kuli of land for Tirunamattukkani to the temple while the earlier donated lands were not enough to meet out the expenditure of lamps, festivals, food offerings etc. for the temple, at the 12th regnal year of the king Kopperunsingadeva. The assembly members accepted to pay the taxes on the lands, and also gave the assurance if any circumstance may arise to necessitate the sale of this land, it would be to the treasury of the temple itself. இவ்வூர் சிற்றெரி உடைய நாயனார் கோயிலுக்குத் திருவிளக்குகள், அமுதுபடி, திருநாள் உபயங்கள் போன்றவற்றிற்குத் தானமாக நிலங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் அச்செலவுகளுக்கு போதவில்லையாதலால், கோப்பெருஞ்சிங்கதேவரின் 12-வது ஆட்சியாண்டில் இவ்வூரின் வடகூறில் நீர்நிலம் கொல்லைநிலம், மனைகள், மனைப்படைப்பைகள் உள்பட மூவாயிரம் குழி நிலமும் திருநாமத்துக்காணியாக மகாசபையார் பிரமாணம் பண்ணிக் கொடுத்தனர்.
இந்நிலத்தில் மகாசபையோரே வேண்டும் பயிர் செய்து கொண்டு சில வரிகளையும் தாங்களே செலுத்தி இறையிலி செய்வதாகவும் கூறியதுடன் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விற்க வேண்டிய சூழல் ஏற்படுமாயின் இக்கோயில் பண்டாரத்துக்கே விற்கக் கடவோம் என்றும் உறுதியளித்துள்ளனர். அதன்படி இப்போது கோயிலில் கல்வெட்டிக் கொடுத்தோம் என்று மஹாஸபையார் தெரிவித் துள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட மேற்கூறிய நிலங்களும் மனைகளும் பற்றிய ஆவணம் கல்லில் வெட்டப்படாமல் இருந்ததால் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பொறிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>மாடம்பாக்கம்
Records the gift of land as devadana with the addition of 20 veli of land given earlier to the temple of Chitreri Aludaiya nayanar at Madampakkam alias Ulaguyya Vantha Chola Chaturvedimangalam of Nedunkunra-nadu, in Puliyurk-kottam alias kulottunga chola-valanadu, a sub division of Jayankonda chola mandalam for the festivals, renovations of the temple, by the assembly and it was attested by an officer of that area called Panchanadivana Nilagangaraiyan. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு நெடுங்குன்றநாட்டு மாடம்பாக்கமான உலகுய்ய வந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து வாரியனும் கரணத்தானும் சிற்றேரி ஆளுடைய நாயனார்க்கு உபயமாகப் பெற்ற அவ்வூரின் வடகூறு 20 வேலி நிலத்தினைப் பதிவு செய்துள்ளனர். பஞ்சநதிவாணன் நீலகங்கரையன் என்ற சிற்றரசன் இதற்கான தான உத்தரவில் ஒப்பமிட்டுள்ளான். இந்நிலத்தில் வசூலிக்கப்படும் பல்வேறு வரிகளைப் பங்குனித் திருநாளுக்கும் திருப்பணிக்கும் முதலாக (உடலாக) இவன் அளித்துள்ளான். ஏற்கெனவே உள்ள தேவதானம், திருவிடையாட்டம், பிடாரி இறையிலி, மடப்புறம், சித்திரமேழிப்பெரியநாட்டார் பட்டியார் பிள்ளைகள் குடியிருப்பான நத்தம் நீக்கி, எஞ்சிய நன்செய், புன்செய், நத்தம் உட்பட வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம்>மதுராந்தகம்>பழனையூர்
Records an endowment of land to the temple as tax free for the Sribali celebration and for the flower garden by the assembly of this village. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர்மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து வடபிடாகை பழனையூர் உடையார் திருமாகாள முடையார்க்கு ஸ்ரீபலிக்கும் திருநந்தவனத்துக்கும் இவ்வூர் மஹாஸபையார் இறையிலியாக நிலம் விட்டதையும், அதன் அளவுகள் மற்றும் எல்லைகளையும் குறிக்கிறது.
காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>வயலக்காவூர்
- ஸ்ரீவாரணாதீசுவரமுடையார் கோயிலில் திருமண்டபம், திருக் கற்றளி செய்வித்துக் கோட்டத்தில் தேவர்களையும் [இறை உருவங்கள்] எழுந்தருளுவித்தவர் திருக்காளத்தி உடையான் வாரணாசி உடையான் களப்பாளன் என்பவராக இருத்தல் வேண்டும். இவர் தன் மகள் ஆளுடை நாச்சிக்காக ஒரு சந்தி விளக்கு இக்கோயிலில் எரிப்பதற்குக் கண்டகோபாலன் புதுமாடை ஒன்றை அளித்தார். இக்காசைப் பெற்றுக் கொண்ட அக்கோயில் சிவபிராமணர்கள் விளக்கெரிக்கச் சம்மதித்த செய்தியும் கையெழுத்திட் டுள்ளமையும் தெரியவருகிறது.
காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>வயலக்காவூர்
- வயலைக்காவூர் ஸ்ரீவாரணாதீசுவரர் கோயில் இறைவனுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு இவ்வூர்க் கண்ணந்தைக் காவிதி காரியாழ்வான் என்பவர் உபயமாக அளித்த கண்ட கோபாலன் புதுமாடை ஒன்றை, இக்கோயில் சிவபிராமணர்கள் சிலர் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க சம்மதித்து கையெழுத்திட்டுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>திருக்கழுக்குன்றம்>நென்மேலி
Records the gift of 1600 kuli of land, garden, and lands in other places in Pundarikanallur for the expenditure to the temple of Avimuktisvara by Tamiladaraiyan of Kalattur. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு கீழ்க்கொடு நென்மலியான புண்டரிக நல்லூர் அவிமுக்தீசுவரமுடையார் கோயில் இறைவனுக்குக் களத்தூர் தமிழதரையன் உத்தமன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவன் பல நிமந்தங்களுக்கும் மடைவிளாகத்திற்கும் அவரது காணியான புண்டரிக நல்லூரில் பலதானங்கள் செய்துள்ளார். அவையாவன: புண்டரிக நல்லூரில் ஆயிரத்தறு நூறுகுழி ஓர் இடத்திலும் அதே ஊரில் காடுவெட்டி கட்டை பறித்துத் திருத்தின நிலம் கமுகந் தோட்டம், கமுகந்தோட்டத்தில் கிழக்கில் ஒருகுழி நிலம், திட்டைச்செறு நூற்றுநாற்பது குழி மற்றோர் நிலம் மற்றும் திருநுந்தா விளக்கு இரண்டு.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>மண்ணிவாக்கம்
Refers to gift of lands for offering the Sacred food, twilight lamps and offerings during the Karttigai months by local officer of the Vijayanagara kings. இம்மடிநரசிங்கராயர் காரியத்துக்குக் கர்த்தரான தெக்ஷிணா சமுத்திராதிபதிசுவாமி நரசநாயக்கர் உடையார் காரியத்துக்குக் கர்த்தரான பொப்பயராசாவின் குமாரர் கொப்பயிராசா இப்பகுதியை நாயக்கதனம் செய்து வந்துள்ளார். அப்போது பெரிய குப்பய்யரும் சிறுதம்பயரும் முன்னாள் பூர்வத்தில் இறைவன் அமுது செய்து அருளின நிலங்கள் மண்ணீசுவரமுடையார் கோயிலுக்கு வழங்கியிருந்தனர். இவ்வமுதுபடியுடன் மூன்று சந்தி விளக்குக் கும் கார்த்திகை அமுதுபடிக்கும் மேலும் நிலங்கள் வழங்கப்பட்டவிவரத்தை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. பல்வேறு நிலங்களின் பெயர்களும் அளவுகளும் கூறப்பட்டுள்ளன. இறைவன் பெயர் மண்ணீசுவரமுடையார் என அழைக்கப் பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவடிசூலம்
Last few lines are not visible because of the floor around the shrine had been raised.
Seems to the gift of land in the village Tamdurai of Urodaka-nadu in Kalatturk- kottam for the daily expenditure of offerings etc. to the temple of Vikramacholis- varamudaiyar, which was erected during the reign of Vikramachola at the complex of Tiruvidaisuramudraiyar in Tiruvidaisuram of Vallanadu in Kalatturk- kottam, a sub-division of Jayankonda chola mandalam.
கல்வெட்டின் கடைசி பகுதி உயர்த்தப்பட்ட தரைத்தளத்தினுள் மறைந் துள்ளது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு திருவிடைச்சுரமுடையார் கோயில் வளாகத்தில் விக்கிரமசோழன் காலத்தில் விக்ரம சோழீஸ்வரமுடையார் என்ற கோயில் எடுக்கப்பட்டு அக்கோயில் இறைவனுக்கு வேண்டும் நித்த நிமந்தங்களுக்காக களத்துர்க் கோட்டத்து உறோடக நாட்டுத் தண்டுறை என்ற ஊரில் நிலக்கொடை அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அச் செய்தியைக் கூறவரும் பகுதிகள் மறைந்துவிட்டன.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவடிசூலம்
Refers the installation of god and goddesses in dancing pose in both the decorative and Padma pidams (pedestals) with gilding of the images by a woman Nambiyalvi alias Gnana Sambantha manikkam daughter of Selvappillai, a dancing woman in the temple of Tiruvidaisuram. கல்வெட்டின் தொடக்கமும் இறுதியில் சில வரிகளும் கட்டடப் பகுதிக்குள் மறைந்துவிட்டன. திருவிடைச்சுரமுடையார் கோயில் தேவரடியாள் செல்வப் பிள்ளை என்பவளுடைய மகள் நம்பியாழ்வியான திருஞானசம்பந்த மாணிக்கம் என்பவள் இக்கோயில் இறைவனையும் இறைவியையும் நடம் செய்கின்றவர்களாகப் பத்மபீடத்தில் அமைத்து அலங்கார பீடமும் செய்வித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவடிசூலம்
Registers the gift of some taxes to the deity Naduvariyum Tambiranar in the temple of Gnanapurisvarar by the king for the welfare of himself. அச்சுத தேவமகாராயர் தொண்டை மண்டல செங்கழுநீர்ப்பட்டுச் சீர்மைக்கு மகா மண்டலேஸ்வரராகத் திருமலை தேவமகாராயர் என்பவரை நியமித்து அப்பகுதி முழுவதையும் அவர் பொறுப்பில் அளித்திருந்ததால், அப்பகுதியில் வரிவசூலிக்கும் உரிமையையும் பெற்றிருந்தார். அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடக் கோன், நயினான்கோன் உள்ளிட்ட பலர் புல்வரி சாதம், இடைத்துறை சாதம் போன்ற வரிகளைச் செலுத்தி வந்தனர். அந்த வரிகளைத் திருமலைதேவ மகாராஜா, அரசன் அச்சுததேவ மகாராஜாவிற்குப் புண்ணயமாக (நலனுக்காக) திருவிடைச்சுரமுடையார் கோயிலில் நடுவறியும் தம்பிரான் என்ற இறைவர்க்கு தினமும் நைவேத்தியம் திருவிளக்கு ஆகியவற்றிற்கு அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவடிசூலம்
Built in at the biggining. Records the gift of tax free lands in various places to the temple of Thiruvidaisuramudaiyar. களத்தூர்க்கோட்டத்து வல்லநாட்டுப் பெருந்தோபாக்கமும் ஆமூர் கோட்டத்துப் பெருந்தோபாக்கமும் நீர் நிலமும் கொல்லை நிலமும் இறையிலியாக விடப்பட்டன. அதனைப் பதிவு செய்யுமாறு திருவிடைச்சுரமுடையார் கோயில் தேவகன்மி, கோயில் கணக்கு, சிரி மாஹேஸ்வர கண்காணி போன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.