Skip to main content

1128 results found

காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Bit inscription. Seems to be the gift of land with the remission of certain taxes etc. துண்டுக் கல்வெட்டு. நிலங்களின் எல்லை சொல்லப்படுகிறது. நிலங்கள் வரி நீக்கி இறையிலியாகத் தரப்பட்டமையும் அறியப்படுகிறது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
Records the gift of land for the food offerings to the deity who was pleased to stand in the Big Nagaram of Kanchipuram by certain saligan chandhiravan Malaiginiyaninran of Iravikula manikkap perunteru of this city. காஞ்சிநகரில் இரவிகுலமாணிக்கப் பெருந்தெருவில் வாழ்ந்த சாலிகன் சன்திறவன் மலைகுனிய நின்றான் அத்தியூராழ்வானான நியாயபாலன் என்பவன் திருவூரகத்து எம்பெருமானுக்கு ஸொம்பாதி விளைநிலம் திருத்த 200 புதுக்காசு வழங்கியதுடன் இறைவனுக்குத் திருப்போனகம் செய்வதற்கும் நிலக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>மதுராந்தகம்>புலிப்பரக் கோயில்
Records the gift of taxes Taniyavargam, Palavari, Puduvari etc as devadana which were collected from the village chedirayanallur, belonging to the temple as Tirunamattukkani, for conducting some celebrations in the temple. இவ்வூர் புலிப்பகவ நாயனார் கோயிலின் திருநாமத்துக் காணி ஊரான சேதிராய நல்லூரில் வசூலிக்கப்படும் வரிகளான தானிய வர்க்கம், பழவரி, புதுவரி போன்ற சமுதாய பிராப்திகள் அனைத்தையும் இக்கோயில் திருப்பள்ளி எழுச்சி, குறை வறுப்பு, அடுமாத்து பூசை திருப்பணி போன்றவற்றிற்கு தேவதான இறையிலியாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>மதுராந்தகம்>புலிப்பரக் கோயில்
Registers the gift of many taxes and other assessments which were collected from the Kaikkolas residing in the four directions arround the streets (Tirumadai Valagam) of Tiruppuli pagaranayanar temple at Mattur, a northern hamlet of Sri Madurantaka chaturvedimangalam in Kalattur-kottam a sub-division of Jayangonda chola mandalam. The taxes collected from the residents belonged to Kaikkolars, Saliyar, Vaniyar, Koyilankadi Senaiyankadi and including other (Purakkalanais) guilds and also who would later emigrate to the Madaivalagam. These taxes were given to be utilised for the worship, other services and welfare of the name (of the King) as Sarvamanya. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து ஸ்ரீமதுராந்தக சதுர்வேதி மங்கலத்து வடபிடாகையான மாத்தூரில் உள்ள உடையார் திருப்புலி பகவ நாயனார் கோயில் திருமடை வளாகத்தின் நான் கெல்லையிலுமுள்ள கைக்கோளர், சாலியர், வாணிகர், கோயிலங்காடி, சேனையங்காடி மற்றும் அனைத்து புறக் கலனைகள் உட்பட முன்பு உள்ள குடிகளும் பின்னர் குடியேறும் குடிகளையும் ஏற்றிக் கொண்டு அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பல வரிகளும் பல உபாதிகளும் இக்கோயில் பூசைக்கும் திருப்பணிக்கும் திருநாமச் சிறப்புக்கும் சர்வமானியமாக இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>திருக்கழுக்குன்றம்>நெரும்பூர்
Bit inscription. Seems to record the gift of land with exemption of tax as devadana to the temple. துண்டுக் கல்வெட்டு. மதுராந்தக நல்லூர் என்ற ஊர்ப்பெயரும் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் தேவதான இறையிலி நிலம் வழங்கப்பட்ட விவரமும் அறிகிறோம்.
காஞ்சிபுரம்>திருக்கழுக்குன்றம்>நெரும்பூர்
- நெருமூரான மதுராந்தக நல்லூர் திருவான்மீசுவரமுடைய மகாதேவர்க்கு வேட்டக்குடியான் புலியதேவன் என்பவர் இவ்வூரிலும் சூளாமணி மங்கலத்திலும் இறையிழிச்சு விழாப்புறமாகி நிலம் வழங்கியுள்ளார். நிலத்தின் பெயர் திருவாய்ப்பாடி செறு என்று அறிகிறோம். நெருமூர் நாட்டு மூவேந்த வேளான் உள்படப் பலர் கையொப்பமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>மாகறல்
- திருவகதீஸ்வரமுடையார் திருமடை வளாகமான பெரும்பற்றப்புலியூரில் இறைவன் எழுந்தருளியிருக்கும்போது வழிபட்டு மன்னன் இரண்டாம் குலோத்துங்கன் பல இடங்களில் உள்ள நஞ்சை புஞ்சை நிலங்களை இறையிலி தேவதானமாக வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>மாகறல்
Records the reallotment of tax free devadana lands to the temple of Tiru. Vagattisvaramudaiyar and the right of cultivation given to Kalingarayar by an officer called Nandhipanmar. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்ற இந்த ஊரிலுள்ள சிவன் கோயில் திருவகத்தீசுரமுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு எயிற்கோட்டத்திலுள்ள இருமரம் என்ற குலோத்துங்க சோழ நல்லூரில் விளைநிலம் ஏரி நிலம் போன்ற 40 வேலி நிலமும் காலியூர்க் கோட்டத்திலுள்ள வெண்கற்சேரியில் 304 நிலமும் நத்தங்கொல்லை 11 வேலியும் முன்னர் தேவதானமாக இருந்தன. பழந்தேவதானமாகிய இந்நிலங்கள் மீண்டும் இக்கோயிலுக்கு இறையிலி தேவதானமாக வேண்டுமென்றும், இத்தேவதான நிலங்கள் காலிங்கராயர் என்பவருக்குப் பற்றாய் ஆக வேண்டும் எனவும் நந்திவன்மர் என்ற அதிகாரி ஆணையிட்டார். அந்த ஆணையைத் திருமந்திர ஓலை இராசநாராயண மூவேந்த வேளான் எழுதப் பல அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலங்களைப் பயிர் செய்யும் பொறுப்பு காலிங்கராயர் என்பவருக்கு அளிக்கப்பட்டதை பற்றாய் நிற்கவும் எனக் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>சிவன்கூடல்
Records the gift of land to the temple of Sivakkolunthudaiyar by the Sabha of Sivakudal after purchasing it from the temple. விஜயநகர மன்னன் அச்சுததேவராயர் விருபாக்ஷியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இருந்தபோது சிவன் கூடலைச் சார்ந்த [பிடாகை] ஓபுளாச நல்லூரினைச் சிவன்கூடல் இறைவனுக்கு படையல், பூசை, தீபவழிபாடு ஆகியவற்றிற்குத் தானமாகக் கொடுத்த செய்தியும், இவ்வூர் நிலத்திற்குரிய பாசன வசதிகளும் சொல்லப்படுகின்றன.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>சிவன்கூடல்
Records the gift of 2400 kuli of land to the goddess Maragathavalli Nachchiyar of Tirukkamakkottam in the temple of Sivakkolunthudaiya Nayanar at Sivakudal of Nirvelur-nadu, in Uttukkattuk-kottam a sub-division of Jayankonda- cholamandalam by Talaikkudaiyan alias Puliyuran who belongs to the chola-nadu சிவன்கூடல் கோயிலில் இருந்த அம்மன் கோயில் இறைவி மரதகவல்லி நாச்சியார்க்கு சோழநாட்டைச் சேர்ந்த தாழைக்குடையானான புலியூரன் என்பவன் 2400 குழி அளவுள்ள நிலத்தைக் கோயில் நிலமாக இறைவி பெயரில் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. காஞ்சிபுரத்து திருவேகம்பமுடைய நாயனார் கோயிலில் கும்பிட்டிருக்கும் தொண்டர்களில் இரவிய தேவர் நல்ல கம்பருக்கு மடப்புறமாக நிலக்கொடை தரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>சிவன்கூடல்
Stones are replaced. Records the sale of land to the temple for the food offerings to the deity of Siva kudal by the village sabha of this village. கற்கள் மாற்றி வைத்துக் கட்டப்பட்டுள்ளதால் கல்வெட்டு அங்கங்கு தொடர்பில்லாதுள்ளது. சிவன்கூடல் இறைவனுக்கு வழிபாட்டிற்றகாகவும் அமுது படை யலுக்காகவும் கோயிலுக்கு ஊர்ச்சபையார் நிலம் விற்றுக் கொடுத்த செய்தி சொல்லப் படுகிறது. குலோத்துங்கனுடைய 25 ஆவது ஆட்சியாண்டு மற்றும் 23 ஆவது ஆட்சியாண்டு இதில் சுட்டப்படுகின்றன. இதில் இடம் பெறும் கமலநாராயணப் புத்தேரி. வேறொரு சாசனத்திலும் இடம் பெறுகிறது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>சிவன்கூடல்
Inscriptional stones are misplaced, and its continuity lost. Registers the gift of land to the temple for the food offerings sacred bath during the celebration of Thiruvadirai in the month of Markali, burning a perpetual lamp and flower garden to the deity of the Sivakkolunthandar temple at Siva Kudal by certain Panchanadhivanan Cholendra Muventhavelan of Manimangalam after purchasing it from the assembly of Sivakudal.
Another record of the same King, which refers to 46th year is also engraved but stops abruptly.
கல்வெட்டின் நடுப்பகுதியில் வேறொருகல்வெட்டு வைத்துக் கட்டப்பட்டு தொடர்பு விடுபட்டுள்ளது. இரு கல்வெட்டுகளும் குலோத்துங்கனுடையவை 28 மற்றும் 44 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. சிவன் கூடல் இறைவனுக்கு நந்தவனம் அமைக்கவும் நந்தா விளக்கெரிக்கவும், மார்கழிக் திருவாதிரை நெய்யாடல் அமுது படிக்காகவும் சிவன்கூடல் மகாசபையார், மணிமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சநதிவாணன் சோழந்திர மூவேந்த வேளானுக்கு நிலம் விற்று ஆவணம் எழுதிய செய்தி சொல்லப் படுகிறது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>சிவன்கூடல்
Records the gift of 500 kuli of land to burn a perpetual lamp to the deity Mahadeva in the temple of Sivakkolunthandar in Siva kudal by an individual of vilathur after purchasing it from the assembly of Milalai mangalam. கல்வெட்டின் மேல் இடது பகுதியில் 2 துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டு முற்றுப் பெறாமல் விடப்பட்டுள்ளது. [மிழ]லை மங்கலச் சபையாரிடம் விளத்தூரை சேர்ந்த ஒருவர் 500 குழி நிலம் விலைக்கு வாங்கிச் சிவன் கூடல் இறைவனுக்கு ஒரு திருநந்தா விளக்கு எரியச் செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>சிறுதாவூர்
- இது இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டாக இருத்தல் வேண்டும். இக்கல்வெட்டின் பகுதிகள் பல கிடைக்கவில்லை. சிறுதவூர் பூதீசுவர முடையார்க்கு நித்த வினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து அரியலூரான் ஒருவன் விட்ட நிலத்துக்குச் சிறுதவூர் மகாசபையார் இறையிலி செய்ததைக் குறிக்கிறது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>சிறுதாவூர்
Records the remission of some taxes on two veli of devadana lands belonging to the god and goddess of the temple for meeting the expenditure of renovation, worships making flower garden and for the other requirements of the temple. It is stated that the village Sirudavur was situated in the Ayiravelipparru. சகலலோகச் சக்கரவத்திகள் இராசநாராயணன் சிறுதவூர் பூதீசுவர முடையார் கோயிற் திருப்பணிக்கும் நந்தவனத்துக்கும் பலபணி நிவந்தமாக சர்வமானிய இறையிலி நிலம் அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஈரோடு>பெருந்துறை>விசயமங்கலம்
- கொங்குச் சோழ மன்னன் இராசாதிராசன் விசயமங்கலம் சிவாலயத்தில் கூத்தாடும் தேவர்க்கும் நாச்சியார்க்கும் அமுதுபடிக்காக் குளம் ஒன்றை இறையிலியாக அளித்தார்.
ஈரோடு>பெருந்துறை>விசயமங்கலம்
- விசயமங்கலத்து ஊரும் ஊராளிகளும் பண்டாரத்தில் அளப்பனவற்றை என்றென்றும் நிறைந்த அளவாக அளக்க வேண்டும் என்று இறைவன் பெயரில் கல்வெட்டினர்.
ஈரோடு>பெருந்துறை>விசயமங்கலம்
- கோயிலில் உச்சிச் சந்தி திருஅமுதுக்காக பரகேசரியாலும், வீரநாரயணனாலும் அளந்து 37 கலம் தூணிப்பதக்குக் கொடுக்கப்பட்டது. அதில் 18 கலம் இருதூணி (பாதி) வீரசோழ வளநாட்டு உத்தமசோழச் சதுர்வேதி மங்கலத்து இறையிலே கொடுக்கப்பட்டது. பரகேசரி வீரநாராயணன் கொங்குச் சோழர்கால முகத்தலளவைகளின் பெயர்கள்.
ஈரோடு>பெருந்துறை>குன்னத்தூர்
It records a gift of Asthiradevar by a merchant from Pandya country. பாண்டி மண்டலத்து கல்வாவி நாட்டு அரச நாராயணப் பெருந்தெருவான சுந்தரபாண்டியபுரத்து வியாபாரி நல்லூருடையான் அம்மையத் தேவன் பெருமாள் ஆன குமரபாலன் இறைவனுக்கு அஸ்த்திரதேவரை எழுந்தருளச் செய்தார்.
ஈரோடு>பெருந்துறை>திங்களூர்
It records a gift of money (one accu) for burning twilight lamp by an individual by name Madavasenaiyar from komukatali clan in vettuva community. திங்களூர் கோமுகத்தாளி வேட்டுவரில் மதவசேனையன் இறைவனுக்குச் சந்தியா தீபம் வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்.