காஞ்சிபுரம்விஜயநகர மன்னன் அச்சுததேவராயர் விருபாக்ஷியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இருந்தபோது சிவன் கூடலைச் சார்ந்த [பிடாகை] ஓபுளாச நல்லூரினைச் சிவன்கூடல் இறைவனுக்கு படையல், பூசை, தீப வழிபாடு ஆகியவற்றிற்குத் தானமாகக் கொடுத்த செய்தியும், இவ்வூர் நிலத்திற்குரிய பாசன வசதிகளும் சொல்லப்படுகின்றன.
காஞ்சிபுரம்சிவன்கூடல் கோயிலில் இருந்த அம்மன் கோயில் இறைவி மரதகவல்லி நாச்சியார்க்கு சோழநாட்டைச் சேர்ந்த தாழைக்குடையானான புலியூரன் என்பவன் 2400 குழி அளவுள்ள நிலத்தைக் கோயில் நிலமாக இறைவி பெயரில் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. காஞ்சிபுரத்து திருவேகம்பமுடைய நாயனார் கோயிலில் கும்பிட்டிருக்கும் தொண்டர்களில் இரவிய தேவர் நல்ல கம்பருக்கு மடப்புறமாக நிலக்கொடை தரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்கற்கள் மாற்றி வைத்துக் கட்டப்பட்டுள்ளதால் கல்வெட்டு அங்கங்கு தொடர்பில்லாதுள்ளது. சிவன்கூடல் இறைவனுக்கு வழிபாட்டிற்றகாகவும் அமுது படை யலுக்காகவும் கோயிலுக்கு ஊர்ச்சபையார் நிலம் விற்றுக் கொடுத்த செய்தி சொல்லப் படுகிறது. குலோத்துங்கனுடைய 25 ஆவது ஆட்சியாண்டு மற்றும் 23 ஆவது ஆட்சியாண்டு இதில் சுட்டப்படுகின்றன. இதில் இடம் பெறும் கமலநாராயணப் புத்தேரி. வேறொரு சாசனத்திலும் இடம் பெறுகிறது.
காஞ்சிபுரம்கல்வெட்டின் நடுப்பகுதியில் வேறொருகல்வெட்டு வைத்துக் கட்டப்பட்டு தொடர்பு விடுபட்டுள்ளது. இரு கல்வெட்டுகளும் குலோத்துங்கனுடையவை 28 மற்றும் 44 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. சிவன் கூடல் இறைவனுக்கு நந்தவனம் அமைக்கவும் நந்தா விளக்கெரிக்கவும், மார்கழிக் திருவாதிரை நெய்யாடல் அமுது படிக்காகவும் சிவன்கூடல் மகாசபையார், மணிமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சநதிவாணன் சோழந்திர மூவேந்த வேளானுக்கு நிலம் விற்று ஆவணம் எழுதிய செய்தி சொல்லப் படுகிறது.
காஞ்சிபுரம்கல்வெட்டின் மேல் இடது பகுதியில் 2 துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டு முற்றுப் பெறாமல் விடப்பட்டுள்ளது. [மிழ]லை மங்கலச் சபையாரிடம் விளத்தூரை சேர்ந்த ஒருவர் 500 குழி நிலம் விலைக்கு வாங்கிச் சிவன் கூடல் இறைவனுக்கு ஒரு திருநந்தா விளக்கு எரியச் செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டுஇது இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டாக இருத்தல் வேண்டும். இக்கல்வெட்டின் பகுதிகள் பல கிடைக்கவில்லை. சிறுதவூர் பூதீசுவர முடையார்க்கு நித்த வினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து அரியலூரான் ஒருவன் விட்ட நிலத்துக்குச் சிறுதவூர் மகாசபையார் இறையிலி செய்ததைக் குறிக்கிறது.
செங்கல்பட்டுசகலலோகச் சக்கரவத்திகள் இராசநாராயணன் சிறுதவூர் பூதீசுவர முடையார் கோயிற் திருப்பணிக்கும் நந்தவனத்துக்கும் பலபணி நிவந்தமாக சர்வமானிய இறையிலி நிலம் அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஈரோடுகொங்குச் சோழ மன்னன் இராசாதிராசன் விசயமங்கலம் சிவாலயத்தில் கூத்தாடும் தேவர்க்கும் நாச்சியார்க்கும் அமுதுபடிக்காக் குளம் ஒன்றை இறையிலியாக அளித்தார்.
திருப்பூர்பாண்டி மண்டலத்து கல்வாவி நாட்டு அரச நாராயணப் பெருந்தெருவான சுந்தரபாண்டியபுரத்து வியாபாரி நல்லூருடையான் அம்மையத் தேவன் பெருமாள் ஆன குமரபாலன் இறைவனுக்கு அஸ்த்திரதேவரை எழுந்தருளச் செய்தார்.
ஈரோடுஇறைவனுக்கு அமுதுபடி. சாத்துப்படி, பூச்சுப்படி திருப்பணிக்காக அரசன் இந்நாட்டுத் தேரையூர் ஆன குலோத்துங்க சோழநல்லூரில் குடியேற்றித் தேவதானமாகக் கொடுத்தார்.
திருப்பூர்காலிங்கராயர் என்ற அலுவலர் காலத்தில் குறுப்பு நாட்டு ஊரும் ஊராளிகளும் ஒரு ஊர் வரிகள் அனைத்தும் கோயிலுக்கு அளிக்கும் வண்ணம் திருவிடையாட்ட இறையிலியாக அளிக்கப்பட்டது. விசயமங்கலம், திங்களூர், குன்னத்தூர் கணக்கு அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
திருப்பூர்மலைமண்டலத்து ஏறாளபுரத்து வியாபாரி உமையன் காற்கரையான் கருணாலை என்பவர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாளிடம் பன்னிரண்டு பணம் கொடுத்து இறைவன் திரு முன்பு தன் பெயரில் ஒரு சந்தியா தீபம் எரிக்க வேண்டிக் கொண்டார்.
திருப்பூர்பாண்டி மண்டலத்துக் கருங்குடி நாட்டு விசையங்குடி அரையன் சூரிய தேவனான குவலயத்தரையன் இறைவன் திருமுன்பு சந்தியா தீபம் வைக்க பன்னிரண்டு பணம் கொடுத்தார்.
திருப்பூர்வீரசோழி வளநாட்டு முகுந்தனூரான விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தங்களுர் அணைக்கு கல்லிட்டுப் பழுது பார்க்க குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பண்டாரத்தில் 200 பணம் கடன் பெற்றனர். அதற்கு 13 கலம் நெல்லும் 26 பணமும் வட்டியாகத் தந்நதனர். அதை வருடத்தில் இரு தவணைகளாகச் செலுத்தினர். அதன்மூலம் இறைவன் திருநட்சத்திரமான திருவாதிரையில் தீர்த்தவிழா எடுத்துப் பதினாறு வைணவர்கட்குச் சோறிட வேண்டும் என்றும் கூறினர். வட்டியை விளையிலும், விளையாது ஒழியிலும் ஊர் கேடு போனாலும் அளிக்க ஒப்புக் கொண்டனர்.
ஈரோடுஇக்கல்வெட்டுத் துண்டுகள் கீழிருந்து மேல் நோக்கிப் படிக்கும் வண்ணம் எழுதப்பட்ட கல்வெட்டுகள் அறச்சலூர் அறச்சாலையம்மன் கோயிலிலும், திங்களூர் சந்திராபுரீசுவரர் மேனியிலிலும் வெட்டப்பட்டுள்ளன. எல்லாக் கோயில்களிலும் இறைபணியாற்றும் பட்டர், தானத்தார், நம்பிமார் ஆகியோர் தம் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு உவச்சர்கட்கு அளிக்க சண்டிகேசுவரர் ஓலையாக அளித்த கல்வெட்டு சிதைந்துள்ளது. விசயமங்கலம், குன்னத்தூர்க் கோயில்களிலும் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.